‘ஒவ்வொரு ஆண்டிலும் நமது வாழ்க்கையில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்து விடாதா?’ என்று ஏங்குவோர் பலர் உண்டு. அப்படி உங்கள் வாழ்வில் நல்ல திருப்பம் ஏற்பட நீங்கள் சென்ற தரிசிக்க வேண்டிய திருத்தலம் திருப்பட்டூர் பிரம்ம தேவர் திருக்கோயில். இக்கோயில் சென்று பிரம்ம தேவரை வணங்கினால் உங்கள் வாழ்வில் நல்ல திருப்பம் ஏற்படும் என்பது உறுதி.படைப்புத் தொழிலை புறக்கணித்து அகங்காரத்துடன் இருந்த பிரம்மாவை அடக்குவதற்காக சிவபெருமான் அவருடைய ஒரு தலையை கிள்ளி பதவியையும் பறித்தார். தனது தவறை உணர்ந்த பிரம்மா, பூமியில் பல தலங்களில் லிங்கங்0களை பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டு குளிர்வித்தார். அவ்வாறாக ஒரே இடத்தில் பன்னிரண்டு சிவலிங்கங்களை ஸ்தாபித்து சிவபெருமானை வணங்கி, தான் இழந்த படைப்பு தொழிலுடன் மீண்டும் பதவியைப் பெற்ற திருத்தலம்தான் திருப்பட்டூர் என்கிறது புராண வரலாறு.இங்குள்ள ஈசன், பிரம்மபுரீஸ்வரர் என்று திருப்பெயரில் அருள்புரிகிறார். அவருக்கு அருகிலேயே தனிச் சன்னிதியில் பிரம்ம தேவர் மிக பிரம்மாண்டமான திருவுருவத்துடன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். சம்பத்துகளில் ஒன்றான பதவியை பிரம்மாவுக்கு அருளியதால் இங்குள்ள அம்பிகை, பிரம்ம சம்பத் கௌரி என்று அழைக்கப்படுகிறாள். தனது தலையெழுத்தையே ஈஸ்வரன் அருளால் இங்கு மாற்றிக்கொண்ட பிரம்மாவின் மடியில் நமது ஜாதகத்தை வைத்து நம்பிக்கையுடன் வேண்டினால் தலையெழுத்து திருத்தி அமைப்பார் என்பது நம்பிக்கை.குருவுக்கு அதிபதி பிரம்மா என்பதாலும், வாழ்க்கையை மங்களகரமாக மாற்றி அமைத்துத் தருபவர் என்பதாலும் இங்கு மஞ்சள் பிரசாதமே பிரதானமாகிறது. பிரம்மாவுக்கும் மஞ்சள் நிற வஸ்திரமே அணிவிக்கப்படுகிறது. மேலும், தங்கள் வேண்டுதல்கள் நிமித்தம் பக்தர்களும் மஞ்சள் காப்பு செய்கின்றனர். தேவர்களின் பிரம்ம முகூர்த்தம் என சொல்லப்படும் மார்கழி பிரம்ம முகூர்த்தத்தில் இக்கோயில் வந்து பிரம்மாவை வழிபடுவது சிறப்பு.பிராகாரத்தில் யோகக் கலையை மனிதர்களுக்கு அறிமுகம் செய்த பதஞ்சலி முனிவரின் அதிஷ்டானம் உள்ளது. மன அமைதிக்காக தியானம் செய்வதற்கு தியான அரங்கமும் இங்கு உள்ளது. வியாக்ரபாதர் வழிபட்ட காசி விஸ்வநாதர் ஆலயம் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. புலியின் கால்களைப் பெற்ற அவர் உருவாக்கிய தீர்த்தத்திற்கு புலிப்பாய்ச்சி தீர்த்தம் என்று பெயர்.பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்திற்கு அருகிலேயே தமிழகத்திலேயே எங்கும் இல்லாத சிறப்பாக சுவடி ஏந்திய அரங்கேற்ற அய்யனார் எனும் மிகப்பெரிய கல் கோயில் உள்ளது. பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்குச் செல்பவர்கள் அருகிலிருக்கும் இந்த சிறப்புமிக்க ஆலயங்களுக்கும் சென்று வந்தால் முழுமையான பலன்களைப் பெறலாம்.திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து29 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில். திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இங்கு செல்ல பேருந்து வசதி உண்டு.
