பூமிதேவியின் அம்சமான ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்துாரிலுள்ள நந்தவனத்தில் அவதரித்தாள். அங்குள்ள, ஒரு துளசிச் செடியின் அடியில்,கலியுகம் பிறந்து 98வதாக நிகழ்ந்த நள வருடம் ஆடிமாதம் வளர்பிறையில் பூர நட்சத்திர நன்னாளில் பெரியாழ்வார், ஆண்டாளைக் கண்டெடுத்தார். தான் பூஜித்து வந்த வடபெருங் கோயிலுடையானிடம் சென்றார்.பெருமாளும் 'கோதை என்னும் பெயரிட்டு குழந்தையை வளர்த்து வருவீராக' என்று அருள்புரிந்தார். ஆண்டாள் கண்ணன் மீது கொண்ட பக்தி காதலாக மாறியது. அவனையே தன் கணவனாக நினைத்து வாழத் தொடங்கினாள். அவளுடைய அன்பை ஏற்ற கண்ணனும் ஆண்டாளின் பூமாலையையும்,பாமாலையையும் ஏற்று அருள்புரிந்தார். அதன் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் அமைந்துள்ளது.மார்கழி நோன்பிருந்த ஆண்டாள், திருப்பாவை எனும் பிரபந்தம் பாடினாள்.30 பாசுரங்கள் உடையது இது.கண்ணனை தரிசிக்க தோழியர்களை எழுப்புவது போன்ற பொருளில் இப்பாசுரம் பாடப்பட்டிருக்கும்.தோழியரை ஆண்டாள் எழுப்பும் சிற்பங்கள் ஸ்ரீவில்லிப்புத்துார் கோயில், ஆண்டாள் சன்னதி விமானத்தில் உள்ளன.இதற்கு, 'திருப்பாவை விமானம்' என்றே பெயர். ஆண்டாளை தரிசிப்பவர்கள் இந்த விமானத்தை அவசியம் தரிசிக்க வேண்டும்.
சோழவள நாட்டில் எண்ணற்ற சிறப்புவாய்ந்த ஆலயங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்றாக செம்பங்குடி ஆலயமும் திகழ்கிறது. இக்கோவிலின் இறை வன் நாகநாத சுவாமி, அம்பாள் கற்பூரவல்லி தயார். இங்கு ஆதிகேது தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக் கின்றார். தோஷங்களில் இருந்து விடுபட சிறந்த தலம். அமிர்தம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கட லைக் கடைந்தனர். அதில் கிடைத்த அமிர்தத்தை தேவர் களுக்கு பகிர்ந்தளித்தார், மகாவிஷ்ணு.விப்ரசக்தி என்னும் அசுரனுக்கும், இரணியனின் தங்கை சிம்ஹிக்கும் பிறந்த வன் ஸ்வபானு. அசுர குலத்தவனான ஸ்வபானு, தேவ வடிவம் பூண்டு அமிர்தத்தை உண்டான். இதை குறிப்பால் உணர்ந்த சந்திர-சூரியர்கள், அந்த அசுரனின் தலையி ஓங்கி அடித்தனர். இதனால் அவனது தலை சிரபுரம் என்னும் சீர்காழியிலும், உடல் செம்பாம்பினன்குடி என் னும் செம்பங்குடியிலும் விழுந்தது.அமுதுண்டதால் அந்த இரண்டு உடல் பாகங்களும் இரண்டு பாம்புகளாக மாறின. அவை, சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, ஈசனை நோக்கி கடும் தவமிருந்தன. அவர்கள் முன் எழுந்தருளிய சிவனிடம், "அகில உலகத்தையும் ஆட்டிப்படைக்கும் வரமும், சந்திர - சூரியரை விழுங்கும் பலமும்" வேண்டும் என வேண்டினர். ஈச சூரிய - சந்திரர்கள் உலக உயிர்களுக்கு இன்றியமை யாதவர்கள். அவர்கள் இன்றி உலகம் தத்தளிக்கும் என் றார். இருப்பினும், கிரகண காலங்களிலும், அமாவாசை யிலும் அவர்களை விழுங்கும் திறன் பெற அருள்பாலித்தார். மேலும் இருவருக்கும் கிரக பதவியும் வழங்கினார். அவர்களே ராகு - கேது ஆவர்.சிவந்த மனித உடலும், பாம்பின் தலையும் கொண்ட கேதுவின் வடிவம், இங்கு குடி கொண்டதால் இத்தலம் செம்பாம்பினன்குடி ஆனது. இதுவே மருவி செம்பங்குடி என்றாகி உள்ளது. இந்த ஆலயமே ஆதி கேது தலமாக போற்றப்படுகிறது. அருணாசலக் கவிராயரின் சீர்காழி தலபுராணத்தில் இப்பகுதி செம்பாம்பினன்குடி என்றும் கேதுபுரம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருநாவுக்கரசர் அருளிய ஆறாம் திருமுறையில், மனித இடர்களைப் போக்கும் தலங்களுள் ஒன்றாக விளங்கும் இத்தலத்தை வைப்புத்தலமாக போற்றியுள்ளார்.
