25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


வெள்ளித்திரை

Jan 22, 2026

பிரியா பவானி சங்கர் 'மரகத நாணயம் 2'வில்...

ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில், ஏஆர்கே சரவணன் இயக்கத்தில் 2017ல் வெளியாகி வர வேற்பை பெற்ற படம் மரகத நாணயம்.தற்போது இதன் இரண்டாம் பாக பணிகள் துவங்கி உள்ளதை படக்குழு ஒருவீடியோ உடன் அறிவித்துள்ளனர். முதல் பாகத்தில் நடித்தவர்களுடன்  காமெடி கலந்த பேண்டஸி படமாக, கூடுதலாக இன்னொரு நாயகியாக பிரியா பவானி சங்கரும் இணைந்துள்ளார்.

Jan 22, 2026

சாய் பல்லவியின் ஹிந்தி படம் மே 1ல் ரிலீஸ்.

ஹிந்தியில் கால்பதித்துள்ள நடிகை சாய் பல்லவி, ரன்பீர் உடன் 'ராமாயணம்', அமீர்கான் மகன் ஜூனைத் கான் உடன் 'ஏக் தீன்' ஆகிய படங்களில் நடிக்கிறார். காதல் கதையில் உருவாகும் ,ஏக் தீன் படத்தை சுனில் பாண்டே இயக்க. இப்படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது படத்தின் டீசரை வெளியிட்டு, மே 1ல் படம் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.

Jan 22, 2026

கவின் படத்தில் இணைந்த சாண்டி.

 அறிமுக இயக்குனர் கென் ராய்சன் இயக்கும் ,நடிகர் கவின் தனது 9வது படமாக படத்தில்,. பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்கிறார். காதல், காமெடி கலந்த கதையில் உருவாகியுள்ள இப் படத்தில் கவினின் நண்பரும், நடன இயக்குனருமான சாண்டி இணைந்துள்ளார். வில்லனாக மலையாளத்தில் வெளியான 'லோகா' படத்தில் நடித்திருந்தார்.

Jan 22, 2026

இடைவெளியின்றி வாராவாரம் புதிய படங்கள் வெளியீடுகள்.

இந்தாண்டும் கடந்தாண்டை போல்இடைவெளியின்றிவாராவாரம்புதியபடங்கள்வெளியாகின்றன. இந்தவாரம்., ஜன. 23ல் 'திரௌபதி 2, ஹாட்ஸ்பாட் 2 மச், மாய பிம்பம்' ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. இவற்றுடன் அஜித்தின் 'மங்காத்தா' படமும் ரீ ரிலீஸாகிறது. விஜயின் தெறி படம் இதனுடன் வருவதாக இருந்து மீண்டும் தள்ளிப்போய் உள்ளது.

Jan 22, 2026

'பராசக்தி, வா வாத்தியார், தலைவர் தம்பி தலைமையில்' வசூல் .

இந்த பொங்கலுக்கு 'பராசக்தி, வா வாத்தியார், தலைவர் தம்பி தலைமையில்' ஆகிய மூன்று படங்கள் வெளியாகின. 9 நாளில் பராசக்தி படம் 80 கோடியும், மற்ற இரு படங்கள் முறையே 10 கோடியும்,20 கோடியும் வசூலை எட்டி உள்ளன. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படம் ரூ.100 கோடி வசூலை ஈட்டியதாக படக்குழுஅறிவித்துள்ளது. இது இந்த ஆண்டின்முதல்ரூ.100 கோடிவசூல்படமாகும். 'டான், டாக்டர், அமரன், மதராஸி' படங்களைதொடர்ந்துசிவகார்த்திகேயனுக்கு 5வது 100  கோடி படமானது. 

Jan 22, 2026

ஒளிப்பதிவாளர் செழியனின் திரைப்பட மாணவர்கள் 34 இயக்குனர்களின் அறிமுக விழா.

'வழித்துணை' 'சுழற்சி', 'மத்தி' உள்ளிட்ட 34 படங்களை  ஒளிப்பதிவாளர் செழியனின் திரைப்பட மாணவர்கள் 34 பேர் இயக்குகின்றனர். இந்த படங்களின் துவக்கம், இயக்குனர்களின் அறிமுக விழா ஜன., 24ல் சென்னையில் நடக்கிறது. ஒளிப்பதிவாளர்கள் பி.சி. ஸ்ரீராம், ரவிவர்மன், எடிட்டர்கள் பி. லெனின், ஸ்ரீகர் பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். 34 படங்கள் ஒரே நேரத்தில் தயாராகின்றது.

Jan 15, 2026

முதல்முறையாக பாலிவுட்டில் கல்யாணி பிரியதர்ஷன்.

கல்யாணி பிரிய தர்ஷன் நடித்த 'லோகா சாப்டர் 1'மலையாளத்தில் அதிக வசூலை குவித்த படமாக அமைந்தது. முதல்முறையாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் .இவரை தேடி பல வாய்ப்புகள் வருகின்றன. பாலிவுட்டில். ரன்வீர் சிங் நடிப்பு, தயாரிப்பில் ஜோம்பி பின்னணியில் ஜெய் மேத்தா இயக்க, நாயகியாக கல்யாணி, ஒரு திரில்லர் படம் உருவாகிறது. 

Jan 15, 2026

வெண்ணிற ஆடை மூர்த்தி இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பதன் சீக்ரெட்.

சாப்பாடு பொறுத்தவரை, முழுக்க முழுக்க சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுவேன், வீட்டில் செய்யும் உணவுகளே என் சாய்ஸ். ஹோட்டல் சென்றால் கூட, ஃபேன்சி உணவுகள் சாப்பிடவே மாட்டேன், 90 வயதாகும் வெண்ணிற ஆடை மூர்த்தி இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பதன் சீக்ரெட்டை கூறியுள்ளார்.

Jan 15, 2026

இந்திய அழகி ரியா சிங்கா தெலுங்கில் அறிமுகமாகும் படம் 'ஜெட்லி'.

தெலுங்கில் சத்யா நாயகனாக ரித்தேஷ் ராணா இயக்கத்தில் நடிக்கும் 'ஜெட்லி'. படத்தில் இந்திய அழகி ரியா சிங்கா என்பவர் நாயகியாக அறிமுகமாகிறார். இவர் 'மிஸ் யுனிவர்ஸ் இந்தியா' 2024ல் நடந்த அழகி போட்டியில் பட்டம் வென்றவர். ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, சுஷ்மிதா சென், லாரா தத்தா, சுமன் ராவ் வரிசையில் இப்போது அழகியான ரியா சிங்காவும் சினிமாவிற்கு வந்திருக்கிறார்.

Jan 15, 2026

'டூரிஸ்ட் பேமிலி,காந்தாரா-2'  ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகி உள்ளன.

உலகளவில் சினிமாவில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விழா மார்ச்சில் அமெரிக்காவில் நடக்கிறது. சிறந்த திரைப்பட பிரிவில் தமிழிலிருந்து 'டூரிஸ்ட்பேமிலி', கன்னடத்திலிருந்து 'காந்தாராசாப்டர் 1, மகாவதார்நரசிம்மா', ஹிந்தியிலிருந்து 'தன்வி' சிறந்த வெளிநாட்டு பிரிவில் ஏற்கனவே இந்தியா சார்பில் 'ஹோம்பவுண்ட்' ஆகிய படங்கள் தேர்வாகி உள்ளன.

1 2 ... 9 10 11 12 13 14 15 ... 75 76

AD's



More News