தாயின் கருவில் இருந்து வராததால், இந்த அவதாரத்தை‘அவசரத் திருக்கோலம்‘ என்பர்.‘நாளை என்பது நரசிம்மனுக்கு கிடையாது’ என்று குறிப்பிடுவர். திருமாலின் கையிலுள்ள சக்கரத்தைசக்கரத்தாழ்வார்' என்பர். பக்தர்களின் துன்பம் தீர்க்க திருமாலால் ஏவப்படும் ஆயுதம் இது.சக்கரத்தை வழிபட்டால் துன்பம் உடனடியாக நீங்கும் என்பது ஐதீகம். பக்தனான பிரகலாதனைக் காக்க திருமால் நரசிம்மராக அவதரித்தார்..துன்பத்தில் இருந்து விடுபட்டு உடனடியாக நற்பலன் உண்டாக சக்கரத்தையும், நரசிம்மரையும் ஒருசேர வழிபடுவது சிறப்பு.இதன் அடிப்படையில் கோவில்களில் சக்கரத்தாழ்வாரையும், நரசிம்மரையும் முன்னும் பின்னுமாக வைத்து சன்னிதி எழுப்புவர்.ஸ்ரீமகாவிஷ்ணுவின் எல்லா அவதாரங்களிலும் உடன் இருந்து தீமைகளை அழித்தவர் சுதர்சனர் எனும் சக்கரத்தாழ்வார். காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கு சம்ஹாரத்தில் உதவி புரியும் திருவடிவே சுதர்சனர். எனவே இவரை வணங்கினால் எல்லா அச்சங்களும் நீங்கி நலமான வாழ்வைப் பெறலாம் என்பது நம்பிக்கை. நித்ய சூரியான சுதர்சனர் வாழ்வில் ஒளி தருபவர் வராக அவதாரத்தில் மூக்குப் பகுதியில் ஸ்ரீசுதர்சனர் இருந்தார். நரசிம்ம அவதாரத்தில் நரசிம்மரின் கை நகங்களாக இருந்தவர் ஸ்ரீசுதர்சனர். வாமன அவதாரத்தில் சுக்கிராச்சாரியாரின் கண்களைக் குத்தி பின்னமாக்கியவர் தர்ப்பை வடிவத்தில் இருந்த இவர்தான் என்கிறது புராணம். ராம அவதாரத்தில் அவரது வில்லில் ஸ்ரீசுதர்சனர் இருந்தார். பரசுராமர் அவதாரத்தில் அவரது ஏர்க் கலப்பையாக ஸ்ரீசுதர்சனர் இருந்தார். கிருஷ்ண அவதாரத்தில் சக்கரமாக இருந்து காத்தார்.மனம் ஒன்றி வழிபடும் பக்தர்களுக்கு எல்லா காலமும் அபயம் அளிக்கும் ஸ்ரீசுதர்சன சக்கரம், அச்சங்களை அகற்றக்கூடியது. ஸ்ரீசுதர்சனரை வழிபடுவதும் ஸ்துதி பாடுவதும் சிறப்பான பலன்களைத் தரும் என்பார்கள். சனிக்கிழமை காலையில் சுதர்சனரை சூரிய வடிவாகவே எண்ணி வழிபடலாம். அன்றைய சூரிய நமஸ்காரத்தை சுதர்சன ஆராதனையாக செய்யலாம்.
