25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வெள்ளித்திரை

Feb 15, 2024

சினிமாவை விட்டு ஒதுங்கினாலும் நடிகர் விஜயகுமார் மஞ்சுளா தம்பதியின் 2வது மகள்ப்ரீத்தா மாதத்திற்கு லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்

சினிமாவை விட்டு ஒதுங்கினாலும் நடிகர் விஜயகுமார் மஞ்சுளா தம்பதியின் 2வது மகள்ப்ரீத்தா மாதத்திற்கு லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். ப்ரீத்தா பிசினஸில் படு பிசியாக இருந்து வருகிறார்.இவர்1998ம் ஆண்டு சந்திப்போமா என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.தெலுங்கு, மலையாள படங்களில் அவர் நடித்தாலும், தமிழில் படையப்பா படத்தில் ரஜினியின் மகளாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இதை தொடர்ந்து சுயம்வரம், அல்லி அர்ஜுனா, புன்னகை தேசம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.தொடர்ந்து2002ம் ஆண்டு இயக்குனர் ஹரியை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு3 மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு படத்தில் நடிப்பதை நிறுத்திய ப்ரீத்தா சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். சினிமாவை விட்டு ஒதுங்கினாலும் ப்ரீத்தா பிசினஸில் படு பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உத்தண்டி என்னும் இடத்தில் ப்ரீத்தா பேலஸ் என்ற மண்டபம் இருக்கிறது. இந்த மண்டபத்தில் ஒரே நேரத்தில் 300 முதல் 500 பேர் பங்கேற்க முடியும். இந்த கல்யாண மண்டபம் இருக்கும் பகுதிக்கு அருகிலேயே மெட்ராஸ் காபி ஹவுஸ் என்ற சிற்றுண்டி உணவகத்தையும் ப்ரீத்தா தொடங்கினார். இந்த உணவகத்தில் வேலை செய்யும் அனைவரும் பெண்கள் என்பது கூடுதல் சிறப்பு. ஈசிஆர் நெடுஞ்சாலையில் இருப்பதால் இந்த உணவகம் ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே பிசினஸ் பிக்அப் ஆகிவிட்டது.இவை தவிர எடிட்டிங், டப்பிங் ஸ்டுடியோ ஒன்றையும் ப்ரீத்தா நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு சென்னை சாலிகிராமத்தில் குட்லக் என்ற பெயரில் இந்த ஸ்டுடியோ இயங்கி வருகிறதுஇந்த ஸ்டூடியோவை நடிகர் சூர்யா திறந்து வைத்தார். இப்படி கல்யாண மண்டபம், உணவகம், டப்பிங் ஸ்டுடியோ என ப்ரீத்தா மாதத்திற்கு லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். 

Feb 08, 2024

சூர்யா – ஜோதிகா ஜோடிக்கு பெருமை சேர்த்த மகள் தியா

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக இருப்பவர்கள் சூர்யா-. ஜோதிகாஜோடிக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் உள்ளனர்.இவர்கள் இருவருடைய படிப்பிற்காக தான் சூர்யா, ஜோதிகா மும்பையில் சில காலம் தங்கி இருக்கிறார்கள். அது முடிந்தவுடன் தமிழ்நாட்டிற்கு வந்துவிடுவோம் என ஜோதிகா கூறியிருந்தார்., சூர்யா, ஜோதிகா மகள் தியா மற்றும் தேவ் பள்ளியில் Sports Day நடந்துள்ளது. அப்போது தியா தனது அணியுடன் இணைந்துSportsDay கோப்பையை வென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஜோதிகா பதிவு செய்துள்ளார்.தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து தியா மற்றும் தேவ் இருவரையும் குறிப்பிட்டு 'உங்கள் இருவரால் எங்களுக்கு பெருமை' என கூறியுள்ளார் ஜோதிகா...

