சிவகங்கை மாவட்டத்தில் உள்ளபிள்ளையார்பட்டியில்இருப்பதுதான்புகழ்பெற்றஸ்ரீகற்பகவிநாயகர்திருக்கோவில். தேவலோகத்தில் இருக்கும் கற்பக மரத்தின் அடியில் நின்று நாம் என்ன வரம் வேண்டினாலும் அது கிடைக்கும். அதைப்போல தான் கற்பக விநாயகரிடம் நாம் மனதில் என்ன நினைத்து வேண்டினாலும் அது உடனேயே நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் தான் இவருக்கு கற்பக விநாயகர் என்ற பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த கோவில் 2500 வருட பழமையான குடைவரைக் கோவிலாகும்.குன்றைக்குடைந்து கோவிலாகவும், ஸ்ரீ கற்பக விநாயகரின் சிற்பத்தையும், ஸ்ரீ திருவீசர் என்ற லிங்கத்தையும் பாண்டியர்கள் வடிவமைத்துள்ளனர்.இங்குள்ள கற்பக விநாயகருக்கு இரண்டு கைகள் மட்டுமே உள்ளன. விநாயகர் கையிலே தனக்கு பிடித்த மோதகம் இல்லை. அதற்கு பதிலாக யோகநிலையில் உலக நன்மைக்காக கையிலே லிங்கத்தை வைத்து ஞான தவம் புரியும் யோக விநாயகராக இருப்பதால், இவரிடம் கேட்ட வரங்களெல்லாம் எளிதிலே கிடைத்துவிடும். வடக்கு திசையை நோக்கியிருக்கும் வலம்புரி விநாயகரே பிள்ளையார்பட்டி விநாயகர். வலம்புரி விநாயகரை வணங்குபவருக்கு வாழ்வில் நினைத்தது அனைத்தும் நிறைவேறும்.விநாயகர் ஆவணி மாதம் வளர்பிறை சதூர்த்தி திதியில் அவதரித்தார். அதனால் தான் ஆவணி மாதம் வருகின்ற வளர்பிறை சதூர்த்தி திதியை விநாயகர் சதூர்த்தியாக கொண்டாடுகின்றோம். மாட்டு சாணம், களிமண், மஞ்சள், சந்தனம் இதில் ஒன்றை பிள்ளையாராக பிடித்து வைத்து இரண்டு அருகம்புல்லை வைத்தாலே போதும் நம் குறைகளை கேட்க ஓடோடி வரும் எளிமையான கடவுள் தான் பிள்ளையார்.பிள்ளையாரை இந்து மதத்தில் மட்டும் கடவுளாக வழிப்படவில்லை. பௌத்த மதத்திலும் ‘விநாயகா’ என்ற பெயரில் வழிப்படப்படுகிறார். திபெத், சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் விநாயகருக்கு எண்ணற்ற பக்தர்கள் இருக்கிறார்கள் .
உத்தரபிரதேசத்தில் மீரட் நகர்கன்டோன்மென்ட்சர்தார்பஜாரில்காளிபல்தான்என்னும்இடத்தில் 'ஆகர்நாத்' என்னும் பெயரில் சிவபெருமான் கோயில் கொண்டிருக்கிறார். இவரை தரிசித்தால் தேசப்பற்று அதிகரிக்கும்.1857ல் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ராணுவப்படையும், அவர்களின் குடியிருப்பும் இங்கு இருந்தன. படையில் இருந்த இந்திய வீரர்களை கருப்பு ராணுவம் (காளி பல்தான்) என ஆங்கிலேயர்கள் இழிவாக குறிப்பிட்டு ' வந்தனர். இதை இந்தியர்கள் எதிர்த்தனர். இந்நிலையில் துறவி ஒருவர் இங்குள்ள கோயிலுக்கு வந்திருந்தார். அவரிடம் இந்திய வீரர்கள் ஆலோசித்ததன் விளைவாக சிப்பாய் கலகம் உருவானது. சுதந்திர போராட்டத்திற்கு இதுவே வித்திட்டது. இதற்கு காரணமானவர்கள் மரண தண்டனை பெற்றனர். இதன்பின் இக்கோயில் பிரபலம் அடைந்தது.விஜய நகர மன்னர் கிருஷ்ண தேவராயர், மராட்டிய மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர். 1968ல் கோயில் புதுப்பிக்கப்பட்டு செவ்வக வடிவ அடுக்குகளின் மீது மூன்று தளங்களாக உள்ளது. 4 கிலோ எடை கொண்ட தங்கக்கலசத்துடன் கோபுரம் 2001ல் நிறுவப்பட்டது. கருவறையில் சுயம்பு லிங்கமும், அதன்பின்புறம் சலவைக்கல்லால் ஆனசிவனும், பார்வதியும்நின்றநிலையில்உள்ளனர்.