திண்டுக்கல் நகரின் காவல் தெய்வம் கோட்டை மாரியம்மன். சிறப்பு மிக்க இந்நகரின் மேற்கில் பத்மகிரி என்னும் மலைக் கோட்டை உள்ளது. 300 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட கோட்டை மீது திப்புசுல்தானின் படைவீரர்கள் தங்கியிருந்தனர்.சிப்பாய் ஒருவரின் கனவில் மாரியம்மன்காட்சியளித்து தன்னை வழிபடும்படி கட்டளையிட்டாள். அதன்படி இங்கு வழிபாடு தொடங்கியது.மலைக்கோட்டையின் பின்னணியால் அம்மனுக்கும் 'கோட்டை மாரி' எனப் பெயர் வந்தது. அம்மனின் எட்டு கைகளில் பாம்பு, சூலாயுதம்,மணி, கபாலம், வில், கிண்ணம் உள்ளன. அம்மன் சிலை பூமிக்கடியில் அதிக ஆழத்தில் புதைந்துள்ளது.
திருப்பதி தேவஸ்தானம்திருமணம் நிச்சயமாகி, கல்யாண பத்திரிக்கை அடித்து உறவினர்களுக்கெல்லாம் கொடுக்க துவங்கும் முன், திருமணத்துக்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பே திருப்பதி கோயிலுக்கு அனுப்பி வைத்து,ஏழுமலையானின் ஆசிர்வாதத்தை பெறும் புதிய திட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.அப்படி பத்திரிக்கை அனுப்பும் பட்சத்தில் கோவிலில் இருந்து பிரசாதம் உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.அத்துடன் புதுமண தம்பதிகள், திருமணத்தின்போது கையில் கட்டிக் கொள்ளும் கங்கணம், குங்குமம் மஞ்சள் அனுப்பி வைக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.மேலும் திருமண முக்கியத்துவத்தை சொல்லும் ஒரு புத்தகமும் அனுப்பி வைக்கப்படும்.நமக்கு கல்யாண பத்திரிக்கையை சுவாமிக்கு சமர்ப்பித்த நிம்மதியும் திருப்பதி கோயிலில் இருந்து பிரசாதம் கிடைத்த மாதிரியும் ஆகிவிடும். .திருமண பத்திரிக்கையை அனுப்ப வேண்டிய முகவரிToSri Lord Venkateswara swamy,The Executive OfficerTTD Administrative BuildingK.T.RoadTirupati – 517 501 Andhra Pradesh
விருதுநகர் மாவட்டம் நடுச்சத்திரம் கிராமத்தில் உள்ளது, ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் ஆலயம். இந்த ஆலயம், கோவில் அமைப்பில் பல அதிசயங்களையும் அற்பு தங்களையும் கொண்டது. இக்கோவிலின் இறைவன் ஸ்ரீகாசிவிஸ்வநாதர், இறைவி ஸ்ரீஅன்னபூரணி. இந்த ஊரில் உள்ள சிவபக் தர்கள் இந்த ஸ்ரீகாசிவிஸ்வ நாதர்-ஸ்ரீஅன்னபூரணி திருக்கோவிலை, 'இந்தியா வின் இரண்டாவது காசி' என்றே கொண்டாடுகிறார் கள்.சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன், பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோவில் இது. தற்போது இந்த ஆலயம் இந்து அறநிலையத்துறையின் மேற்பார்வை யில் உள்ளது. இங்கு வற்றாத நூபுர கங்கை தீர்த்தக் கிணறு உள்ளது. இந்தக் கோவில், காசியில் இருந்து நேர்கோட்டில் அமையப்பெற்றிருப்பதாக சொல்கிறார் கள். தற்போது கோவில் அமைந்துள்ள இடம், அப்போது வனமாக இருந்திருக்கிறது. இந்த வனப்பகுதியின் வழியாகத்தான் கன்னியாகுமரியில் இருந்து காசிக்குச் செல்லும் பக்தர்கள் பயணம் மேற்கொள்வார்கள். கோவிலின் அருகிலேயே ஓர் அழகான நீர்நிலை உள்ளது. இப்பகுதியை ஆண்ட பாண்டிய மன்னர்கள் இவற்றை எல்லாம் கருத்தில்கொண்டு,காசிக்குச் செல்லும் பக்தர்களுக்கு ஏதுவாக இந்த ஆலயத்தைகாசியில் உள்ளது போன்றே வடிவமைத்திருக்கின்ற னர். இந்த வழியாகக் காசிக்குச் செல்பவர்கள் இந்த ஆலயத்தில் தங்கி, இங்குள்ள சிவபெருமானை தரிசித் துவிட்டுச் செல்வது வழக்கம். பாண்டிய மன்னர்கள், அப்போதிருந்த குறுநில மன் னர்களான எட்டையபுரம் ஜமீன்தார்களிடம் ஆலய நிர் வாகத்தை ஒப்படைத்தனர். அவர்களது காலத்துக்குப் பின், ஏழாயிரம்பண்ணை ஜமீனிடம் பராமரிக்கும் பொறுப்பு வந்து சேர்ந்தது. இவர்கள் சில தலைமுறை களாக இந்தக் கோவிலைப் பாதுகாத்து வந்துள்ளனர். தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள், தேய்பிறை அஷ்டமி அன்று காலபைரவருக்கு வெள்ளைப் பூசணிக் காய் ஒன்றை (தடியங்காய்) இரண்டாகப் பிளந்து, வெள்ளை மிளகு 108 எடுத்து பாதியாகப் பிரித்து பூசணிக்காயில் வைத்து, இலுப்பை எண்ணெய் ஊற் றித் தீபம் ஏற்றினால், தொழில் விருத்தியாகும் என்பது நம்பிக்கை. இதுதவிர, திருமண வரம் வேண்டிவரும் பெண்கள், பிரதோஷ நாளில் எலுமிச்சை மாலையை அன்னபூரணி அம்மனுக்குச் சூடி, சுவாமியை தரிசித்து விட்டுச் சென்றால், நல்ல வரன் அமையும். அதேபோன்று, ஆண்கள் தொடர்ந்து 3 பிரதோஷங்களுக்கு இங்கு வந்து, அன்ன பூரணி அன்னைக்கு பூமாலை சமர்ப்பித்து வழிபட்டுச் சென்றால், விரைவில் திருமண மாலை தோள்சேரும். குழந்தை வரம் இல்லாத வர்கள் இளநீர் வாங்கி வந்து, அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் அமையும் என் பது பக்தர்களின் நம்பிக்கை.
