திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் பல காலங்களில் பல மன்னர்களால் கட்டப்பட்டது தற்போதிருக்கும் நிலைவரை நின்றசீர் நெடுமாற பாண்டியனால் கட்டப்பட்டிருக்கிறது. நவ லிங்கங்களில் முதல் லிங்கம் இங்குள்ள மூல மகாலிங்கமே தமிழகத்தில்3 மூலவர்களைக் கொண்ட ஒரே கோவில் .இது சிவபெருமான் நடனமாடிய 5 முக்கிய சபைகளில் இக்கோவில் தாமிர சபையாக உள்ளது. இங்குள்ள பிரகாரத்தில் ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள் உள்ளன.ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடிஅகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரியசிவாலயமாக உள்ளது. அம்பாளுக்கும் சுவாமிக்கும்தனித்தனியே கோவில்கள் எழுப்பப்பட்டு, இடையே அழகிய கல்மண்டபம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. அம்பாள்சன்னதியில் ஆயிரம் கால் மண்டபம்ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆதிப் பிரளய காலத்தில்நான்கு வேதங்களும் இந்த வேணுவனத்தில் உள்ளதிரு மூல மகா லிங்கத்தைவணங்கியே அழிவிலாத நிலையப் பெற்றதாக தலபுராணம் கூறுகிறது. நவ லிங்கங்களில் திருநெல்வேலியில் உள்ள மூல மகாலிங்கமே முதல் லிங்கம் என்றும், கயிலையில் உள்ளது இரண்டாம் லிங்கம்என்றும், காசியில் உள்ளது மூன்றாம் லிங்கம்என்றும், கேதாரத்தில் உள்ளது நான்காம் லிங்கம்என்றும், லட்சுமிகிரியில் உள்ளது ஐந்தாம் லிங்கம்என்றும், காளத்தியில் உள்ளது ஆறாம் லிங்கம்என்றும், சிதம்பரத்தில் உள்ளது ஏழாவது லிங்கம்என்றும், காஞ்சியில் உள்ளது எட்டாவது லிங்கம்என்றும், மதுரையில் உள்ளது ஒன்பதாவது லிங்கம்என்றும் நவலிங்கங்களாக சிறப்பித்து கூறப்பட்டுள்ளது.திருநெல்வேலியில் உள்ள திருமூலமகாலிங்கத்திற்கு ஆதிலிங்கம், வேதலிங்கம், விஷ்ணு லிங்கம், திரிகண்டலிங்கம், தருமலிங்கம், தானலிங்கம், கற்பகலிங்கம், கெளரிலிங்கம், பரமலிங்கம், பராபரலிங்கம், நிற்குணலிங்கம், சற்குணலிங்கம் என்ற பெயர்களும் உள்ளதாககூறப்பட்டுள்ளது.இந்த திருநெல்வேலி தலத்தில்உள்ள ஆதி மூல மகாலிங்கத்தைவணங்கினால் நவலிங்கங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும்என்று திருநெல்வேலி தல புராணத்தின் திருமூலலிங்கச்சருக்கத்தில் கூறப்பட்டுள்ளது.கிழக்கு நோக்கிய சன்னதி வாயிலின்இரு பக்கமும் கங்கையும், யமுனையும் துவார பாலகிகளாக காவல்புரிய, உள்ளே கருவறையில் ஒரு கரத்தில் மலர்ஏந்தியும், மறு கரத்தை கீழேதொங்க விட்டபடியும், சற்றே இடைநெளித்து, மூக்கில்வைர புல்லாக்கு மின்ன, சந்திர வதனம்பூத்த திருமுகத்தவளாய், நின்ற கோலத்தில் ஆனந்தகாட்சியளிக்கிறாள் அம்மை காந்திமதி..இந்தகாந்திமதி அம்மைக்கு, வடிவுடையம்மை, வேணுவன நாயகி, சாலிவாடீஸ்வரி, திருக்காமக் கோட்டம் உடைய நாச்சியார்ஆகிய பெயர்களும் இருக்கிறது.பொதுவாக கருவறையில் விநாயகர்அமர்ந்த கோலத்தில் தான் நமக்கு தரிசனம்அளிப்பார். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் கிழக்கு கோபுரவாசலுக்கு தென் பக்கம் உள்ளசிறிய கோவிலில் விநாயகர் கருவறையில் சற்றே வித்தியாசமாக நின்றகோலத்தில் தரிசனம் தருவது சிறப்பம்சம்.சுவாமி நெல்லையப்பர் கோவிலின் நடுநயமாக சுவாமிக்கு நேர் எதிரே காட்சித்தரும் நந்தியே மாக்காளை ஆகும். மிக பிரம்மாண்ட வர்ண கலாபத் திருமேனியாகியஇந்த மாக்காளை சுண்ணாம்பினால் செய்யப்பட்ட சுதை திருமேனி ஆகும்.சுவாமி நெல்லையப்பர் சன்னதியின்முதலாம் வடக்கு திருச்சுற்றில் உள்ளதுதெற்கு நோக்கிய மகிஷாசூரமர்த்தினி சன்னதி. இங்கு மகிடன் தலை மேல்நின்ற கோலத்தில் அம்மை அழகுற காட்சித்தருகிறாள். இந்த அம்மையின் சன்னதியில்அவளுக்குரிய வாகனமான சிம்மத்தோடு, மானும்இருப்பது சிறப்பம்சம் ஆகும். சிங்கமும், மானும்ஒன்றுக்கு ஒன்று பகை கொண்டமிருகங்கள் ஆயினும் இங்கு சேர்ந்துகாட்சியளிப்பதால், இந்த அம்மையை வணங்கும்பக்தர்கள் எதிரிகளின் தொல்லை நீங்கி நண்பர்களாகஆக பெறுவார்கள் என்பது நம்பிக்கை.சுவாமி நெல்லையப்பர் கோவில் இரண்டாம் மேலபிரகாரத்தில் தாமிர சபை அருகேகிழக்கு நோக்கிய தனி சன்னதியில்வள்ளி, தெய்வானை சமேதராக காட்சியளிக்கிறார் நெல்லைசுப்பிரமணியர். இவரைப் போற்றி அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார் என்பது சிறப்பம்சம்.சுவாமி கோவில் இரண்டாம் தெற்குபிரகாரத்தில் வடக்கு நோக்கிய சன்னதியில்மூன்று முகங்கள், மூன்று கரங்கள், மூன்றுகால்களுடன் காட்சித் தருகிறார் சுர தேவர். இவருக்குமிளகு அரைத்து சாத்தி, வெந்நீரால்அபிஷேகம் செய்து வழிபாடு செய்வதுவிசேஷமாக கருதப் படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தை வளங்கொழிக்க செய்யும் வற்றாத ஜீவ நதியாகியதாமிரபரணி அம்மைக்கு இங்கு உற்சவராக சன்னதிஉள்ளது. சுவாமி கோவில் இரண்டாம்பிரகாரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களை அடுத்துதாமிரபரணி அம்மை காட்சித் தருகிறாள். இவள் தைப் பூசம், சித்ராபெளர்ணமி ஆகிய நாட்களில் இத்தலசுவாமி, அம்மையோடு தாமிரபரணி நதிக்கு எழுந்தருளி தீர்த்தவாரிகண்டருள்வாள்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் கொங்கு மண்டலத்தில் உள்ள எழு சிவ தலங்களில் ஒன்றாகும். இங்கு சிவன் தன் இடபாகத்தை பார்வதிக்கு பாதி அளித்து தனிச்சிறப்பு வாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் அவதாரத்தில் காட்சி தருகிறார். சோழ, நாயக்க மன்னர்கள் காலத்திய கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன. திருப்புகழ் போன்ற பல்வேறு தமிழ் இலக்கிய நூல்களில் இத்தலம் பற்றி| ப்பிடப்பட்டுள்ளன.திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். மூலவர் அர்த்தநாரீஸ்வரர், தாயார் பாகம்பிரியாள். செங்கோட்டு வேலவர் என முருகனுக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது. இத்தலம் அமைந்துள்ள மலையானது ஒரு புறம் பார்க்கும் பொழுது ஆணாக தோற்றமளிக்கிறது.
