கில்லி ரீ ரிலீஸ் சாதனை படைத்தது
விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் 2004-ம் ஆண்டு வெளிவந்த படம் கில்லி. 20 வருடத்திற்கு பிறகு கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகி உள்ள போதும், இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு இருக்கும் ஈர்ப்பு சற்றும் குறையாததால், படத்தை தியேட்டரில் ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். இப்படம் ரீ ரிலீஸ் ஆன அனைத்து தியேட்டரிலும் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது.இருபது ஆண்டுகளுக்கு முன் தியேட்டரில் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து திரையில் சக்கை போடு போட்ட திரைப்படங்களை மீண்டும் கையில் எடுத்து ரீ ரிலிஸ் செய்ய தொடங்கியுள்ளது தமிழ் சினிமா. இதற்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருப்பதால் தொடர்ச்சியாக பழைய படங்கள் ரீ ரிலிஸ் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆளவந்தான், முத்து, வாரணம் ஆயிரம், 3, மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்கள் வெளியானது. இந்த படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது விஜய், த்ரிஷா கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகி உள்ளது
இருபது ஆண்டுகள் கழித்தும் இப்படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி மக்கள் பலரும் குடும்பமாக சென்று படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர். இப்படி இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்து வருவதால் வசூல் ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்து வருவதாக சொல்லப்படுகிறது. ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட முதல் நாளிலே 4 கோடிகளுக்கு மேல் உலகம் முழுவதும் வசூல் செய்து ரீ ரிலீஸ் செய்த படங்களில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்து இருக்கிறது கில்லி.இப்படம் உலகளவில் ரூ. 24 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்றும், படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கடந்த நிலையிலும், இப்படத்தின் வசூல் குறையாததால், கில்லி திரைப்படம், 50 கோடி வரை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கில்லி திரைப்படத்தை இயக்கிய தரணி மற்றும் அப்படத்தின் இசையமைப்பாளரான வித்யாசாகர் கில்லி படம் ஓடும் திரையரங்கிற்கு சென்று படத்தை கண்டு மகிழ்ந்தனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
0
Leave a Reply