100வது படத்தில் ,தெலுங்கு நடிகர் நாகார் ஜூனா இப்போது நடிக்கிறார். இதை தமிழில் “நித்தம் ஒரு வானம்” படத்தை இயக்கிய ரா கார்த்திக் இயக்க, தபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சுஷ் மிதா பட் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடிக்கின்றனர். பிரீயட் படமாக உருவாகும் இந்த கதையில் நாகார்ஜூனா கேங்ஸ்டராகவும், தபு முதல்வராகவும் நடிக்கின்றனர். படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.
ஹிந்தியில் சல்மான் கான், நயன்தாரா நடிப்பில் , வாரிசு படத்தை இயக்கிய வம்சிபைடிபள்ளி ஒரு படத்தை இயக்குகிறார். ஜவான் படத்திற்கு பின் மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்கிறார் நயன்தாரா. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு மும்பையில் துவங்கியது. முக்கிய வேடத்தில் அக்ஷய் கண்ணா, பஹத் பாசில், அரவிந்த்சாமி ஆகியோரை நடிக்க வைக்க பேசி வருகின்றனர். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஸ்பை திரில்லராக உருவாகும் இந்த படத்திற்கு 'தி மெசஞ்சர்ஸ்' என டைட்டில் வைக்க முடிவு செய்துள்ளனர்.
'ஏக்தின்' படத்தில் நடிகை சாய் பல்லவி ஹிந்தியில், அமீர்கான் மகன் ஜூனைத் கான் ஜோடியாக நடித்தார். ஓரளவே வரவேற்பை பெற்றது. பட விழாவில் பேசிய சாய் பல்லவி, "இந்தப் படத்தின் முழு காப்பியைப் பார்த்த போதுதான், இந்தக் கதாபாத்திரத்திற்கு நான் செட்டாகவில்லை என்று உணர்ந்தேன். அமீர்கானிடமே இன்னும் கொஞ்சம் ஆடம்பரமான அல்லது துடிப்பான தோற்றம் கொண்ட ஒரு புதிய நடிகை இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என கூறினேன்" என்றார்.
கவுதம் தின்னனுாரி பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்க உள்ளார். இதில் சாய் பல்லவி நடிப்பதாக செய்தி வெளியான நிலையில், அவருக்கு பதில் ருக்மணி வசந்தை ஒப்பந்தம் செய்துள்ளார்.கன்னடத்தில் இவர் நடித்த 'சப்த சாக ரலு தாட்டி எல்லா' படத்தை பார்த்த இயக்குனர், ருக்மணியை நடிக்க வைக்க முடிவுசெய்தாராம். விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.
இயக்குனர் கார்த்திக் தண்டு வர்மா இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் படம்' 'விருஷ கர்மா'. நாக சைதன்யா, " புதையலை தேடிச் செல்லும் ஒரு வேட்டைக்காரனாக அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஹாலி வுட்டில் இதுபோல பல படங்கள் வந்தாலும், இந்தியாவில் சில படங்களில் மட்டுமே இதுபோல முயற்சி செய்கின்றனர். நிச்சயம் ரசிகர்களுக்கு வித்தியாசமான உணர்வை கொடுக்கும்" .
கோபிசந்த் மல்லேனி தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 111வது படத்தை இயக்க உள்ளார். இதில் நாயகியாக நயன்தாரா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. பட்ஜெட் காரணமாக படத்தின் கதையில் மாற்றம் செய்யப்பட்டது, அதிக சம்பளம் காரணமாக நயன்தாராவும் வெளியேற, அவருக்கு பதில் காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம்.
உலக சினிமாவில் உயரிய விருதாக உலக சினிமாவில் , ஆஸ்கர் பார்க்கப்படுகிறது. ஆஸ்கர் விருதுகளுக்கு புது விதிகள், மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக் கியமாக ஏஐயில் உருவாக் கப்படும் படங்கள் ஆஸ்கர் விருது பரிசீலனைக்கு எடுத் துக் கொள்ளப்பட மாட்டாது. படத்தில் ஒரு அங்கமாக ஏஐ பயன்படுத்தலாமே தவிர முழுவதும் ஏஐஆக இருக்க கூடாது. கதை, திரைக்கதை, நடிப்பு உள்ளிட்டவைகளில் மனிதர்களின் பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட படங்களுக்கு மட்டுமே விருது வழங்கப்படும். மற்றவை தகுதியற்றதாகக் கருதப்படும் என ஆஸ்கர் குழு தெரிவித்துள்ளது.
2026 ம்ஆண்டின் நான்கு மாதங்களில் இதுவரை 86 படங்கள் வெளியாகி,. அவற்றில் நான்கைந்து படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. தமிழக சட்ட சபை தேர்தல் பரபரப்பால் இருவாரங்களாக படங்களின் ரிலீஸ் மந்தமாக உள்ளது. இந்தவாரம் (மே 8 ல்) ரத்ன குமார் இயக்கத்தில் விது, பிரீத்தி அஸ்ராணி நடித்துள்ள '29' என்ற ஒரு தமிழ் படமே வெளியாகிறது.
'பாலன் தி பாய்'. இயக்குனர் ஜித்து மாதவன் கதையில் சிம்பரம் இயக்கத்தில் உருவாகி உள்ள மலையாள படம். உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவின் 'மார்ச் டு பிலிம் பிரிவில் திரையிட இப் படம் தேர்வாகி உள்ளது. தாயை தேடி அலையும் ஒரு சிறுவனின் வாழ்க்கை போராட்டத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது. கேன்ஸ் பட விழாவிற்கு இப்படம் செல்வது மகிழ்ச்சி என்றார் இயக்குனர்.
மராத்தியில் 'ராஜா சிவாஜி' என்ற படத்தை பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் தற்போது இயக்கி, நடித்துள்ளார். இவரது மனைவி ஜெனிலியா, அபிஷேக்பச்சன், சஞ்சய் தத், வித்யாபாலனும் நடித்துள்ளனர். இளம் வயது சிவாஜி கதாபாத்திரத்தில் ரித்தேஷ் ஜெனிலியாவின் இளைய மகன் ராஹில் நடித்துள்ளார். இதன்மூலம் நட்சத்திர வாரிசு, அப்பாவின் முதல் இயக்கத்தில் தனது நடிப்பு பயணத்தை துவங்கியுள்ளார்.