25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


வெள்ளித்திரை

Apr 02, 2026

பிரபுதேவா மகன் ரிஷி நடிகரானார்.

இயக்குனர் ரவிச்சந்திரன் 'கண்ணெதிரே தோன்றினாள், மஜ்னு, சந்தித்தவேளை' கடைசியாக 2019ல் 'நட்பதிகாரம்' படத்தை இயக்கினார். அதன்பின் படங்கள் இயக்காமல் இருந்தவர் இப்போது இசையமைப்பாளராகி உள்ளார். "முதன் முதலாய்" என்ற இசை ஆல்பத்தை உருவாக்கி உள்ளார். இதில் பிரபுதேவாவின் மகன் ரிஷி நாயகனாக, கியாரா வாசுதேவன் நாயகியாக நடித்துள்ளனர். இந்த பாடலை ஜி.வி., பிரகாஷ் பாடி உள்ளார்.

Apr 02, 2026

" சுமன் படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ.

சிவாஜி படத்தில ரஜினிக்கு 1 ரூபா கொடுத்து இத வெச்சு பொழச்சுக்கோ என சொல்லியிருப்பாரு.ஆன நிஜத்தில தன்னோட மனைவிக்காக ஹைதராபாத்திலுள்ள ஒட்டுமொத்த 175 ஏக்கர் நிலத்தையும் கார்கில் போரில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு எழுதி கொடுத்தவர் சுமன்.

Apr 02, 2026

ரன்பீர் கபூருக்கு 'அனிமல்-2'வில் இரட்டை வேடம்.

 சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்த 'அனிமல்' படம் ஆயிரம் கோடிவசூலித்தது. 2 ம் பாகத்திற்கு 'அனிமல் பார்க் என பெயர் வைத்துள்ளனர்.. ரன்பீர் கபூர் இரண்டு வேடங்களில் நடிப்பதால் , 'அனிமல் பார்க்' டைட்டில் வைத்துள்ளேன்". 'அனிமல் 2' படப்பிடிப்பு 2027 ஜூனில் துவங்கும் என்றார்.

Apr 02, 2026

ஐஸ்வர்யா  இயக்கும் 'டெக்ஸ்லா'.

குழந்தைகள் தொடர்பான கதையில் உருவாகும் ,லால் சலாம் படத்திற்கு பின் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்கும் படத்திற்கு 'டெக்ஸ்லா' என பெயரிட்டுள்ளனர். இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஆகிய மொழிகளிலும் படத்தை வெளியிட உள்ளனர். படத்தின் அறிமுக வீடியோவை மணிரத்னம், ரிஷப் ஷெட்டி உள்ளிட்டோர் வெளியிட்டனர்.

Apr 02, 2026

மலையாளத்தில் அனுஷ்கா அறிமுகமாகும் 'கத்தனார்' பட டிரைலர் வெளியானது.

ரோஜின் தாமஸ் இயக்கி,அனுஷ்கா அறிமுகமாகும் மலையாள படத்தில் கத்தனார். ஜெயசூர்யா, வினித், சாண்டி, உள்ளிட்ட பலர் நடிக்க, சிறப்பு வேடத்தில் மோகன்லால்,  பிரபுதேவா நடித்துள்ளனர்.. இந்த படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 6 மொழிகளில் வெளியாகிறது. அதற்கு ஏற்ப இதன் டிரைலரையும் 6 மொழிகளில் வெளியிட்டுள்ளனர். மர்மங்கள், திகில் கலந்த அதிரடி படமாக உருவாகி உள்ளது.

Mar 26, 2026

தொடர்ந்து 10 வருஷங்களாக ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்கும் நடிகர்களுக்காக இன்ஸுரன்ஸ் பணத்தை கட்டீட்டு வரார் நடிகர் சூர்யா.