Feb 08, 2024

2024ம் ஆண்டில் உருவாகும் சூர்யா -சிவா இயக்கத்தில் கங்குவா

சினிமாவில் பிரம்மாண்டங்களை நம்பி படம் எடுப்பவர்கள் ஏராளம் பேர் உள்ளனர். ஷங்கர், ராஜமௌலி என இந்தப் பட்டியலின் நீளம் அதிகம். ராஜமௌலி துவங்கிவைத்த ட்ரெண்ட், தற்போது ஏராளமான இயக்குநர்கள் பிரம்மாண்டத்தின் பக்கம் சாய்ந்து வருகின்றனர். பாகுபலி படத்தை துவங்கி தற்போது அதிகமான வரலாற்று படங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழிலேயே அடுத்தடுத்த வரலாற்று கதைக்களங்களில் படங்கள் அறிவிக்கப்பட்டு டைரக்ட் செய்யப்பட்டு வருகின்றன. சூர்யா -சிவா இயக்கத்தில் தற்போது கங்குவா படத்தின் சூட்டிங் ஆல்மோஸ்ட் நிறைவடைந்துள்ளது.இந்தப்படம் மிகவும் பிரம்மாண்டமாகவும் மிகுந்த பொருட்செலவுடனும் இயக்கி முடிக்கப்பட்டுள்ளது. கமர்ஷியல் இயக்குநராக ரசிகர்களை கவர்ந்த சிவா, இந்தப் படத்தில் தன்னுடைய பிரம்மாண்ட வித்தையை களமிறக்கியுள்ளார். சர்வதேச அளவில் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்படும் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களின் மவுசு காணப்படுகிறது. நம்மால் இயங்க முடியாத மாய உலகை இந்தப் படங்களின் மூலம் ரசிகர்கள் எக்ஸ்பீரியன்ஸ் செய்துக் கொள்வதே இந்தப் படங்களின் வெற்றி. அந்த வகையில் இந்திய அளவிலும் இதுபோன்ற பல பேன்டசி படங்களை பார்க்க முடிகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலங்களிலேயே தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் இதுபோன்ற படங்கள் எடுக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளன. அந்த வகையில் வரலாற்று பின்புலத்தில் தற்போது அதிகளவில் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.ராஜமௌலியின் பாகுபலி படங்கள்: ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி மற்றும் அதன் தொடர்ச்சியாக வெளியான பாகுபலி 2 ஆகிய படங்கள் அந்த காலத்தில் மக்கள் இப்படியெல்லாம் வாழ்ந்திருப்பார்கள் என்ற பிம்பத்தை ரசிகர்களுக்கு கொடுத்தன. படத்தின் நடிகர்கள், நடிகைகளின் தேர்வும் இந்தப் படங்களின் வெற்றிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தன. பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா, ராணா என இந்தப் படத்தின் நடிகர்கள் அந்த கேரக்டர்களாகவே மக்களால் பார்க்கப்பட்டனர். சர்வதேச அளவில் இந்தப் படங்கள் மிகப்பெரிய வசூலை குவித்தது இந்தப் படங்களின் மேக்கிங்கிற்கு கிடைத்த வெற்றி.அடுத்தடுத்த பிரம்மாண்ட படங்கள்: இந்தப் படங்கள் கொடுத்த வெற்றி மற்றும் வரவேற்பு காரணமாக தொடர்ந்து அடுத்தடுத்த வரலாற்றுப் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழில் சூர்யா நடிப்பில் தற்போது கங்குவா படம் இயக்கி முடிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தை இயக்குநர் சிவா இயக்கி முடித்துள்ளார். கோடை கொண்டாட்டமாக வெளியாகவுள்ள இந்தப் படம் 10 மொழிகளில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 3டி தொழில்நுட்பத்தில் படம் உருவாகவுள்ளது. படத்தின் ரிலீசுக்கு முந்தைய வியாபாரமும் சிறப்பாக அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Feb 01, 2024

நெப்போலியன் மனைவி சுதாவின் 51வது பிறந்த நாளை எளிமையாக வீட்டில் கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார்