இந்தியா உயர்ந்த கட்டிடக்கலைகளையும் கோயில்களையும் கொண்ட நாடு 100 ஆண்டுகள் பழமையான இந்திய கோயில்கள் மகாராஷ்டிராவில் அமைந்துள்ள இந்த கோயில் சிவனுக்காகக் கட்டப்பட்டது. இந்த கோயில் அம்பரீஸ்வரர் சிவன் கோயில் என்றம் அழைக்கப்படுகிறது. இது கி.பி. 1060 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதனை ஷிலஹாரா மன்னர் சித்தராஜா அவர்களால் கட்டிடப்டபட்டது என்றும் அவருடைய மகன் மும்மனி அவர்களால் புதுப்பிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது ஆனால் புராணக்கதைகளோ இதனைப் பாண்டவர்கள் ஒரே கல்லில் கட்டியதாய் கூறுகிறது.அம்பர்நாத் தின்ஷிவ் மந்திர் இந்தியாவின் மகாராஷ்டிராவில் மும்பைக்கு அருகில் உள்ளஅம்பர்நாத்தில் இன்றும் வழிபடப்படும் 11 ஆம் நூற்றாண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்துக் கோயிலாகும் இது அம்ப்ரேஷ்வரர் சிவன் கோயில் என்றும், இது புராதன சிவாலயம் என்றும் அழைக்கப்படுகிறது. இது அம்பர்நாத் ரயில் நிலையத்திலிருந்து கிழக்கு 2 கிலோ மீட்டர் தொலைவில் பிருந்தாவனம், வால்துனி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. வழக்கத்திற்கு மாறாக சரணாலயம் அல்லது கர்பக்ரிஹா பூமிக்குக் கீழே உள்ளது. மண்டபத்திலிருந்து சுமார் 20 படிகள் கீழே சென்றடைகிறது. மேலும் மேல உள்ள சிகாரா கோபுரம் திடீரென மண்டபத்தின் உயரத்திலிருந்து சிறிது சிறிதாக நிறுத்தப்படுவதால் வானத்தை நோக்கி திறக்கப்பட்டுள்ளது மேலும் அது ஒருபோதும் முடிக்கப்படவில்லை. இது பூமிஜா வடிவில் உள்ளது வானத்தை குறிக்கும் அம்பர்நாத் என்ற பெயர் குறிப்பிடுவதால் இங்குள்ள சிகரம் வானத்தை குறிக்கும் வாய்ப்பும் உள்ளது சமஸ்கிருதத்தில் அம்பர் என்பது வானம் எனவே இங்குள்ள சிகரம் என்பது வானம், இதனால் கோபுரம் திடீரெனநிற்காமல்இருந்திருக்கலாம் மண்டபத்தில் மூன்று மண்டபங்கள் உள்ளன.
தமிழகத்தில்திருச்சிக்குவடக்கேகாவிரிவட கரையிலிருந்து சுமார்15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மாரியம்மன் கோயில்.தற்போது, சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்குமிடம் கண்ணனூர் என அழைக்கப்படுகிறது. இவ்விடம் கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.சுமார்400 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கண்ணனூர் மாரியம்மன் கோயில் இன்று,”சமயபுரம் மாரியம்மன்” கோயிலாக மாறி புகழ்பெற்று விளங்குகிறது. மூலவரானமாரியம்மன் எட்டு கைகளுடன், தலை மாலை கழுத்தில், சர்ப்பக் கொடையுடன், ஐந்து அசுரர்களின் தலைகளைத் தன் காலால் மிதித்து தனது சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் படி இருக்கிறார்.பெருவளை வாய்க்கால் மற்றும் மேற்கே உள்ள மாரி தீர்த்தம்(தெப்பக்குளம்) இக்கோயிலின் தீர்த்தங்களாகும். இக்கோயிலின் தல மரம் வேப்ப மரமாகும்.அம்மனை வழிபட தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலத்தவரும், பிற நாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர். செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் சித்திரைத் தேர்த்திருவிழா, ஆடி வெள்ளி, பூச்சொரிதல் விழா போன்ற விழாக்காலங்களிலும் கூட்டம் அதிகமாகிறது. ஆடி மாதத்தில் எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருக்கும். குறிப்பாக ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
