ரன்பீர்கபூர், சாய்பல்லவி, யஷ்உள்ளிட்டோர்நடிப்பில்நிதேஷ்திவாரிஇயக்கத்தில், உருவாகிவரும்புராணப்படம் 'ராமாயணா'. இதன் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என சமீபத்தில் அறிமுக வீடியோ உடன் அறிவித்தனர். "இரண்டு பாகங்களின் பட்ஜெட் ரூ.4000 கோடி" என இப்படத்தின் தயாரிப்பாளர் நமித் மல்கோத்ரா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தியத் திரையுலக வரலாற்றில் இதுவரையில் இத்தனை கோடி செலவு செய்து எந்த ஒரு திரைப்படமும் எடுக்கப்பட்டதில்லை.
நடிகர்கள் பஹத் பாசில் வடிவேலு இணைந்து நடித்துள்ள படம் 'மாரீசன்'. சுதீஷ் சங்கர் இயக்கி உள்ளார்.கிராமிய பின்னணியிலான ட்ராவலிங் திரில்லர் கதையில் உருவாகியுள்ளது. 'மாமன்னன்' ப ட த்தின் வெற்றிக்கு பின் நடி கர்கள் வடி வேலு, பஹத் பாசில் கூட்ட ணியில் உரு வாகி உள்ள மற்றொரு படம். இதன் டிரைலர் வெளியாகி உள்ளது. கன்னியாகுமரியில் இருந்து திருவண்ணாமலைக்கு பைக்கில் பஹத்துடன் பயணம் செய்கிறார் வடிவேலு, ஞாபகமறதி நோயால் அவதிப்படும் வடிவேலுவிடம் இருக்கும் பணத்தை திருட நினைக்கிறார் பஹத். இவர்கள் இடையேயான நிகழ்வுகள் தான் படத்தின் ஒருவரிக் கதை. கவனம் பெற்றுள்ள இந்த பட டிரைலர் 'மாமன்னன்' பாணியில் சீரியஸாக இருக்கும் . படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், படம் ஜூலை 25ல் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.
ராம் ஜெகதீஷ் இயக்கத்தில் , தெலுங்கில் நடிகர் நானி தயாரிப்பில் பிரியதர்ஷி புலி கொண்டா நடிப்பில் வெளிவந்த படம் 'கோர்ட்'. குறைந்த பட் ஜெட்டில் தயாராகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற, இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ளனர். இதற்கான உரிமையை நடிகர் பிரசாந்த் தந்தையான இயக்குனர் தியாகராஜன் பெற்றுள்ளார். பிரசாந்த் நடிக்க, தியாகராஜன் இயக்குவார் என தெரிகிறது.
இதற்காக பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித் துள்ளனர். கமல் வெனியிட்ட பதிலில் "ஆஸ்கர் அகாடமியில் இணைவது பெருமை. இந்த அங்கீகாரம் எனக்கானது மட்டுமல்ல, இந்திய திரைப்படம் மற்றும் என்னை வடிவமைத்த ஏராளமான கதை சொல்லாளர்களுக்கும் சொந்தமானது. உலகளாவிய திரைப் பட சமூகத்துடன் ஈடுபட ஆர்வமாய் உள்ளேன். என்னுடன் தேர்வான சக கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.
மோகன்லால் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மகன் பிரணவ் உதவி இயக்குனராக பணியாற்றிவிட்டு நடிகராக பயணித்து வருகிறார். அடுத்து இவரது மகளான விஸ்மாயாவும் நடிகையாக அறிமுகமாகிறார்.'துடக்கம்' (தொடக்கம்) என பெயரிடப்பட்டுள்ள இதை 2018 படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்குகிறார். மோகன்லாலே தயாரிக்கிறார்.
