25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


வெள்ளித்திரை

Jan 15, 2026

கஜேஸ், மறைந்த நடிகர்,நாகேஷ் பேரனின் புதிய படம்.

கஜேஸ்,மறைந்த நடிகர்நாகேஷின்பேரனும், நடிகர்ஆனந்த்பாபுமகன், நடித்த படங்கள்தோல்விஅடைந்தன.  அருள்பிரகாசம் இயக்கியுள்ள 'மனசும் மனசும் சேர்ந் தாச்சு' படத்தில் நாயனகாக நடித்துள்ளார்..

Jan 15, 2026

  ''கிராணி “படத்தில் சூனியக்காரியாக வடிவுக்கரசி

  ''கிராணி படம் பேய் திரில்லர் கதையில், விஜய குமாரன் என்பவர் இயக்க ,நடிகை வடிவுக்கரசி 80 வயது முதிய பெண்ணாக, சூனியக்காரியாக நடித்துள்ளார். 'தாய்கிழவி' படத்தில் ராதிகா, அங்கம்மாள்' படத்தில் கீதா கைலாசம்,  ஆகியோர் முதிய கதாபாத்திரத்தில் கதையின் நாயகிகளாக நடித்துள்ளனர். 

Jan 15, 2026

மிக அதிகம் படித்த நடிகர் சார்லி.

உலக சினிமா வரலாற்றிலேயே அதிகம் படித்த ஒரே நடிகர் என்ற சாதனையினை படைத்துள்ளார் நடிகரும் வேதியியலில் முதுகலை பட்டம் மற்றும் டாக்டர் பட்டமும் வென்றவருமான சார்லி அவர்கள்  . M.Sc., M.Phil., Ph.D. 

Jan 15, 2026

பாக்யராஜ் மீண்டும் படம் இயக்க உள்ளார்.

பாக்ய ராஜ் தனது 72வது பிறந்தநாள் மற்றும் சினிமாவில் 50 ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடினார். நடிகரும் இயக்குனருமான அவர் அளித்த பேட்டியில், "சில ஆண்டுகளாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்தேன். மீண்டும் படம் மற்றும் வெப் சீரியஸ் இயக்க உள்ளேன்" என்றார்.

Jan 15, 2026

ரச்சிதா மகாலட்சுமி பேய் ஆக நடித்துள்ளார்.

99/66' படத்தில் ஹீரோயினாக ரச்சிதா மகாலட்சுமி நடித்து ,எம். எஸ். மூர்த்தி இயக்கி உள்ளார். ரச்சிதா கூறுகையில் "என் சினிமா பயணத்தில் சம்பள விஷயத்தில் குறை கள் இருப்பினும். படத்தின் படப்பிடிப்பு முடியும் அன்றே முழு சம்பளத்தையும் கொடுத்தனர். படம் சின்னது என்று நினைத்தேன். ஆனால் பெரிதாக வந்துள்ளது. நான் பேயாகவும் நடித்திருக்கிறேன்.

Jan 08, 2026

நடிகர் ரவி மோகன் நடிப்பில் 'ஜீனி'.

நடிகர் ரவி மோகன் நடிப்பில், புதுமுக இயக்குனர் அர்ஜூனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஜீனி'. கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி நடிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணி நடக்கிறது. பிப்ரவரியில் ரிலீஸ் செய்ய உள்ளனர்.

Jan 08, 2026

படத்தை பார்த்து கண்ணீர் விட்ட இயக்குனர் ஷங்கர் .

 சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த 'சிறை'படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை பார்த்த இயக்குனர் ஷங்கர், “பல இடங்களில் எனக்கு கண்ணீரை வர வழைத்தது. 'சிறை ஒரு நல்ல படம்” இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி தனது சிறந்த அறிமுகத்தின் மூலம் நம் இதயங்களை சிறை பிடித்துள்ளார். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமா, 2025ஐ சிறந்த வெற்றியுடன் நிறைவு செய்கிறது" எனக் கூறியுள்ளார்.

Jan 08, 2026

யோகிபாபு 300வது படத்தை எட்டி உள்ளார்.

 300வது படத்தை எட்டி உள்ள யோகி பாபு காமெடியாகவும், இடையிடையே ஹீரோவாகவும் நடித்து உள்ளார்.  'அர்ஜுனன் பேர் பத்து' என பெயரிட்டு,ராஜ்மோகன் இயக்கும் இப்படத்தின், முதல் பார்வை போஸ்டரை ஆங்கில புத்தாண்டு தினத்தில் வெளியிட்டனர். யோகிபாபு. "இது எனது 300வது படம், இத்தனை படங்களுக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் எனது  நன்றி. இன்னும் படங்கள் பண்ணனும். உங்களின் ஆதரவு தேவை" என்றார் .

Jan 08, 2026

ஆங்கில புத்தாண்டு தினத்தில் 'ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை  போஸ்டர்.

 சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸின் 25வது படமாக ஸ்பிரிட் உருவாகிறது. திரிப்தி டிமிரி நாயகியாக நடிக்கிறார். அதிரடி ஆக்ஷன் படமாக போலீஸ் கதையில் உருவாகிறது. ஆங்கில புத்தாண்டு தினத்தில் படத்தின் முதல் பார்வை  போஸ்டரை வெளியிட்டனர்..

Jan 08, 2026

தெலுங்கில் நடிகர் பால கிருஷ்ணா நடித்த 'பகவந்த் கேசரி' பட ரீமேக் உரிமையை ரூ.4 கோடிக்கு வாங்கிய 'ஜனநாயகன்'.

 'பகவந்த் கேசரி' பட ரீமேக் உரிமையை ரூ.4 கோடிக்கு வாங்கி,விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்தின் டிரைலரில் பல காட்சிகள், தெலுங்கில் நடிகர் பால கிருஷ்ணா நடித்த 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் என உறுதிப்படுத்தியுள்ளன. அந்த படத்தின் மூலக்கதையைதமிழுக்குஏற்றார்போல மாற்றி, விஜய்ரசிகர்களுக்காக, அரசியல்சீன்களுடன் 'ஜனநாயகன்' உருவாக்கியுள்ளனர். ஐனநாயகன், பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரியின் ரீமேக்கா?வெளியான கதைக்களத்தின்படி, 'ஐனநாயகன்' திரைப்படம் ‘பகவந்த் கேசரியிலிருந்து வேறுபட்டதாகத் தெரிகிறது.இது விஜய் நடிக்கும் இப்படம் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த படத்தின் ரீமேக் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

1 2 ... 10 11 12 13 14 15 16 ... 75 76

AD's