25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஆன்மீகம்

Sep 06, 2024

மகன் சொல்ல மகேசன் கேட்பது- பிரணவம்

மனிதன் சொல்ல இறைவன் கேட்பது -   திருவாசகம்இறைவன் சொல்ல மனிதன் கேட்பது- கீதைமனிதன் சொல்ல மனிதன் கேட்பது - குறள்அருளாளன் சொல்ல ஞானிகள் கேட்பது -  திருவருட்பா ஞானிகள் சொல்ல ஞானிகள் கேட்பது - திருமந்திரம்மனைவி சொல்ல கணவன் கேட்பது  - வாழ்க்கை  மகன் சொல்ல மகேசன் கேட்பது- பிரணவம்   

Aug 30, 2024

.சமயபுரத்தாள் பக்தர்களின் நன்மைக்காக அம்மன் சாப்பிடாமல் விரதம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு பங்குனி 17  -  சித்திரை 13 வரை 24 நாள்  உணவு படைப்பதில்லை. இந்நாட்களின் தன்  பக்தர்களின் நன்மைக்காக அம்மன் சாப்பிடாமல் விரதமாக இருக்கிறாள் . இளநீர், மோர் மட்டுமே படைப்பர். 1706ல் தொடங்கிய திருப்பணி 26 ஆண்டுகளாக நடந்து 1732ல்  திறக்கப்பட்டது. விஜயரங்க சொக்கநாத நாயக்கர் இக்கோயிலைக் கட்டினார்.

Aug 30, 2024

மதுரை நகரின் அந்தக்காலத்து எட்டு திசைகளைக் குறிக்கும் எல்கை ஊர்கள்

சீறா நாகம், கறவா பசு, பிளிறா யானை, முட்டா காளை, ஓடா மான், வாடா மலை,காயா பாறை, பாடா குயில்சீறா நாகம் - நாகமலைகறவா பசு - பசுமலைபிளிறா யானை - யானைமலைமுட்டா காளை - திருப்பாலைஓடா மான் - சிலைமான்வாடா மலை - அழகர்மலைகாயா பாறை - வாடிப்பட்டிபாடா குயில் - குயில்குடி.

Aug 23, 2024

கோயில் வாசல் படியில் தொட்டு வணங்குவது ஏன்?

கோயில் வாசலை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள், வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும். இதில் அறிவியல் பூர்வமான ஒரு செயலை நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள். பக்தன். கோயில் வாசல்படியை தொட குனியும் போது அது முதலில் அவனிடம் பணிவை ஏற்படுத்துகிறது. அடுத்து அது அவன் உடம்பில் உள்ள சூரிய நாடியை இயக்குகிறது. படிக்கட்டை தொட்ட பிறகு வலது கை விரல்களை நம் நெற்றியில் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞர சக்கரம் மீது வைத்து அழுத்த வேண்டும். இது நம்மிடம் உள்ள தீய சக்திகளை விரட்டும். அதோடு தெய்வ சன்னதிகளில் இருந்து வரும் அருள் அதிர்வலைகளை மிக எளிதாக நமக்குள் கிரஹிக்க செய்யும் .எனவே அடுத்த தடவை கோயிலுக்கு செல்லும் போது படிகளை வலது கையால் தொட்டு. உங்கள் புருவ மத்தியில் சற்று அழுத்தம் கொடுத்துப் பாருங்கள். 

Aug 23, 2024

மராட்டிய வீரர் சிவாஜி காணிக்கையாக அளித்த வாள் உள்ள. சென்னை காளிகாம்பாள் கோயில்

வெண்கல கிண்ணித்தேர் சென்னை காளிகாம்பாள் கோயிலில் உள்ளது.இதன் உயரம் 24 அடி. அகலம் 11 அடி. வைகாசி திருவிழாவில் அம்மன் கிண்ணித்தேரில் வலம் வருகிறாள்.இங்கு மராட்டிய வீரர் சிவாஜி காணிக்கையாக அளித்த வாள் ஒன்றும் உள்ளது.

