நடன புயல் பிரபுதேவா
காதலன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான பிரபுதேவா தொடர்ந்து ராசைய்யா, விஐபி, மின்சாரக்கனவு, டைம் என ஏராளமான படங்கள் நடித்தார். இந்தியாவின் சிறந்த நடன அமைப்பாளர் பிரபுதேவாவின் கோரியோ கிராஃபியயில் அனைத்து நடிகர்களுமே சிறப்பான நடனத்தை வெளிப்படுத்துவார்கள். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு நடனம் அமைத்தார் 90களில் முன்னணி நடிகர்கள் வரிசையில் பிரபுதேவா இருந்தார். காதல் கொண்டேன் படத்துக்கு ஹீரோவாக நடிக்க முதலில் செல்வராகவன் பிரபுதேவாவைத்தான் அணுகினார். ஒரு நிகழ்ச்சியில் பேசிய மீனா; இருப்பதிலேயே ரொம்பவும் கடினமான கோரியகிராஃபர் என்றால் அது பிரபுதேவாதான் என கூறினார்
பிரபுதேவா இந்தியாவில் புகழ் பெற்ற நடன அமைப்பாளர்களில் ஒருவர். அதுமட்டுமின்றி பல படங்களில் ஹீரோவாக நடித்து அப்ளாஸை அள்ளிய அவர் வெற்றிகரமான இயக்குநர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார். அவர் தமிழில் இயக்கிய போக்கிரி திரைப்படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆனது. தற்போது விஜய்யுடன் GOAT படத்தில் நடித்துவருகிறார் பிரபுதேவா. ஒரு நடன அமைப்பாளராக மட்டுமின்றி பிரபுதேவா நடிகராகவும் புகழ் பெற்றவர்..நடிகர், நடன அமைப்பாளராக கலக்கிவந்த பிரபுதேவா 2005ஆம் ஆண்டு இயக்குநராகவும் அறிமுகமானார். அவர் தெலுங்கில் இயக்கிய முதல் படம்தான் தமிழில் சம்திங் சம்திங் படமாக ரீமேக்காகியது. அதனையடுத்து தமிழில் போக்கிரி, வில்லு, வெடி, எங்கேயும் காதல் உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர் ஹிந்தியில் வாண்டட் (போக்கிரி ரீமேக்), ரவுடி ரத்தோர், ராமையா வஸ்தாவையா, தபாங் 3 உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.
பிரபுதேவாவை சுற்றி சர்ச்சைகளும் வட்டமடித்தன. தன்னுடன் நடனம் ஆடிய ரமலத் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்தச் சூழலில் பிரபுதேவாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவருக்கு கிட்டத்தட்ட 100லிருந்து 150 கோடி ரூபாய்வரை சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களில் சொகுசு வீடுகளும் இருக்கின்றன. இதற்கிடையே, பிரபுதேவா நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி மனோஜ் என்.எஸ்.இயக்க பிரபுதேவாவுடன் யோகிபாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன் உள்ளிட்டோரும் நடிக்க கமிட்டாகியிருக்கின்றனர் .
0
Leave a Reply