25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வெள்ளித்திரை

Jul 11, 2024

பவுண்ட் புட்டேஜ்' தொழில்நுட்பத்தில் மஞ்சு வாரியர் படம்

'பவுண்ட் புட்டேஜ்' என்பது கதையில் வரும் ஒவ்வொரு கதா பாத்திரமும் தாங்கள் காணும் காட்சிகளை ,தங்களின் செல் போன் மூலமாகவோ, அல்லது அவர்களிடம் உள்ள கேமரா மூலமாகவோ படம் பிடித்து ,பின்பு அவை தொகுக்கப்பட்டு ஒரு கதையாக சொல்லப்படும். ஹாரர், திகில் படங்கள் இந்த தொழில்நுட்பத்தில் உருவாகும். மலையாளத்தில் நடிகை மஞ்சு வாரியர் நாயகியாக நடிக்கும் 'புட்டேஜ்'  படமும் அந்த தொழில் நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளது.GOING TO   RELEASE  ON AUGUST 2 ND.

Jul 11, 2024

காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பும் சாய்பல்லவி

 சாய்பல்லவி சமீபத்தில் அளித்த பேட்டியில், "நான் இதுவரை நடித்த எல்லா படங்களும் கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்கள் தான். அதைவிட வித்தியாசமான ஒரு நல்ல காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்புக்காக எதிர்பார்த்து இருக்கிறேன். எனக்கென்று முழு அளவிலான காமெடி கதாபாத்திரம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படிப்பட்ட வாய்ப்பு எந்த மொழியில் கிடைத்தாலும் உடனே நடிப்பேன்," என்றார்.தமிழ் நடிகை சாய்பல்லவி தற்போது ஹிந்தி யில் 'ராமாயணா' படத்தில் சீதையாக நடித்து வருகிறார்.

Jul 11, 2024

வில்லியாக நடிக்க விரும்பும் தெலுங்கு முன்னணி நடிகை அனுபமா

மலையாளத்தில் வெற்றி பெற்ற பிரேமம் படம் மூலம் அறிமுகமான அனுபமா  பரமேஸ்வரன் தமிழில் தனுஷ் ஜோடியாக   அனுபமா பரமேஸ்வரன் அளித்துள்ள பேட்டியில் கதாநாயகியாக விதம்விதமான கதாபாத்திரங்களில் நடிப்பது வேறு. வில்லியாக நடிப்பது வேறு. எனக்கு ஒரு படத்திலேனும் முழுமையான வில்லி கதா பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.  வில்லியாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற வேண்டும் என்பது எனது கனவு. வில்லி வாய்ப்பு எந்த மொழி படத்தில் கிடைத்தாலும் நடிக்க தயாராக காத்திருக்கிறேன்' என்றார்.மலையாளத்தில் வெற்றி பெற்ற பிரேமம் படம் மூலம் அறிமுகமான அனுபமா  பரமேஸ்வரன் தமிழில் தனுஷ் ஜோடியாக “கொடி”, ஜெயம் ரவியுடன் “ சைரன்”, அதர்வாவுடன் “தள்ளிப்போகாதே ”ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது மேலும் இரண்டு தமிழ் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.  

Jul 11, 2024

‘இந்தியன் 2’ திரைப்படம் நாளை RELEASE

 ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம் வரும் ஜூலை 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது...

Jul 04, 2024

நடிகை சமந்தா, விஜய் ஜோடியாக நடிக்க விஜய்யின் 69-வது படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார்

நடிகர்விஜய், வெங்கட்பிரபுஇயக்கத்தில்உருவாகும் ‘திகோட்’ படத்தில்நடித்துவருகிறார்.இதில்பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் செப். 5-ல் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விஜய்யின் 69-வது படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். இதை கன்னட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் தயாரிக்க இருக்கிறது. இதில் நடிகை சமந்தா, விஜய் ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Jul 04, 2024

மலையாளத்தில் யோகிபாபுவுக்கு முதல் படம். பிருத்விராஜ் - பசில் ஜோசப் காம்போவின் காமெடி கலாட்டா |‘குருவாயூர் அம்பலநடை”

