25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


வெள்ளித்திரை

Sep 04, 2024

பாலிவுட் திரையுலகில் தொடர்ந்து தென்னிந்திய நடிகைகள் அறிமுகம்

பாலிவுட் திரையுலகில் தொடர்ந்து தென்னிந்திய நடிகைகள் அறிமுகமாகி வருகின்றனர். 'ஜவான்' படத்தின் வாயிலாக நயன்தாரா இந்தியில் அறிமுகமானார். மேலும் ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ், பூஜா ஹெக்டே உள்ளிட்டோரும் பாலிவுட்டில் ஏற்கனவே நுழைந்துள்ளனர். இந்த லிஸ்டில் தற்போது சாய் பல்லவியும் இணைந்துள்ளார். தனது முதல் இந்தி அறிமுக படத்திலே சீதையாக நடிக்கும் வாய்ப்பு சாய் பல்லவிக்கு கிடைத்துள்ளது.

Sep 04, 2024

நடிகை சௌகார் ஜானகி

நடிகை சௌகார் ஜானகி மற்றும் அவங்களோட மகள், பேத்தி, கொள்ளு பேத்தி, எள்ளு பேத்தி அரிய புகைப்படம்எள்ளு பேத்தி எடுத்து ஐந்து தலைமுறையை பார்த்த ஒரே தமிழ் நடிகை செளகார் ஜானகிஅவர்கள் மட்டும்தான் .

Sep 04, 2024

 இமான்வி என்ற புது முக நடிகை பிரபாஸ்க்கு ஜோடி

' சீதா ராமம் ' இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில்  கதாநாயகனாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. 1940ல் நடக்கும் பீரியட் படமாக உருவாகும் இதில் கதாநாயகியாக இமான்வி என்ற புதுமுக நடிகை நடிக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். தெலுங்கு நடிகர் பிரபாஸ் தற்போது ' ராஜா சாப் ' படத்தில் நடித்து  முடித்துள்ளார்.

Aug 28, 2024

ரஜினியுடன் நடித்தது பற்றி துஷாரா நெகிழ்ச்சி

ராயன் படத்தில் தனுஷின் தங்கையாக நடித்து கவனம் ஈர்த்த துஷாரா விஜயன் அடுத்ததாக ரஜினியின் 'வேட்டையன்', விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்' படத்தில் நடித்து வருகிறார். ரஜினியுடன் நடித்தது பற்றி அவர் கூறுகையில் "அவருடன் நடிக்க வேண்டும் என்றதும் பயம் ஏற்பட்டு, காய்ச்சலே வந்துவிட்டது. ஒரு பக்கம் மகிழ்ச்சி, இன்னொரு பக்கம் பயம் என இரண்டும் கலந்த மனநிலையில் ரஜினியுடன் நடித்தேன். அது ஒரு கனவு மாதிரியே இருந்தது" என்றார்.

Aug 28, 2024

சிவகார்த்திகேயன் படத்தில் பிஜு மேனன்

அமரன் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அவருக்கு ஜோடியாக ருக்மணி வசந்த், கீர்த்தி சனோன் நடிக்கின்றனர். வில்லனாக துப்பாக்கி படத்தில் நடித்த வித்யுத் ஜம்வால் நடிக்கிறார். மலையாள நடிகர் பிஜு மேனனும் தற்போது இப்படத்தில் இணைந்துள்ளார்.இவர் ஏற்கனவே தமிழில் மஜா, தம்பி, பழனி, அரசாங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

Aug 28, 2024

அவதார் 3 உருவாகிறது

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பேன்டஸி படமாக வெளிவந்த 'அவதார்' படத்தின் இரண்டு  பாகங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தன. தற்போது அவதார் 3 உருவாகிறது. இதற்கு 'அவதார் பயர் அண்ட் ஆஷ்' என தலைப்பு வைத்துள்ளதாக அறிவித்துள்ளனர். படப் பிடிப்பு முடிந்து கிராபிக்ஸ் வேலைகள் நடக்கின்றன. அடுத்தாண்டு டிசம்பர் மாத கிறிஸ்துமஸ் விடுமுறையில் படம் வெளியாகிறது.

Aug 28, 2024

அர்ஜுன் மகள், மருமகனை வைத்து எடுக்கும் படம்

 புதிய இயக்குனர் இயக்க அர்ஜூன் தயாரிப்பதோடு கதையையும் எழுதுகிறார்.நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதிக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இருவரும் தனித்தனியாக சில படங்களில் நடித்தாலும் அவை வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் மகள், மருமகனை வைத்து ஒரு படத்தை எடுக்க உள்ளார் அர்ஜூன்

Aug 21, 2024

ஆக. 23ல் ரிலீஸ் ஆகும்  படங்கள்

இந்த வாரம் ஆகஸ்ட் 23ல் வாழ்க்கை பற்றி பேசும்   உணர்ச்சிகரமான படங்கள்  வெளியாக உள்ளன.'கொட்டுக்காளி, வாழை, போகுமிடம் வெகு தூரமில்லை, நாற்கரப்போர்' ஆகியவை தான் அந்த படங்கள். இவற்றுடன் "அதர்மக் கதைகள், சாலா, கடமை" என மொத்தம் 7 படங்கள் வெளியாக உள்ளன.

Aug 21, 2024

லோகேஷ் கனகராஜ் உடன் அமீர்கான்

பாலிவுட்டின் பிரபல நடிகர் அமீர்கான். ஏற்கனவே தமிழ் இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்தார். இப்போது மற்றொரு தமிழ் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் உடன் படம் பண்ண பேச்சுவார்த்தை நடக்கிறது. முற்றிலும் ஆக்க்ஷன் கதையில் இந்தப்படம் உருவாகிறது.. 'டங்கல்' படத்திற்கு அமீர்கான் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் சரியாக போகவில்லை ஒரு பெரிய வெற்றிக்காக தமிழ் இயக்குனர் உடன் இணைகிறார்.

Aug 21, 2024

இசையமைப்பாளர் இல்லாமல் படமான கொட்டுக்காளி  ரிலீஸ்

வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் நடித்துள்ள படம் 'கொட்டுக்காளி'. இதன் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. 'எங்க விட்டு பிள்ளைக்கு பேய் புடிச்சுருக்கு.அதை விரட்டப் "போறோம்' என்கிற ஒரே ஒரு வசனம் மட்டுமே டிரைலரில் உள்ளது. மற்ற காட்சிகள் அனைத்தும் ஆரம்பம் முதல் இறுதிவரை சீரியஸாகவே நகர்கின்றன. படத்திற்கு இசையமைப்பாளர் என யாரும் இல்லை. படப்பிடிப்பு சூழலில் இருந்த ஒலியை மட்டும் பயன்படுத்தி உள்ளனர். பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டுகளை பெற்ற இந்த படம் ஆக., 23ல் ரிலீஸாகிறது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள படம் கொட்டுக்காளி. இந்தப்படத்தை கூழாங்கல் என்ற அற்புதமான படத்தை இயக்கிய வினோத் இயக்குகிறார். கொட்டுக்காளி திரைப்படத்தில் இசையமைப்பாளரே கிடையாதாம். எதார்த்தமான திரைப்படம் என்பதால் கதையோடு ரசிகர்களும் பயணிக்க வேண்டும் என்பதற்காக இசையமைப்பாளர் இல்லாமல் படத்தை எடுப்போம் என்று இயக்குனர்  சொன்னதாக தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்

1 2 ... 42 43 44 45 46 47 48 ... 59 60

AD's



More News