25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் நான்கு படங்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் நான்கு படங்கள்

 பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் எப்போதுமே பண்டிகை நாட்களை குறி வைத்து தான் வெளியாகும். அந்த வகையில் ரஜினியின் ஜெயிலர் படம் சமீபத்தில் வெளியான நிலையில் அடுத்ததாக விஜய்யின் லியோ படம் அக்டோபர் மாதம் ஆயுத பூஜை பண்டிகைக்கு ரிலீஸாக இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு நான்கு படம் வெளியாகிறது.

இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் பல வருடங்களாக உருவாகி வந்த படம் தான் அயலான். சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத்தி சிங் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகம் வைத்துள்ளனர். ஏனென்றால் இப்படம் அறிவியல் சார்ந்த படமாக உருவாகி இருக்கிறது.

அயலான் படத்திற்கு அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் எல்லாம் வெளியான நிலையில் இப்படம் மட்டும் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்த சூழலில் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு அயலான் படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் விஏபிக்ஸ் வேலைகள் நிறைய இருப்பதால் அதற்கான பணிகள் இப்போது மும்மரமாக நடந்து வருகிறது.

மேலும் சிவகார்த்திகேயனுடன் 57 வயது நடிகர்ஒருவரும் போட்டிபோட இருக்கிறார். அதாவது விக்ரமின்தங்கலான் படமும்பொங்கல் பண்டிகைக்குவெளியாகிறது. பாரஞ்சித் இயக்கத்தில்உருவாகி இருக்கும்இந்தப் படம்கோலார் தங்கசுரங்கத்தை மையமாகவைத்து எடுக்கப்பட்டுவருகிறது. தங்கலான்படத்தில் மாளவிகாமோகன் கதாநாயகியாகநடித்திருக்கிறார்.

கேஜி எஃப் பட இயக்குனர்பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகிஇருக்கும் படம் தான் சலார். சமீபகாலமாக பிரபாஸ் நடிப்பில் வெளியானபடங்கள் எதுவும் பெரிய அளவில்ஹிட் கொடுக்கவில்லை. பாகுபலி 2 படத்திற்கு பிறகு அவர் எந்தவெற்றி படமும் தரவில்லை. குறிப்பாககடைசியாக வெளியான ஆதிபுருஷ் படம்மிகப்பெரிய அடி வாங்கி இருந்தது. இந்த சூழலில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ள சலார் படத்தின் மீது பிரபாஸ் பெரிதும் நம்பிக்கை வைத்திருக்கிறார். இதைத்தொடர்ந்து திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குண்டூர் காரம் படமும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News