ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பவன் கல்யாண், நிதி அகர்வால் நடிப்பில் பான் இந்தியா படமாக 'ஹரிஹர வீரமல்லு ஜூலை 24 வெளியானது. தெலுங்கு தவிர்த்து பிறமொழிகளில் சுமாரான வரவேற்பே கிடைத்துள்ளது. இருப்பினும் முதல்நாளில் இந்தப்படம் உலகளவில் ரூ.70 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. இதனிடையே படத்தின் நீளம் ரெண்டே முக்கால் மணிநேரம் இருந்தது. தற்போது 15முதல் 30 நிமிடம் வரை குறைத்துள்ளனராம்.
உலக அளவில் வெளியாகும் படங்களின் ரேட்டிங், அவற்றின் தகவல்கள் அடங்கிய இணைய தளம் ஐஎம்டிபி. 2025 அரையாண்டில் வெளியான இந்திய படங்களின் டாப் 10 பட்டியலை வெளியிட்டுள்ள னர். அதில் ஹிந்தி படமான 'சாவா' முதலிடத்தில் உள்ளது. தமிழ் படங்களான 'டிராகன்' 2வது, 'ரெட்ரோ' 5வது, 'விடா முயற்சி' 10வது இடங்களை பிடித்தன. ஹிந்தி படங்களான 'தேவா' 3வது, "ரெய்டு 2' 4வது, 'தி டிப்ள மோட்' 6வது, 'சித் தாரே ஜமீன் பர்' 8வது, 'கேசரி சேப்டர் 2' 9வது,மலையாள படமான 'எல் எம்புரான்' 7வது இடங்களை பிடித்தன. இந்த பட் டியலில் ஒரு தெலுங்கு படம் கூட இடம் பெறவில்லை.
ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள 'வார் 2'படத்தில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் வில்லனாக நடித்து பாலி வுட்டில் அறிமுகமாகிறார்.. இந்த படத்தில் நாயகன் ஹிருத்திக்கிற்கு 50 கோடி சம்பளம். ஆனால் என் டி ஆருக்கு 60 கோடி சம்பளமாம். ஆக்ஷன் கலந்த ஸ்பை திரில்லராக உருவாகி உள்ள இந்த படம் ஆக., 14ல் பான் இந்தியா படமாக வெளியாகிறது.
நடிகர் அதர்வா நடித்து, திரைக்கு வந்த 'டிஎன்ஏ' படம் வரவேற்பை பெற்ற 'டிஎன்ஏ' படம் .இந்த வெற்றியை கொண்டு ஓராண்டாக கிடப்பில் இருந்த அதர்வா நடித்த 'தணல்' படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். போலீஸ் அதிகாரியாக அதர்வா நடித்துள்ள இப்படம் 'வலி உன்னை ஹீரோவாக்கும் அல்லது வில்லனாக்கும்' என்ற கருப்பொருளை மையமாக வைத்து உருவாகியுள்ளது. லாவண்யா திரிபாதி நாயகியாக நடித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா ,கவுதம் தின்னூரி இயக்கத்தில் நடித்துள்ள 12வது படம் 'கிங்டம்', நாயகியாக பாக்ய ஸ்ரீ போர்ஸ் நடிக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.இந்தபடம் ஜூலை 4ல் ரிலீஸாக வேண்டிய இந்த படத்தின் பணிகள் முடியாததால் ரிலீஸை தள்ளி வைத்தனர். இப்போது ஜூலை 31ல் படம் ரிலீஸ் என அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுடன் கூடிய புரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். தெலுங்கு, தமிழில் ரிலீஸாகிறது.
பன்முகத் திறமைகொண்டவர்பிரபுதேவாநடனஇயக்குனர், நடிகர்,தமிழ், தெலுங்கு, ஹிந்தியில்படங்களும் இயக்கி உள்ளார்.தெலுங்கில் கடைசியாக 2007 சிரஞ்சீவியை வைத்து 'ஷங்கர் தாதா ஜிந்தாபாத்' படத்தை இயக்கினார். அதன்பின் தமிழ், ஹிந்தியில் மட் டுமே படம் இயக்கியவர். 18 ஆண்டுக்கு பின் மீண்டும் தெலுங்கில் படம் இயக்குகிறார். இதில் நாயகனாக கண்ணப்பா படத்தில் நடித்த விஷ்ணு, மஞ்சு நடிக்க போகிறார்.
இயக்குனர் ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் 2013ல் மலையாளத்தில் வெளியான 'திரிஷ்யம்' படம் வெற்றி பெற்றது. இதேபடம் தமிழ், ஹிந்தியிலும் ரீமேக் ஆனது. இதன் 2வது பாகம் மலையாளம், ஹிந்தியில் உருவாகி வரவேற்பை பெற்றது. திரிஷ்யம் 3ம் பாகத்திற்கான படப்பிடிப்பு அக்.2ல் துவங்கி, அடுத்தாண்டு அக்.2ல் படம் ரிலீசாகும் என்றும் அறிவித்துள்ளனர். ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிக்கிறார்.
பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் நடித்துள்ள 'தி ராஜா சாப்' படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. டிச.,5ல் ரிலீஸாகிறது. இயக்குனர் மாருதி கூறும்போது, “எந்த சந்தேகமும் இல்லாமல் 'தி ராஜா சாப்' படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமான வசூலை குவிக்கும். பான் இந் தியா வெளியீடு, சஞ்சய் தத், மூன்று ஹீரோயின்கள் மற்றும் கலகலப்பான பிரபாஸ் என படம் குறித்த நம்பிக்கை அதிகமாகவே உள்ளது" என்றார்.
கவுதம் ராம் கார்த்திக் (கவுதம் கார்த்திக் ) நாயகனாக சூரிய பிரதாப் இயக்கத் தில் ,சயின்ஸ் பிக்ஷன் கலந்த கிரைம் திரில் லராக உருவாகும் இதில் போலீஸ் அதிகாரியாக இவர் வருகிறார். படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. தயாரிப்பு தரப்பு கூறும்போது தமிழ் சினிமா எப்போதும் உலக அளவில் பார்வையாளர்களை ஈர்க்கும் தனித்துவமான கதை சொல்லும் பாணியைக் கொண்டுள்ளது.
ஜூலை 18ல்மட்டும் 'யாதும்அறியான், டைட்டானிக், டிரெண்டிங், பன்பட்டர்ஜாம், ஆக்நேயா, ஆக்கிரமிப்பு, சென்ட்ரல், கெவி, ஜென்ம நட் சத்திரம்,களம் புதிது, நாளை நமதே'ஆகிய 11 படங்கள் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை படங்க ளுக்கும் தியேட்டர் கிடைக்குமா, ரசிகர்களிடம் இதில் எத்தனை படங்கள் சென்று சேரும் என்பது தெரியவில்லை. இந்த ஆண்டின் அரையாண்டுக்குள் 120க்கும் மேற் பட்ட படங்கள் வெளியாகியுள்ளன.