25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


ஆன்மீகம்

Jun 19, 2024

பல்லியை வைத்து சகுனம்

பொதுவாகவேவீட்டில் உலாவும் உயிரினங்களில் பல்லி முக்கியஇடம் வகிக்கின்றது. பல்லியைவைத்து பல்வேறு சகுனம்பார்க்கும் வழக்கமும் தொன்றுதொட்டு நிகழ்ந்து வருகின்றது.பல்லியைப்பார்த்தாலே சிலருக்கு அருவருப்பும், பலருக்கும் பயமும்ஏற்படும். பல்லி இருந்தாலேவாழும் இடம் என்றுசொல்வார்கள்.ஆனால், சுவற்றில்பல்லியைப் பார்த்தாலே தெறிக்கஓடுபவர்களும் இருக்கிறார்கள்.வீட்டில்சில நேரங்களில் நாம் குட்டி பல்லிகள் சுற்றுவதை கண்டிருப்போம். இதற்கு இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் என்ன பலன் இருக்கின்றது பல்லியை வைத்து பல்வேறு சகுனம் பார்க்கும் வழக்கமும் தொன்று தொட்டு நிகழ்ந்து வருகின்றதுஇந்துசாஸ்திரத்தின் படிபல்லிகள் மகா லட்சுமியின் வடிவமாகவே பார்க்கப்படுகின்றது. எனவே வீட்டில்பல்லி குட்டிகள் நடமாடினால்,இது மிகவும் நல்லஅறிகுறி என நம்பப்படுகின்றது. எனவே ஒவ்வொருமுறை பல்லியை பார்க்கும்போதும் உங்களின் நிதிபிரச்சனை தீரும், கஷ்டங்கள்தீரும் எனபது ஐதீகம்.எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் நல்லநிகழ்வுகள் குறித்து உணர்துவதாகவே பல்லியின் குட்டியைகாண்பது பார்க்கப்படுகின்றது.ஒன்றுக்கும் மேற்பட்ட குட்டிபல்லிகளை ஒன்றாக பார்த்தால்அது மிகவும் நல்லசகுனம் ஆகும். அதனால்எதிர்பாராத நல்ல செய்திகள்கிடைக்கும். மேலும் ஆண்மற்றும் பெண் பல்லிகள் வீட்டில் இணைவதை பார்த்தால்,கணவன் மனைவிக்கு இடையில் ஒற்றுமையும் பாசமும் அதிகரிக்கும்.நல்ல நாட்களின்குட்டி பல்லி வீட்டிற்குவந்தால் வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் அதிகரிக்கும் என இந்துசாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது. வீட்டில் பல்லிகுட்டிகள் ஓடினால் நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும்ஆரம்பிக்கும் வாய்ப்பு அமையும்.வீட்டில்பல்லி குட்டியை கண்டால்அதை விரட்டவோ, கொல்லவோகூடாது. அதை கொல்வதால் மோசமான பலன்களை சந்திக்கநேரிடும். பாரிய பணதட்டுப்பாடு மற்றும் தொழில்ரீதியான வீழ்சிக்கு வழிவகுக்கும்.ஆனால் தற்செயலாக வீட்டில் பல்லி குட்டி இறந்து கிடந்தால் பயப்பட தேவையில்லை அதனை நிலத்தில் புதைத்துவிட்டால் எந்த தீமையும் ஏற்படாது.

