அடுத்தவர் பணத்திலோ,பொருளாலோ,அர்ச்சனை செய்யக்கூடாது.இயற்கை உபாதைகளை கட்டுபடுத்தி கொண்டு கோயிலுக்கு செல்லக்கூடாது.சாப்பிட்டவுடன் தெய்வத்தை தரிசிக்க கூடாது. எச்சில் துப்பக்கூடாது.கால் அலம்பாமல் ஆலயத்திற்குள் அடியெடுத்து வைத்தல் கூடாது.அசுப காரியங்களுக்கு சென்றுவிட்டு ஆலயத்திற்கு செல்லக்கூடாது. கோயில் அர்ச்சனைகோபத்துடன் சாமி கும்பிடவோ, அர்ச்சனை செய்யவோ கூடாது.
மழையே இல்லாமல் 12 ஆண்டுகள் வரை உயிர் வாழும் சக்தி வெள்ளெருக்க செடிக்கு உள்ளது. அது போல பல்வேறு இடையூறுகளில் இருந்து பல ஆண்டுகள் நம்மை காத்துக் கொண்டிருக்கும் சக்தி வெள்ளெருக்க வேரில் இருந்து செய்யப்படும் விநாயகருக்கு உண்டு.வெள்ளெருக்க விநாயகர் சிலையை வீடுகளில் வைத்து பூஜை செய்து வருவதன் பயனாக வீடு முழுக்க நேர் மறை ஆற்றல் அதிகரிக்கும். செல்வம் சேரும். வீட்டில் உள்ளவர்களின் செல்வாக்கு உயரும்.வெள்ளெருக்கு விநாயகரை விட்டில் வைத்தால் இல்லம் முழுவதும் ,வெள்ளெருக்கு கதிர் வீச்சின் மூலம் வௌளெருக்கு விநாயகர் மகிமை உணரலாம். விநாயகர் அருளை பெற செவ்வாய் மற்றும் சனிக்கிழமை விநாயகருக்கு மிக உகந்த நாட்கள், அன்று செவ்வரளி, மஞ்சள் அரளிமலர் சாற்றி வணங்கினால் மிக சிறப்பு.வெள்ளெருக்கு வேரினால் செய்த பிள்ளையாரை வீட்டில் வைத்து வணங்கினால் புண்ணியம் பெருகும்.
வியாழக்கிழமை அன்று குபேர தீபம் ஏற்றக்கூடியபழக்கத்தை வைத்திருப்பார்கள். அந்த குபேரர் விளக்கில் நீங்கள் நல்எண்ணெய் ஊற்றினாலும் சரி, அல்லது தேங்காய்எண்ணெய் நெய் எது ஊற்றி விளக்கு ஏற்றினாலும் சரி, அதில்1 ஸ்பூன் இந்த ஜாதிக்காய் எண்ணயை கலந்து விடுங்கள். உங்களுக்கு குபேரரின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.
முதல் படை வீடுஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில், முருகன் தெய்வானையுடன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.இங்கு மலைவடிவில் சிவபெருமான்அருள் புரிகிறார். அமர்ந்த கோலத்தில் முருகன் காட்சியளிப்பது சிறப்பாகும்.இரண்டாம் படை வீடுமுருகனின் இரண்டாம் படைவீடானதிருச்செந்தூர் கடலோரத்தில் அமைந்துள்ளதால்திருச்சீரலைவாய் என்றும், ஜயந்திபுரம் என்றும் பெயருண்டு. இங்கு முருகப்பெருமான், சூரபத்மனை அழித்ததாக கந்த புராணம் கூறுகிறது.மூன்றாம் படை வீடுமுருகனின் மூன்றாம் படை வீடான பழநி, சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியாகும். பழநி முருகர் சிலைபோகர் சித்தரால்நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது.இங்கு, அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் சாப்பிட்டால் சகல நோய்களும் தீரும் நான்காவது வீடுதன்னைவிட தன் பிள்ளைகள்அறிவுடையவர்களாக இருப்பது தந்தைக்கு மகிழ்ச்சியை தரும். அதையொட்டி, தன் பிள்ளையின் வாயால் பிரணவ மந்திரத்தின் பொருளை கேட்டு பிள்ளை குருவாக இருக்க,' தானே சீடனைப்போல் அமர்ந்து கேட்டார்.அதனால் சிவகுருநாதன் என்ற பெயரை முருகப்பெருமான் பெற் றார்.ஐந்தாவது வீடுதிருச்செந்தூரில் , சூரனை வதம் செய்த முருகன் திருத்தணிக்கு வந்து கோபம் தணிந்து சாந்தமாக அமர்ந்ததால் தணிகை என இவ்வூர் பெயர் பெற்றது.வேடர்குலத்தில் பிறந்த வள்ளியை, முருகன் காதல் திருமணம் புரிந்து கொண்ட இடமே திருத்தணியாகும்.ஆறாவது வீடுஅறுபடை வீடுகளில் ஆறாவது வீடாக விளங்குவது சோலைமலை. ஒளவை பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கே ட்ட முருகன், உலக வாழ்க்கைக்கு கல்வியறிவு மட்டும் போதாது. இறையருள் என்னும் மெய்யறிவும் வேண்டும் என்பதை உணர்த்த திருவிளையாடல் புரிந்த இடம்.
