25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


வயசுக்கு ஏத்த மாதிரி வாய்ப்பை தேடி நடிக்கும் நடிகர்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வயசுக்கு ஏத்த மாதிரி வாய்ப்பை தேடி நடிக்கும் நடிகர்கள்

தன் திறமைக்கு ஏற்ற வாய்ப்பு தமிழ் சினிமாவில் கிடைக்காதா என வாய்ப்புக்காக சுற்றித்திரிந்து அதன் பின் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட பிரபலங்களும் உண்டு. இந்நிலையில் தன்னோட வயதிற்கு ஏற்றவாறு வாய்ப்பை தேடி நடிக்கும் நடிகர்கள் பற்றிய தகவலை இங்கு காண்போம்.  80- 90 காலகட்டத்தில்  முன்னணி கதாநாயகனாய் சத்யராஜ் மேற்கொண்டு எண்ணற்ற படங்கள் வெற்றியை பெற்றிருக்கிறது. இவரின் கொங்கு தமிழ் குசும்பு பேச்சும், நகைச்சுவையும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதைத்தொடர்ந்து தற்போது தன் வயதுக்கு ஏற்றவாறு குணச்சித்திர கதாபாத்திரங்களில் சிறப்புற நடித்து வருகிறார்.

இவரைத் தொடர்ந்து சுப்ரீம்ஸ்டார் என அழைக்கப்படும் சரத்குமார்நடிப்பில் எண்ணற்ற படங்கள் வெற்றியைக்கண்டிருக்கிறது. அவ்வாறு ஹீரோவாய் கலக்கிவந்த இவர் தற்பொழுது தன்வயதிற்கு ஏற்றவாறு வில்லன் கதாபாத்திரங்களையும், குணச்சித்திர கதாபாத்திரங்களையும்ஏற்று நடித்து வெற்றி கண்டுவருகிறார். சமீபத்தில் PS 1 மற்றும் PS 2 வில் தன் சிறப்பானநடிப்பினை வெளிக்கட்டியிருப்பார். ஒரே வெற்றியால் 8 படத்திற்கு புக் ஆன சரத்குமார் இப்படத்தின் வெற்றியை கொண்டு தன் அடுத்தகட்ட படங்களை புக் செய்துவிட்டார் என்றே சொல்லலாம்.

 தன் அதிரடியான நடிப்பினை வெளிக்காட்டி ஆக்சன் நிறைந்த படங்களை மேற்கொண்டு வந்தவர் ராஜ்கிரண். தற்பொழுது தன் வயதை கருதி படத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.

வில்லன் கதாபாத்திரத்திற்கு பேர் போனவர் பிரகாஷ்ராஜ். படத்திற்கு ஏற்றவாறு தன் தத்ரூபமான நடிப்பினை வெளிக்காட்டும் இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் சிறப்புற நடித்து வருகிறார்.   

80 - 90  காலகட்டத்தில் வில்லனாக குடைச்சல் கொடுத்தவர்தான் நாசர். தற்பொழுது தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை மட்டுமே  தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

,சிறந்த இயக்குனராய் நாடோடிகள், போராளி போன்ற படங்களை இயக்கி வெற்றுக் கண்டவர் தான் இயக்குனர் சமுத்திரக்கனி. தற்பொழுது இயக்கத்தை விட்டுவிட்டு நடிப்பில் இறங்கிய இவர் குணச்சித்திர கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார். தற்பொழுது தமிழ் மட்டும் அல்லாது அக்கட தேசத்திலும் தன் அடுத்த கட்ட பட வாய்ப்புகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.   

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News