Jun 14, 2024

கோபுரத்தின்உச்சியில் சுதர்சன சக்கரம்உள்ள கோவில் ஸ்ரீநாத்ஜி

கோவிலின் கோபுரத்தில் கலசங்கள் தான் இருக்கும். ஆனால் இங்குள்ள கோவிலிலோ சுதர்சன சக்கரம் பொருத்தப்பட்டு மணிக்கு ஒரு முறை அதை வாசனை திரவியத்தால் துடைத்து விடுகிறார்கள்.நாதன் இருக்கும் இடத்தின் வாயில்அல்லது நாதனிடம் அழைத்துச் செல்லும் வாயில்என்னும் பொருள்பட ஸ்ரீநாத் என்றபெயரில் அமைந்துள்ள ஆலயம். ராஜஸ்தானில் உதய்பூருக்கு வடக்கே 50 கிலோமீட்டர் தொலைவில் பனஸ்நதி கரையில் உள்ளது.இறைவன் ஸ்ரீநாத்ஜி. பிருந்தாவனத்தில் எழுந்தருளியிருந்த இந்தஇறைவனை வைணவ ஆச்சாரியர்களில் முக்கியமானவரான ஸ்ரீமந் நாதமுனிகள் பிருந்தாவனத்தில் யோக நிலையில் இருந்தபோது பூஜித்து வந்ததாக சொல்கிறார்கள். ஸ்ரீநாதமுனிகள் நேரில் வந்து தரிசிக்க எண்ணியகோவில் இது. அவர் வர இயலாத காரணத்தால் அவர்பெயரில் ஸ்ரீநாத் துவாரகை என்றுஅழைக்கப்படுகிறது. 1665 இல் ஔரங்கசீப் மதுராவை தாக்கிய போது1672 ல் இங்கு கொண்டுவரப்பட்டது. அந்நிய படையெடுப்பின் போதுகோஸ்வாமி தாவோஜி என்பவர் ராணாராஜ்சிங்கின் உதவியுடன் பெருமாளின் விக்கிரகத்தை மாட்டுவண்டியில் எடுத்துக்கொண்டு இந்த ஊருக்கு வந்தாராம். அப்போது சக்கரம் மண்ணில் புதைந்து வண்டிநகர மறுக்கவே இந்த இடமேஇறைவனுக்கு விருப்பம் போலும் என உணர்ந்த தாவோஜி அங்கேயே விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்தாராம்.ஏழு வயது குழந்தையாக இங்கு கிருஷ்ணர் காட்சி தருகிறார். வல்லபாச்சாரியாரின் புஷ்டி மார்க்கம் என்ற சம்பிரதாயத்தில் இக்கோவில் வழிபாட்டு முறை உள்ளது. வல்லபாச்சாரியாரின் மகன் விட்டல் நாத்ஜி இவ்வழிபாட்டு முறையை ஸ்தாபித்தார்.கோவர்தன மலையைதூக்க இடது கையை தூக்கியதால் விக்ரகம் அவ்வாறே காணப்படுகிறது. இடதுகையால் கோவர்தனகிரியை சுமந்த படியும், வலதுகையை இடுப்பில் வைத்த படியும் தரிசனம் தரும்ஸ்ரீநாத்ஜி கருப்பு சலவை கல்லில் வடிக்கப்பட்ட விக்ரகம். இந்த விக்கிரகத்தில் இரண்டுபசுக்கள், இரண்டு மயில்கள், பாம்புமற்றும் கிளி ஆகியவையும் உள்ளன. இங்கே எம்பெருமாளை குழந்தை கண்ணனாகவே பாவித்து வணங்குகின்றனர். குழந்தையால் நீண்டநேரம் நிற்க முடியாது என்பதால் ஒவ்வொரு முறையும்30 நிமிடங்களுக்கு மட்டுமே தரிசனம் தருகிறார். பக்திமீராவுக்கு ஸ்ரீ கண்ணன் அடைக்கலம் அளித்ததலமும் இதுதான்.காலையிலிருந்து இரவுவரை கிருஷ்ணர் விக்ரகம் பலவாறுஅலங்கரிக்கப்படுகிறது. ஆரத்திஇங்கு மிகவும் விசேஷமாக காட்டப்படுகிறது.இங்கு தரப்படும் பிரசாதங்கள் மிகவும் பெரிய சைஸ் உள்ளன. விலையும் ஜாஸ்தி தான்.ஸ்ரீநாத்ஜிக்கு அணிவிக்கப்படும் ஆடைகள்தைக்கும் இடம் மாடியில் உள்ளது. வாயில்துணி கட்டிக் கொண்டு(எச்சில் தெறிக்காமல் இருக்க) ஸ்ரீநாத்திற்கு ஆடை தைக்கிறார்கள். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை விதவிதமாக அழகாகஉடை மாற்றி விடுகிறார்கள்.அதேபோல் பகவானுக்கு மாலையில் அணிவிக்கக்கூடிய மலர்மாலையை தொடுத்து மிக அழகாகவாழை இலையை சுற்றி மூடிவைக்கிறார்கள்.பூத்தொடுக்கும் இடம், மாலை கட்டும் இடம், உடைகள்தைக்கும் இடம், பிரசாதம் செய்யும் இடம்ஆகியவற்றை நம்மால் நேரில் சென்றுபார்க்க முடிகிறது.மிக மிக அழகான சுதர்சன சக்கரம் கோபுரத்தின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ளது. அதற்குஅரை மணி நேரத்துக்கு ஒரு முறை வாசனை திரவியத்தை கொண்டுபஞ்சால் துடைத்து விடுகிறார்கள். சுதர்சன சக்கரம் உஷ்ணம்ஆகிவிடும் எனவும் அதனால் அரை மணிக்கு ஒரு முறைவாசனை திரவியங்களை பஞ்சில் நினைத்து ஒத்திஎடுப்பதாகவும் கூறுகிறார்கள்.நம் பக்கம் திருப்பதி ஏழுமலையானைப் போல தென்னிந்தியர்கள் ஸ்ரீ நாத்ஜீயை கொண்டாடுகின்றனர் 

Jun 14, 2024

பக்தியால் ஏற்படும் சிறப்புகள்

சாதத்துடன் பக்தி இணையும்பொழுது பிரசாதம் ஆகின்றது. பட்டினியுடன் பக்தி இணையும் பொழுது நோன்பாக மாறுகின்றது. தண்ணீருடன் பக்தி இணையும் பொழுது தீர்த்தமாகின்றது. பயணத்துடன் பக்தி இணையும் பொழுது யாத்திரையாகின்றது. செயல்பாட்டில் பக்தி இணையும்பொழுது சேவையாகின்றது. இசையுடன் பக்தி இணையும்பொழுது கீர்த்தனையாகின்றது. வீடு பக்தியில் திளைக்கும் பொழுது கோவிலாக மாறுகின்றது. பிரம்மச்சரியம் பக்தியில் இணையும் பொழுது துறவறமாகின்றது. மனிதனை பக்தி ஆக்கிரமிக்கும் பொழுது புனிதன் ஆகின்றான். அந்த பக்தி முழுமையடைந்தால் ஞானியாகின்றான். 