அருள்மிகு பெரியநாயகி சமேத விருத்தபுரீஸ்வரர் திருக்கோவில் [பழம்பதிநாதர்].தமிழத்திலேயே மிக அதிக சுற்றளவுள்ள ஆவுடையாருடன் கூடிய லிங்கம் புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் கோவில்திருப்புனவாசல் பழம்பதிநாதர் கோவில் காலை06:00 மணி முதல்11:30 மணி வரை, மாலை04:00 மணி முதல் இரவு07.30 மணி வரை திறந்திருக்கும். OMஎன்ற பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாமல், செய்த தவறுக்காக பிரம்மா படைக்கும் தொழிலை இழக்க வேண்டியதாயிற்று. பார்வதியின் அறிவுரைப்படி, பூலோகத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து, மீண்டும் தனது தொழிலைப் பெற பூஜை செய்து வந்தார்.லிங்க அபிஷேகத்திற்காக தீர்த்தம் ஒன்றை உருவாக்கினார். பிரம்மன் உருவாக்கிய தீர்த்தம் என்பதால்“பிரம்ம தீர்த்தம்” என்ற பெயர் ஏற்பட்டது. நான்கு முகங்களைக் கொண்டவர் என்பதால், லிங்கத்தின் நான்கு பகுதிகளிலும் சிவமுகத்தை உருவாக்கினார். இது சதுர்முக லிங்கம் எனப்பட்டது. இந்த லிங்கமே இங்கு வழிபாட்டில் இருந்தது.பிற்காலத்தில், இரண்டாம் சுந்தர பாண்டியன், சோழநாட்டு பாணியையும், பாண்டியநாட்டு பாணியையும் கலந்து ராஜகோபுரமும், விமானமும் மிக உயரமாக அமைக்கப்பட்ட ஒரு கோவிலை எழுப்பினான். மூலஸ்தானத்தில் பிரமாண்டமான ஆவுடையாருடன் கூடியலிங்கம்பிரதிஷ்டைசெய்யப்பட்டது.இவரை“விருத்தபுரீஸ்வரர்”எனஅழைத்தனர். விருத்தம் என்றால் பழமை. எனவே இவர் பழம்பதிநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்மாவே வணங்கிய தலம் என்பதால், இது மிகப்பழமையான ஊராகக் கருதப்படுகிறது. சுந்தரர் இத்தலத்திற்கான தனது பதிகத்தில் இத்தலத்தை பழம்பதி என்று குறிப்பிடுகிறார்.கோபுர வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்ததும் வலப்பக்கம் சூரிய, பைரவர் சந்நிதிகளும், இடபக்கம் சந்திரன் சந்நிதியும் மேற்கு நோக்கியுள்ளன. சபாமண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம் ஆகியவற்றைக் கடந்து சென்றால் கருவறையில் இறைவன் கிழக்கு நோக்கி தனி சந்நிதியில் காட்சி தருகிறார்.இக்கோவிலில் உள்ள நந்தியும் ஆவுடையாரும்(லிங்க பீடம்) மிகவும் பெரியதாக உள்ளது.பாண்டிய நாட்டில் உள்ள14 சிவஸ்தலங்களும் இங்கு இருப்பதாக ஐதீகம். அதற்கேற்ப கோவிலுக்குள்14 சிவலிங்கங்கள் இருக்கின்றன. திருப்புனவாசல் தலத்தைத் தரிசித்தால், மற்ற தலங்களுக்குச் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். திருப்புனவாசலில் இருந்து சுமார்7 மைல் தூரத்துக்கு எமன் மற்றும் எமதூதர்கள் எவரும் உள்ளே வரமுடியாது என்பதும் ஐதீகம்.மஹாவிஷ்னு, பிரம்மா, இந்திரன், சூரியன், சந்திரன், எமதர்மன், வசிஷ்டர், அகத்தியர் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர். அம்மனுக்கு எதிரில் குடவறை காளி சன்னதி உள்ளது. கடும் உக்கிரத்துடன் வீற்றிருக்கும் குடைவரைக் காளிதேவியை கண்ணாடி வழியே தரிசிக்கலாம்.இத்தலம் நான்கு யுகத்திலும் நான்கு பெயர்களுடன் இருந்ததாகக் கருதப்படுகிறது. எனவே, நான்கு தல விருட்சங்கள் இருந்துள்ளன. எல்லோராலும் ஒதுக்கப்படும் கள்ளியும் இங்கு தல விருட்சமாக உள்ளது என்பதில் இருந்து, இறைவன் வெறுக்கக் கூடியவற்றையும் ஆட்கொள்பவர் என்பது வெளிப்படுகிறது.கிருதயுகத்தில் வஜ்ரவனம், இந்திரபுரம் என்ற பெயருடன் சதுர கள்ளியையும், திரேதாயுகத்தில் பிரம்மபுரம் என்ற பெயருடன் குருந்தமரத்தையும், துவாபரயுகத்தில் விருத்தகாசி என்ற பெயருடன் மகிழ மரத்தையும், கலியுகத்தில் பழம்பதி என்ற பெயருடன் புன்னை மரத்தையும் தல விருட்சமாக கொண்டுள்ளது. இவை நான்கும் நான்கு வேதங்களாக வணங்கப்படுகின்றன. நான்கு வேதங்களும் பூசித்த பெருமை உடையது இத்தலம்.இத்தலத்தின் தீர்த்தமாக இலக்ஷ்மி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், இந்திரதீர்த்தம், சக்கர தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், சிவகங்கைத் தீர்த்தம், கல்யாண தீர்த்தம், வருணதீர்த்தம் மற்றும் கோவிலுக்குத் தென்புறம் ஓடும் பாம்பாறு ஆகிய 10 தீர்த்தங்கள் உள்ளன. .சீமந்தம் செய்யும் போது முதல் வளையலை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தும் வழக்கமும் இருக்கிறது. இக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று வரை பிரசவ ஆஸ்பத்திரி கிடையாது. காளியின் அருளால் வீட்டிலேயே சுகப்பிரசவம் ஆகி விடுவதாக கூறுகிறார்கள்.வைகாசி விசாகம்11 நாள். வைகாசி விசாகத்தன்று மூலவரின் மீது சூரிய ஒளிக்கதிர்கள் பட்டு சூரியபூஜை நடக்கிறது.