நடிகர் நெப்போலியன் சினிமா மற்றும் அரசியலை விட்டு விலகி தற்போது தன்னுடைய குடும்பத்தோடு அமெரிக்காவில் வசித்து வருகிறார்.அங்கு தன்னுடைய மனைவி சுதாவின் 51வது பிறந்த நாளை எளிமையாக வீட்டில் கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார்.அதோடு தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் குறித்த அந்த பதிவில் சில வார்த்தைகளை நெப்போலியன் பகிர்ந்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நெப்போலியன் 80ஸ் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகராக இருந்திருக்கிறார். இவருடைய நடிப்பு மட்டுமல்லாமல் இவர் பாடிய ஒரு சில பாடல்களும் அதிகமான ரசிகர்களை கவர்ந்தது. அதிலும் அந்த "எட்டு பட்டி ராசாவை" இப்போதும் பலரும் மறந்திருக்க மாட்டார்கள். ஒல்லியான தேகத்தோடு பெரிய முறுக்கு மீசை வைத்து மிரட்டும் பார்வையால் இவருடைய நடிப்பை பார்த்து வியந்து போனவர்கள் ஏராளம். சின்னத்தாயி, ஊர் மரியாதை, எஜமான், கிழக்கு சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, தென்காசி பட்டணம், விருமாண்டி என பல திரைப்படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.அந்த காலகட்டத்தில் சரத்குமார், ரஜினிகாந்த்,கமல் போன்ற முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து தனக்கென்று ஒரு சிம்மாசனத்தை அமைத்துக் கொண்டவர் தான். ஆனால் ஒரு கட்டத்தில் தன்னுடைய நடிப்புக்கு முழுக்கு போட்டு அரசியலில் முழு கவனம் செலுத்த தொடங்கிய நெப்போலியன் திமுக ஆட்சிக்காலத்தில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர் தான். அந்த நேரத்தில் தன்னுடைய மகனுக்கு ஏற்பட்ட உடல்நல குறைபாடு காரணமாக அரசியலை விட்டு விலகிய நெப்போலியன் தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார். அங்கு சொந்தமாக கம்பெனி ஒன்றை நடத்தி வரும் அவர் விவசாயத்தையும் செய்து வருகிறார். அதுபோல நெப்போலியனுக்கு ஜெயசுதா என்ற மனைவியும் தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் மீது தீராத காதலோடு இருக்கும் நெப்போலியன் என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மனைவியின் 51 வது பிறந்தநாள் பங்க்ஷனை கொண்டாடி அந்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். அதில் நண்பர்களே டிசம்பர் 24 , 2023. எனது மனைவியின் 53வது பிறந்தநாள்.மூத்த சகோதரர் மற்றும்  மைத்துனருடன், எங்கள் குடும்ப நண்பர் வழக்கறிஞர் ஆசிரியரின் இல்லத்தில் கொண்டாடினோம் என்று தகவல் தெரிவித்து இருந்த நிலையில் ,இதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். அதோடு நெப்போலியன் எப்போதும் குடும்பத்தோடு இப்படி பல ஆண்டுகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது பலருடைய ஆசீர்வாதமாகவும் இருக்கிறது. தமிழ்நாட்டில் நெப்போலியன் தன்னுடைய மகனுக்காக கட்டிய மருத்துவமனையில் பல பேர் சிகிச்சை பெற்று நலம் பெற்று வரும் நிலையில் அவர்களும் நெப்போலியனின் மனைவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Feb 01, 2024