Jun 07, 2024

யானை தலையுள்ள இந்து பெண் தெய்வம் விநாயகி

விநாயகரைபற்றிதெரியாதவர்கள்இருக்கமுடியாது.முழுமுதற்கடவுளானவிநாயகரைவணங்கியபின்தான்எந்தஒருசெயலாகஇருந்தாலுமேசெய்யத்தொடங்குவோம்.அப்போதுதான்நம்மனதில்நினைத்தகாரியம்எந்தத்தடையுமின்றிநிறைவேறும்என்றநம்பிக்கைஉண்டு. ஆனால்,விநாயகியைபற்றிகாண்போம்.விநாயகி என்பவர் யானை தலையுள்ள இந்து பெண் தெய்வம். இவரைப் பற்றி பெரிதாக எதுவும் பேசப்படவில்லை. இவரைப் பற்றிய குறைந்த தகவல்களும், சிலைகளுமே உள்ளன. விநாயகிக்கு சிலை இருந்தால் கண்டிப்பாக அதற்கு பின் கதையும் காரணமும் இருக்கும் என்று தேடினால் அவரைப் பற்றிய பெரிதாக தகவல் இல்லை. பிள்ளையாரை நம்முடைய இஷ்டப்படி எப்படி வேண்டுமோ வழிபடலாம் என்பது மக்களின் எண்ணமாக இருந்தது. அதுவும் கி.பி.6ம் நூற்றாண்டிற்கு பிறகு தான். அதற்கு முன் நம்பிக்கை இருந்தது, ஆனால் உருவ வழிபாடு கிடையாது. யானை தலையினை கொண்டிருப்பதால், விநாயகருடன் இவரை சம்பந்தப்படுத்தி பேசுவதுண்டு.ஸ்ரீ கணேசா, வைநாயகி, கஜனனா, விக்னேஷ்வரி, கணேசானி என்று பல பெயர்களில் இவரை அழைக்கிறார்கள். விநாயகி சில நேரங்களில்64 யோகினி தெய்வங்களுடன்இருக்கிறார். ஜெயின் மற்றும் புத்தத்தில் விநாயகியைஒரு தனி தெய்வமாகவேகுறிப்பிடுகிறார்கள். புத்த மதத்தில் விநாகியை'கணபதி ஹிரிதயா’ என்று அழைக்கிறார்கள். அதாவது கணபதியின்இதயம் என்று பொருள்.முதலாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட விநாயகியின் சிலை ராஜஸ்தானில் உள்ளது. அதன் பிறகு10ம் நூற்றாண்டிலிருந்தே விநாயகியின் சிலை கண்டெடுக்கப்பட்டது. மிகவும் பிரபலமான விநாயகியின் சிலை மத்திய பிரதேசத்தில் உள்ள சௌசாத் யோகினி கோயிலில் அமைந்துள்ளது.மச்ச புராணத்தில் விநாயகியை பற்றி கூறப்பட்டிருக்கிறது. சிவபெருமான் அரக்கனை வதம் செய்யவே விநாயகியை உருவாக்கினார் என்று கூறப்படுகிறது. ஹரிவம்சா, வாயு மற்றும் ஸ்காந்த புராணங்களிலும் விநாயகியை பற்றிய குறிப்புகள் உள்ளன.எல்லா தொடக்கங்களுக்கும் காரணமாக இருக்கக்கூடிய விநாயகப் பெருமான் ஏற்றபெண் வடிவம்தான் விநாயகி என்றும் கூறுகிறார்கள். விநாயகருக்கு பல்வேறு வடிவங்கள் இருப்பதாக விநாயகபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி விநாயகர் ஏற்றபெண் வடிவம்தான் விநாயகி. தமிழ்நாட்டில் சொல்லுமளவிற்கு விநாயகிக்கு தனி சன்னிதியில்லை என்றாலும் கோயில் தூண்களில் விநாயகியை காண முடியும். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளஅழகம்மன் திருக்கோயிலில் வீணை வாசித்தப்படி இருக்கும் விநாயகியை காணலாம். அதேபோலசுசீந்திரத்தில் உள்ள தாணுமலையான் கோயிலில் விநாயகியின் சிற்பத்தை காண முடிகிறது. மதுரைக்கு பெயர் போன மீனாட்சியம்மன் கோயிலில்‘விநாயகதாரணி’ என்றபெயரில் பெண் உருவிலான விநாயகியை காண முடிகிறது. இவரின் கால் புலிக்கால் போல அமைக்கப்பட்டுள்ளதால்‘வியாக்ரபாத்தா விநாயகி’ என்றும் அழைக்கப்படுகிறார்.களத்திர தோஷம், திருமணத்தில் உள்ளதடை, காரியத்தில் ஏற்படும் தடை ஆகியவை நீங்க வேண்டும் என்றால் மாதத்தில் வரும்வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகிக்கு சந்தனக்காப்பிட்டு வழிபட்டால் அனைத்து தடைகளும் விலகும் என்றுநம்பப்படுகிறது.