துபாயில் பணிபுரிந்துவரும் வினு (பசில் ஜோசப்) மற்றும் அஞ்சலி (அனஸ்வரா ராஜன்) ஆகியோரின் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. காதல் தோல்வியிலிருக்கும் வினுவை தேற்றி திருமணத்துக்கு தயார் செய்தது, அவருக்கு ஆதரவாக இருப்பது உள்ளிட்ட காரணங்களால், அஞ்சலியின் அண்ணன் ஆனந்தன் (பிருத்விராஜ்) மீது அளவு கடந்த அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறார் வினு. மேலும், ஆனந்தனிடமிருந்து பிரிந்த அவரது மனைவியை மீண்டும் அவருடன் சேர்க்க முயற்சித்து அதிலும் வெற்றி பெறுகிறார். ஆகவே ஆனந்தன் - வினு இருவர்களுக்கிடையிலான உறவு பசை போல இறுக்கமாக ஒட்டிக்கிடக்கிறது.துபாயிலிருந்து கேரளா வரும் வினு, ஆனந்தனை மகிழ்ச்சியுடன் சந்திக்கிறார். ஆனால், அதன் பிறகு நிகழும் திருப்பம் ஒன்றினால் இருவரும் மோதிக்கொள்கின்றனர். இதனால், திருமணம் நடப்பதே கேள்விக்குறியாகிறது. இருவரின் மோதலுக்கு காரணம் என்ன? இறுதியில் பிரச்சினைகளைத் தாண்டி அஞ்சலியை வினு கரம் பிடித்தாரா என்பதுதான் திரைக்கதை. மலையாள படமான இது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழிலும் காணக்கிடைக்கிறது.திருமணம் மற்றும் அதைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளை முடிந்த வரை ஜாலியாக கொடுக்க முயன்றிருக்கிறார் ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் விபின் தாஸ். தன்னளவில் பிரச்சினைகளைக் கொண்ட இரண்டு கதாபாத்திரங்கள், அவர்களின் உரையாடல்கள், கோமாளித்தனங்கள், அவர்களால் பாதிக்கப்படும் பெண்கள் என இரண்டு ஆண்களுக்கிடையிலான மோதல்களால் உருவெடுக்கும் திரைக்கதை பெரும்பாலும் போராடிக்காமல் நகர்கிறது.இயல்புத்தன்மையுடன் நகைச்சுவை திணிக்காமல் போகிற போக்கில் எழுதியிருந்த விதம், திருமணத்தை நிறுத்த நடக்கும் நாடகங்கள், துணை கதாபாத்திரங்கள் செய்யும் சேட்டைகள், யோகிபாபுவின் என்ட்ரி களத்தை சுவாரஸ்யமாக்கி கொடுத்துள்ளது. பிருத்விராஜ் - பசில் ஜோசப் இருவருக்குமான கெமிஸ்ட்ரி படத்துக்கு பெரும் பலம். இயக்குநர் விபின் தாஸ், இம்முறை தீபு பிரதீப் எழுத்தில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரச்சினைகளை மேலோட்டமாக பேசியிருக்கிறார். ‘ப்ரோ டாடி’ படத்துக்குப் பிறகு முழு நீள நகைச்சுவையில் ஈர்க்கிறார் பிருத்விராஜ். மனைவியை மீண்டும் அழைத்துச்செல்ல வரும் காட்சி, ஆங்காங்கவே வெளிப்படுத்தும் கச்சிதமான டைமிங் காமெடி, இறுதியில் கொஞ்சம் ஆக்ஷன் என வெகுஜன ரசனைக்கு தீனிபோடும் கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்கிறார்.அப்பாவியான முகத்தோற்றம் கொண்ட பசில் ஜோசஃப்பின் சின்ன சின்ன ரியாக்‌ஷன்கள் கூட எளிதான புன்னைக்க வைக்கின்றன. அவரது ஆக்ரோஷ ட்ரான்ஸ்ஃபமேஷன், எதிர்பாராத திருப்பத்தின்போது கொடுக்கும் ரியாக்‌ஷன்ஸ், திருமணத்தை நிறுத்த செய்யும் கேமாளித்தனங்களால் சார்ந்த கதாபாத்திரத்துக்கு நடிப்பால் நியாயம் சேர்க்கிறார்..சொல்ல முடியாத சோகத்தை தனக்கத்தே கொண்ட பெண்ணை தேர்ந்த நடிப்பால் பிரதிபலிக்கிறார் நிகிலா விமல்..மலையாளத்தில் யோகிபாபுவுக்கு இது முதல் படம். தன்னுடைய வழக்கமான உடல்மொழியால் சொன்னதை செய்திருக்கும் அவர், சில இடங்களில் புன்முறுவலுக்கு உத்தரவாதம் கொடுக்கிறார். மற்ற துணை கதாபாத்திரங்கள் எழுதப்பட்ட விதமும், நடிப்பும் திரையோட்டத்தை சோர்வடையாமல் பார்த்துக்கொள்கின்றது.அன்கித் மேனன், டப்ஸி இசையில் பாடல்கள் கவரவில்லை. பின்னணி இசை தேவையான உணர்வையும், எனர்ஜியையும் கடத்துகிறது. நீரஜ் ரவியின் ஒளிப்பதிவில் குவாலிட்டியான காட்சிகளும், ஜான்குட்டியின் நேர்த்தியான தொகுப்பும் படத்துக்கு பலம். பெரிய அளவில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஜாலியாக பார்த்து சிரிக்க ஒருமுறை ‘குருவாயூர் அம்பலநடைக்கு’ பயணிக்கலாம்.

Jul 04, 2024

 ‘உள்ளொழுக்கு’. 