இயக்குனர் பிரபு சாலமன் கும்கி 2

இயக்குனர் பிரபு சாலமன்எடுத்தமைனா, கும்கி படங்களில் இயற்கை சம்பந்தமான கதையும், காடு மற்றும் விலங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தும் வகையில் தான் இருக்கும்.இயக்குனர் பிரபு சாலமன் எடுக்கும் படங்களை நம்பி திரையரங்குகளுக்கு குடும்பத்துடன் போய் பார்க்கலாம்.  அந்த வகையில் மைனா, கும்கி சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்றது .பிரபு சாலமன் இயக்கிய காடன் மற்றும் செம்பி போன்ற படங்க  எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை  . 18 வருஷத்துக்கு பின்தற்போது கும்கி இரண்டாம் பாகத்தின் கதையை வைத்து எடுத்து வருகிறார். இதற்கு அடுத்தபடியாக மற்றொரு படத்திற்கும் கதையை தயார் செய்து விட்டார்.ஆனால் அந்த படத்திற்கு தற்போது முதல் முறையாக யானைக்கு பதிலாக சிங்கத்தை வைத்து எடுக்கப் போகிறாராம். எப்படி கும்கி படத்தில் யானை இருந்ததோ, அதே மாதிரி சிங்கத்தை வைக்கலாம் என்ற யோசனை. ஆனால் அதற்கு சிங்கம் சரிப்பட்டு வருமா? என்பது தான் ஒரு கேள்வி.ரோஜா கம்பைன்ஸ்நிறுவனம்பிரபு சாலமன் மீது இருக்கும் நம்பிக்கையால் ஓகே சொல்லி இருக்கிறார்.இந்த படத்திற்கான ஹீரோ மற்றும் ஹீரோயின்களை தேர்ந்தெடுத்து வருகிறார். இதற்கிடையில் கும்கி படத்தின் பார்ட்2 படபிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது. இந்த படப்பிடிப்பை இந்த ஆண்டுக்குள் முடித்துவிட்டு டிசம்பர் மாதம் வெளியிடலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார். இதற்கு அடுத்தபடியாக பிரபு சாலமனின் அடுத்த படைப்பு ஆரம்பமாக போகிறது..

Jan 25, 2024

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அயோத்தியில் 10 ஆயிரம் சதுர அடியில் வீட்டுமனை வாங்கி உள்ளார்

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்  ஜன.,22ல் பிரமாண்டமாய் நடந்தது. இதனால் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. பிரதமர் முதல் பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் பங்கேற்றனர். அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிக்கு பின் அந்த ஊரும் வேகமாக வளர்ந்து வருகிறது.உலகமே எதிர்பார்க்கும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்குபின், வர்த்தக ரீதியாகவும், தொழில் நகரகமாக மாறி வருகிறது. இதனால் முதலீடுகளும் அதிகமாகி வருகின்றன. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அயோத்தியில் 10 ஆயிரம் சதுர அடியில் ரூ.14.50 கோடி மதிப்புள்ள வீட்டுமனை வாங்கி உள்ளார். 