பங்குனி மாதத்தில் வரும் முக்கியம் விசேஷ நாட்களில்பங்குனி உத்திரம் மிகவும் முக்கியமானது. இறை வழிபாடுகள் செய்வதற்கு உரிய மாதமாக பங்குனி மாதமும் திகழ்கின்றது.தமிழ் மாதங்களில் 12ஆவது மாதம் பங்குனி, 27 நட்சத்திரங்களில் 12ஆவது உத்திரம் நட்சத்திரம் இந்த 12, என்ற எண் முருகனுடைய திருக்கரங்களின் எண்ணிக்கையை குறிக்கும். எனவேதான் பன்னிரு கை வேலவனுக்கு உகந்த நாளாக பங்குனி உத்திரம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவ ஆலயங்களிலும் முருகப்பெருமான் ஆலயங்களிலும் பங்குனி உத்திர திருவிழா 12 நாட்கள் பிரம்மோற்சவ விழாவாக கொண்டாடப்படுகிறது. மீனாட்சி-சொக்கநாதர் , ராமர் -சீதைக்கும் பங்குனி உத்திர நாளன்று தான் திருமணம் நடைபெற்றது. தெய்வீக திருமணங்கள் நிகழ்ந்த நாள் பங்குனி உத்திர நன்னாள்.இதனை கல்யாண விரதம் எனவும் சொல்வார்கள். இந்த நன்னாளில் திருமணத்தடை இருப்பவர்கள் விரதம் இருந்து முருகனை வழிபாடு செய்தால் திருமணம் கைகூடும்.கன்னிப் பெண்களுக்கு நினைத்த வரன் அமைய பங்குனி உத்திர விரதத்தை கடைப்பிடிப்பது யோகத்தைக் கொடுக்கும்.. பங்குனி உத்திர விரதத்தால் கிடைக்கும். அரசு வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு கிடைக்கும், அரசு சார்ந்த காரியங்கள் நடக்கும். சிலருக்கு பணியிடத்தில் இழுபறியாக இருக்கும் பதவி உயர்வு கிடைக்கும்.வட மாநிலங்களில் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும் சகோதரத்துவத்தை வலியுறுத்தவும் எப்படி ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறதோ, அது போலவே நம் தமிழகத்தில் பங்குனி உத்திரப் பெருவிழாவாகக் கொண்டாடி வருகிறோம்.
வசந்த நவராத்திரி மார்ச் மாதம் 22 ஆம் தேதி தொடங்கி மார்ச் 30 ஆம் தேதி முடிவடைகிறது . வசந்த நவராத்திரி என்பது யோகம் எனும் பக்தி நிலையை தரக்கூடியது. மேரு எனும் ஸ்ரீசக்ரம் அமைந்திருக்கும் ஆலயங்களில் வசந்த நவராத்திரி பொதுவாகக் கொண்டாடப்படும். ஒன்பது தினங்களிலும் காலை வேளையில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். ஒன்பது தினங்களிலும். அம்பிகை ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருவாள். மாலை வேளையில் அம்பிகைக்கு உகந்த, மிக உயர்நிலை பூஜையான ஸ்ரீநவாவரண பூஜையும், லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனையும், கன்யா பூஜையும், சுவாஸினி பூஜையும் நடைபெறும். வசந்த நவராத்திரி பூஜை செய்து வழிபட்டால் பெண் குழந்தைகள் மகிழ்ச்சி அடைவார்கள்.