காலை05:00 முதல்12:00 மணி, மாலை05:00 முதல்09:00 வரை, செவ்வாய், புதன் மற்றும் வியாழன் நாட்களில் காலை06:00 மணி முதல் இரவு09:00 மணி வரை திறந்திருக்கும்..மாசித்திருநாள்,திருகார்த்திகை,வெள்ளிக்கிழமை,தோறும் ஊஞ்சல் விழா, பொங்கல், மகா சிவராத்திரி 10நாட்கள் உற்சவம். திருத்தேர் பவனி. சிவராத்திரி இரவு .நந்திசேவை தரிசிறப்பு, சிவராத்திரியில் மலை வலம் வரும் விழா.முன்பொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் ஒரு போட்டி வந்தது. தம்மில் யார் பெரியவன் என்ற போட்டி. ஆதிசேஷன் வாயுதேவனிடம் சொன்னான்:“வாயுதேவனே, நான் கயிலாய மலையை என்னுடைய உடம்பால் சுற்றி, இறுக்கி மூடிக்கொள்வேன். நீ உன்னுடைய பலத்தால் மலைச் சிகரங்களைப் பெயர்த்தெறிந்தால் நீ பெரியவன் என்பதை ஒப்புக்கொள்வேன்”. போட்டி தொடங்கியது. ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளாலும் உடம்பாலும் வாலாலும் கயிலை மலையை இறுக்கி மூடி, மலையே தெரியாதபடி மறைத்துவிட்டார்.வாயுதேவன் பலம் கொண்ட மட்டும் காற்றை வீசிப்பார்த்தும்கூட அசைக்க முடியவில்லை. பல நூறு ஆண்டுகளான பின் ஆதிசேஷன் லேசாக அசையவே அந்த நேரம் பார்த்து வாயுதேவன் தன் பலத்தைக்காட்ட, கயிலையில் இருந்து மூன்று சிகரங்கள் பெயர்ந்து கொண்டு புறப்பட்டன. தெற்கே வந்து விழுந்தன. அந்த மூன்றில் ஒன்றுதான் திருக்காளத்தி மலை என்கிறது புராணங்கள்.கருவறையை அடுத்த மண்டபத்தில் கண்ணப்பர் சிலை உள்ளது. மூலவரின் எதிரில் வெள்ளைக்கல் நந்தியும், பித்தளை நந்தியுமாக இரு நந்திகள் உள்ளன. கருவறை அகழி போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. கோஷ்டத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை மூர்த்தங்கள் உள்ளன. கோவிலின் நுழைவுவாயிலின் எதிரில் கவசமிட்ட கொடிமரம் ஒன்றும்,60 அடி உயரமுடைய, ஒரே கல்லால் ஆன கொடிமரம் ஒன்றும் உள்ளது. இதன் அருகே பலிபீடமும், நந்தியும் உள்ளன.:இங்கு காளத்திநாதர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இது வாயு(காற்று) தலம் என்பதால் மூலஸ்தானத்தில் இருக்கும் விளக்கு காற்றில் ஆடிக்கொண்டே இருக்கும். இறைவனுக்கு அணிவித்துள்ள தங்கக்கவசத்தை எடுத்துவிட்டு ஆரத்தி எடுக்கும்போது, லிங்கத்தின் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவத்தையும், நடுவில் நீண்டு கூடியனபோன்று உள்ள யானையின் இரு கொம்புகளையும், மேற்புறத்தில் உச்சியில் ஐந்து தலைப் பாம்பு படம் எடுத்துள்ள வடிவத்தையும் வலப்புறத்தில் கண்ணப்பர் பெயர்த்து அப்பிய ஒரு கண்ணின் வடுவையும் காணலாம். இது ராகு, கேது தலம் என்பதால் கோவிலை வலம் வருவதும் எதிர்வலமாகவேஅப்பிரதட்சிணமாகவே சுற்றி வர வேண்டும். பரத்வாஜர் இங்கு தவம் செய்து பேறு பெற்றுள்ளதால் பரத்வாஜ கோத்ரத்தைச் சேர்ந்தவர்களே இங்கு பூஜை செய்யும் உரிமை பெற்றுள்ளனர். இறைவனுக்கு அணிவிக்கப்படும் கவசத்தில் நவக்கிரகங்கள் இடம்பெற்றுள்ளன.