Jan 25, 2024

10 ஆண்டுகளில் வெளியான த்ரில்லர் படங்கள்

தமிழ்ப்படங்களில் இதுவரை வெளிவராத முற்றிலும் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படங்கள் தான் இவை. கடந்த10 ஆண்டுகளில் வெளியான துப்பறியும் படங்களைப் பார்க்கலாம்.துருவங்கள்16 டி16 என சுருக்கமாக அழைக்கப்படும் இந்தப் படத்தை இயக்கியவர் கார்த்திக் நரேன்.2016ல் வெளியானது. ரகுமான் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளார். அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்த படம் இது.மெட்ரோ-2016ல் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான படம். ஸ்ரீஷ், பாபிசிம்ஹா, சென்ட்ராயன் உள்பட பலர் நடித்துள்ளனர். திருடர்களிடமிருந்து பெண்கள் எப்படி தப்பிப்பது என்பதை சொல்லித் தரும் ஒரு விழிப்புணர்வு படம். தோட்டாக்கள்-2017ல் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் வெளியான படம். வெற்றி, அபர்ணா பாலமுரளி, எம்.எஸ்.பாஸ்கர், நாசர், மணிகண்டன் உள்பட பலர் நடித்துள்ளனர்.யுத்தம் செய்-2011ல் மிஷ்கின் இயக்கிய படம் யுத்தம் செய். சேரன், ஒய்.ஜி.மகேந்திரன், லட்சுமி, ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். சேரன் நடித்த ஒரே த்ரில்லர் படம் இது. கொஞ்சம் ரூட்டை மாற்றித் தான் பார்ப்போமே என்று நடித்தார். ஆனால் படம் பிளாப் ஆகிவிட்டது. அதனால் தன் வழக்கமான பாதைக்கே திரும்பவும் சென்றுவிட்டார்.நான்-2012ல் வெளியான படம். ஜீவா சங்கர் இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி நடித்து இசை அமைத்துள்ளார். சித்தார்த், வேணுகோபால் உள்பட பலர் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியை வித்தியாசமாகக் காட்டிய படம்.குற்றமே தண்டனை-2016ல் எம்.மணிகண்டன் இயக்கத்தில் வெளியான படம். விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். படத்தில் நாயகி கொல்லப்படுகிறாள். அந்தக் கொலைகாரன் யார் என்பதைக் கண்டறியும் படம்.ஈரம்-2009ல் அறிவழகன் இயக்கத்தில் வெளியான படம். ஆதி, நந்தா, சிந்து மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். தண்ணீர் எப்படி பழிவாங்குகிறது என்பது தான் கதை. படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் ரசிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன.தெகிடி-2014ல் ரமேஷ் இயக்கிய படம். அசோக் செல்வன், ஜனனி ஐயர், ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். கொலையை மையமாகக் கொண்டு துப்பறியும் படம். படத்தின் தலைப்பே புரியாத புதிராக உள்ளதே என்ற கோணத்தில் என்ன தான் படத்தில் எடுத்திருக்கிறார்கள் என்பதப் பார்ப்பதற்காகவே பலரும் திரையரங்கிற்கு வந்தனர். அந்த வகையில் யாரையும் ஏமாற்றாமல் பலரையும் ரசிக்க வைத்தது இந்தப் படம்.

Jan 18, 2024

100 கோடி வசூலித்துள்ள 'ஹனு மான்'

தெலுங்கில் மட்டுமல்லாது பான் இந்தியா படமாக மற்ற மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியான படம்'ஹனுமான்”பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய் மற்றும் பலர் நடி த்துள்ள 'ஹனுமான்” படம்இப்படம் நான்கு நாட்களில் உலக அளவில் 100 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “குறைந்த தியேட்டர்களிலும், குறைவான டிக்கெட் கட்டணங்களில்,” இந்தத் தொகைப் பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.இப்படம்200 கோடி வசூலைக் கடக்க வாய்ப்புள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். படத்தின் இயக்குனர் பிரசாந்த்...வர்மா, “எனது திரைப்படங்களில் முதல் செஞ்சுரி,” என்று குறிப்பிட்டுள்ளார்..

Jan 18, 2024

இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளி வந்த திரைப்படங்கள்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்' நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர் விஜய் சேதுபதி  நடித்த இந்தி படம் மெரி கிறிஸ்துமஸ் : அருண்விஜய் நடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1'.:ரியோ ராஜ் கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜோ'. 'ஹாட்ஸ்டார்' ஒடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. 3 ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு இயக்குனர் சேரன் புதிய வெப் சீரிஸ் ஜர்னி :வெப் சீரிஸ் நேரடியாக 'சோனி லிவ்' ஓடிடி தளத்தில் வெளியான செவப்பி.

Jan 18, 2024

Top 5 Best multiplex in TAMILNADU - 2023

1. Broadway Cinemas, Coimbatore + Epiq, laser imax, seats, Food - outside city centre www ww (travel time) rest room maintenance.2. DNC, Dharmapuri +2 gaint screens, top notch picture clarity, Dolby sound, ample parking space, food - interval time local advertisements it's kill ur time.3. Varadharaja Cinemas. Chennai + Food, especially pastry all screens, RGB laser and Atmos, couple seats screen, - car parking conjunction, staff behaviour.4. PVR aero mall, Chennai + Latest RGB Laser and seats, leg room timing, parking.5. PSS Tirunelveli + Seats RGB Laser - Food

1 2 ... 11 12 13 14 15 16 17 ... 25 26

AD's



More News