ஜெயிலர் வசூலில்635 கோடிக்கு காரணமான 2 பேர் காஸ்ட்லி கிப்ட் கொடுத்த கலாநிதி மாறன்
சன் பிக்சர்ஸ் சூப்பர் ஸ்டார் கூட்டணியில் கடந்த மாதம் வெளிவந்த ஜெயிலர் வசூலில் பலரையும் மிரட்டியது. தற்போது வரை635 கோடிகளை வாரி குவித்திருக்கும் இப்படம் பொன்னியின் செல்வன், விக்ரம் உள்ளிட்ட பல பிளாக்பஸ்டர் படங்களின் சாதனையையும் முறியடித்து மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம் இதுவரை இல்லாத அளவுக்கு படு ஸ்டைலாக மிரட்டி இருந்த சூப்பர் ஸ்டார் தான் என்பதை நம்மால் மறுக்க முடியாது. ஆனால் அவரை விடவும் இரண்டு முக்கிய நபர்கள் ஜெயிலரின் மாபெரும் வெற்றிக்கு காரணமாக இருக்கின்றனர். அதில் இயக்குனர் நெல்சனுக்கு மிகப்பெரும் பங்கு இருக்கிறது.பீஸ்ட் படத்தின் மூலம் பல அவமானங்களை சந்தித்த இவர் ஒரு வெற்றியை கொடுத்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இப்படத்தை எடுத்திருப்பது நன்றாகவே தெரிகிறது. சுருக்கமாக சொல்லப்போனால் காயம் பட்ட சிங்கத்தின் கர்ஜனையாகத் தான் ஜெயிலர் இருந்தது. அதேபோன்று அனிருத்துக்கும் இந்த வெற்றி சொந்தமானது தான்.
ஏனென்றால் படம் வெளிவருவதற்கு முன்பே பாடல்களை உலக அளவில் கொண்டாட வைத்த பெருமை இவரையே சேரும். அதிலும் காவாலா பாட்டுக்கு சிறுசு முதல் பெருசு வரை ஆட்டம் போட்டு சோசியல் மீடியாவையே ரணகளப்படுத்தினார்கள். அதைத் தொடர்ந்து வெளியான ஹுக்கும் பாடலும் வேற லெவலில் வைரலானது.இப்படி ரிலீசுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த அனிருத் படம் முழுவதிலும் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தியிருந்தார். அப்படி பார்த்தால் சூப்பர் ஸ்டாரை விடவும் படத்தின் வெற்றிக்கு இந்த இருவர் தான் முக்கிய காரணமாக இருக்கின்றனர். அதை வெளிக்காட்டும் விதமாக தான் கலாநிதி மாறன் இவர்கள் இருவருக்கும் காஸ்ட்லியான காரை கொடுத்து சந்தோஷப்படுத்தி இருக்கிறார்.
அந்த வகையில் சூப்பர் ஸ்டாருக்கு1.26 கோடி மதிப்புள்ளBMWX7 கார் பரிசாக கொடுக்கப்பட்டது. அதேபோன்று நெல்சன், அனிருத் இருவருக்கும் அதை விட அதிக விலையுள்ள1.44 கோடி மதிப்பிலானPorscheMacanS கார் வழங்கப்பட்டது. இதிலிருந்தே கலாநிதி மாறன் இவர்கள் இருவரும் தான் வெற்றிக்கு முக்கியமானவர்கள் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.
0
Leave a Reply