சிங்கவாகனத்தில்துர்கை, ராதாகிருஷ்ணர், மகாவிஷ்ணு, மகாலட்சுமி சன்னதிகள் உள்ளன. கோயிலின் பின்புறத்தில் உள்ள சுதந்திரப் போராட்டத்தின் நினைவுச் சின்னம்ஒன்றும் உள்ளது. இங்கு சிப்பாய்க்கலகத்தை நினைவுபடுத்தும் விதமாக ஆண்டுதோறும் மே 10ல் விழா நடக்கிறது.சிரவண (ஆவணி) மாத திங்கள் கிழமைகளில் சிறப்பு பூஜை நடக்கும்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருகம் அருகே அமைந்துள்ளது நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரர் கோவில் பக்தர்களின் பசியை போக்கும் புண்ணிய தல மாகவும், கேட்கும் வரத்தை கொடுக்கும் ஆலயமாகவும் இக்கோ வில் விளங்குகிறது. சுமார் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவில், தியாகதுருகம் அருகே சந்தைமேட்டு பகுதியில் அமைந்துள்ள ஆவுடையார் கோவில். இக்கோவிலில் அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை பகுதியில் இருந்து வந்த சித்தர், பல ஆண்டு காலம் இங்கு தங்கி சிவனுக்கு பூஜைகள் செய்தும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அருளாசியும் வழங்கி வந்தார். அப்போது சித்தர் பெருமான், கோவில் வளாகத்திற்குள் வரும் நாக பாம்பின் நஞ்சை தனது கையில் வாங்கி உண்டு வந்துள்ளார். இதனால் அந்த சித்தர் 'நஞ்சுண்ட ஞான தேசிகர்' என அழைக்கப்பட்டார். பின்னர் நாளடை வில், சித்தர் பெருமான் கோவில் மூலவருக்கு அருகில் ஜீவசமாதி அடைவதாக பக்தர்களிடம் கூறிவிட்டு ஜீவ சமாதி அடைந்தார். அதன் பிறகு ஆவுடையார் கோவில், 'நஞ்சுண்ட ஞான தேசிகர் கோவில்' என அழைக்கப்படு கிறது. இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் நஞ்சுண்ட ஞான தேசிகர் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்து, தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர்.சித்தர் பெருமான் வாழ்ந்த காலத்தில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் சித்தர் தனது உடலில் உள்ள கை, கால்கள் மற்றும் தலை ஆகிய வற்றை தனித்தனியாக பிரித்து மீண்டும் இணைத்ததாகவும், இதனை அப்பகுதி மக்கள் பலர் ஆச்சரியமுடன் பார்த்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவ்வாறு பார்த்த ஒரு சிலர் அதிர்ச்சியில் இறந்து போனதாகவும் முன்னோர் கள் கூறுகின்றனர்..
புதுக்கோட்டையில் இருந்து 20 கி.மீ., தொலைவில் உள்ளது வாராப்பூர் அகத்தீஸ்வரர் கோயில்.இங்கு ராகு, கேதுஇருவரும் இணைந்துஒரே வடிவில்அருள்புரிகின்றனர்.சிவனின் ஆணைக்குகட்டுப்பட்டுகைகட்டிய நிலையில்உள்ளனர்.கைலாயத்தில் இருந்து பொதிகை மலைக்கு செல்லும் வழி எங்கும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தார் அகத்தியர். அதில் இக்கோயிலும் ஒன்றாகும். அம்மனின் திருநாமம் சவுந்தராம்பிகை. 1300 ஆண்டுகள் பழமையான திருத்தலம்.ராகுவும், கேதுவும் கைகளை கட்டியபடி சிவபெருமானின் நேரடி பார்வையில் இங்கு உள்ளனர்.காளஹஸ்திக்கு நிகரான இங்கு வழிபடுவோருக்கு திருமணத்தடை விலகும்.குழந்தைப்பேறு கிடைக்கும்.நோய்கள் தீரும். காலசர்ப்ப தோஷம், நாக தோஷத்திற்கு சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது.