Aug 23, 2024

விளக்கேற்ற கூடாத நாட்கள்

தீட்டு, இறப்பு தீட்டு நம்முடைய பங்காளிகளுடைய வீட்டில் இறப்பு நேர்ந்து விட்டது என்றால் நிச்சயமாக நம்முடைய வீட்டிலும், காரியம் முடியும் வரை விளக்கு ஏற்றக்கூடாது. 16 நாள் காரியம் 3 முடிந்த பின்பு தான், நம்முடைய வீட்டை முழுமையாக சுத்தம் செய்துவிட்டு, பூஜை ஜாமான்களை  சுத்தம் செய்துவிட்டு ,தலைக்கு குளித்துவிட்டு, பின்பு தான் விளக்கு ஏற்ற வேண்டும்.அடுத்தபடியாக குழந்தை பிறந்த தீட்டு ,நம்முடைய வீட்டில் குழந்தை பிறந்திருக்கிறது என்றால் புண்யாதானம் செய்யும் வரை, வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யக் கூடாது. குழந்தை பிறந்தவுடன் சிறிது நாட்களுக்கு விளக்கு  ஏற்றக்  கூடாது. 

Aug 16, 2024

பொட்டு வைக்க உதவும் விரல்களுக்கு ஒரு சக்தி உண்டு

.1-கட்டைவிரல்-சக்தியைதரும். 2-நடுவிரல்-நீண்ட ஆயுள். 3-மோதிரவிரல்-போஷாக்கு. 4ஆள்காட்டி விரல் சுதந்திரம். 1-சிவப்பு-மற்றவர்களை கவரும். 2-கருப்பு-அமைதி. 3-மஞ்சள்-செல்வம். 4-சந்தனம் வெண்மை மற்றும் மன அமைதி.

Aug 16, 2024

, பாண்டவர்கள், பாஞ்சாலி, போகர் வசித்து வந்த ஐவர் மலை

வனவாசத்தின் போது, பாண்டவர்கள் பாஞ்சாலி மற்றும் ஐந்து தெய்வீக மனிதர்களுடன் இந்த மலையில் வசித்து வந்தனர். எனவே ஐவர் மலை என்று அழைக்கப்பட்டனர். பழனி முருகன் சிலையை ஒன்பது கனிமங்களிலிருந்து வடிவமைத்த போகர் என்பவரும் இங்கு வசித்து வந்தார். அவரது செயல்கள் கவனக்குறைவாக பிரம்மஹத்தி தோஷத்தை ஏற்படுத்தியது. அதைச் சரிசெய்ய போகர் ஒரு பணியை மேற்கொண்டார், புவனேஸ்வரி தேவியின் ஆலோசனையின்படி பழனியில் முருகன் சிலையை நிறுவி, தனது சீடர் புலிப்பாணியின் உதவியுடன் பிரச்சினையைத் தீர்த்தார்.

Aug 09, 2024

முருகப்பெருமானுக்கு மொத்தம் மூன்று மயில்கள் இருக்கின்றன

முருகப்பெருமானுக்கு மொத்தம் மூன்று மயில்கள் இருக்கின்றன. முதலில் முருகன் உலகை வளம் வருவதற்காக பிரணவத்தை மயிலாக்கி, அதன் மீது ஏறி உலகை வளம் வந்ததால், அதுதான் முதல்  மயில் மந்திர மயிலாகும்.சூரனை சம்ஹாரம்  செய்வதற்கு தேவேந்திரனை  மயிலாக்கி அதன் மீது ஏறி  பயணம் செய்ததால் அதன் பெயர் தேவ மைலாகும்.சூரனை சம்ஹாரம் செய்த பிறகு அசுரன் சேவலாகவும் , மயிலாகவும் மாறி முருகனைத் தாங்கியதால் அதற்கு பெயர் அசுர மயில் ஆகும். எல்லாத்துக்கும் மேல் நம் மனதின் மீது முருகன் ஏறுவதற்கு, நம்மை மயிலாக மாற்றிக்கொண்டால், நம் மனதின் மீது முருகன் ஏறி அருள்  புரிவார்.

Aug 09, 2024

மதுரையிலேயே பஞ்சபூதத் தலங்கள்

1) மதுரை செல்லூரில் உள்ள திருவாப்புடையார் கோயில் 'நீர் ஸ்தலம்', 2) சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில் 'ஆகாய ஸ்தலம்', 3) இம்மையில் நன்மை தருவார் கோயில் 'நில ஸ்தலம்', 4) தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில் 'நெருப்பு ஸ்தலம்', 5) தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் 'காற்று ஸ்தலம்' ஆகியவை மதுரையின் பஞ்சபூத ஸ்தலங்கள்அதனால் தான் பஞ்சபூதங்களை உள்ளடக்கி வெள்ளை, ஊதா, பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்கள் கலந்த பஞ்சவர்ண கிளியை அன்னை மீனாட்சி கையில் பிடித்துள்ளாள் .அப்பன் சிவனும் 64 திருவிளையாடல்களையும் கடம்பவனமாம் மதுரையிலேயே நிகழ்த்தி உள்ளார்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 16 17

AD's



More News