தொடர்ந்து 10 வருஷங்களாக ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்கும் நடிகர்களுக்காக இன்ஸுரன்ஸ் பணத்தை கட்டீட்டு வரார் நடிகர் சூர்யா சார்..! ஒவ்வொரு நடிகருக்கும் ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் செலவாகும் இந்த இன்ஸுரன்ஸை முழுமையாக அவரே கட்டீட்டு வரதில்லாம, அவர்களது குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் படிப்புச் செலவுகளையும் ஏற்றுக் கொண்டு உதவி செய்துவருகிறார் என ஸ்டண்ட்மாஸ்டர் சில்வா அறிவித்துள்ளார்.

Mar 26, 2026

பவன் கல்யாண்  'உஸ்தாத் பகத்சிங்' படம்

மார்ச் 19ல் ரிலீசாக திட்டமிட்டிருந்த யஷ்-ன் 'டாக் 'சிக்' படம் தள்ளிவைக்கப்பட்டதால் ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தை ஒரு வாரம் முன்பே 19ல் ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர் .பவன் கல்யாண் நடித்த, ஹரிஷ் சங்கர் இயக்கத்தில்  'உஸ் தாத் பகத்சிங்' படம் மார்ச் 26ல் ரிலீஸ் என அறிவித்திருந்தனர்.. படத்தின் பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத், பின்னணிக்கு தமன் இசையமைக்கின்றனர். நாயகிகளாக ஸ்ரீலீலா, ராஷி கண்ணா நடித்துள்ளனர்.

Mar 26, 2026

யோகி பாபுவின் 300வது பட டீசர் வெளியீடு.

ராஜ்மோகன் இயக்க, யோகி பாபு கதையின் நாயகனாக நடித்து ராஜ்மோகன் இயக்க, உள்ள படம் 'அர்ஜுனன் பேர் பத்து'. இது யோகிபாபுவின் 300வது படமாகும். இதன் டீசரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட் டார்.  காமெடியிலிருந்து விலகி கொஞ்சம் சீரி யஸான கதையில் யோகிபாபு நடித்துள்ளார்.யோகிபாபுவின் சரக்கு வாக னம் திருடு போகிறது. கதையின்  பின்னணி போலீஸில் புகார் அளிக்க ,அது தங்களது வண்டி என பலர் புகார் அளிக்கின்றனர்..  விவரம் தெரிந்த நாளில் இருந்தே எனக்குக் கடவுள் பக்தி அதிகம் ஷூட்டிங் இல்லை என்றால் நான் கோயிலுக்கு தான் போவேன், இது வெறும் நம்பிக்கை என்று மட்டும் அல்ல கடவுள் இருக்கிறார், நான் அவர் பின்னாடி ஓடுகிறேன், எங்கள் குடும்பமே ஆன்மீகக் குடும்பம் தான் நடிகர் யோகி பாபு.

Mar 26, 2026

3படங்கள்  மார்ச் 27ல் ரிலீஸ்.

தமிழ் படங்களின் வெளியீடு இருவாரங்களாக தேர்வுகள், தேர்தல் அறிவிப்பால் குறைந் துள்ளது. கடந்தவாரம் 'யூத்" படம் மட்டும் வெளியான நிலையில், இந்தவாரம் மார்ச் 27ல் ஜிவி  பிரகாஷின் 'ஹேப்பி ராஜ் படமும், புதுமுகங்களின் 'காணாத சுடர், தி டார்க் சாத்தான்' ஆகிய 3 படங்கள் ரிலீஸாகின்றன

Mar 26, 2026

கிழவி வேடத்தில் நடித்து முத்திரை பதித்த  'தாய் கிழவி' ராதிகா.

 பிப்., 27ல் வெளியான படம் "தாய் கிழவி,சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா முதன்மை வேடத்தில் நடித்த, இந்த படம் ஆரம்பம் முதலே வசூலை குவித்து 25 நாட்களில் ரூ.75 கோடி வசூலித்துள்ளது. இளம் நடிகைகள் கிளாமராக நடித்து செய்ய முடியாத வசூல் சாதனையை சீனியர் நடிகை ஒருவர், கிழவி வேடத்தில் நடித்து முத்திரை பதித்துள்ளார்.

1 2 ... 5 6 7 8 9 10 11 ... 79 80

AD's



More News