May 31, 2024

காஞ்சிகைலாசநாதர் கோயில் போலவேஉருவ ஒற்றுமை கொண்டபனமலை சிவன் கோயில்

ஒரு பக்கம் வயல்வெளி, இன்னொரு பக்கம் ஏரி என்று சிறு குன்றின் மீது அமைந்துள்ளது பனமலை சிவன் கோயில். இந்தக் கோயிலும் காஞ்சி கைலாசநாதர் கோயிலும் உருவ ஒற்றுமையில் ஒரே மாதிரியாக உள்ளன. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பனமலை என்னும் அழகிய கிராமத்தில்தான் இக்கோயில் அமைந்துள்ளது.தமிழ்நாட்டின் முதல் கருங்கல் கோயில் இதுதான் என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். காஞ்சி கைலாசநாதர் கோயில்தான் உலகின் முதல் கருங்கல் கோயில் என்று கூறுவார்கள். இந்த பனமலை கோயிலும், காஞ்சி கைலாசநாதர் கோயிலும் உருவ ஒற்றுமையில் ஒன்றாக இருப்பதோடு மட்டுமில்லாமல், இரண்டு கோயில்களும் ஒரே காலகட்டத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இவ்விரு கோயில்களைக் கட்டியதும் ஒரே மன்னர் என்பதால் இவ்வாறு கூறுகிறார்கள்.இக்கோயிலுக்குச் செல்லும் மலையடிவாரத்தில் இருக்கும் விநாயகர் கோயிலை பாறையிலேயே குடைந்திருக்கிறார்கள். அதற்கு முன் ஒரு முகப்பு மண்டபத்தை அமைத்துள்ளனர். இந்த மலையில் இயற்கையாக அமைந்த சுணைகளும் உள்ளன. வலது பக்கத்தில் பச்சைப்பசேலேன்று வயல்வெளியும்,இடதுபக்கம்பிரம்மாண்டமானஏரியும்அமைந்திருக்கிறது.இக்கோயிலை1300 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் நரசிம்மன் என்ற ராஜசிம்ம பல்லவ மன்னனே8ம் நூற்றாண்டில் கட்டினார். இந்த ராஜசிம்ம பல்லவ மன்னன்தான் ஒரே விதத்தில் மூன்று கோயில்களை கட்டியுள்ளார். மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், காஞ்சி கைலாசநாதர் கோயில், பனமலை சிவன் கோயில் ஆகியவையாகும்.இந்த ஊருக்கு பனைமலை என்று பெயர் வரக்காரணம் இந்த மலையில் நிறைய பனை மரங்கள் காணப்படுகின்றன. இக்கோயிலுக்கு பல்லவ மன்னன்தாளகிரீஸ்வரர் என்று பெயர் வைத்துள்ளார்.‘தாள்’ என்பதுபனை மரத்தை குறிக்கும் சொல்லாகும். பனை மரத்தை தல விருட்சமாகக் கொண்டசிவன் என்பதால் இது இத்தலம் பனமலைஎன்று அழைக்கப்படுகிறது.மூலவருக்குப் பின்புறம் சோமாஸ்கந்தர் காட்சி தருகிறார். கோயில் கருவறையைச் சுற்றி நிறைய சிற்பங்கள் காணப்படுகின்றன. கருங்கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி இக்கோயிலை கட்டியிருப்பது தனிச் சிறப்பு. மேலும், இக்கோயிலில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட சுவர் ஓவியம் ஒன்று இக்கோயில் கருவறையில் உள்ளது. அந்த ஓவியத்தை இப்போது பார்ப்பதற்கும் கலைநயத்துடனும், உயிரோட்டத்துடனும் உள்ளது. தற்போது இந்த ஓவியத்தில் எஞ்சியிருப்பது பார்வதி தேவி மட்டும்தான். இவருடைய நகைகள் அவ்வளவு நுணுக்கத்துடனும், கலைநயத்துடனும் வரையப்பட்டிருக்கிறது.பார்வதி தேவி எதிரே இருக்கும் நடராஜரை பார்ப்பது போல இந்த ஓவியம் வரையப்பட்டிருக்கிறது. ஆனால், நடராஜரின் ஓவியம் முற்றிலுமாக சிதைந்த நிலையில் உள்ளது. கோயிலுக்கு பின்புறம் சுரங்கப்பாதை இருப்பதாகவும், அது செஞ்சிக்கோட்டை வரை செல்வதாகவும் சொல்லப்படுகிறது.இக்கோயிலின் அருகில் இருக்கும் ஏரிதான் பனமலை கிராமத்திற்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்தக் கோயிலைக் கட்டிய காலத்தில்தான் இந்த ஏரியையும் வெட்டியிருக்கிறார்கள். பல்லவர்கள் எங்கே கோயில் கட்டினாலும் அங்கு ஓர் நீர்நிலையை அமைப்பது வழக்கம்.இந்த அதிசயக் கோயிலை ஒருமுறையாவது சென்று தரிசித்து ஈசனின் அருளைப் பெறுவது சிறப்பாகும்.