தெய்வீகம் மிக்க ஆடி, அம்மனுக்கு உரிய மாதமாக போற்றப்பட்டு, ஆடி மாதம் வந்தாலே ஊரெங்கும் அம்பிகை வழிபாடு களைகட்டும். பூமிதேவி ஆண்டாள் நாச்சியாராக அவதரித்ததும் ஆடிப்பூர நன்னாளில் தான். பார்வதியின் தவத்தை மெச்சிய சிவன், ஆடி மாதத்தை அம்பிகை மாதமாக இருக்க வரமளித்தார்.சிவனுடைய சக்தியை விட, அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் விசேஷமானதாக இருக்கும்.ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி அம்மன் வழிபாட்டுக்குரிய சிறப்பான நாட்களாகும். அம்பிகை எல்லையற்ற சக்தி கொண்ட அம்பிகை, பார்வையிலிருந்து யாரும் தப்ப முடியாது.ஆயிரம் கண்கள் கொண்டவள் என்பதால் 'ஆயிரம் கண்ணுடையாள்' எனப்படுகிறாள். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயரில் கோயில் கொண்ட அம்மனுக்கு, லலிதா சகஸ்ரநாமத்தில் ஆயிரம் திருநாமங்கள் ,வெள்ளி அன்று படிப்பது சிறப்பு. அம்மனுக்கு பிடித்த ஆடி மாதத்தை வழிபாட்டுக்குரிய மாதம் என நம் முன்னோர்கள் போற்றினர்
பூமிதேவியின் அம்சமான ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்துாரிலுள்ள நந்தவனத்தில் அவதரித்தாள். அங்குள்ள, ஒரு துளசிச் செடியின் அடியில்,கலியுகம் பிறந்து 98வதாக நிகழ்ந்த நள வருடம் ஆடிமாதம் வளர்பிறையில் பூர நட்சத்திர நன்னாளில் பெரியாழ்வார், ஆண்டாளைக் கண்டெடுத்தார். தான் பூஜித்து வந்த வடபெருங் கோயிலுடையானிடம் சென்றார்.பெருமாளும் 'கோதை என்னும் பெயரிட்டு குழந்தையை வளர்த்து வருவீராக' என்று அருள்புரிந்தார். ஆண்டாள் கண்ணன் மீது கொண்ட பக்தி காதலாக மாறியது. அவனையே தன் கணவனாக நினைத்து வாழத் தொடங்கினாள். அவளுடைய அன்பை ஏற்ற கண்ணனும் ஆண்டாளின் பூமாலையையும்,பாமாலையையும் ஏற்று அருள்புரிந்தார். அதன் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் அமைந்துள்ளது.மார்கழி நோன்பிருந்த ஆண்டாள், திருப்பாவை எனும் பிரபந்தம் பாடினாள்.30 பாசுரங்கள் உடையது இது.கண்ணனை தரிசிக்க தோழியர்களை எழுப்புவது போன்ற பொருளில் இப்பாசுரம் பாடப்பட்டிருக்கும்.தோழியரை ஆண்டாள் எழுப்பும் சிற்பங்கள் ஸ்ரீவில்லிப்புத்துார் கோயில், ஆண்டாள் சன்னதி விமானத்தில் உள்ளன.இதற்கு, 'திருப்பாவை விமானம்' என்றே பெயர். ஆண்டாளை தரிசிப்பவர்கள் இந்த விமானத்தை அவசியம் தரிசிக்க வேண்டும்.
