'உலகின் செம் மொழிகளில் இன்றும் பரிணமித்து வளரும் மிகத்தொன்மையான மொழி தமிழ். இந்த அடிப் படையில் எங்களது குழு, தமிழ்மொழிக்கானஒருபெருமைச்சின்னத்தைஉருவாக்கும்முயற்சியில்ஈடுபட்டுள்ளது.தமிழ்இலக்கியங்களைவிளக்கப்படங்களாகவும்இன்னும்பல்வேறுபுதியவடிவங்களிலும்வழங்கவிருக்கிறது.இந்ததமிழ்பெருமைச்சின்னத்தைஒருடிஜிட்டல்ரெண்டரிங்காகஉருவாக்கவுள்ளது.எதிர் காலத்தில் இதற்கென ஒரு கட்டடமும் வரக்கூடும்' என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட சமூக வலை தளப்பதிவில் தெரிவித்துள்ளார்.
'நாடோடிகள்' படத்தின் மூலம் பிரபல மானவர் நடிகை அபிநயா. தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளியாக இருந்தாலும் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். ஹைதராபாத்தை சேர்ந்த வெகசனா கார்த்திக் என்பவரை 15 ஆண்டுகளாக காதலித்து வந்தார் அபிநயா. இவர்களின் திருமணம் ஹைதராபாத்தில் பாரம்பரிய முறைப்படி நேற்று நடந்தது. அந்த புகைப்படங்கள் வைரலாகின.
சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நாயகியாக நடித்து வரு கிறார் திரிஷா. அனேகமாக இந்த ஆண்டில் அதிக படங்களில் நடித்த நடிகையாக இவராக தான் இருப்பார் போல. 2025ல் இது வரை இவரது நடிப்பில் 'ஐடென் டிட்டி (மலையாளம்), விடா முயற்சி, குட் பேட் அக்லி' ஆகிய 3 படங்கள் வெளிவந்துவிட்டன. அடுத்து தமிழில் 'தக்லைப், சூர்யா 45' மற்றும் 'விஸ்வாம் பரா' (தெலுங்கு) ஆகிய மூன்று படங்கள் இந்தாண்டுக்குள் வெளியாக உள்ளன.
நடிகர் அஜித் தொடர்ச்சியாக கார் ரேஸில் பயணித்து வருகிறார். ஏற்கனவே போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் நடந்த ரேஸில் அஜித் அணி 3வது இடம் பிடித்தது. இப்போது பெல்ஜியம் நாட்டில் பிர பலமான ஸ்பா பிராங்கோர் சாம்ப்ஸ் சர்க்யூட்டில் சர்வ தேச கார் பந்தயம் நடந்தது. இதில் அஜித் அணி 2வது இடம் பிடித்தது . போட்டியை நேரில் பார்த்த இந்தியர்கள் அஜித் அணி வெற்றி பெற்றதும் ஏகே.... ஏகே... என்று சத்தம் எழுப்பியபடி இந்திய தேசிய கொடியை அசைத்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
கடந்த ஆண்டில் இயக்குனர் சாந்தகுமார் இயக்கத் தில் அர்ஜுன் தாஸ் நடித்து வெளி யான படம் 'ரசாவதி'. நல்ல விமர் சனம் கிடைத்தாலும் வசூலில் தோற்றது. இந்த நிலையில் 7வது நியூ ஜெர்ஸி இந்தியன் அன்ட் இன் டர்நேஷனல் திரைப்பட விழாவில் 'ரசாவதி' படம் பங்கேற்றது. இதில் அர்ஜுன் தாஸிற்கு சிறந்த நடிகர் விருதை அறிவித்துள்ளனர். இதனை பகிர்ந்த இயக்குனர் சாந்தகுமரர், அர் ஜூன் தாஸிற்கு வாழ்த்து தெரிவித்தார்.
பாலிவுட்டில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'கிங்' என்ற படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிக்கின்றனர். இதில் ஷாருக்கான் மகள் சுஹானாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சுஹானாவிற்கு அம்மாவாக தீபிகா நடிக்கிறார். அதே சமயம் கதாநாயகி அந்தஸ்து பாதிக்காத வகையில், தீபிகாவின் ரோல் வலுவாக இருப்பதாக சொல்கிறார்கள்
நடிகை தபு, தமிழில் கடைசியாக 2000ல் வெளியான 'சிநேகிதியே' படத்தில் நடித்திருந்தார். ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழி படங்களில் நடித்தவர் அதன் பிறகு ஹிந்தி, தெலுங்கு படங்களில், இப்போதும் பிஸியாக நடித்து வருகிறார். 25 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் மீண்டும் நடிக்க இருக்கிறார் தபு. பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ள படத்தில் முக்கிய கதாபாத் திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், திரிஷா நடிப்பில் ஏப்.10ல் வெளியான படம் 'குட் பேட் அக்லி'. 3 நாளில் உலக அளவில் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றும், இன்றும் விடுமுறை என்பதால் விரைவில் ரூ.150 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது
“என்னால் உன்னைத் தொடவோ உன் பேச்சைக் கேட்கவோ, பார்க்கவோ முடியாது, என் இதயத்தில் உன்னை உணர முடிகிறது.” "வானத்தில் பிரகாசிக்கும் நீ, படைப்பாளர்களின் உலகில் வாழ்ந்து கொண்டிருப்பாய் என நம்புகிறேன்" என உருக்கமாக கூறியுள்ளார். 2011 ஏப்ரல் 14 ஆம் தேதி கே.எஸ்.சித்ராவின் மகள் நந்தனா வெளிநாட்டில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து மரணமடைந்த நாள்.
கடந்த60 வருடங்களாக தினமும் ஒரு மணி நேரம் வாக்கிங்,20 நிமிடங்கள் யோகாசனம்,20 நிமிடங்கள் பிராணயாமம் பண்றேன். பெட்ல தூங்குறது கிடையாது தரையிலதான் தூங்குவேன். சர்க்கரை, உப்பு. மைதா என வெள்ளை நிற உணவுகளை பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். தேவையில்லாத எண்ணங்கள் வரும்போது குரு மந்திரத்தை சொல்லிட்டு இருப்பேன். எண்ணங்கள் நல்லா இருந்தால்தான் மனசு நல்லா இருக்கும்.ரஜினிகாந்த் பேட்டி.