முருங்கை பூ ரசம்.
தேவையான பொருட்கள்:
முருங்கை பூ- 1 கப்,தக்காளி -1,புளி, உப்பு, ரசப்பொடி -சிறிதளவு
துவரம் பருப்பு,மிளகு, சீரகம்,தண்ணீர்,நெய்- தேவையான அளவு.
செய்முறை:
புளியை நீரில் கரைத்து, அதில் முருங்கை பூ, பொடியாக நறுக்கிய தக்காளி, ரசப்பொடி கலந்து கொதிக்க விடவும். நன்றாக வேகவைத்த துவரம் பருப்பை அதில் சேர்த்து கொதித்த பின், நெய்யில் தாளித்த சீரகம், மிளகு போடவும். உப்பு சேர்த்து இறக்கவும்.சுவைமிக்க,'முருங்கை பூ ரசம்!' தயார். சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். சூப்பாகவும் பருகலாம். சளி, இருமல் போன்ற உபாதைகள் தீர உதவும்.
0
Leave a Reply