காசிக்கு நிகராகத் திகழும் ராமேஸ்வரம் கோயிலில் சீதை உருவாக்கிய ராம லிங்கம், அனுமன் கொண்டு வந்த காசி லிங்கம், தவிர அபூர்வமான லிங்கம் ஒன்றுள்ளது. அதுதான் உப்பு லிங்கம்.ஒருமுறை பாஸ்கர ராயர் என்னும் மகான் தரிசனத்திற்காக ராமேஸ்வரம் வந்திருந்தார். அப்போது சிலர், "இந்தக் கோயிலில் மூலவராக உள்ள ராமலிங்கத்தை சீதாதேவி மணலில் உருவாக்கியதாகச் சொல்கிறார்கள். அப்படி இருந்தால் அபிஷேகத்தின் போது அந்த லிங்கம் கரைந்திருக்க வேண்டுமே" என வாதம் செய்தனர்.அவர்களின் சந்தேகம் தீர்ப்பதற்காக உப்பு வாங்கி வரச் செய்தார் பாஸ்கரராயர். அதில் சிவலிங்கம் ஒன்றைச் செய்துபிரதிஷ்டை செய்தார். அதற்கு அபிஷேகம் செய்தும் காண்பித்தார். அந்த லிங்கம் கரையாமல் அப்படியே இருந்தது. சுவாமி சன்னதிக்குப் பின்புறம் இந்த லிங்கம் உள்ளது. இன்று வரை அபிஷேகம் நடந்தும் கரையவில்லை.'அம்பிகையை வழிபடும் எளியவனான அடியேன் பிரதிஷ்டை செய்த சிவலிங்கமே கரையாத போது, கடவுளின் அவதாரமான ராமரின் மனைவி சீதை பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாததில் அதிசயம் என்ன இருக்கிறது ?'எனக் கேட்டார். வலிமை மிக்க இதற்கு 'வஜ்ர லிங்கம்' என்றும் பெயருண்டு. இவரை தரிசித்தால் நோய் தீரும். மனம், உடல் பலம் பெறும்.ராமேஸ்வரம் சென்றால் உப்பு லிங்கத்தை தரிசிக்க மறவாதீர்.
முருகப்பெருமானின் அறுபடை வீட்டை உலகமே அறியும். ஆனால் விநாயக பெருமானின் அறுபடை வீட்டை பற்றி சிலருக்கே தெரியும். 1. முதல் படைவீடு: அல்லல் போம் விநாயகர்.மக்களின் துன்பத்தை போக்கக்கூடிய விநயாக பெருமானாக எழுந்தருளியிருக்கிறார். திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் ஆலயத்திற்குள்ளே தான் இருக்கிறார் இந்த அல்லல்போம் விநாயகர். ‘அல்லல்போம் வல்வினைப்போம்’ என்று ஔவையார் பாடியதை வைத்தே இந்த பிள்ளையாரின் சிறப்பை புரிந்துக்கொள்ள முடியும்.2.இரண்டாவது படைவீடு: ஆழத்து விநாயகர்.விருதாச்சலத்தில் எழுந்தருளி அருள்புரிகிறார் இந்த ஆழத்து விநாயகர். இவரே இரண்டாவது படை வீட்டிற்கு சொந்தக்காரர். ஆழத்து பிள்ளையார் 18 அடி ஆழத்தில் இருந்துக்கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிகிறார். இவரை காண 18அடி ஆழம் இறங்கி செல்ல வேண்டும். விருதகிரீஸ்வரர் என்று சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் கோவிலில் தான் இந்த விநாயகர் இருக்கிறார். இவரை வணங்கினால் ஞானத்தையும், செல்வத்தையும், கல்வியையும் சேர்த்து தருவார்.‘ஞானத்தையும் கல்வியையும் நயந்து தந்த ஆழத்து விநாயகர்’ என்ற பெயரோடு எழுந்தருளும் இந்த விநாயகர் இரண்டாவது படைவீடாகும்.3. மூன்றாவது படைவீடு: திருக்கடவூரில் இருக்கும் விநாயகர்.