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார்கோயில் என்பது திருவண்ணாமலை கிரிவலம் பாதையில் அமைந்துள்ளகோயிலாகும். இந்தக் கோவில் குபேரன் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது.இடுக்கு பிள்ளையார் கோயில் என அழைக்கப்பட்டாலும் விநாயகர் சிலைஇக்கோயிலில் இல்லை. தரைப்பகுதியில் கால் பாத சிற்பம் காணப்படுகிறது. இடுக்குபிள்ளையார் கோயிலில் நுழைந்து வரும் போது பக்தர்கள் இந்தப் பாதத்தை தொட்டுவணங்குகின்றனர்.கோயில் நேர்கோட்டில் அமையாத மூன்று வாசல்களை கொண்டது. பக்கவாட்டின்இருபுறமும் சுவர் உள்ளது. பின்பக்க வாசல் வழியாக நுழைந்து இரண்டாவதுவாசலை தவழ்ந்தபடி அடைந்து மூன்றாவது வாசல் வழியாக வெளியே வரவேண்டும். இரண்டாவது வாசல் வழியே வெளிவர ஒருக்களித்து படுத்து கைகளைஉந்தி சிரமப்பட்டு வெளிவர வேண்டியுள்ளது.இடுக்கு பிள்ளையார் கோயில் பரம்பரை கோயில் ஆகும். இந்தக்கோயிலைதிருவண்ணாமலை சின்னக்கடை தெருவில் உள்ள ரங்கநாதன் என்பவர்பராமரிக்கிறார். இக்கோயிலுக்கு 1969 மார்ச் மாதம் 23 ஆம் நாள் முதன் முதலாகதிருப்பணி செய்துள்ளனர். அதன் பின்பு 1976 முதல் 2004 வரை பல முறை திருப்பணிநடைபெற்றுள்ளதாக குறிப்புகள் கோயிலில் எழுதப்பட்டுள்ளது.
திருவரங்கம் கோயில் சிலை பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும்(இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய பூசை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த சிலையை தனது தலைநகரமாகியஅயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான்.இராமர் அச்சிலையை இலங்கையிலிருந்து தனது பட்டாபிசேகத்துக்கு வந்த அவிபீடணனுக்கு பரிசாகக் கொடுத்தார். இதனை விபீடணன் தனதுதலையின் மீது சுமந்துஇலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில்காவிரியாற்றின் கரையை அடைந்தான். அங்கு சிலையை கீழே இறக்கி வைக்க கூடாது என்று எண்ணினான். இராமர்அப்போது ஒரு சிறுவன் அங்கு ஆட்டு மந்தையை மேய்த்து கொண்டிருந்தான், அச்சிறுவனிடம் அச்சிலையை கொடுத்து விட்டு கீழே வைக்க கூடாது என்று சொல்லி விட்டு இளைப்பாறினான். அச்சமயம் சிறுவன் சிலையை கீழே வைத்து விட்டான், பின்னர் விபீடணன் அவன் மீண்டும் புறப்பட வந்தான், சிறுவன் சிலையை கீழே வைத்ததை கண்டு, சிறுவன் என்ன காரியம் செய்தாய் என்று கூறி சிலையை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான். பின் சிறுவனாக வந்தது விநாயக பெருமான் சிலையை கீழே வைத்தது நான் தான் என்று கூறி மறைந்தார். அவ்விநாயகருக்கு காவிரி ஆற்றின் மற்றொரு கரையில் கோவில் உள்ளது, அதுவே மலை மீது இருக்கும் மலைக்கோட்டைஉச்சிப்பிள்ளையார் கோவில் ஆகும், திருவரங்கம் கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ளது. பின் வைகுண்ட பெருமாள் அரங்கநாதராக காட்சியளித்துகாவிரி கரையில்தங்கி இருக்க விருப்பம் என்று தெரிவித்தார். அங்கு சோழநாட்டை ஆண்டுவந்த தர்மவர்ம சோழன்ஆறுதல் கூறினார். விபீடணனுக்காக, தான்"தென்திசை இலங்கை நோக்கி" பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்மசோழன் அச்சிலையைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தார். காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோவில் மணலால் மூடப்பட்டது. பின் வந்த சோழமன்னர் ஒருவர் மணலால் மூடிய கோவிலை ஒருகிளியின் உதவியுடன் கோவிலை கண்டுபிடித்ததால்கிளி சோழன் என்றும்சோழன் கிள்ளிவளவன் என்றும்அழைக்கப்பெற்றார்,அக்கோவிலைபுணரமைத்து,பின்பு அரங்கநாதருக்கு பிரம்மாண்டமான பெரிய கோவிலை கட்டினார் சோழன் கிள்ளிவளவன்.. அக்கோயிலே தற்போதைய வழிபடும் அரங்கநாதர் கோவிலாக உள்ளது.இக்கோயிலானது ஏறத்தாழ156 ஏக்கர் அதாவது6,31,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக, நாட்டிலேயே மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாக உள்ளது. இதன் வெளிப்புறச் சுற்று மதிலின் அளவு950x816 மீட்டர் ஆகும். இதற்குள் ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு சுற்று மதில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மையப் பகுதியில் அரங்கநாதசுவாமி கோயில் உள்ளது. இது தெற்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. அரங்கநாதரின் கருவறை விமானம் நீள்வட்ட வடிவில் தங்கத்தால் அமைக்கப்பட்டிருக்கிறது. கோயிலிலிருந்து நான்கு திசைகளிலும் வெளிப்புறம் நோக்கிச் செல்லும் வகையில் சுற்று மதில்களில் ஒரே வரிசையில் கோபுர வாயில்கள் காணப்படுகின்றன. இராசகோபுரத்தோடு கூடிய பிரதான வாயில் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றி உட்புறமாக அமைந்துள்ள நான்கு சுற்றுக்களும் கோயில் சார்ந்த பயன்பாடுகளுக்கு உரியவை. வெளிப்புறமாக உள்ள மூன்று சுற்றுக்களுக்குள்ளும் வீடுகள், வணிக நிறுவனங்கள், தெருக்கள் என்பவை கொண்ட முழு நகரமும் அடங்கியுள்ளது.
