கடந்த வாரம் திரைக்கு வந்த படம் 'யூத்'. நடிகர் கருணாஸின் மகன் கென் நடித்து. இயக்கி, அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி, சுராஜ் வெஞ் சரமூடு, தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடித்தனர்.. பள்ளி பருவத்தை மையமாக வைத்து வெளியான படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. 4 நாட்களில் உலகளவில் ரூ. 28.3 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
ஐதராபாதில் தெலுங்கானா அரசின் கட்டார் சினிமா விருதுகள் வழங்கும் விழா நடந்தது. 'தி கேர்ள்பிரண்ட்' படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை ராஷ்மிகா வென்றார்.நடிகர் கமலுக்கு பைடி ஜெய்ராஜ் விருது வழங்கப்பட்டது. அவர் கூறுகையில், "இனி கோலிவுட், டோலிவுட், பாலிவுட், சாண்டல் வுட் என்பதெல்லாம் கிடை யாது. ஒரே ஒரு சினிமாதான், அது இந்திய சினிமா" என்றார்
சசி இயக்கி ,இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு நடிகராக திருப்புமுனை தந்த படம் 'பிச்சைக்காரன்'.. விஜய் ஆண்டனி இயக்கி தொடர்ந்து 'பிச்சைக்காரன் 2' படத்தை இயக்கி நடித்தார். பிச்சைக்காரன் 3 பற்றிய கேள்விக்கு விஜய் ஆண்டனி அளித்த பதிலில், கேஜிஎப் படம் மாதிரி பிரமாண்டமாக "முதல் இரு பாகங்களை விட 3ம் பாகம் பெரிய பட்ஜெட்டில் உருவாகும்'' என்றார்.வாழ்க்கைய வெறுமையா நினைச்சிட்டிங்கனா ஒண்ணுமே இல்ல .பக்கத்துல இருக்கும் மருத்துவமனைக்கு போய் ஐ.சி.யூ வார்டு கிட்ட போய் நின்னு பாருங்க, ஒரு உயிரோட மதிப்பு உங்களுக்கு புரியும். அந்த சமயம் இப்போ நாம வாழுற வாழ்க்கையே சொர்க்கம் மாதிரி இருக்கும். வாழ்க்கைல நிதானம் ஆகிடுவோம் என்றார் நடிகர் விஜய் ஆண்டனி .
இயக்குனர் சசி, பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு, நடிகர் விஜய் ஆண்டனி கூட்டணியில் உருவாகி வரும் படம் 'நுாறு சாமி'.சுவாசிகா, அஜய் திஷான், கருணாஸ், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் கரும்பு விவசாயிகளின் வாழ்க் கையை பற்றி பேசுகிறது.. கோடை விடு முறையில் ரிலீஸாகிறது.
ராம் சக்ரீ இயக்கத்தில் ,இயக்குனர்கள் சமுத்திரக்கனி, கவுதம் மேனன் இருவருமே சேர்ந்து நடித்த 'கார்மேனி செல்வம்' படம் கடந்த தீபாவளிக்கு ரிலீசாவதாக அறிவித்து. சில காரணங்களால் தள்ளிப்போன நிலையில் ஏப் 3ல் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.
ரன்வீர் சிங் நடிப்பில், ஆதித்யா தர் இயக்கத்தில், கடந்த வாரம் மார்ச் 19ல் வெளியான படம் 'துரந்தர் தி ரிவெஞ்ச்'. இப்படம் முதல் வாரஇறுதியில் 761கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தியாவில் 550 கோடியும், வெளிநாடுகளில் 211 கோடியும் வசூலித்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர். இந்தப் படம் விரைவில் 1000 கோடி வசூலைக் கடக்க உள்ளது.
தமிழில் தளபதி, ரோஜா, பாம்பே போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக இருந்தவர்தான் தான் அரவிந்தசாமி. ஆனால் 2005ஆம் ஆண்டு திடீரென அவருக்கு விபத்து ஏற்பட்டது. அதில் படுத்த படுக்கையானார். இது அவரின் சினிமா கனவையும் சிதைத்தது. கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் அவர் படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை உண்டானது, ஆனால் அரவிந்த்சாமி தன்னம்பிக்கையோடு தொழில்துறையில் கால்பதிக்க தொடங்கினார். 2022 ஆம் ஆண்டு தொழில்துறையில் சுமார் 3300 கோடி மதிப்புமிக்க சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார். விபத்தில் இருந்து படிப்படியாக மீண்டு வந்து தொழிலை மேம்படுத்திய அரவிந்த்சாமி பீனிக்ஸ் பறவையாக மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.
கோபிசந்த் மலினேனி இயக்க ,தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 111வது படத்தை வரலாற்று பின்புலத்தில் ஆக்ஷன் படமாக உருவாகிறது. படத்தின் பட்ஜெட் அதிகம் இருந்ததால் கதையை மாற்றியுள்ளார்களாம். இதனால் நாயகியாக ரூ.11 கோடிக்கு ஒப்பந்தமான நயன்தாரா மாற்றப்படுவார் என்றனர். ஆனால், நயன்தாரா இதில் உறுதியாக நடிக்கிறாராம்.
சிவ கார்த்திகேயன் தயாரித்து,சிவகுமார் முருகேசன் இயக்கிய 'தாய் கிழவி' பட. ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்த ,படத்தின் வெற்றி விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், "தொடர்ந்து நல்ல படங்கள் தயாரிக்க போகிறேன். ப்ரிவியூ காட்சியை பார்த்தபோது இயக்குனர் சிவகுமார் முருகேசனின் தந்தை என்னையும், சிவகுமாரையும் கட்டிப்பிடித்த ,தருணத்தில் என் தந்தை இறக்கவில்லை என நினைத்துக் கொண்டேன்" எனக்கூறி கண்கலங்கினார்.
காது கேளாதவரும், பார்வையற்றோரும் திரைப்படங்களை பார்க்கும் வகையில் ,சில விதி முறைகளை சென்சார் போர்டு வெளியிட்டுள்ளது. அதன்படி, அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் மார்ச் 15 முதல் புதிய படங்களில் சப் டைட்டில், ஒலி வடிவில் காட்சிகளை விவரிக்கும் ஆடியோ ஆகியவை கட்டாயம் இடம்பெற வேண்டும். சென்சார் சான்றிதழ் தணிக்கைக்கு சமர்ப்பிக்கும் போதே சப் டைட்டில், ஒலி வடிவம் ஆகியவற்றுடன் இணைத்து அனுப்பினால் தான் வழங்கப்படுமாம்.