சோழவள நாட்டில் எண்ணற்ற சிறப்புவாய்ந்த ஆலயங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்றாக செம்பங்குடி ஆலயமும் திகழ்கிறது. இக்கோவிலின் இறை வன் நாகநாத சுவாமி, அம்பாள் கற்பூரவல்லி தயார். இங்கு ஆதிகேது தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக் கின்றார். தோஷங்களில் இருந்து விடுபட சிறந்த தலம். அமிர்தம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கட லைக் கடைந்தனர். அதில் கிடைத்த அமிர்தத்தை தேவர் களுக்கு பகிர்ந்தளித்தார், மகாவிஷ்ணு.விப்ரசக்தி என்னும் அசுரனுக்கும், இரணியனின் தங்கை சிம்ஹிக்கும் பிறந்த வன் ஸ்வபானு. அசுர குலத்தவனான ஸ்வபானு, தேவ வடிவம் பூண்டு அமிர்தத்தை உண்டான். இதை குறிப்பால் உணர்ந்த சந்திர-சூரியர்கள், அந்த அசுரனின் தலையி ஓங்கி அடித்தனர். இதனால் அவனது தலை சிரபுரம் என்னும் சீர்காழியிலும், உடல் செம்பாம்பினன்குடி என் னும் செம்பங்குடியிலும் விழுந்தது.அமுதுண்டதால் அந்த இரண்டு உடல் பாகங்களும் இரண்டு பாம்புகளாக மாறின. அவை, சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, ஈசனை நோக்கி கடும் தவமிருந்தன. அவர்கள் முன் எழுந்தருளிய சிவனிடம், "அகில உலகத்தையும் ஆட்டிப்படைக்கும் வரமும், சந்திர - சூரியரை விழுங்கும் பலமும்" வேண்டும் என வேண்டினர். ஈச சூரிய - சந்திரர்கள் உலக உயிர்களுக்கு இன்றியமை யாதவர்கள். அவர்கள் இன்றி உலகம் தத்தளிக்கும் என் றார். இருப்பினும், கிரகண காலங்களிலும், அமாவாசை யிலும் அவர்களை விழுங்கும் திறன் பெற அருள்பாலித்தார். மேலும் இருவருக்கும் கிரக பதவியும் வழங்கினார். அவர்களே ராகு - கேது ஆவர்.சிவந்த மனித உடலும், பாம்பின் தலையும் கொண்ட கேதுவின் வடிவம், இங்கு குடி கொண்டதால் இத்தலம் செம்பாம்பினன்குடி ஆனது. இதுவே மருவி செம்பங்குடி என்றாகி உள்ளது. இந்த ஆலயமே ஆதி கேது தலமாக போற்றப்படுகிறது. அருணாசலக் கவிராயரின் சீர்காழி தலபுராணத்தில் இப்பகுதி செம்பாம்பினன்குடி என்றும் கேதுபுரம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருநாவுக்கரசர் அருளிய ஆறாம் திருமுறையில், மனித இடர்களைப் போக்கும் தலங்களுள் ஒன்றாக விளங்கும் இத்தலத்தை வைப்புத்தலமாக போற்றியுள்ளார்.
திண்டுக்கல் நகரின் காவல் தெய்வம் கோட்டை மாரியம்மன். சிறப்பு மிக்க இந்நகரின் மேற்கில் பத்மகிரி என்னும் மலைக் கோட்டை உள்ளது. 300 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட கோட்டை மீது திப்புசுல்தானின் படைவீரர்கள் தங்கியிருந்தனர்.சிப்பாய் ஒருவரின் கனவில் மாரியம்மன்காட்சியளித்து தன்னை வழிபடும்படி கட்டளையிட்டாள். அதன்படி இங்கு வழிபாடு தொடங்கியது.மலைக்கோட்டையின் பின்னணியால் அம்மனுக்கும் 'கோட்டை மாரி' எனப் பெயர் வந்தது. அம்மனின் எட்டு கைகளில் பாம்பு, சூலாயுதம்,மணி, கபாலம், வில், கிண்ணம் உள்ளன. அம்மன் சிலை பூமிக்கடியில் அதிக ஆழத்தில் புதைந்துள்ளது.
திருப்பதி தேவஸ்தானம்திருமணம் நிச்சயமாகி, கல்யாண பத்திரிக்கை அடித்து உறவினர்களுக்கெல்லாம் கொடுக்க துவங்கும் முன், திருமணத்துக்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பே திருப்பதி கோயிலுக்கு அனுப்பி வைத்து,ஏழுமலையானின் ஆசிர்வாதத்தை பெறும் புதிய திட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.அப்படி பத்திரிக்கை அனுப்பும் பட்சத்தில் கோவிலில் இருந்து பிரசாதம் உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.அத்துடன் புதுமண தம்பதிகள், திருமணத்தின்போது கையில் கட்டிக் கொள்ளும் கங்கணம், குங்குமம் மஞ்சள் அனுப்பி வைக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.மேலும் திருமண முக்கியத்துவத்தை சொல்லும் ஒரு புத்தகமும் அனுப்பி வைக்கப்படும்.நமக்கு கல்யாண பத்திரிக்கையை சுவாமிக்கு சமர்ப்பித்த நிம்மதியும் திருப்பதி கோயிலில் இருந்து பிரசாதம் கிடைத்த மாதிரியும் ஆகிவிடும். .திருமண பத்திரிக்கையை அனுப்ப வேண்டிய முகவரிToSri Lord Venkateswara swamy,The Executive OfficerTTD Administrative BuildingK.T.RoadTirupati – 517 501 Andhra Pradesh
விருதுநகர் மாவட்டம் நடுச்சத்திரம் கிராமத்தில் உள்ளது, ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் ஆலயம். இந்த ஆலயம், கோவில் அமைப்பில் பல அதிசயங்களையும் அற்பு தங்களையும் கொண்டது. இக்கோவிலின் இறைவன் ஸ்ரீகாசிவிஸ்வநாதர், இறைவி ஸ்ரீஅன்னபூரணி. இந்த ஊரில் உள்ள சிவபக் தர்கள் இந்த ஸ்ரீகாசிவிஸ்வ நாதர்-ஸ்ரீஅன்னபூரணி திருக்கோவிலை, 'இந்தியா வின் இரண்டாவது காசி' என்றே கொண்டாடுகிறார் கள்.சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன், பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோவில் இது. தற்போது இந்த ஆலயம் இந்து அறநிலையத்துறையின் மேற்பார்வை யில் உள்ளது. இங்கு வற்றாத நூபுர கங்கை தீர்த்தக் கிணறு உள்ளது. இந்தக் கோவில், காசியில் இருந்து நேர்கோட்டில் அமையப்பெற்றிருப்பதாக சொல்கிறார் கள். தற்போது கோவில் அமைந்துள்ள இடம், அப்போது வனமாக இருந்திருக்கிறது. இந்த வனப்பகுதியின் வழியாகத்தான் கன்னியாகுமரியில் இருந்து காசிக்குச் செல்லும் பக்தர்கள் பயணம் மேற்கொள்வார்கள். கோவிலின் அருகிலேயே ஓர் அழகான நீர்நிலை உள்ளது. இப்பகுதியை ஆண்ட பாண்டிய மன்னர்கள் இவற்றை எல்லாம் கருத்தில்கொண்டு,காசிக்குச் செல்லும் பக்தர்களுக்கு ஏதுவாக இந்த ஆலயத்தைகாசியில் உள்ளது போன்றே வடிவமைத்திருக்கின்ற னர். இந்த வழியாகக் காசிக்குச் செல்பவர்கள் இந்த ஆலயத்தில் தங்கி, இங்குள்ள சிவபெருமானை தரிசித் துவிட்டுச் செல்வது வழக்கம். பாண்டிய மன்னர்கள், அப்போதிருந்த குறுநில மன் னர்களான எட்டையபுரம் ஜமீன்தார்களிடம் ஆலய நிர் வாகத்தை ஒப்படைத்தனர். அவர்களது காலத்துக்குப் பின், ஏழாயிரம்பண்ணை ஜமீனிடம் பராமரிக்கும் பொறுப்பு வந்து சேர்ந்தது. இவர்கள் சில தலைமுறை களாக இந்தக் கோவிலைப் பாதுகாத்து வந்துள்ளனர். தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள், தேய்பிறை அஷ்டமி அன்று காலபைரவருக்கு வெள்ளைப் பூசணிக் காய் ஒன்றை (தடியங்காய்) இரண்டாகப் பிளந்து, வெள்ளை மிளகு 108 எடுத்து பாதியாகப் பிரித்து பூசணிக்காயில் வைத்து, இலுப்பை எண்ணெய் ஊற் றித் தீபம் ஏற்றினால், தொழில் விருத்தியாகும் என்பது நம்பிக்கை. இதுதவிர, திருமண வரம் வேண்டிவரும் பெண்கள், பிரதோஷ நாளில் எலுமிச்சை மாலையை அன்னபூரணி அம்மனுக்குச் சூடி, சுவாமியை தரிசித்து விட்டுச் சென்றால், நல்ல வரன் அமையும். அதேபோன்று, ஆண்கள் தொடர்ந்து 3 பிரதோஷங்களுக்கு இங்கு வந்து, அன்ன பூரணி அன்னைக்கு பூமாலை சமர்ப்பித்து வழிபட்டுச் சென்றால், விரைவில் திருமண மாலை தோள்சேரும். குழந்தை வரம் இல்லாத வர்கள் இளநீர் வாங்கி வந்து, அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் அமையும் என் பது பக்தர்களின் நம்பிக்கை.