மனித வாழ்க்கை என்பது சாதாரண விலங்குகளைப் போல உண்டு, உறங்கி, குடும்ப வாழ்வில் ஈடுபட்டு தங்களை தற்காத்து பின்னர் மடிந்து போவது அல்ல. மனித வாழ்வின் உண்மையான பக்குவத்திற்கு கோயில்கள் மிகவும் அவசியமானவை. இறை வழிபாடு இல்லாவிடில் நமது அன்றாடத் தேவைகளை நாம் வாழும் பூமி நமக்கு வழங்காது. ஆக அந்தளவுக்கு மனித வாழ்வு கோயில்களை சார்ந்திருக்கிறது.‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்ற ஒரு சொல் உண்டு. இதன் மூலமே கோயிலின் அவசியத்தை உணர முடியும். நமது பாரத தேசத்தில் பல கோயில்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் அமைந்துள்ள கோயில்களின் எண்ணிக்கையைச் சொல்லவே வேண்டாம். அப்படி அமையபெற்ற கோயில்களில் சுமார்1100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்ற பெருமையை பெற்றது தான் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்காசியில் இறந்தால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி கிடைக்கும். ஆனால் நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாகவும் குறிப்பிடப்படுகிறது. தேவாரப்பாடல் பெற்ற274 சிவாலயங்களில் இது233வது தேவாரத்தலமாகும். அம்மனின்51 சக்திப் பீடங்களில் இது அருணை சக்தி பீடம் ஆகும். முருகப்பெருமானுக்கு அறுபடை வீடு இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இதே போல் விநாயகருக்கும் அறுபடை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கிளிக்கோபுரத்தின் கீழ் இடது பக்கம் உள்ள அல்லல் போக்கும் விநாயகர் சன்னதி விநாயகரின் முதல் படை வீடாகும். இத்தல இறைவன் அருணாச்சலேஸ்வரராகவும், அம்பிகை உண்ணாமுலையம்மையாகவும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சுமார்25 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. ஆறு பிரகாரங்கள், 142 சன்னதிகள்,22 பிள்ளையார்கள்,306 மண்டபங்கள்,1000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (ரமணம் தவம் செய்த இடம்),43 செப்புச் சிலைகள், திருமண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த கோயில் இது. சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் கோயிலின் உள்ளேயே அமைந்துள்ளது சிறப்பு. படைக்கும் கடவுளான பிரம்மாவுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் தங்களில் யார் உயர்ந்தவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. இதை அறிந்த சிவபெருமான் அவர்கள் முன் ஜோதி வடிவில் தோன்றினார். இருவரும் சிவனிடம் முறையிட்டனர். அப்போது சிவன் யார் தனது அடிமுடியை கண்டு வருகிறீர்களோ அவரே உயர்ந்தவர் எனக் கூறினார். விஷ்ணு வராக (பன்றி) அவதாரமெடுத்து பூமிக்குள் சென்றார். அது போய்க் கொண்டே இருந்தது. திரும்பி வந்து சிவனிடம் தன்னால் கண்டறிய முடியவில்லை என்பதை ஒப்புக் கொண்டார். பிரம்மா அன்னப்பறவையாக உருவெடுத்து சிவபெருமானின் முடியை கண்டு வர கிளம்பினார். அவரால் காண முடியவில்லை என்றார். சிவபெருமானே முழு முதற் கடவுள் என்பதை உணர்ந்து கொண்டு அவரை வணங்கி நின்றனர். சிவபெருமானும் சோதி வடிவிலிருந்து ஒரு மலையாக மாறி காட்சி கொடுத்தார். அந்த மலை தான் கோயிலின் பின்புறம் அமைந்துள்ள அண்ணாமலை. பின்பு தன்னை வழிபாடு செய்வதற்கு ஏதுவாக லிங்கோத்பவராக காட்சி கொடுத்து அருளினார்.