25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


அடுத்த சூப்பர்ஸ்டார் யார்? என்ற கேள்விக்கு சத்யராஜ் பதில். கடந்த 45 ஆண்டுகளாக ரஜினி மட்டுமே ,சூப்பர் ஸ்டார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அடுத்த சூப்பர்ஸ்டார் யார்? என்ற கேள்விக்கு சத்யராஜ் பதில். கடந்த 45 ஆண்டுகளாக ரஜினி மட்டுமே ,சூப்பர் ஸ்டார்.

மோகன் டச்சுஇயக்கத்தில்அங்காரகன் என்ற படத்தில் மாறுபட்ட காதபாத்திரத்தில் நடித்து வருகிறார் சத்யராஜ்.இப்படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழாவில் பேசிய சத்யராஜ்" மணிவண்ணன் அண்ணனுக்கு பிறகு எனக்கான ஒரு டைரக்டர் அமையவில்லை. இப்ப இருக்கிற டைரக்டர் நிறைய கேரக்டர் தந்தாலும் மணிவண்ணன் போல் இல்லை. மணி அண்ணன் எனக்காக கேரக்டரை உருவாக்குவார். அங்காரகன் படத்தில் மீண்டும் வில்லனாக நடிக்கிறேன்.

நான் செல்லும் இடங்களில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற கேள்வியை கேட்கிறார்கள். சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தையை அந்தந்த கால கட்டத்தில் வசூலில் நம்பர் ஒன் ஆகஇருப்பவரை சொல்வார்கள். முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரை ஏழிசை மன்னன் என்பார்கள். அடுத்துMGR அவர்களை மக்கள் திலகம் என்றார்கள். இப்போது ரஜினியை சூப்பர் ஸ்டார் என்கிறார்கள். தியாகராஜ பாகவதரை சூப்பர் ஸ்டார் பாகவதர் என்றும், எம். ஜி. ஆர்அவர்களை சூப்பர் ஸ்டார் எம். ஜி. ஆர் என்று ஏன் அழைக்கவில்லை என்று கேட்க முடியுமா? சிவாஜிக்கு பிறகு நடிப்பில் கமல் தான் என்கிறோம்.

ஆனால் கமலை நடிகர் திலகம் கமல் என்று அழைப்பதில்லையே. பட்டம் என்பது அந்தந்த காலகாட்டித்தில் மக்களால் தரப்படுவன. கடந்த45 ஆண்டுகளாக

 ரஜினி மட்டுமே,சூப்பர் ஸ்டார். தமிழ் நாட்டில் சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிதான். விஜய், அஜித் போன்றவர்களுக்கு தளபதி, தல பட்டங்கள் தான் பொருத்தமானது என்று அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பரபரப்பு கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் வசந்த மாளிகை படத்தை ரீ ரிலீஸ் செய்தது போல் தான் நடித்த அமைதிப் படை படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் முன் வரவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News