25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வெள்ளித்திரை

Jul 25, 2024

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ் படம் என்ற பெருமை படைத்தது சூரியின் கொட்டுக்காளி திரைப்படம்

'கூழாங்கல்' படத்தின் மூலம்மக்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் இயக்குனர் பி. எஸ். வினோத்ராஜ். இப்படத்தை தொடர்ந்து" கொட்டுக்காளி "என்ற படத்தை இயக்கியுள்ளார்.இப்படத்தில் சூரி மற்றும் அன்னா பென் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.இந்த திரைப்படம்74ஆவது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ஃபோரம் பிரிவின் கீழ் தேர்வு செய்யப்பட்டு. பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ் படம் என்ற பெருமை படைத்தது கொட்டுக்காளி திரைப்படம்.மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் கொட்டுக்காளி திரைப்படம் வருகிற ஆகஸ்ட்22 அல்லது23 தேதி வெளியாகவுள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.   

Jul 25, 2024

ஆனந்த்-ராதிகாஅம்பானி மகன் திருமணத்தில் ரஜினிகாந்த் நடனம் ஆடியது ஏன்?

2024 புது வருடம் தொடங்கியதில் இருந்தே அம்பானி மகன் திருமணம் குறித்து தான் இந்தியா முழுவதும் பேசப்படுகிறது. ஜுலை 12ம் தேதி இந்திய சினிமா பிரபலங்கள், ஹாலிவுட் பிரபலங்கள் எனபலர் கலந்துகொள்ள பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.திருமணத்திற்குமுன்பு தான் ஏகப்பட்டகொண்டாட்டங்கள் என்று பார்த்தால்திருமணம் முடிந்த பிறகும்நிறைய ஸ்பெஷல் கொண்டாட்டங்கள் நடந்தது . வீடியோக்கள்சமூக வலைதளங்களில் அதிக வைரலாகி,படத்தை தாண்டி எந்த ஒரு திருமணத்திலும் நடனம் ஆடாத நடிகர்   ரஜினிகாந்த் அம்பானி மகன் ஆனந்த்,ராதிகா திருமணத்தில் நடனம் ஆடியுள்ளார். ஏன்? ரஜினியிடம் நடனம் குறித்து கேட்டபோது, இந்த திருமணம் ஆனந்த் அம்பானி வீட்டில் நடைபெறும் கடைசி திருமணம், ஒரு மறக்க முடியாத தருணமாக அமைந்து ,இதை மகிழ்ச்சியாக கொண்டாட முடிவு செய்து  நடனம் ஆடியுள்ளார்.  

Jul 25, 2024

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில்,சூர்யா-44 டீசர்

சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் சூர்யா-44 படம் உருவாக்கி வருகிறது.இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெட்ஜெ நடித்து வர, கருணாகரன் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் பேவரட் கூட்டணியான சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்து வருகின்றார். சூர்யா பிறந்தநாள் முன்னிட்டு சூர்யா 44 படத்தின் டீசர் ஒன்று வெளிவந்துள்ளது,

Jul 25, 2024

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா

தமிழில்கார்த்தி, விஜய் ஆகியோருடன்ஏற்கனவே ஜோடி சேர்ந்துள்ளராஷ்மிகாமந்தனா. தனுசுடன் குபேரன்படத்தில் தற்போது நடித்துவருகிறார். இதையடுத்துசிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கவும்பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். தற்போதுஅந்த படத்திற்கு " BOSS"  என்று பெயர் வைக்கப் பட்டு உள்ளதாகவும், அதில் அவருக்குஜோடியாக ராஷ்மிகா நடிப்பது உறுதியாகிவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Jul 25, 2024