இத்தலம் கிரக தோஷ தலம் என்பதால் நவக்கிரகங்கள் இல்லை. விதிவிலக்காக சனீஸ்வரர் மட்டும் இடம்பெற்றுள்ளார். இறைவன் மேனியில் மாலை சாத்தப்படுவதில்லை. அங்கி அணிவிக்கப்பெற்ற பின்பு உள்ள திருமேனியிலேயே தும்பை மாலை சாத்துகிறார்கள். அம்மனின் இடுப்பில் அணிவிக்கப்படும் ஒட்டியானத்தில் கேது உருவம் காணப்படுகிறது.கண்ணப்பர் மலைக்கு ஏறும் வழியில் உள்ள மலைச்சரிவு ஒன்றில் மணிகண்டேசுவரருக்கு ஒரு கோவில் உள்ளது. அதையடுத்து மலையை வெட்டி செதுக்கிய மண்டபம் ஒன்று உள்ளது. அதற்கு மணி கர்ணிகா கட்டம் என்று பெயர். இங்குதான் காசியில் உள்ள மணிகர்ணிகா கட்டத்தில் விசுவநாதர் அருளியதுபோல, பெண் ஒருத்திக்கு இறைவன் தாரக மந்திரத்தை வலக்காதில் ஓதி அருளினார் என்று ஒரு கதை வழங்கி வருகிறது.அதனால் இன்றும் அந்திம திசையை நெருங்கிக் கொண்டிருப்பவர்களை இம்மண்டபத்திற்கு கொண்டுவந்து வலப்பக்கமாக ஒருக்களித்துச் சாய்த்துக் கிடத்தினால் சாகிறபொழுது உடல் திரும்பி வலக்காது வழியாகவே உயிர் பிரியும் என்று கூறுகிறார்கள்.சுவாமி புறப்பாடு வடக்கு கோபுரவாயில் வழியாகவே நடைபெறும். முன்காலத்தில் ரிஷிகள் பொன்முகலி ஆற்றில் நீராடிவிட்டு கிழக்கு நோக்கி தரிசித்ததால் அவர்களுக்கு காட்சி தருவதற்காக இறைவன் மேற்கு நோக்கி உள்ளார்.ராகு, கேது சர்ப்பதோஷம் உள்ளவர்கள், திருமணம் ஆகாதவர்கள், நீண்ட கால பிரச்சனைகளில் அவதிப்படுபவர்கள், இத்தலத்திற்கு வந்து ராகு தோஷம் நீங்கவும், சர்ப்ப தோஷம் நீங்கவும் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர். இத்தலத்தில் உள்ள சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடி அருந்தினால் பேச்சு சரளமாக வராத குழந்தைகள் கூட நன்கு பேசும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், இறைவனுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோவில் திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளுதவி செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
கொல்லூர் மூகாம்பிகை கோவில் கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கொல்லூரில் அமைந்துள்ளது. இது அன்னை மூகாம்பிகைக்கு அர்பணிக்கப்பட்ட கோவிலாகும். செளபர்ணிகா நதிக்கு தென்புறக்கரையில் அமைந்துள்ளது இந்த கோவில். இந்த இடம் கோகர்ணா மற்றும் கன்யாகுமரிக்கு இடையே அமைந்துள்ளது. இந்த இடம் முனிவர் பரசுராமரால் உருவாக்கப்பட்டது என நம்பப்படுகிறது . இங்கு அருள் பாலிக்கும் மூகாம்பிகை ஆதிபராசக்தியின் ஆம்சம். இங்கிருக்கும் அன்னை அரக்கன் காமசூரனை வதைக்க இந்த அவதாரம் எடுத்ததாக புராணங்கள் சொல்கின்றன. மூன்று லோகங்களுக்கும் அதிபதியாக எண்ணிய காமசூரன், பிரம்மனை நோக்கி தவமியற்றி அரிய வரத்தை பெற்றான். அவனுடைய அட்டுழியங்களை பொருக்க முடியாத தேவர்கள் மும்மூர்த்திகளிடம் வழிபட்டனர். அந்த மும்மூர்த்திகளும் முப்பெருதேவியரிடம் சென்று, மூன்று பெரும் ஒரே சொரூபமாக உருவெடுத்து அந்த அரக்கனை அழிக்க வேண்டும் என வேண்டினர்.