அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு ரூ.1000 கோடி வசூலித்த 'ஜவான்' படத்தை இயக்கிய அட்லியும், 1800 கோடியை - வசூலித்த 'புஷ்பா 2' படத் தில் நடித்த அல்லு அர்ஜுனும் புதியபடத்தில் இணைந் துள்ளனர். இதனைவீடியோ உடன் படக்குழு அறிவித்தது. அதில், அமெரிக்காவில் உள்ள பிரபல வி.எப்.எக்ஸ் நிறுவனமான லோலா வல்லுனர்களுடன் அட்லி, அல்லு அர்ஜூன் விவாதித்தது, படத் தின் கதை பற்றி அவர்கள் வியந்து பேசியது, அல்லு அர்ஜூனின் ஸ்க்ரீன் டெஸ்ட் ஆகியவை இடம்பெற்றிருந்தது. தெளிவாக ஹாலிவுட் படம்போன்ற வித்யாசமான கதையை பிரமாண்டமாக எடுக்க உள்ளது .
மார்க்கெட் சரிந்து கிடப்பதால், ரவி மோகன் மற்றும் ஆர்யா போன்ற நடிகர்களும், விஜய் சேதுபதி பாணியில் மற்ற மொழிப்படங்களிலும் வில்லனாக டித்து, தங்களது மார்க்கெட்டை இந்திய அளவில் விரிவுபடுத்திக் கொள்ளும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.'ஹீரோ' மார்க்கெட் ஸ்டெடியாக இருந்த போதே,தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என, பல மொழி படங்களில் வில்லனாகவும் நடித்தார், விஜய் சேதுபதி.
அருண் குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன் நடித்துள்ள 'வீர தீர சூரன்' படம்ஆக்ஷன் கதையாக உருவாகி உள்ளது. படம் பார்க்க வருபவர்கள் 10 நிமிடம் முன்கூட்டியே வந்துவிடுங்கள். முதல் ஷாட்டில் இருந்தே கதை துவங்கி விடும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யு ஏ ' சான்றிதழ் வழங்கியுள்ளனர்.விக்ரம் நடித்த 'வீர தீர சூரன் 2' திரைப்படம் ரசிகர்களிடம் வர வேற்பை பெற்று 2வது வாரமாக திரையரங்கில் ஒடிக் கொண்டிருக்கிறது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.52 கோடி வசூ த்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.38 கோடி வசூலித்துள்ளது. இதன் முதல் பாகம் இனிமேல் தான் வெளியாகும் என்றும், 3ம் பாகத்தையும் எடுக்க இயக்குனர் அருண்குமார் திட்டமிட்டுள்ளதாகவும் சொல்கின்றனர்.
ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும், கூலி படம், படப்பிடிப்பு முடியும் முன்பே, ஏரியாக்கள் மட்டுமின்றி, டிஜிட்டல் உரிமையும் விற்பனை ஆகிவிட்டது., முன் வரிசையில் இருக்கும் இளவட்ட, 'ஹீரோ'களின் படங்களே உடனடியாக வியாபாரம் ஆகாமல் தடுமாறி வரும் நிலையில், , மார்க்கெட்டில், ரஜினி படங்களுக்கு இருக்கும் இந்த வரவேற்பை பார்த்து, அடுத்தபடியாக விஜய், அஜீத்துக்கான, 'ஸ்கிரிப்டு'களை வைத்துள்ள இயக்குனர்களும். மார்க்கெட்டில், ரஜினி படங்களுக்கு இருக்கும் இந்த வரவேற்பை பார்த்து,ரஜினியை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளனர்.