May 24, 2024

திருநந்திக்கரை குடைவரை குகைக்கோயில்

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருகே அமைந்துள்ளது திருநந்திக்கரை குடைவரை குகைக்கோயில். கி.பி.7ம் நூற்றாண்டில் பாறைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட பல்லவர் கால குகைக்கோயில் இது.சமணர்களின்வழிபாட்டுக்காகநிறுவப்பட்டஇக்கோயில்பிற்காலத்திலஇந்துகோயிலாகமாறிவிட்டது.இங்குள்ள சுதை ஓவியங்கள் கி.பி.9 மற்றும்10ம் நூற்றாண்டுக்கு முந்தையதாகும். சில சுவரோவியங்கள் கேரள பாணியில் அமைந்துள்ளன. இவை ராமாயணம் மற்றும் மகாபாரத நிகழ்வுக் காட்சிகளை சித்தரிக்கும் வண்ணம் உள்ளன. இயற்கையான தாவர நிறங்கள் மற்றும் நிறமிகளைக்கொண்டு இந்த சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.நந்தியாற்றங்கரையில் அமைந்துள்ள திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயிலின் ஒரு பகுதியாகும். இது மிகவும் தொன்மையான குடைவரை கோயில்.1956ம் ஆண்டு வரை கேரளாஅரசின் கட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. தற்போது தமிழ்நாடு அரசின்கீழ் உள்ளது.கி.பி.8ம் நூற்றாண்டில் வீரநந்தி என்றசமண முனிவர் இக்கோயிலில் தங்கிசமயப் பணியாற்றியுள்ளார். கி.பி.1003ம் ஆண்டுமுதலாம் ராஜராஜ சோழன் இக்கோயிலில் தங்கிதனது பிறந்த நாளைக் கொண்டாடியதாகக் கூறப்படுகிறது.முகப்பின் மேற்குப்பாறை சுவரில் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் திருநந்திக்கரை மகாதேவருக்கு தன் பிறந்த நாளான ஐப்பசி சதய நாளன்று விழா எடுக்கவும், ஆற்றில் நீராட்டவும், நாழி நெய் ஊற்றி நந்தா விளக்கேற்றவும் இந்நாட்டில் இருந்த முட்டம் என்னும் ஊரை மும்முடிச் சோழநல்லூர் என பெயர் மாற்றம் செய்து தானமாக வழங்கிய செய்தியினை பதிவு செய்துள்ளது.திருநந்திக்கரையில் இரண்டுமுக்கியமான சிவன் கோயில்கள் உள்ளன. ஒன்று, திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயில்மற்றது திருநந்திக்கரை குகைக் கோயில். தெற்குநோக்கிய திருநந்திக்கரை குன்றின் சரிவில் உள்ளதுஇக்குடைவரை கோயில். இது தரை மட்டத்திலிருந்து4 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து குகைத்தளத்திற்கு செல்வதற்கு10 படிக்கட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. இதில்இரண்டு படிகள் தொல்லியல் அளவீட்டுத் துறையினரால் வெட்டப்பட்டது.இக்குடைவரைக் குகையில் முகப்பு மண்டபம், முக மண்டபம், உள் மண்டபம், கருவறைஎன உள்ளன. முகப்பு மண்டபத்தின் மேற்புறச் சுவரில் விநாயகர் உருவம்செதுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சுதைஓவியங்கள் பல அழிந்து காணப்படுகின்றன. உள் மண்டபத்தின் மேற்குச் சுவரில் கருவறைஅகழப்பட்டுள்ளது.இதில் சிவலிங்கத்தின் பாணம் அழகாக செதுக்கப்பட்டுள்ளது. இக்குடைவரைக் கோயிலில் நான்குவட்டெழுத்து கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்து . 

May 17, 2024

திருடர்கள் பலமுறை திருடிச்செல்ல முயற்சித்தும் திரும்பவும் தன்னுடைய கோயிலுக்கே வந்து சேர்ந்த ஒரு தெய்வச் சிலை

