ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி லீக் போட்டி .
19வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி 14வது சீசன் சென்னை, மதுரையில், மொத்தம் 24 அணிகள், 6 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன.
மதுரையில் உள்ள ரேஸ்கோர்ஸ் சர்வதேச ஹாக்கி மைதானத்தில் நேற்று, நடந்த 'ஈ' பிரிவுலீக் போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரியா அணிகள் மோதின. இதில் கோல் மழைபொழிந்த இங்கிலாந்து 13-0 என்ற கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
மற்றொரு 'ஈ' பிரிவு லீக் போட்டியில் நெதர்லாந்து, மலேசியா அணிகள் மோதின. இதில் நெதர்லாந்து அணி 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.முதல் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய நெதர்லாந்து, தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தது.
'டி' பிரிவு லீக் போட்டியில் ஸ்பெயின், பெல்ஜியம் அணிகள் மோதின. இதில் ஸ்பெயின் அணி 2-0 என வென்றது.மற்றொரு 'டி' பிரிவு போட்டியில் நமீபியா அணி 4-2 என, எகிப்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது.
சென்னையில்உள்ளமேயர்ராதாகிருஷ்ணன்ஹாக்கிமைதானத்தில்நேற்று, நடந்த 'சி' பிரிவுலீக்போட்டியில்நியூசிலாந்து, அர்ஜென்டினா அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி 3-3 என்ற கணக்கில் 'டிரா' ஆனது.
மற்றொரு 'சி' பிரிவு லீக் போட்டியில் ஜப்பான், சீனா அணிகள் மோதின. இதில் ஜப்பான் அணி 3-2 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றி பெற்றது.
'எப்' பிரிவு போட்டியில் தென் கொரியா, வங்கதேசம் அணிகள்'எப்' பிரிவு போட்டியில் மோதின. ஆட்டநேர முடிவில்போட்டி 3-3 என 'டிரா' ஆனது, மற்றொரு போட்டியில் பிரான்ஸ் அணி 8-3 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
0
Leave a Reply