இறைவன் இத்தலத்தில் சுயம்புலிங்கத் திருமேனியாக நாகக் கிரீடம் அணிந்து தூய வெண்ணிற ஆடையுடன் அருணாசலேஸ்வரர் என்ற திருநாமத்துடன் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். கருவரை கோஷ்டத்தில் ஈசனின் பின்புறம் லிங்கோத்பவர் எழுந்தருளியிருக்கிறார். இறைவன் சந்நிதியை அடுத்து உண்ணாமுலை அம்மை தனிக் கோவிலில் கருவறையில் காட்சி தருகிறாள்.பிரம்மா தன்னால் அடிமுடியை காணவில்லை என்பதை மறைத்து சிவபெருமானின் தலையில் இருக்கும்.தாழம்பூவை பொய் சாட்சி சொல்ல வைத்து தான் கண்டுவிட்டதாக பொய்யுரைத்தார். இதையறிந்த சிவன் கோபமுற்று இனி உனக்கு பூமியில் கோயிலோ, பூஜையோ கிடையாது என சாபமிட்டார். அதே போல் தாழம்பூவையும் இனி தனது பூஜையில் உன்னை பயன்படுத்தமாட்டார்கள் என்று கூறிவிட்டார். அதன் காரணமாகத்தான் இன்றளவும் சிவாலயங்களில் தாழம்பூவை மட்டும் படைக்க மாட்டார்கள்.பிரம்மோற்சவம், ஆனி மாத பிரம்மோற்சவம், மாசி மகம் தீர்த்தவாரி, கார்த்திகை தீபம், பரணி தீபம், மகா தீபம், பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம், ஆகிய திருவிழாக்கள் ஆண்டு தோறும் நடைபெறுகிறது.வருடத்தின் எல்லா மாதங்களிலும் ஏதாவது ஒரு திருவிழா இத்தலத்தில் நடந்து கொண்டே இருப்பது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் பிரதோஷ விழா சிறப்பாக நடைபெறுகிறது. தினமும் 6 கால பூஜை நடைபெறுகிறது.
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்108 வைணவ திவ்ய தேசங்களில் 99வது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது. பெரியாழ்வார்.ஆண்டாள், வடபத்ரசாய் ஆகிய மூவர் அவதரித்த தலம் ஆதலால் 'முப்புரிஊட்டியதலம்'எனப்படும்.11 கலசங்களை உடையஇக்கோயில்ராஜகோபுரத்தின் உயரம்196 அடி.இக்கோபுரமே தமிழக அரசின்சின்னமாக அமைந்துள்ளது பொதுவாக எல்லாகோயில்களிலும் ஒரு விமானம்தான் இருக்கும்.இங்குள்ள கருவறையில் 2 விமானங்கள் உள்ளதும் தனிச்சிறப்பு .பிள்ளையார்பட்டி கோயில்.சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சுமார்1300 ஆண்டுகள் தொன்மையுடையது என கல்வெட்டுகள் கூறுகின்றன. விநாயகருக்குரிய மிகப்பெரிய குடைவரைக் கோயில் இதுவே. முருகனைப் போலவே பிள்ளையாருக்கும் அறுபடை வீடு உண்டு. அதில் இக்கோயில் 5ம் படை வீடாகும். இங்கு 3 லிங்கங்கள் ஒரே இடத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கின்றனர். இது வேறு எந்த கோயிலிலும் இல்லாத சிறப்பு- அம்சமாகும்.
பிரத்தியங்கிரா தேவி பத்ரகாளியின் அவதாரம் ஆவாள்.அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாய் திகழ்கின்ற மஹா பிரத்தியங்கிரா தேவி சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து 1000 சிங்க முகங்கள், 2000 கைகளுடன் தோன்றியவள்.கம்பீரமான விஸ்வரூபம். சிரசின் மேல் நிழற் குடையாக ஆதிசேஷன் இருக்கின்றது. அடியவருக்கு வாரி வழங்கும்4 திருக்கரங்கள் உள்ளன. கரங்களில் சூலம், கபாலம், பாசம், "என் பக்தன் இவன், இவனிடம் வராதே" என்று எதிரி எச்சரிக்கும் விதமாக டமருகம் திகழ்கின்றன.இவள் அபராஜிதா என்ற பெயர் பெற்றவள். அபராஜிதா என்றால்யாராலும் வெல்ல முடியாதது' என்று பொருள்.இவள் நரசிம்ம மூர்த்தியின் உக்கிரகத்தை விழுங்கி ஜெயித்தவள்பிரத்தியங்கிரா தேவி பயத்தை போக்குபவள். எந்த நேரத்திலும் துன்பம் என்று அவளை சரணடைந்ததால், நாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து நம் துன்பங்களை தவிடு பொடி ஆக்கி, நம்மை எல்லையில்லா மகிழ்ச்சிக்கு கொண்டு செல்வாள்.செவ்வாய், வெள்ளி, ஞாயிறு வரும் ராகு காலம், அமாவாசை, பவுர்ணமியில் நடத்தப்படும் விசேஷ பூஜை, தேய்பிறை அஷ்டமி யாகம், நடுநிசி வேளை பிரத்தியங்கிரா தேவியை வழிபடக்கூடிய நேரம் ஆகும்.இந்த யாகம் நாம் நினைத்த காரியம் நிறைவேற வழிவகுக்கும்.ஒவ்வொரு மாத அமாவாசை அன்று காலை10 மணி முதல் பகல்1 மணி வரை தேவிக்கு செய்யப்படும் நிகும்பலா யாகம் எனப்படும் மூட்டை மூட்டையாக சில மிளகாயை யாகத்தீயில் கொட்டி யாகம் நடைபெறுகின்றன.தேவியின் சக்தியை காட்டும் விதமாக தீயில் போடப்படும் காய்ந்த மிளகாய் எந்த விதமான நெடியையும் ஏற்படுத்துவது இல்லை. எவருடைய கண்களுக்கும் எரிச்சல் ஏற்படாத அதிசயத்தை உலகில் வேறு எங்குமே காணமுடியாது. கைமேல் பலன் தருவாள்.மும்மூர்த்தி மனைவிகளான பார்வதி, லக்ஷ்மி, சரஸ்வதி போன்ற மூவரும் ஒன்று சேர்ந்து தமது சக்திகளை உள்ளடக்கிய வடிவமே பிரத்தியங்கிரா என்று புராணங்கள் கூறுகின்றது.மானாமதுரையில் ஸ்ரீ மகா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஆலயம் உள்ளது. இக்கோவில் அம்பாளைத் தவிர தனி மனிதர் யாருக்கும் மாலை மரியாதை ஏதும் அளிக்கப்படுவது இல்லை.கோவைக்கு அருகில் சிங்காநல்லூரில் சரபேஸ்வரர், பிரத்தியங்கரா தேவி கோவில் சிறப்பாக அமைத்துள்ளது. மிகவும் உக்கிரகமான முகத்துடன் காட்சி தரும் இவள் உருவம் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தாலும், கருணை உள்ளம் கொண்டவள்.“ஜெய் பிரத்தியங்கிரே, ஜெய் ஜெய் பிரத்தியங்கிரே” இந்த மந்திரம் அனைவரும் எளிதாக சொல்லக்கூடியது.காயத்ரீ மந்திரம்ஓம் அபரஜீதாய வித்மஹேபிரத்யங்கிராய தீமஹிதந்நோ உக்ர ப்ரசோதயாத்இம் மகாசக்தியை வணங்கினால் சத்ருபயம், வியாதி, தடைகள் விலகும். சுபிட்சமான வாழ்வு கிடைக்கும்.
கணபதியை வணங்கி ஒரு செயலை செய்யத் தொடங்கினால், அச்செயல் வெற்றியாக முடியும். அதற்காகவே நாம் பிள்ளையார் சுழி போட்டு எழுதத் தொடங்குகிறோம். உலகில் முதன்முதலாக எழுத ஆரம்பித்தவரே விநாயகப் பெருமான்தான். வேத வியாசர் மகாபாரதத்தை சொல்லச்சொல்ல தன் தந்தத்தை உடைத்து எழுத்தாணியாக்கி எழுதியவர் பிள்ளையார்..பிள்ளையார் முன் நின்று அவரை வணங்கி, தலையில்3 முறை குட்டி, காதுகளைப் பிடித்தபடி தோப்புக் கரணம் போட்டு வணங்க வேண்டும். தோப்புக் கரணம் போடுவதற்கு ஒரு காரணமும் உண்டு. மகாவிஷ்ணுவின் ஸ்ரீ சக்கரத்தை பிடுங்கிக் கொண்டு அதை வாயில் போட்டுக் கொண்டார் விநாயகர். பலம் பொருந்திய விநாயகரிடம் இருந்த சக்கரத்தை மீட்க என்னன்னவோ முயன்றும் திருமாலுக்கு வெற்றி கிட்டவில்லை.இறுதியில் மகாவிஷ்ணு தோப்புக் கரணம் போட, அதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார் விநாயகர். எதிர்பார்த்தது போலவே வாயில் இருந்த சக்கரம் வெளியே வந்து விழுந்தது. மகாவிஷ்ணு சக்கரத்தை எடுத்துக் கொண்டார். இதைப்போலவே நாமும் தோப்புக் கரணம் போட்டு வழிபட்டால் வேண்டிய வளங்களை விநாயகர் தருவார் என்பது நம்பிக்கை.விநாயகர் வழிபாட்டில் அருகம்புல்லுக்கு தனி இடம் உண்டு. இதற்கும் ஒரு காரணம் உள்ளது. ஒருமுறை அனலாசுரன் என்ற அசுரனை விநாயகர் விழுங்கினார். வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன், மிக அதிகமாக அனலைக் கக்கினான். அந்த சூட்டைத் தணிக்க அருகம்புல்லை விழுங்கினார் விநாயகர். உடலுக்கு குளிர்ச்சி தரும் அருகம்புல், இதன் மூலம் விநாயகர் வழிபாட்டில் முக்கிய இடத்தைப் பெற்றது. பூவை விட, அருகம்புல் வைத்து பிள்ளையாரை வழிபடலாம்.முற்காலங்களில் சித்தர்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமான மலை பகுதிகளில் வசித்து வந்தார்கள் மக்களுக்கு கல்வியும் மருத்துவமும் இலவசமாக அளித்து வந்தார்கள்.ஊருக்கு மாதம் இரண்டு முறை வந்து மக்களோடு தங்கி அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் தந்தார்கள். பௌர்ணமி அமாவாசை அடுத்து வந்த நான்காம் நாள் அதாவது சதுர் திதியில் ஊருக்கு வருவது வழக்கமாக இருந்தது. மக்கள் மூன்றாம் பிறையை பார்த்து காத்துக் கொண்டிருப்பார்கள் ஏனெனில் அடுத்த நாள் சித்தர்கள் ஊருக்கும் வரும் நாள் என்பதால்.சித்தர்கள் நினைவாகவே உருவாக்கப்பட்ட கடவுள்தான் விநாயகர். அதனால்தான் சித்தர் விநாயகர்- சித்தி விநாயகர் என அழைக்கப்படுகிறார். இன்று உள்ளது போல் நாள்காட்டி எல்லாம் அன்று இல்லை நிலவை வைத்தே நாளை கணித்தார்கள்.சித்தர்கள் ஊருக்கு வந்து அரச மர அடியில் அமர்ந்து மக்களை சந்தித்தனர். நீர் தேவையை பூர்த்தி செய்ய அம்மாதிரி அரசு மரங்களுக்கு அருகில் குளங்கள் வெட்டப்பட்டன.அரச மர அடியில் மக்களை வழிநடத்திய தால் இவர்கள் அரசர்கள் என அழைக்கப்பட்டனர். அரச மர அடியில் ஆட்சி செய்ததால் அரசாட்சி அரசாங்கம் என்ற சொற்கள் இன்றும் உள்ளது.அருகம்புல் போன்ற புல்களை கொண்டு வைத்தியம் பார்த்த சித்தர்கள் புல்லையார் என்று அழைக்கப்பட்டு அதுவே பின்பு பிள்ளையார் ஆனது.