மலையாளத்தில் வெளிவந்துள்ள படம்தான் 'உள்ளொழுக்கு' எது சரி எது தவறென்பது மனிதருக்கு மனிதர் வேறுபடப் பல காரணங்கள் உள்ளனசில மரணங்கள், ரகசியங்களைப் புதைப்பதற்குப் பதிலாக அவற்றை வெளிக்கொணர்ந்து தெளிவாக்கிவிடும். ஆண்டு தோறும் வெள்ளம் சூழும் குட்டநாட்டுக் கிராமத்தில் அப்படி ஒரு மரணம் நிகழ்ந்துவிடுகிறது. ஆனால் மழைநீர் வடிந்து இறுதிச் சடங்கு செய்யக் காத்திருக்க வேண்டிய நிலைஅப்படியான காத்திருப்பில், இருவேறு தலைமுறைகளைச் சேர்ந்த அக்குடும்பத்துப் பெண்கள் இருவரின் நிறைவேறாத ஆசைகள் போலி கௌரவம், துரோகங்கள், கற்பித மாறுதல்கள் ஆகியன அவர்களது கலைந்த கனவுகளாக வெளிப்படுவதுதான் கதை எதிர்மறையாக எந்த உள்ளுணர் வையும் வெளிக்காட்டாமல், கனவுகளைத் தொலைத்து வாழும் அஞ்சுவாக பார்வதி திருவோத்துவின் நடிப்பு நம்மை ஆழமாக ஊடுருவிச் செல்கிறது. அகத்தால் உடைந்த ஒரு பெண்ணின் உடல்மொழியை இவ்வளவு நேர்த்தியாக வேறு நடிகர்கள் வெளிப்படுத்த முடியுமா என்கிற சந்தேகம் வருகிறது.கதையின் மற்றொரு முக்கியக் கதாபாத்திரம் மழை நகரும் நதி அந்த நதியின் மீதான படகுப் பயணங்கள் நம் கற்பிதங்களை மாற்றியமைக்கின்றன. ஒரு காட்சியில் கன்னியாஸ்திரியின் கையைப் பிடித்துக் கொண்டு லீலாம்மா சொல்லும் வசனம் "நானும் உன்னைப் போல்தான் குடும்பம் இருந்தும் எனக்கு எதுவுமில்லை உனக்குக் குடும்பமே இல்லை இன்னொரு காட்சியில் கட்டி வைத்துவிட்டதாலேயே அவன் எனக்குக் கணவனாகி விடுவானா?" என அஞ்சு கேட்கும் கேள்வி, படம் முடிந்து திரையரங்கிலிருந்து வெளியேறிய பின்பும் வடியாத வெள்ளம் போல் நம்மைச் சூழ்ந்துகொள்கிறது. ஒரு நேர்மையான கதையைத் தேர்வு செய்துகொண்டு அதற்குள் ஆழமான உளவியல் சிக்கல்கள் கொண்ட கதாபாத்திரங்களைப் பொருத்தி, மிகச் செறிவானதொருப் படத்தைச் செதுக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் கிறிஸ்டோ டோமி. ஒளிப்பதிவாளர் ஷெனாத் சுஷின் ஷியாம் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாத பின்னணி இசைக் கோவையைக் கொடுத்திருக்கிறார்.ஜெயகாந்தன் அவரது அக்னிப் பிரவேசம் சிறுகதையின் சாரமாக விளங்கும் மன்னிப்பை ஈரத்துடன் பேசும் இப்படம், 'வாழ்வென்பது அந்தந்த நேரத்தில் அவரவர்க்கு மட்டுமே புரியும் நியாயம் என்பதை உணர்த்துகிறது.

Jul 04, 2024

நித்திலன் இயக்கத்தில் நயன்தாரா

'குரங்கு பொம்மை' படம் மூலம் கவனிக்க வைத்தவர் இயக்குனர் நித்திலன் சாமி நாதன். சமீபத்தில் விஜய் சேதுபதியை வைத்து 'மகாராஜா' என்ற படத்தை இயக்கினார். படம் வெளி யாகி ரூ.100 கோடி வசூலை நெருங்கி வருகிறது. அடுத்து நயன்தாராவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க பேசி வருகிறார் நித்திலன். இது நாயகியை மையமாக வைத்து உணர்வுப்பூர்வமான கதையில் உருவாகிறது.   

Jul 04, 2024

ஷங்கர் கைவசம் 3 பிரமாண்ட கதைகள்

கமலை வைத்து ஷங்கர் இயக்கி உள்ள 'இந்தியன் 2' படம் ஜூலை 12ல் ரிலீஸாகிறது. இதுதவிர 'கேம் சேஞ்சர்' என்ற படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த படங்க ளுக்கு பின் தனது அடுத்த படங்கள் பற்றி கூறியுள்ளார் ஷங்கர். அதில் அவர் கைவசம் சரித்திரக் கதை, ஜேம்ஸ் பாண்ட் படம் மாதிரியான கதை, ஒரு சயின்ஸ் பிக்ஷன் கதை என மூன்று கதைகளை வைத்துள்ளாராம்.

Jun 27, 2024

ஷாருக்கானுக்கு ஜோடியாகும் சமந்தா

'ஜவான்' படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தமிழ் நடிகை நயன்தாரா நடித்திருந்தார்.ஷாருக்கான் அடுத்து 'டங்கி' படத்தை இயக்கிய ராஜ்குமார் ஹிராணி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க சமந்தா ஒப்பந்தம் ஆகியுள்ளார். சமந்தா தற்போது மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 25 26

AD's



More News