இந்தியாவின் கேரள மாநிலம், கன்னூர் மாவட்டத்தில் உள்ள முழங்குன்னு என்னும் இடத்தில் இருக்கும் பழைமையான கோயில்தான் மிருதங்க ஷைலேஸ்வரி திருக்கோயிலாகும். பரசுராமர் உருவாக்கிய108 கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோயிலுக்கு மிருதங்க ஷைலேஸ்வரி என்று பெயர் வரக் காரணம், மிருதங்கம் இந்தியாவின் பழைமையான ஒரு இசைக் கருவியாகும். விநாயகப் பெருமான், நந்திகேஸ்வரர் ஆகியோரிடம் இந்த மிருதங்கம் இருப்பதை பார்த்திருப்போம். மிருதங்கத்தை கடவுளின் தேவ வாத்தியம் என்று கூறுவார்கள். வானிலிருந்து மிருதங்க வடிவிலான எரிகல் ஒன்று இந்த இடத்தில் வந்து விழுந்ததாகவும், அந்தக் கல்லில் அம்பிகையின் சக்தியை பரசுராமர் உணர்ந்ததால் இங்கேயே அந்த அம்பிகைக்கென்று ஒரு கோயிலை எழுப்பினார் என்பது புராணக்கதை.மிருதங்க ஷைலேஸ்வரி கோயிலில்தான் கதகளி நடனம் உருவானதாக நம்பப்படுகிறது. இக்கோயிலில் சக்தி தேவி காளியாகவும், சரஸ்வதியாகவும், மகாலட்சுமியாகவும் மூன்று வடிவில் காட்சி தருகிறார். இக்கோயிலில் இருக்கும் தேவி சிலையின் மதிப்பு 1.5 கோடியாகும். இக்கோயிலுக்கு எந்தக் காவலும் கிடையாது என்பதால் திருடர்களுக்கு இச்சிலையை திருடிச்செல்வது என்பது எளிதானது.1979ம் ஆண்டு முதல் முதலில் இந்த தேவி சிலையானது திருடுபோனது. எனினும், திருடர்கள் சிறிது தூரத்திலேயே இச்சிலையை போட்டுவிட்டு சென்று விட்டனர். அதற்கான காரணம் தெரியவில்லை. சிலையும் கோயிலுக்குத் திரும்ப எடுத்துச் செல்லப்பட்டது.சில வருடங்கள் கழித்து இரண்டாவது முறையாக இந்தச் சிலை திருடப்பட்டது. இந்த முறை போலீசால் எதையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. எனினும், கோயில் தேவஸ்தானத்திலிருந்து சிலை வெகுதொலைவு சென்றுவிட்டதாகவும் நிச்சயமாக42 நாட்களுக்குள் கிடைத்துவிடும் என்று கூறினார்கள். அவர்கள் கூறியது போலவே சிலை42வது நாள் பாலகாட்டின் அருகில் உள்ள நெடுஞ்சாலை தமிழ்நாட்டிற்கு பக்கத்தில் கிடைத்தது. இந்த முறை ஒரு கடிதம் அதனுடன் இருந்தது. இந்த சிலை மிருதங்க ஷைலேஸ்வரி கோயிலை சேர்ந்தது. இதற்கு மேல் எங்களால் இந்தச் சிலையை எடுத்து செல்ல முடியவில்லை என்று எழுதியிருந்தது.மூன்றாவது முறையாக கர்நாடகாவை சேர்ந்த திருடர்கள் இந்தச் சிலையை வயநாடு வழியாக கடத்திச்செல்லும்போது ஒரு லாட்ஜில் இச்சிலையை வைத்து அதற்கு பூ சாத்தி, தீபம் ஏற்றி பூஜை செய்துள்ளனர். பிறகு அவர்களே போலீசாருக்கு போன் செய்து சிலை இருக்கும் லாட்ஜ் பற்றி தகவல் சொல்லி, வந்து சிலையை எடுத்துச் செல்ல சொல்லிவிட்டு சென்று விட்டனராம்.சில காலம் கழித்து வேறு ஒரு திருட்டில் இரண்டாவது மற்றும் மூன்றாவதாக தேவியின் சிலையை திருடிய திருடர்கள் போலீசிடம் மாட்டிக்கொள்ள அவர்களிடம்,‘எதற்காக பாதியிலேயே மிருதங்க ஷைலேஸ்வரி சிலையை விட்டுவிட்டு சென்றீர்கள்’ என்று போலீஸ் கேட்டதற்கு இருவருமே ஒரே மாதிரியான பதிலையே கூறினார்கள். அதாவது அந்தச் சிலையை கடத்தி சென்றுக்கொண்டிருக்கும்போது அந்தத் திருடர்களுக்கு,‘தாங்கள் யார்? எதற்காக இந்தச் சிலையை கடத்திச் செல்கிறோம்? எங்கே எடுத்துச் செல்ல வேண்டும்?’ என்பது போன்ற நினைவுகள் அனைத்தும் மறந்து போய்விட்டதாம்.இதனால் பயந்துபோன அந்தத் திருடர்கள் இந்தச் சிலையை பாதியிலேயே போட்டுவிட்டு ஓடிவிட்டார்களாம். இன்னாள் வரை இக்கோயிலுக்கு எந்தப் பாதுகாப்பும் கிடையாது. எனினும் இத்தகைய மதிப்புமிக்க சிலையை யார் திருடி சென்றாலுமே தேவியின் சிலையானது தன்னுடைய கோயிலுக்கே திரும்ப வந்து சேர்ந்துவிடுவது ஆச்சர்யமான விஷயம். இது தேவியின் மகிமைதான் என்று அங்கிருக்கும் மக்கள் உறுதியாக நம்புகின்றனர். இத்தகைய செய்திகளை கேட்கும்போது அதிசயம் மிக்க இந்தக் கோயிலை ஒருமுறையாவது சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் தோன்றுகிறது அல்லவா?

