மாவட்டத்தில் 56 வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.
விருதுநகர் மாவட்டத்தில் தமிழக அரசு உத்தரவுப்படி அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ள 56 வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அதன்படி, விருதுநகர் வட்டாரப்போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட சண்முக சுந்தரபுரம் விலக்கு முதல் கோட்டூர் வரை, வாழ வந்தாள்புரம் முதல் கோட்டூர் வரை, வே.வ. வன்னியப்பெருமாள் கல்லூரி(VVV காலேஜ்) முதல் நல்லமநாயக்கன்பட்டி வரை(NH47), விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் முதல் ஒண்டிப்புலி நாயக்கனூர் வரை, விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முதல் வாழவந்தாள்புரம் வரை, விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முதல் சென்னல்குடி வரை, விருதுநகர் ஆத்துப்பாலம் முதல் மங்களம் பிரிவு வரை, விருதுநகர் ஏ.ஆர் கிரவுண்ட் முதல் மத்தியசேனை விலக்கு வரை,
வெற்றிலை முருகன்பட்டி முதல் காரியாபட்டி முக்கு ரோடு வரை, துலுக்கப்பட்டி ராம்கோ சிமெண்ட் பேக்டரி முதல் மேட்டமலை வரை, ஸ்ரீராம்பூர் முதல் அழகாபுரி வரை, விருதுநகர் சிட்கோ முதல் மெட்டுக்குண்டு காலனி வரை, சண்முகசுந்தரபுரம் விலக்கு முதல் மலைப்பட்டி வரை, ராமசாமிபுரம் விலக்கு முதல் கோட்டூர் வரை, பாலவனத்தம் முதல் சென்னல்குடி வரை, பாலவனத்தம் முதல் கோட்டைநத்தம் வரை, விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முதல் மேட்டுப்பட்டி வரை, முக்குளம் முதல் கட்டன்குளம் விலக்கு வரை, மெட்டுக்குண்டு காலனி முதல் சண்முகசந்தரபுரம் விலக்கு வரை, துலுக்கப்பட்டி முதல் மேட்டமலை வரை, காரியாபட்டி முதல் வெற்றிலைமுருகன்பட்டி வரை, காரியாபட்டி பேருந்து நிலையம் முதல் என்.நெடுங்குளம் வரை, காரியபட்டி பேருந்து நிலையம் முதல் குறிஞ்சான்குளம் வரை,
பகுதி அலுவலகம் அருப்புக்கோட்டை அலுவலக எல்லைக்குட்பட்ட அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையம் முதல் புலி குறிச்சி வரை, அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையம் முதல் புலியூரான் வரை,சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட தேவர் சிலை முதல் சாமிநத்தம் வரை, வெற்றிலையூரணி முதல் கூத்தனாட்சியாபுரம் வரை, அய்ய நாடார் காலேஜ் முதல் இடையன்குளம் வரை சிவகாசி அரசு மருத்துவமனை முதல் வடமாலபுரம் காலனி பிரிவு வரை, வெற்றிலையூரணி முதல் சேதுராமலிங்கபுரம் வரை,
திருவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட லட்சுமி நாராயண மஹால் முதல் பொட்டல்பட்டி வரை, மல்லி முதல் இனாம் கரிசல்குளம் வரை கிருஷ்ணன் கோவில் முதல் பண்டிதன்பட்டி வரை, ஸ்ரீவில்லிபுத்தூர் பழைய பேருந்து நிலையம் முதல் பி.மீனாட்சிபுரம் வரை, (மல்லி முதல் அன்னை சத்யா நகர் வரை, ஸ்ரீவில்லிபுத்தூர் பழைய பேருந்து நிலையம் முதல் மல்லி வரை, கிருஷ்ணன் கோவில் முதல் அழகாபுரி வரை, அழகாபுரி முதல் சுந்தரபாண்டியம் வரை, சீசாபுரம் முதல் கூமாப்பட்டி வரை, பட்டியகல் முதல் கீழக்கோட்டையூர் வரை, பட்டியக்கல் முதல் மகாராஜபுரம் வரை, முத்துவெங்கடராயபுரம் முதல் வங்கார்பட்டி வரை,
பகுதி அலுவலகம், இராஜபாளையம் அலுவலக எல்லைக்குட்பட்ட காட்டன் மார்க்கெட் முதல் நரிமேடு வரை, ஆர்டிஓ ஆபீஸ் முதல் தொட்டியபட்டி வரை, சத்திரப்பட்டி முதல் கோபாலபுரம் வரை, காந்தி சிலை முதல் அன்னத்தலை விநாயகர் கோவில் வரை, சாராபட்டி முதல் குறுக்கம்பட்டி வரை, தளவாய்புரம் பேருந்து நிலையம் முதல் முறம்பு வரை, சம்சிகாபுரம் முதல் தும்பகுளம் வரை, ராஜபாளையம் ரயில்வே நிலையம் முதல் சமத்துவபுரம் வரை, ரெட்டியாபட்டி முதல் அப்பநாயக்கன்பட்டி வரை, புதிய பேருந்து நிலையம் முதல் நத்தம்பட்டி வரை, சுந்தரராஜபுரம் முதல் பத்மா மருத்துவமணை வரை, ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் முதல் ஹீத் டிரஸ்ட் வரை, இளந்திரை கொண்டான் முதல் சொக்கனாதபுத்தூர் விலக்கு வரை, எம்.கே.எஸ் பெட்ரோல் பல்க் முதல் அட்டைமில் முக்கு ரோடு வரை.
மேற்கண்ட 56 வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க உரிய அனுமதி பெற விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப படிவத்தினை ஆன்லைன் மூலம் ரூ.1600 செலுத்தி பெற்று அதனை பூர்த்தி செய்து அதனை உரிய சான்றுகளுடன் 10.02.2025 முதல் விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நேரில் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply