25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
"குறிஞ்சிச் செல்வர்" டாக்டர்.கொ.மா.கோதண்டம்அவர்களுக்கு இதயபூர்வமான அஞ்சலி . >> நான்கு வழிச் சாலை ரயில்வே ஸ்டீல் ஆர்க் பிரிட்ஜ் பணிகள் வேகம் . >> இரு மாதங்களாக கடும் வெயில் பாதிப்பினால் வற்றும் சாஸ்தா கோயில் நீர்த்தேக்கம்: >> ஆக்கிரமிப்புகளை அகற்ற ,புது பஸ் ஸ்டாண்ட் ரோடு விரிவாக்கத்திற்கு நெடுஞ்சாலை துறை சார்பில் நோட்டீஸ். >> ராஜபாளையத்தில் தெரு நாய்களின் தொல்லை. >> ராஜபாளையத்தில் மக்காச்சோளம் பயிர்கள் விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி .. >> பள்ளி ஆண்டு விழா , முத்தமிழ் மன்ற விழா. >> விநாயகர் சதுர்த்தி பூஜை >> நெடுஞ்சாலை துறை சார்பில் சங்கரன் கோவில் முக்கு முதல் புது பஸ் ஸ்டாண்ட் வரையி லான 1.4 கி.மீ., துாரத்தை 7 மீட்டரில் இருந்து 10 மீட்டராக விரிவாக்கம் செய்ய ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு. >> இருதயம் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை மருத்துவ முகாம். >>


புஷ்கர் பிரம்மா மந்திர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புஷ்கர் பிரம்மா மந்திர்.

படைப்புக் கடவுளான பிரம்மாவின் கோயில் ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் நகரில் உள்ளது. இங்கு சாவித்ரி, காயத்ரியுடன் பிரம்மா அருள்புரிகிறார்.ஒருமுறை பிரம்மா உலக நலன் கருதி யாகம் நடத்த விரும்பினார். அதற்காகத் தன் வாகனமான அன்னப் பறவையிடம் தாமரை மலரைக் கொடுத்து வழியில் அது எங்கு கீழே விழுகிறதோ அங்கு நடத்த முடிவு செய்தார். அந்த இடமே புஷ்கர் எனப் பெயர் பெற்றது. இதற்கு 'நீலத்தாமரை' என்பது பொருள்.

யாகத்தை தொடங்கும் முன் பிரம்மாவின் மனைவி சாவித்ரிக்காக காத்திருந்தார். அவள் வர தாமதமானதால் யாகத்தை தொடங்க முடியாமல் போனது. பின்னர் இந்திரனிடம் ஆலோசித்து காயத்ரி தேவியைத் திருமணம் செய்து யாகத்தில் அமர்ந்தார். தாமதமாக வந்த சாவித்திரி, தன் கணவருடன் வேறொரு பெண் அமர்ந்திருப்பதைக் கண்டு, 'இனி பிரம்மாவுக்கு கோயில் இல்லாமல் போகட்டும்' என சாபமிட்டு, அருகிலுள்ள குன்றான அருணகிரி மீதேறி அமர்ந்தாள்.

கோயிலின் முகப்பில் 'ஸ்ரீஜகத்பிதா பிரம்மா மந்திர்' என எழுதப்பட்டுள்ளது. இதற்கு 'உலகத்தின் தந்தை பிரம்மாவின் கோயில்' என பொருள். கருவறையின் மீது 70 அடி உயர விமானத்தில் பிரம்மாவின் வாகனமான அன்னப்பறவை காட்சியளிக்கிறது. பிரகாரத்தின் ஒரு பகுதியில் காணிக்கையாக வந்த வெள்ளி நாணயங்கள் குவிக்கப்பட்டுள்ளன. கருவறையை நோக்கி வெள்ளி ஆமை உள்ளது. தீர்த்தத்தின் பெயர் புஷ்கர்.

நான்கு முகங்கள் கொண்ட பிரம்மாவின்சலவைக்கல் சிலையை ஆதிசங்கரர் நிறுவினார். அவரது கைகளில் புத்தகம், அருகம்புல், கமண்டலம், ஜபமாலை உள்ளன. இதை 'விஸ்வகர்மா கோலம்' என்கின்றனர். பிரம்மாவின் இடது புறம் காயத்ரி, வலது புறம் சாவித்திரி உள்ளனர்.

பராசர கோத்திரத்தைச் சேர்ந்த பிரம்மச்சாரிகள் அர்ச்சகர்களாக உள்ளனர். சந்நியாசி, பிரம்மச்சாரிகள் மட்டுமே கருவறைக்குள் நுழையலாம். எதிரெதிர் திசைகளில் உள்ள குன்றுகளில் கோயில்கள் உள்ளன. உயரமான குன்றின் மீது சாவித்திரி, சிறிய குன்றின் மீது காயத்ரி கோயில்கள் உள்ளன. கார்த்திகை மாத பவுர்ணமியன்று ஒட்டகத் திருவிழா நடக்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News