கபில முனிவர் ஒவ்வொரு சிவத்தலங்களாக தரிசித்து வரும் போது, வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் தங்கி சிவபூஜை செய்ய நினைத்தார். இப்பகுதியில் பசுக்கள் தானாக பால் சுரந்து வந்த காரணத்தினால் மணல் முழுவதும் வெண்ணிறமாக காட்சியளித்தது. முனிவர் இந்த வெண்ணிற மணலை எடுத்து லிங்கம் அமைத்து வழிபாடு செய்தார்.ஒருமுறை அந்த வழியாக வந்த மன்னனது குதிரையின் கால் குளம்பு, மணல் லிங்கத்தின் மீது பட்டு லிங்கம் பிளந்து விடுகிறது. வருந்திய முனிவர் பிளவுபட்ட லிங்கத்தை எடுத்துவிட்டு வேறு லிங்கம் பிரதிஷ்டை செய்ய நினைத்த போது, இறைவன் பார்வதி சமேதராக காட்சி தந்து,“முனிவரே! பசுவின் பால் கலந்த வெண்ணிற மணலில் செய்த லிங்கம் பிளவுபட்டிருந்தாலும் அதை அப்படியே பிரதிஷ்டை செய்து விடுங்கள். காமதேனுவே பசுவடிவில் இங்கு வந்து பால் சொறிந்துள்ளது. எனவே இந்த லிங்கத்தை வழிபடுபவர்கள் சகல செல்வங்களும் அடைவார்கள்” என்றார் இறைவன்.இன்றும் கூட இக்கோவிலின் லிங்கம் வெண்ணிறமாகவே உள்ளது என்பது சிறப்பம்சமாகும். குதிரையின் கால் குளம்பு பட்டு பிளந்து போன வெண்ணிற லிங்கத்திற்கு தான் இன்றும் பூஜை நடக்கிறது. லிங்கத்திற்கு பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் உள்ளனர்.திருக்கழிப்பாலை தலத்தில் சிவலிங்கப் பெருமான் வெண்ணிறமுடையவராக விளங்குகிறார். அதனாலேயே இறைவன் பால்வண்ண நாதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் அருட்காட்சி தருகிறார். வான்மீக முனிவர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளார். கொள்ளிட நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில், தேவார காலத்து பழைய ஆலயம் அடித்துச் செல்லப்பட்டதால் அக்கோவிலில் இருந்த பால்வண்ணநாதேஸ்வரர் சிதம்பரத்திலிருந்து, தென்கிழக்குத் திசையில் சுமார்5 கி.மீ. தொலைவிலுள்ள, சிவபுரி என்றும்திருநெல்வாயில்என்றும்வழங்கும்மற்றொறு சிவஸ்தலத்தில்இருந்து தெற்கே தனி ஆலயத்தில் தனது மற்ற பரிவார தேவதைகளுடன் தற்போது எழுந்தருளியுள்ளார்.திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோயில் கடலூர் மாவட்டத்தல் உள்ள சிவத்தலமாகும். இக்கோவில் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் இது 4வது தலம் ஆகும்.
ஓம் நமசிவாய , திருச்சிற்றம்பலம்எல்லாம் வல்ல சிவகாமி அம்மை உடனுறை நடராஜப் பெருமான், அப்பர் பெருமான் மற்றும் வள்ளல் பெருமானுடைய அருளாணைக்கிணங்க யோகி ஆடலரசன் அய்யா அவர்கள் நிறுவியுள்ள சைவ சன்மார்க்க எஜுகேஷனல் டிரஸ்ட் வழங்கும் 7 நாட்கள் இலவச தசகாரிய வாசி யோக ஆன்லைன் வகுப்புகள் வருகின்ற வெள்ளிக்கிழமை (1/9/2023) அன்று துவங்க உள்ளது.வகுப்பு நடைபெறும் நேரம்:- 8pm to 9pm.வகுப்பை பற்றிய மேலும் விபரங்களை பெறுவதற்கு எங்களை - 8675371212 என்றஎண்ணில்வாட்ஸ்அப்மூலமாகவோ,நேரடியாகவோ தொடர்பு கொள்ளலாம்.நன்றி. வணக்கம்.நிர்வாக குழு:-யோகி ஆடலரசன் ஐயா அவர்களின் சன்மார்க்க யோக சேவை இயக்கம் மற்றும் வாகீசர் தசகாரிய வாசியோக சாகா கல்வி பயிற்சி மையம். திருக்கோவிலூர். Cell - 8675371212.