பூதேஷ்வர் நாத் உலகத்தின் மிகப் பெரியசுயம்பு லிங்கம் , 18 அடி உயரம். 20 அடி சுற்றளவு கொண்ட இந்த லிங்கத்திரு மேனி கொண்ட பெருமானை பூதேஷ்வர் நாத் என்று அழைக்கிறார்கள். சதீஸ்கர் மாநிலம் க்ரியாபாந்த் மாநிலம், மதுரா என்னும் கிராமத்தில் இப்பெருமான் எழுந்தருளியுள்ளார்.ஆச்சரியமான ஒருஉண்மை என்னவென்றால்!! இப்பெருமானை வருடம் தோறும் கணக்கிடுகிறார்கள்.ஒவ்வொரு வருடமும் இவர் 6முதல் 8 இன்ச் வரை பூதேஷ்வர் நாத் வளர்ந்துகொண்டே வருகிறார்.
எல்லோருடைய வீட்டிலும் பெண்கள் வளையல் அணிந்து இருப்பார்கள், வளையல் அணியாத பெண்களிடம் காசு, பணம் அவ்வளவு சீக்கிரம் தங்குவது இல்லையாம் எனவே தான் கண்ணாடி வளையல்களின் சத்தம் கேட்குமாறு பெண்கள் முந்தைய காலங்களில் நிறையவே வளையல் அணிந்து வந்தனர். இந்த வளையல் சத்தம் வீட்டில் கேட்டுக் கொண்டே இருந்தால் அங்கு சுபிட்சம் நிலைத்திருக்கும் என்கிறது சாஸ்திரங்கள் குறிப்பாக வளையல் அணியாமல் பூஜை அறையில் பெண்கள் விளக்கு ஏற்றவே கூடாது.பொதுவாக கண்ணாடி வளையல்கள் என்பது இந்த கால பெண்களிடம் பேஷன் இல்லை என்றே கருதப்படுகிறது. இந்த கண்ணாடி வளையல்கள், மூதாட்டிகள் மட்டுமே உபயோகிக்கப்பட்டதாக இன்றைய நவநாகரீக பெண்கள் நினைக்கின்றனர்.கண்ணாடி வளையலில் தேவி தத்துவம், சாத்வீகத்தன்மை மற்றும் சைதன்யம் நிரம்பியுள்ளன.அவை சூழ்ந்துள்ள சாத்வீக, சைதன்ய அதிர்வலைகளை ஈர்க்கின்றன. கண்ணாடி வளையல்களின் ஓசை, தீய சக்திகளை விரட்டியடித்து தேவியின் அருள் கிடைக்க உதவுகிறது.கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு, சீமாந்தம் போன்ற சடங்குகள் வைப்பது முற்காலத்திலிருந்தே கடைபிடிக்கப்பட்டு வந்த வழக்கங்கள் ஆகும். இந்த விழாவில் பிரதானமான அம்சமே கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு வளையல்கள் போட்டுவிடுவது மட்டுமின்றி, அந்நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் எல்லா வயதுப் பெண்களுக்கும் வளையல் அடுக்குவதுதான்.நிறைமாத பெண்மணி மெல்ல நடந்துவரும் உடல் வாகைக் கொண்டிருப்பாள். அதனால் அவள் வரும் போது முன்னே, பின்னே அக்கம் பக்கத்தில் செல்பவர்கள் அவள் வருவதைப்புரிந்து கொண்டு அவளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் ஒதுங்கிச் செல்வதற்கு அந்தக் கண்ணாடி வளையோசை உதவும் என்பதே ஆகும்.கண்ணாடி வளையல்கள் லேசாக உடைந்திருந்தாலோ, கீறல் விழுந்திருந்தாலோ அணியக்கூடாது. ஏனென்றால், இந்த விரிசல் மூலமாக தீய சக்திகள் உடலில் புக வாய்ப்புள்ளது.