திருக்கடவூரில் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் தான் இந்த பிள்ளையார் காட்சித்தருகிறார். இந்த விநாயகரின் பெயர் கல்ல வாரண விநாயகர். அமிர்த கலசம் கிடைத்தபோது அதை தேவர்களிடமிருந்து ஒளித்து வைத்து விளையாடி திருவிளையாடல் புரிந்ததால், இவருக்கு கல்ல வாரண விநாயகர் என்று பெயர் வந்தது. இவரை வணங்குவதால் ஆயுள் பலம் அதிகரிக்கிறது.4. நான்காவது படைவீடு: சித்தி விநாயகர்.மதுரை என்றாலே மீனாட்சியம்மன்தான். மதுரையில் அம்மன் சன்னதிக்குள் நுழையும் போதே வழியிலேயே காட்சித்தருகிறார் இந்த சித்தி விநாகர். நம் மனதில் நினைத்த எல்லா காரியங்களையும் அப்படியே நிறைவேற்றி கொடுக்கக்கூடியவர். மாணிக்கவாசகர் மனதில் நினைத்தது நிறைவேற வேண்டும் என்று வேண்டிக்கொண்டு சென்றார், அவ்வாறே நடந்தது. எனவே இந்த சித்தி விநாயகரை வணங்கினால் காரியங்களில் சித்தி கிடைக்கும்.5. ஐந்தாவது படைவீடு: துண்டிராஜா கணபதி, கற்பக விநாயகர்.காசி மாநகரில் அமைந்திருக்கும் தூண்டி ராஜா கணபதி. இவரை துண்டி மஹாராஜ், தீட்சா கணபதி என்றும் அழைக்கிறார்கள். காசியிலே எல்லா தெய்வங்களையும் வணங்க தொடங்கும் முன்பு இவரை வணங்க வேண்டும். இவரை வணங்கினால் ஞானம் கிடைக்கும். ஆனால் எல்லோராலும் காசி சென்றுவிட முடியாது என்ற காரணத்தினால் அதற்கு இணையான கோவிலாக பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோவில் கருதப்படுகிறது. எனவே ஐந்தாவது படைவீட்டில் இரண்டு கோவில்கள் உள்ளது, ஒன்று துண்டிராஜா கணபதி, இன்னொன்று கற்பகவிநாயகர்.கற்பகவிநாயகர் தன்னுடைய தந்தையான சிவபெருமானை வணங்கும் ரூபத்திலேயே எழுந்தருளி அருள்புரிகிறார். தந்தையை வழிப்படும் புதல்வன் என்னும் ஞானத்தை உலகிற்கு உணர்த்தும் ஞானகுருவாகவும் காட்சித்தருகிறார். எனவே கற்பக விநாயகரை வணங்கினால் நினைத்தது நடக்கும், ஞானமும் கிடைக்கும்.6. ஆறாவது படைவீடு: திருநாரையூர்.திருநாரையூரில் சௌந்தரேஸ்வரர் என்னும் ஆலயத்திலேயே ஆறாவது பிள்ளையாரான பொள்ளாப் பிள்ளையார் எழுந்தருளியிருக்கிறார். பொள்ளாப் பிள்ளையார் என்றால் உளிக்கொண்டு செதுக்கப்படாதவர் என்று பொருள். இவர் சுயம்புவாக தோன்றிய பிள்ளையார் ஆவார். புதிதாக காரியம் செய்ய துவங்கும் முன் இந்த பொள்ளாப்பிள்ளையாரை வணங்கினால் அந்த காரியம் கைக்கூடும். நம்பியாண்டர் நம்பி மூலமாக ராஜ ராஜ சோழன் தேவாரம், திருவாசகம் அனைத்தையும் வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற புது முயற்சியை மேற்க்கொண்டார். அதற்கு இந்த பொள்ளாப்பிள்ளையாரை வேண்டிக்கொண்டே தொடங்கினார். அப்படிப்பட்ட புதிய முயற்சிக்கு வெற்றியை பெற்று தந்தவர் இந்த பிள்ளையார்.இப்படி ஆறுபடை வீடுகளிலும் ஆறு பலன்களை பக்தர்களுக்கு தந்து விநாயகர் எழுந்தருளி காட்சித்தருகிறார். எனவே விநாயகரின் அறுபடை வீடுகளுக்கும் சென்று அவரை தரிசித்துவிட்டு வருவது சிறப்பாகும்.