பாலிவுட் நடிகை, பூஜா ஹெக்டே தமிழில், முகமூடி மற்றும் பீஸ்ட் போன்ற படங்களில் நடித்தார் தற்போது, விஜயுடன், ஜனநாயகன். சூர்யாவுடன், ரெட்ரோ மற்றும் லாரன்ஸ் உடன், காஞ்சனா -4 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.தற்போது, ரெட்ரோ படத்திலிருந்து அவர், தமிழில், 'டப்பிங் பேச, துவங்கி இருக்கிறார். தமிழில் நீண்ட காலமாக நடித்து வரும். காஜல் அகர்வால், தமன்னா போன்ற மும்பை நடிகைகளே இதுவரை தமிழில்,'டப்பிங்' பேச முயற்சிக்கவில்லை.தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ள பூஜா ஹெக்டே, தனக்கு தானே, 'டப்பிங்' பேசுவது, கோலிவுட்டில் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
ராம் சரண் நடிப்பில்" கேம் சேஞ்சர்" படத்திற்கு பின் அவரது 16வது படம் உருவாகிறது. ஜான்வி கபூர் நாயகியாக நடிக்க, புச்சிபாபு சனா இயக்குகிறார். சிவராஜ்குமார், ஜெகபதிபாபு ஆகியோரும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கி றார். இதன் படப்பிடிப்பு நடந்து வரும் சூழலில் ராம் சரணின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்திற்கு 'பேடி' என தலைப்பு வைத்துள்ளதாக அறிவித்து, முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய, ஹிந்தி மொழிகளிலும் நடிகர் சோனு சூட், நடித்துள்ளார். மக்கள் மத்தியில் கொரோனா காலத்தில் இவர் செய்த உதவியால் மேலும் பிரபலமானார். சமீபத்தில் இவரது மனைவி, அவரது சகோதரி உடன் சென்ற கார் நாக்பூர் அருகே விபத்தில் சிக்கியது.லேசான காயங்களுடன் அவர்கள் தப்பினர். சோனு சூட் கூறுகையில் "விபத்தில் என் மனைவி, அவர் சகோதரி சீட் பெல்ட் அணிந்ததால் தான் உயிர் தப்பினர். இன்றைக்கு பெரும்பாலும் சீட் பெல்ட்டை கடமைக்காகவும், போலீசிடமிருந்து தப்பிக்கவும் அணிகின்றனர். பின் சீட்டில் அமர்ப வர்கள் அதனை கண்டுகொள்வது இல்லை. அவர்களுக்கும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம். அது அவர்களின் உயிரையும், குடும்பத்தையும் காப்பாற்றும்'' என்கிறார்.
அட்டக்கத்தி தினேஷ் நாயகனாக இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் கருப்பு பல் சர்'.முரளி கிரிஷ் இயக்கத்தில், ரேஷ்மா வெங்கட், மதுனிகா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். "மதுரை பின்னணியில் கருப்பு காளையுடன் வாழும் ஒரு இளைஞன், சென்னையில் பல்சருடன் வாழும் இளைஞன், இவர்கள்இருவரும் சந்திக்கும் போது அவர்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்னைகள் தான் கதை.தினேஷ் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்..
மலையாள நடிகரான நிவின் பாலி தற்போது தமிழில் 'ஏழு கடல் ஏழு மலை' படத்தில் நடித்துள்ளார். சில மலையாள படங்களிலும் நடிப்ப வர் அடுத்து 'மல்டிவெர்ஸ் மன்ம தன்' என்ற படத்தில் நடிக்கிறார். ஆதித்யன் சந்திரசேகர் இயக்கும் இப்படம் இந்தியாவின் முதல் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோ கதையாக உருவாகிறது. அதிரடியான ஆக் ஷன் காட்சிகள், புராண கதைகள் மற்றும் மல்டிவெர்ஸ் சூழல் இந்த படத்தில் இருக்கும் என்கிறார்கள்.
ராஷ்மிகா மந்தனாசாய் பல்லவிநயன்தாரா .கீர்த்தி சுரேஷ் தமன்னா பாட்டியா அனுஷ்கா ஷெட்டிசுருதி ஹாசன் ரகுல் ப்ரீத்த்ரிஷா கிருஷ்ணன் சமந்தா ரூத் பிரபு.