25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய நடிகர் கார்த்தி கைவசம் இருக்கும் அடுத்தடுத்த படங்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய நடிகர் கார்த்தி கைவசம் இருக்கும் அடுத்தடுத்த படங்கள்

குக்கூ, ஜோக்கர் போன்ற விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற படத்தை இயக்கிய இயக்குனர் ராஜு முருகனுடன் இணைந்து கார்த்தி நடிக்கும் படம் தான் ஜப்பான். இந்தப் படத்தை தமிழ் மட்டுமில்லாமல், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். படத்தின் கதை ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டது 

கார்த்தி தன்னுடைய26 ஆவது படத்தில் இயக்குனர் நலன் குமாரசாமியுடன் இணைகிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி செட்டி நடிக்கவிருக்கிறார். தமிழ் சினிமாவின் வழக்கமான மசாலா படங்களுக்கு ட்ரிபியூட் கொடுப்பது போல் இந்தப் படத்தை எடுக்க இருப்பதாக படக்குழு  அறிவித்திருக்கிறார்கள்

96 படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை கொண்டு வந்தவர் தான் இயக்குனர் பிரேம்குமார். இவர்தான் கார்த்தியின் 27 ஆவது படத்தை இயக்க இருக்கிறார். கண்டிப்பாக இந்த படம் நல்ல ஒரு காதல் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கடந்த தீபாவளி அன்று ரிலீஸ் ஆகி100 கோடி வசூல் வேட்டை ஆடிய படம் தான் சர்தார். இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் தொடங்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

நடிகர் கார்த்தியின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படம் என்றால் அது கைதி. இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்கள் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது ரெடி ஆகும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் விரைவில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என சொல்லி இருக்கிறார்.

கார்த்திசதிஷ் செல்வகுமார்: நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷை வைத்து பேச்சிலர் படத்தை இயக்கியவர் தான் இயக்குனர் சதிஷ் செல்வகுமார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கார்த்தி இவருடைய இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார்.

கனா மற்றும் நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் அருண் ராஜா காமராஜ். இவரும் கார்த்திக்கு கதை சொல்லி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விரைவில் இந்த படத்தின் அப்டேட் வெளியாகும்.

நடிகர் கார்த்தி கைவசம் அடுத்தடுத்து இருக்கும் படங்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News