கொடிமரம் என்பது இந்து கோவில்களில் பலி பீடத்துக்கு அருகே கொடியேற்றுவதற்காக அமைக்கப்பட்ட மரமாகும். பல ஆலயங்களில் கொடி மரமானது உள்ளது. சமஸ்கிருதத்தில் கொடிமரம், 'துவஜஸ்தம்பம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த கொடிமரம் மிகவும் புனிதமானது. இதன் சிறப்புகளைப் பற்றி காண லாம். ஆலயங்கள் ஆகம விதிப்படி கட்டப்படுகிறது. அதாவது ஒரு கோவிலை புனித உடலுடன் ஒப்பிடலாம். அதன்படி தலைப்பகு தியை கருவறையாகவும், மார்புப் பகுதியை மகா மண்டபமாகவும், வயிற்றுப் பகுதியில் நாபி எனப்படும் தொப்பிள் பகுதி கொடிமரமாகவும், கால் பகுதியை ராஜ கோபுரமாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு ஆகம விதிப்படி கட்டப்படும் கோவில்களில் திருவிழா நடைபெறும் போது முதல் நாள் கொடியேற்றமானது நடை பெறும். தேவர்கள், இந்த கொடிமரத் தின் வழியாகத் தான் கோவிலுக்குள் வருவதாக கூறப்படுகிறது.கோவிலில் இறைவனை வணங்க முடியாவிட்டாலும் கொடிமரத்தையாவது வணங்குவது அவசியம். ஏனென் றால் கோவிலில் இறைவனை வணங்குவதும், கொடி மாத்தின் கீழே விழுந்து வணங்குவதும் ஒன் றாக கருதப்படுகிறது. கொடிம ரத்தை வணங்கும் போது மனதில் உள்ள தீய எண்ணங்களை நீக்கி, தூய மனதுடன் வணங்க வேண்டும். இறைவனின் அருளைப்பெற, நம்மை தகுதிப்படுத்த கொடிமர வணக்கம் அவசியமாகும்.நம்முடைய ஆன்மா இறைவனை தஞ்சமடைய வேண்டுமானால், நமது மனம் ஒருநிலையுடன் நிறுத் தப்பட வேண்டும். இதை உணர்த் தவே கொடி மரம் நேராக நிமிர்ந்து நிற்பதாக சொல்கிறார்கள். அசுர சக்திகளை அழிக்கவும், சிவகணங் களை கோவிலுக்குள் வரவைக்க வும். ஆலயத்தையும் பக்தர்களையும் காக்கவும் கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது.கொடி மரத்தின் உச்சியில் அந் தந்த கோவில் இறைவனின் வாக னம் அடையாள சின்னமாக அமைக் கப்படும். அதன்படி, விநாயகர் கோவிலில் மூசிகம், சிவன் கோவி லில் நந்தி, விஷ்ணு கோவிலில் கரு டன், குபேரன் கோவிலில் நரன், முருகன் கோவிலில் மயில் அல்லது சேவல், சாஸ்தா கோவிலில் குதிரை, வருணன் கோவிலில் அன்னம், எமன் கோவிலில் எருமை, சனிபக வான் கோவிலில் காகம், இந்திரன் கோவிலில் யானை, துர்க்கை மற் றும் அம்மன் கோவில்களில் சிம்மம் என உருவங்கள் பொறித்த கொடி ஏற்றப்படும்.இவ்வாறு ஏற்றப்படும் கொடியானது திருவிழா இறுதி நாளில் இறக்கப்படும். பல்வேறு சிறப்புகளை உடைய கொடிமரத் துக்கு மூல லிங்கத்துக்கு செய்யும் அபிஷேகம், ஆரா தனை, நைவேத்தியம் முதலான அனைத்தும் செய்ய வேண்டும் என்பது விதி, அந்த அளவுக்கு கொடிமரம் மூலவருக்கு நிகராக கருதப்படுகிறது, கொடிமரத்துக்கு அருகில் நின்று நாம் வேண்டும் எல்லா பிரார்த்தனைகளும் மூலவரிடம் சென்றடையும் என்பது நம்பிக்கை.