“நண்பன் ஒருவன் வந்த பிறகு”படத்தின் ட்ரைலர்

“நண்பன் ஒருவன் வந்த பிறகு”ஐஸ்வர்யா. எம்மற்றும் சுதா. ஆர் தயாரிப்பில் வெங்கட் பிரபு வழங்கும் திரைப்படம். இப்படத்தை ஆனந்த் என்பவர் இயக்கி நடித்துள்ளார்.விடுதலை படத்தின் மூலம் ஹீரோயினாக நடிகை பவானி ஸ்ரீ இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும்youtuber இர்பான், மிர்ச்சி விஜய்,KPY பாலா, ஆர்.ஜே. ஆனந்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இளைஞர்கள் பட்டாளம் சூழ கலகலப்புக்கு பஞ்சமில்லாத நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

Jul 18, 2024

"வேள்பாரி "

ஜென்டில்மேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறியவர் ஷங்கர். முதல் படமே சூப்பர் ஹிட். அதோடு பிரம்மாண்ட செலவில் அப்படம் எடுக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து காதலன், இந்தியன், ஜீன்ஸ் என கவனம் ஈர்த்தார் ஷங்கர். ஷங்கர் படங்கள் என்றாலே அது பிரம்மாண்டமாக இருக்கும் என்கிற இமேஜும் உருவாகிவிட்டது. முதல்வன், அந்நியன், எந்திரன், 2.0 என தமிழ் சினிமாவின் முக்கிய படங்களை இயக்கினார் ஷங்கர். இப்போது இந்திய சினிமாவில் ஷங்கர், ராஜமவுலி, பிரசாந்த் நீல் ஆகிய 3 பேர் மட்டுமே பிரம்மாண்டமாக திரைப்படங்களை உருவாக்கி வருகிறார்கள். பாகுபலி எடுத்த ராஜமவுலியே என்னுடைய குரு ஷங்கர் சார்தான் என சொல்லி இருந்தார்.சமீபத்தில் இந்தியன் 2 படத்தின் ப்ரோமோஷன் விழாவில் பங்கேற்ற இயக்குனர் ஷங்கரிடம், வேள்பாரி படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஷங்கர் " அந்தக் கதையை நிறைய பேர் என்னை படிக்க சொன்னாங்க. அந்த நேரத்துல எனக்கு நேரம் கிடைக்கவில்லை. கொரோனா வந்ததுக்கு பிறகு வீட்டுல சும்மா இருந்த நேரத்துல படிக்கலாம்னு ஆரம்பிச்சேன்"."படிக்க படிக்க என் மனசுல காட்சிகளா விரிந்தது . படிச்சு முடிச்சதுமே இதை எப்படியாவது படமா பண்ணணும்னு தோணுச்சு. உடனே அதை எழுதிய சு.வெங்கடேசன்கிட்ட பேசி, அதுக்கான ரைட்ஸ் வாங்கிவிட்டேன். வேள்பாரி 3 பாடங்களாக திரைக்கதை எழுதி முடிச்சுட்டேன். ரெடியா இருக்கு. யார் நடிக்கிறாங்க என்பதை முடிவு பண்ணல" என கூறியுள்ளார். .

Jul 18, 2024

63 வயது மூத்த தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா ஜோடி  போட்டு நடிக்க ஆசைப்படும் 22 வயது நடிகை  ஸ்ரீலீலா

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கு ம் பாலகிருஷ்ணாவின் 'பகவந்த் கேசரி' படத்தில் அவ ருக்கு மகளாக நடித்துள்ளார் ஸ்ரீலீலா. இந்த படத்தின் விழாவில் பேசிய நடிகர் பாலகிருஷ்ணாவின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.அந்த வீடியோவில், "22 வயதே ஆகும் நடிகை ஸ்ரீலீலா இந்தப் திரைப்படத்தில் எனக்கு மகளாக நடித்துள்ளார்.  ஆனால்,ஷுட்டிங் தளத்தில் முழுவதும் மாமா மாமா என்று என்னை அழைத்து வந்தார். அடுத்த படத்தில்  இவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்" என்று பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.மகளாக நடித்த ஸ்ரீலீலா உடன் ஜோடி   போட்டு நடிக்க போவதாக  கூறியிருப்பதை ரசிகர்கள் பலரும்  ட்ரோல்  செய்து வருகின்றனர்.