May 17, 2024

காசிக்கு சமமான ஆறு சிவத்தலங்கள்

அருள்நலம் சார்ந்த சான்றோர்கள் சிவனருட் செல்வர்கள், நாயன்மார்கள் ஆகியோர் சிவத் தலங்கள் தோறும் சென்று வழிபாடு செய்துள்ளார்கள். அப்பெரு மக்கள் உணர்த்திய, தமிழ்நாட்டில் காசிக்கு சமமான ,ஆறு சிவத்தலங்களைக் குறிப்பிட்டுள்ளார்கள்.அந்த ஆறு சிவத்தலங்கள்1. திருவெண்காடு2. திருவையாறு3.மயிலாடுதுறை4. திருவிடைமருதூர்5. திருச்சாய்க்காடு6.ஸ்ரீவாஞ்சியம்காசிக்கு சமமான ஆறு ஆலயங்கள்.

May 10, 2024

நாகப்பட்டினம் மாவட்டம், எட்டுக்குடி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

 முருகன் என்றதும் நம் நினைவிற்கு வருவது அறுபடை வீடுகள்தான். அதைத் தவிர, பழைமையான மற்றும் சக்தி வாய்ந்த முருகன் கோயில்கள் இருந்தாலும், அவை குறித்தான தகவல்கள் பலருக்கும் அவ்வளவாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நாகப்பட்டினம் மாவட்டம், எட்டுக்குடி என்னும் திருத்தலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயில் 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதரின் பாடல்கள் மூலமாகவே பிரபலமடைந்தது. இத்தலம் காவடி எடுக்கும் திருவிழாவிற்கு மிகவும் பெயர் போனதாகும். இங்குள்ள முருகன் வள்ளி, தெய்வானையுடன் மயில் மேல் அமர்ந்து காட்சி தருகிறார். இந்த மூவரும் அமர்ந்திருக்கும் மயிலுக்கு தரையிலிருந்து ஆதாரம் அதன் இரண்டு கால்கள் மட்டுமே.பெரும்பாலான கோயில்களில் முருகன் அமர்ந்திருக்கும் மயிலானது வலது பக்கம் திரும்பியிருக்கும். ஆனால், எட்டுக்குடியில் மட்டும் மயில் இடது பக்கம் திரும்பியிருக்கும். இது கந்த புராணத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எட்டுக்குடி முருகன், சிக்கல் முருகன், எண்கண் முருகன் ஆகிய மூன்று சிலையையும் ஒரே சிற்பியே செதுக்கினார் .ஒரு சமயம் நாகப்பட்டினத்தின் அருகில் சிற்பி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் அழகிய முருகன் சிலை ஒன்றை செதுக்கினார். அப்போது ஆட்சியில் இருந்த பராந்தக சோழன் அந்தச் சிலையின் அழகில் மயங்கி இதுபோன்று இன்னொரு சிற்பத்தை அந்த சிற்பி வடித்துவிட கூடாது என்பதற்கு அவரது இரு கைகளில் உள்ள கட்டை விரலை வெட்டி விடுகிறான். இதனால் வருத்தமடைந்த சிற்பி அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று விடுகிறார். சிற்பி மிகவும் கடுமையாக முயற்சித்து இன்னொரு சிலையை வடிக்கிறார். அதை அந்த ஊரை ஆண்ட குறுநில மன்னன் பார்க்கிறான். அந்த சிலையில் ஒளி வீசுகிறது. மயிலுக்கு உயிர் வந்து பறந்து செல்கிறது. அதை பார்த்த அரசன் அதை‘எட்டிப்பிடி’ என்று ஆணையிடுகிறான். அந்த மயிலை காவலர்கள் எட்டிப்பிடிக்கும்போது மயிலின் கால் சிறிதளவு உடைந்து விடுகிறது. பறந்துக்கொண்டிருந்த மயில் அந்த இடத்திலேயே சிலையாக மாறிவிடுகிறது.இந்த,‘எட்டிப்பிடி’ என்னும் வார்த்தைதான் நாளடைவில்,‘எட்டுப்பிடி’ என்றும் பின்பு எட்டுக்குடி என்றும் ஆனது. அதுவே பிற்காலத்தில் ஊரின் பெயராக மாறியது. அந்த சிற்பி வடித்த இன்னொரு சிலையை எண்கண் என்னும் இடத்தில் வைத்தார். சிற்பி முதலில் வடித்த சிலையை சிக்கலிலும், இராண்டாவது வடித்த சிலையை எட்டுக்குடியிலும் வைத்தார். இந்த மூன்று தலங்களில் உள்ள முருகன் சிலையும் ஒரே முகச்சாயலை கொண்டிருக்கும்.எட்டுக்குடி முருகன், பக்தர்கள் தன்னை எந்த கோலத்தை நினைத்து வழிபடுகிறார்களோ அந்தக் கோலத்திலேயே அவர்களுக்குக் காட்சி தரக்கூடியவர். குழந்தையாக நினைத்துப் பார்த்தால் குழந்தை வடிவிலும், இளைஞனாக நினைத்து பார்த்தால் இளைஞன் வடிவிலும், வயதானவராக நினைத்துப் பார்த்தால் வயோதிக தோற்றத்திலும் உயிரோட்டமாகக் காட்சி தருகிறார்.சித்திரா பௌர்ணமியன்று இக்கோயிலில் விசேஷ வழிபாடு உண்டு. கோயிலின் முன்பு அமைந்திருக்கும் சரவண பொய்கையின் நீரில் கைப்பட்டாலே பாவம் தீரும் என்று நம்பப்படுகிறது. குழந்தைகளின் பயந்த சுபாவம் நீங்க, திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறப்பாக இருக்க இந்த எட்டுக்குடி முருகனை வேண்டினால் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.