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் கர்னாலி என்னும் இடத்திலுள்ள குன்றில் குபேர பந்தாரி கோயில் உள்ளது. இங்குள்ள சிவபெருமான் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவர், அமாவாசை, திங்களன்று சுவாமியை தரிசித்தால் கைமேல் பலன் கிடைக்கும்.நர்மதை நதிக்கரையிலுள்ள வனப்பகுதியில் ஒருநாள் சிவனும், பார்வதியும் நடந்து சென்றனர். களைப்பால் பார்வதிக்கு பசி, தாகம் ஏற்பட்டது. இப்பகுதியில் பாயும் நர்மதை நதியானது, சிவன், பார்வதிக்கு மகளாக கருதப்படுகிறது. "நர்மதா... உன் தாயார் பார்வதி பசி, தாகமுடன் இருக்கிறாள். அவளுக்கு உதவி செய்" என்றார் சிவன். ஊற்றாக கிளம்பிய நர்மதை, உணவும் நீரும் அளித்தாள்.சிறிது நேர ஓய்வுக்குப்பின் அங்கிருந்து புறப்பட்டனர். வழியில் ராவணனின் தம்பியான அரக்கன் குபேரன் எதிர்ப்பட்டான். பார்வதியின் அழகைக் கண்ட அவன் ஆசை கொண்டான். அதன் எதிரொலியாக பார்வையை இழந்தான். பின்னர் தவறை உணர்ந்து சரணடைந்தான்.மனமிறங்கிய பார்வதி பார்வையை வழங்கினாள். அவனை வடக்கு திசையின் காவலனாகவும், செல்வத்தின் அதிபதியாகவும் ஆக்கினார் சிவபெருமான்.குபேரனுக்கு அருள்புரிந்த சிவபெருமான் இங்கு சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். அவரது திருநாமம் குபேர் பந்தாரி சலவைக் கல்லால் ஆன சுவாமி முறுக்கு மீசை,தலைப்பாகை, மிரட்டும் விழிகளுடன் இருக்கிறார். நர்மதை நதியை படகில் கடந்த பின்னர் கோயிலை அடையலாம்.மகாசிவராத்திரியின் போது பெருமளவில் பக்தர்கள் கூடுவர்.
விருதுநகர் மாவட்டத்தில் கே.எம்.எஸ் 2024-2025 பருவத்தில் விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் செய்வதற்காக 13 கிராமங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விவசாயிகளின் நலன்கருதி திறக்கப்படுகிறது.அதன்படிஇராஜபாளையமவட்டம்சேத்தூர்,தேவதானம்,முகவூர்,கோவிலூர்,மேலூர்துரைச்சாமியாபுரம்,அயன்கொல்லங்கொண்டான். ஜமீன்நல்லமங்களம், மேட்டுப்பட்டி வத்ராயிருப்பு வட்டம் கான்சாபுரம், தம்பிபட்டி, வத்ராயிருப்பு, சுந்தரபாண்டியம் மற்றும் காரியாபட்டி வட்டம் முஷ்டக்குறிச்சி ஆகிய இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளது. அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்குரிய தொகை விவசாயிகள் வங்கிக் கணக்குகளில் ECS மூலம் செலுத்தப்படும். எனவே விருதுநகர் மாவட்ட அனைத்து விவசாயிகளும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் செயல்படுத்தப்படும் மேற்குறிப்பிட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயனடைய வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது. மேலும், நெல் கொள்முதல் தொடர்பாக தேவையான விபரங்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலக தொலைபேசி எண். 04562-252607-ல் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.