அதனை அடுத்து மூன்று தேவியரும் ஒன்றே இணைந்து எடுத்த அவதாரமே மூகாம்பிகை என்பது நம்பிக்கை. இந்த கோவில் குறித்து சொல்லப்படும் மற்றொரு கதை யாதெனில், ஆதி சங்க்ராச்சார்யர் தேவி வழிபாட்டில் மூழ்கியிருந்து அவருடைய தரிசனத்தை பெற்றார். அப்போது தேவியிடம், கேரளா பகுதியில் வந்து அருள் பாலிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளை ஏற்ற அன்னை, ஒரு விதிமுறை விதித்தார். அதாவது ஆதி சங்கராச்சார்யர் முன்னே நடக்க வேண்டும், அன்னை பின்னே நடந்து வருவார். இடம் வந்து சேரும் வரை, ஆதி சங்கரர் திரும்பி பார்க்க கூடாது. ஒருவேளை திரும்பினால் அதே இடத்தில் சிலையாகி அருள் வழங்குவார். இந்த விதிமுறைக்கு ஒப்பு கொண்ட ஆதி சங்கரர் முன்னே நடக்க, பின்னே அன்னையின் கால் சலங்கையொலி தொடர்ந்து கேட்டு வந்தது.. ஆதி சங்கரருடன் திருவிளையாடல் நிகழ்த்திய அன்னை. சலங்கையொலியை நிறுத்தினார். இதனால் கலக்கமுற்ற ஆதி சங்கரர் விதிமுறையை மறந்து திரும்பி பார்த்த இடம் கொல்லூர். அன்னை தன்னை அங்கேயே நிறுவுமாறு கேட்டுகொண்டு, ஆதி சங்கரரின் வேண்டுகோளை ஏற்று கேரளாவில் சோட்டானிக்கரையில் பகவதிஅம்மனாக தோன்றுவதாக வாக்களித்தார் என்பது நம்பிக்கை. மூகாம்பிகையின் கோவில் கொல்லூரிலும், ஆதி சங்கரர் தீவிர தவம் இயற்றி அன்னையின் தரிசனம் பெற்ற இடம் கொடசாத்ரி மலை என்றும் கருதப்படுகிறது. இந்த மலை கொல்லூரிலிருந்து 21 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
காமக்யா கோயில், கம்ரூப்பின் கன்யா கோயில் அல்லது“ஆனந்தத்தின் கோயில்” என்றும் அழைக்கப்படும், இது அஸ்ஸாமின் குவஹாத்தியில் பழமையான இந்துக் கோயில்களில் ஒன்றாகும். இது10 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் கோச் வம்சத்தால் கட்டப்பட்டது மற்றும் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.தர்மத்தின் கூற்றுப்படி, இந்து தெய்வமான பார்வதி சிவபெருமானுக்கு ஒரு சன்னதியைக் கட்டும்படி கட்டளையிட்டபோது காமாக்யா கோயில் உருவாக்கப்பட்டது, அதனால் தனக்கு பொருத்தமான கணவனைக் கண்டுபிடிக்கும் வரை அவள் அமைதியாக தியானம் செய்யலாம். அம்மனின் காலங்களை போற்றும் வகையில் ஆண்டுதோறும் அம்புபாச்சி மேளா நடைபெறும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. சாக்த இந்து பாரம்பரியத்தில் உள்ள51 பீடங்களில் இதுவும் ஒன்றாகும். பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு முன் காமாக்யா கோயிலைப் பற்றி சிலருக்குத் தெரியும். 19ஆம் நூற்றாண்டில் காலனித்துவ ஆட்சியின் போது,இது பெங்காலி ஷக்தா இந்துக்களின் குறிப்பிடத்தக்க புனித யாத்திரை தலமாக மாறியது.தாந்த்ரீக வழிபாட்டாளர்களுக்கான மிக முக்கியமான யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றாகும்."