'ரிசானா ஏ கேஜ்டு போட் என்ற படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார்.'போடா போடி' படம் மூலம் நாயகியாக அறி முகமான வரலட்சுமி, தமிழ், தெலுங்கு, கன் னடம், மலையாளத்திலும் நடித்துள்ளார்.. பிரிட்டிஷ் நடிகர் ஜெர்மி ஐயன்ஸ் நாயகனாக நடிக்கிறார். அவருடன் நடிப்பது பற்றி வரலட்சுமி "ஜெர்மி உடன் ஹாலிவுட்டில் அறிமுகமாவது எனது கனவு நனவான தருணம். உலக சினிமா ரசிகர்களால் மதிக்கப்படும் நடிகர். சர்வதேச ஜாம்பவான்களுடன் பணியாற்றுவது மகிழ்ச்சி" என்றார் வரலட்சுமி .
'கேஜிஎப் 'படங்களின் நாயகனான கன்னட நடிகர் யஷ் தற்போது 'டாக்ஸிக்' என்ற படத்தில் நடிக் கிறார். நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடிக்க, கீது மோகன்தாஸ் இயக்குகி றார். கியாரா அத்வானி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்தச் சூழலில் அவர் அடிக்கடி பெங்களூரு வந்து படப்பிடிப்பில் பங்கேற்றால் சரி யாக இருக்காது என எண்ணிய யஷ், டாக்ஸிக் படத்தின் படப் பிடிப்பை மும்பைக்கே மாற் றிவிட்டார். இவரின் செயலை திரையுலகினர் பாராட்டுகின் றனர்.
2026ம் ஆண்டுக்கான 'ஹாலிவுட் வாக் ஆப் பேம்' கவுரவத்தை பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே பெற்றுள்ளார். இதற்கான அறிவிப்பை ஹாலிவுட்டின் வர்த்தக சபை அறிவித்தது. மோஷன் பிக்சர் பிரிவில் இவர் தேர்வாகி உள்ளார். தீபிகா இப்படியொரு அங்கீகாரத்தைப் பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார். ஹாலிவுட் நடிகர் ராமி மலெக் , உடன் பிரிட்டன் நடிகை எமிலி பிளன்ட், பிரெஞ்ச் நடிகர் டிமோதி சால்மெட் உடன் தீபிகா ஆகியோரும் இதே பிரிவில் தேர்வாகி உள்ளனர். அமெரிக்கா, கலிபோர்னியாவின் ஹாலிவுட் நகரில் உள்ள நடைபாதையில் பொழுதுபோக்குத் துறைகளில் சிறந்து விளங்கிய பிரபலங்களை கவுரவிக்கும் வகையில் நட்சத்திர வடிவிலான பதக்கங்கள் பதிக்கப்படும். இந்த கவுரவமிக்க அங்கீகாரத்தை தீபிகா பெறுவது இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும்.
ஜூலை 10ல் சசிகுமார், லிஜோ மோல் ஜோஸ் நடித்த இலங்கை அகதிகளைப் பற்றிய 'ப்ரீடம்' படம் வெளியாகிறது. ஜூலை 11ல் விமலின் ‘தேசிங்கு ராஜா 2', வனிதா இயக்கி, நடித்துள்ள 'மிசஸ் அண்ட் மிஸ்டர்', விஷ்ணு விஷால் தம்பி நடித்துள்ள 'ஓஹோ எந்தன் பேபி' மற்றும் புதுமுகங்கள் நடித்துள்ள 'மாயக் கூத்து' ஆகிய 5 தமிழ் படங்கள் வெளியாகின்றன.
தமிழ், தெலுங்கிலும் நடிக்கும் மலையாள நடிகரான ஜெயராம் ,தனது மகன் காளிதாஸ் உடன் 'ஆசைகள் ஆயிரம்' என்ற படத்தில் 25 ஆண்டுகளுக்கு பின் இப்போது தனது தந்தையுடன் நடிக்கிறார். தமிழ், மலையாளத்தில் தயாராகும் இதை பிரஜித் இயக்குகிறார். இதன் முதல்பார்வை வெளியாகி உள்ளது. காளிதாஸ் 2000ல் தனது தந்தையுடன் 'கொச்சு கொச்சு சந்தோசங்கள்' படத்தில் சிறுவயது ஜெயராமாக காளிதாஸ் 25 ஆண்டுகளுக்கு முன் நடித்துள்ளார்.