Jul 18, 2024

‘ராயன்’ தனுஷ் நடித்துள்ள50வது படத் தின் ரிலீஸ் தேதி ஜூலை  26, 2024

இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், சுந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, செல்வராகவன், பிரகாஷ் ராஜ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர்.நடிகர் தனுஷின் 50வது படமான ராயன், அவர் எழுதி, இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார். ஜூன் 13, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது. படத்தின் வெளியீடு  ஒத்திவைக்கப்பட்டது, மேலும் புதிய ராயன் வெளியீட்டுத் தேதிஜூலை  26 2024 [வெள்ளிக்கிழமை]. ராயனின் தயாரிப்பு பேனரான சன் பிக்சர்ஸ்வெளியீட்டுதேதிமாற்றம்குறித்தஅதிகாரப்பூர்வஅறிவிப்பைவிரைவில்வெளியிடும்என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.வடசென்னையை பின்னணியாக கொண்டு அமைக்கப்பட்டுள்ள ராயன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சுந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், சரவணன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர் படத்திற்கு ஏஆர்ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Jul 18, 2024

தமிழ் சினிமாவில் நாவலை படமாக எடுப்பது என்பது அரிதாகவே நிகழும்

 வெற்றிமாறன்போன்றசிலஇயக்குனர்கள்மட்டுமேஅதைமுயற்சிசெய்வார்கள்.அவர்இயக்கியஅசுரன், விடுதலை, விடுதலை 2 ஆகிய 3 படங்களுமே நாவல்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கதைதான். அதேபோல், கல்கி இயக்கிய பொன்னியின் செல்வன் நாவலை எம்.ஜி.ஆர், கமல் என பலரும் முயன்று முடியாத விஷயத்தை மணிரத்னம் சாத்தியமாக்கினார். பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்களாக இயக்கி வெற்றியும் பெற்றார். இதில் முதல் பாகமே நல்ல லாபத்தை கொடுத்தது.இதையடுத்து சு.வெங்கடேசன் இயக்கிய வேள்பாரி நாவலை ஷங்கர் படமாக எடுக்கவிருக்கிறார் என்கிற செய்தி வெளியானது.

Jul 18, 2024

விஜய் சேதுபதியின் 'மஹாராஜா'

 விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், நட்டி, அபிராமி, பாரதிராஜா உள்ளிட்டோர் நடிப்பில் நித்திலன் இயக்கத்தில் வெளியான மஹாராஜா. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தமிழ் சினிமா தடுமாறிக் கொண்டிருந்தது. ஏப்ரல், மே வரையிலும் கூட வசூல்ரீதியாக எந்தவொரு படமும் வெற்றி பெறவில்லை. இந்த குறையை போக்கும் விதமாக முதலில் சுந்தர் சி யின் அரண்மனை 4வந்தது. தொடர்ந்து விஜய் சேதுபதியின் 5௦-வது படமான மஹாராஜா வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. தொடக்கத்தில் இப்படத்திற்கு பெரிதான வரவேற்பு இல்லை. ஆனால் படம் வெளியாகி நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கவும் ரசிகர்கள் குவிந்து விட்டனர்.இதனால் அவரது 50-வது படம் என்றாலும் இப்படத்தின் வசூல் 100 கோடியைத் தொட்டு பட்டையை கிளப்பியது. குறிப்பாக படத்தின் திரைக்கதை ரசிகர்களுக்கு நல்லதொரு விருந்தாக அமைந்தது. இந்தநிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி இப்படம் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) நெட் பிளிக்ஸ் தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிவுள்ளது. இதனால் இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு ஏற்ற வாரம் என்றே கூறலாம். 

1 2 3 4 5 6 7 8 9 10 ... 25 26

AD's



More News