May 03, 2024

இந்திய கோவில்களில் வியப்பில் ஆழ்த்தக்கூடிய சிற்பக்கலை

‘காலத்திற்கேற்ப மாற்றம்’ என்று சொல்லப்படுவது போல நம்முடைய ஆடை, அணிகலன், தொழில்நுட்பம் என்று நம் வாழ்வில் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றம் பெண்களுக்கும் பொருந்தும். எல்லாவற்றிலும் மார்டனாக மாறிய பெண்கள் முடியையும் ஃபெதர் கட், லேயர் கட் என்று வெட்டிக்கொண்டார்கள். இருப்பினும் தலைப்பின்னி பூ வைத்து பாரம்பரியமாக இருக்க பிடிக்காத பெண்கள்உண்டா? எந்த காலக்கட்டமாக இருந்தாலும், நிறைய முடி இருக்கும் பெண்களை பார்த்தால் சற்று பொறாமை வரத்தான் செய்யும்.இப்படி பெண்களை பார்த்து பெண்களே பொறாமை படக்கூடிய விஷயத்தை சிற்பமாக வடித்து வைத்திருக்கிறார்கள் தமிழக சிற்பிகள்.எத்தனை கலைநயம், எத்தகைய நேர்த்தி, பார்த்து கொண்டேயிருக்கலாம் என்று தோன்றும் அழகு, இடுப்புக்கு கீழ் வரை செல்லும் கூந்தல், அதை பின்னி போட்டிருக்கும் அழகு. அத்துடன் தலையிலே இருக்கும் அணிகலன்கள் என்று ஒரு சிற்பமே உயிர்பெற்று பெண்ணாக நிற்பது போல தோன்றுகிறது.இந்த சிற்பம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள பூவரக சுவாமி கோவிலிலே தான் உள்ளது. அடுத்து பார்க்கவிருக்கும் ஆப்டிக்கல் இலூசன் சிற்பம் உங்களை நிச்சயமாக பிரமிப்பில் ஆழ்த்தும் என்பதில்  சந்தேகமில்லை. கர்நாடக மாநிலத்தில் ஹரிஹரேஸ்வரர் கோவிலில் உள்ள ஒரு சிற்பம் தான் நம்மை ஆச்சர்யப்படுத்தியது, இந்த சிற்பத்திற்கு தலை ஒன்று தான். ஆனால் உடல்கள்5 உள்ளது. இது கிருஷ்ணரின் சிலை என்று கூறப்படுகிறது. ஒரு தலைக்கு ஐந்து உடல்கள் இருந்தாலும், தலையை எந்த உடலுடன் பொருத்தி பார்த்தாலும் சரியாகவேயிருக்கும். இத்தனைக்கும் ஐந்து உடல்களும் வெவ்வேறு நிலையில் இருக்கும். எனினும் சரியாக பொருந்துவது போல வடிவமைத்த சிற்பியை கலைநயம்,, நேர்த்தியை நினைத்து வியந்து , பார்த்து கொண்டேயிருக்கலாம் இக்கோவில்12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. கோவில்களில் வடிவமைக்கப் பட்டிருக்கும் சிலைகளைக் காணும் போது, சிற்பிகள் வடித்தது சிலையா இல்லை உயிர் உள்ள மனிதர்களா? என்று தோன்றும் அளவிற்கு  அவ்வளவு தத்ரூபமாக இருக்கும்.இதுபோன்ற எண்ணற்ற அதிசய சிற்பங்கள் இந்தியா முழுதும் உள்ள கோவில்களில் அமைந்திருக்கிறது. இவற்றையெல்லாம் பொறுமையாகவும், நிதானமாகவும் ரசிக்க நேரமிருப்பவர்கள் கண்டிப்பாக இதுபோன்ற சிற்பங்களை ரசிப்பதற்கென்றே ஒரு பயணம் மேற் கொள்ளலாம் .

1 2 3 4 5 6 7 8 9 10 ... 16 17

AD's



More News