காஞ்சி மகாபெரியவர் விபூதி என்ற தத்துவத்தை அழகாக விளக்குகிறார். விறகினை அக்னி எரித்து சாம்பலாக்குகிறது. இறுதியில் அந்த சாம்பலே பஸ்மமாக மிஞ்சுகிறது. அதேபோல ஞானம் என்கிற நெருப்பு மனித வாழ்வின் கர்மங்களை எரித்து பஸ்மமாக்குகிறது. என சொல்கிறார் பகவான் கிருஷ்ணர். இங்கு பஸ்மம் என்பது விபூதியைப் குறிக்கும். அதாவது பல நிறங்கள் கொண்ட பொருட்கள் எரிந்தபின், கடைசியில் வெளுத்துத்தான் போகும். இதையே நாம் சாயம் வெளுத்து விட்டது. என்கிறோம். சாயம் என்பது வேஷம். இந்த வேஷம் போனபின் சாம்பல்தான் மிஞ்சும். இதுவே விபூதி.
புதிதாக வாங்கும் ஆடைகள் மற்றும் பிற வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் போது, பக்கத்து வீட்டிலுள்ள தோழி தெரிந்தவர்களுக்கு காண்பிக்கும் போது அவர்களுடைய மனதில் இவ்வளவு விலையா? நம்மால் இப்படி வாங்க முடியவில்லையே, என ஏக்கமாக பார்ப்பது, உங்களுக்கு கண் திருஷ்டி ஏற்படும்.மேலும் நகைகள், பீரோவிலுள்ள புடவைகளை, கடைபரப்பி காண்பிப்பதும் சரியல்ல.அவ்வாறு ஆர்வமாக காண்பித்த பின்பு அந்த புடவையையோ அல்லது நகையையோ அணியமுடியாமல் போகும்,மேலும் நகைகள் அடகுக்கு போவது ,மீட்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.எல்லோருடைய பார்வையும் அப்படி இருக்காது என்றாலும், உங்களுக்கு தெரிந்து இவர்களிடம் காட்டினால் கண் திருஷ்டி படுகிறது என்று ஒரு அபிமானம் .இருப்பவர்களிடம் காட்டாமல் இருப்பது நல்லதே...மற்றபடி உங்களின் மீது அதிக பாசமுள்ள பிரியமுள்ளவர்களிடம் காண்பிப்பது சரியே.கண் திருஷ்டி ஆபத்து: உலகம் முழுதும் நம்பும்உண்மை .வேதத்தில் 'கோரம் சக்சுக்ஷக்ஷிஷு என்று கண் திருஷ்டி பற்றி துதி இருக்கிறதுகுழந்தைகளுக்குக் கருப்புப் போட்டு வைப்பது , கோவிலில் கோபுரத்தில் ஆபாச சிலைகள் வைப்பது ,பெரிய கடைகளில் விநோத உருவம் வரைந்த பூசணிக்காய் தொங்குவது ,வீட்டின் முகப்பில் திருஷ்டி விநாயாகர் உருவம் மாட்டுவது , கார் வாங்கினால் குங்குமத்துடன் எலுமிச்சம்பழத்தை டயரில் வைத்து நசுக்குவது ,எல்லா நிகழ்ச்சிகள் முடிந்ததும் செந்நிற மஞ்சள் வண்ணஆரத்தி சுற்றுவது ,வெள்ளிக்கிழமைகளில் தாய்மார்கள், வீட்டிலுள்ள அனைவரையும் நிறுத்தி உப்பு அல்லது மிளகாயைச் கற்றி நிரிலோ, நெருப்பிலோ போடுவது ,தலையைச் சுற்றி அல்லாது ஒரு பொருளைச் சுற்றி தேங்காயை சிதறு காய் அடிப்பது,கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று பழமொழி சொல்லுவது இந்துக்களின் கண்திருஷ்டி நம்பிக்கை ,உலகம் முழுதும் பரவியுள்ளது.,கண் படுதல் அல்லது திருஷ்டி என்பது உண்மையே என்று அதர்வண வேதம் கூறுகிறது.அதர்வண வேதம் கோரமான தீய கண்கள் என்ற சொற்றொடரை பயன்படுத்தி அதற்கு பரிகாரங்களையும் பேசுகிறது