காமாக்யா" என்ற பெயருக்கு"ஆசைகளை நிறைவேற்றுபவர்" என்று பொருள். பிரம்மபுத்திரா நதியின் ஆதாரமாக நம்பப்படும் உமாகமலேஷ்வர் என்றழைக்கப்படும் இயற்கை நீரூற்று கொண்ட மலையின் மீது இந்த கோவில் அமைந்துள்ளது. பிரதான கோவிலைச் சுற்றி, சக்தியின் மிக முக்கியமான பத்து தெய்வங்களுக்கு சிறிய கோயில்களின் குழு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. திரிபுரசுந்தரி, மாதங்கி மற்றும் கமலா தெய்வங்கள் பிரதான கோவிலில் வசிக்கின்றன, மற்ற ஏழு தெய்வங்கள் தங்கள் சொந்த கோவில்களில் வசிக்கின்றன. மகாவித்யாக்களின் அனைத்து கோவில்களையும் ஒரே இடத்தில் காணக்கூடிய இடங்கள் அதிகம் இல்லை.அஸ்ஸாமின் தலைநகர் கவுகாத்தியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிலாச்சல் மலையில் இந்த கோவில் உள்ளது. காமாக்யா கோயிலுக்குப் பின்னால் உள்ள மற்றொரு கதை, சதி தேவியின் யோனி (யோனி) உடன் தொடர்புடையது , அது அவள் சுயமாக எரித்த பிறகு இங்கே விழுந்தது. இக்கோயில் யோனி-ஸ்தானம் என்றும் அழைக்கப்படுகிறது . இது அஸ்ஸாமில் உள்ள புனித ஸ்தலங்களில் ஒன்றாகும் மற்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரு புனித ஸ்தலமாக இருந்து வருகிறது. காமாக்யா கோவிலில் நிலத்தடி பகுதியில் காமாக்யா தேவி வசிக்கும் இயற்கை குகை உள்ளது. கோச் மன்னர் நரநாராயணனால் 1565 இல் எழுப்பப்பட்ட இந்த கோயில்1572 இல் கலாபஹரால் அழிக்கப்பட்டது. கோச் ஹாஜோவின் மன்னர் சிலாராய் கோயிலை மீண்டும் கட்டினார்.காளிகா புராணத்தின் படி, சிவன் சதியுடன் கைலாசத்திற்குச் செல்லும் போது, அவளதுதந்தைதக்ஷாஅவரையும்அவரதுமனைவியையும்அவமதித்தார். ஆத்திரமடைந்த சதி தீயில் குதித்து தன்னைத் தானே எரித்துக் கொண்டாள். இச்சம்பவத்தை அறிந்த சிவபெருமான் துக்கத்தால் ஆத்திரமடைந்து பிரபஞ்சம் முழுவதும் சதியின் எச்சங்களைத் தேடினார். இறுதியாக, அஸ்ஸாமின் காமாக்யா மலைகளில் காமாக்யா கோயில் என்று அழைக்கப்படும் அவரது யோனியைக் கண்டார்.சில தளங்களின்படி, சதி பார்வதியாக மறுபிறவி கார்த்திகேயா என்ற ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார், எனவே அவர் காமாக்யா அல்லது "கார்த்திகேயாவின் தாய்" என்று அழைக்கப்பட்டார். யோனிஸ்தானா என்பது சதியின் யோனியைக் காட்டிலும் கருப்பை என்று சிலர் நம்புகிறார்கள், ஆனால் மற்றவர்கள் இதை ஏற்கவில்லை.. காலசக்ர தந்திர மார்க்கம் தொடங்கி முடிவடையும் இடமும் இதுவே. ஒவ்வொரு ஆண்டும் அம்புபாச்சி மேளா திருவிழா மிக முக்கியமானது. அம்மனின் திருமுறையை கொண்டாடும் திருவிழா.
ராமேஸ்வரத்தில் உள்ள ஒரு பிரபலமான வழிபாட்டுத் தலமாகவும், ஒரு முக்கிய சுற்றுலா தலமாகவும் உள்ளது.இராமேஸ்வரத்தில் சுமார்15 ஏக்கர் பரப்பளவில்அமைந்துள்ளது இத்திருக்கோயில்,1212தூண்களுடன்.690 அடிநீளம்கொண்டஇதன்பிரகாரம்இந்தியாவிலேயேமிகப்பெரியதாகும்.இந்தியாவில் உள்ள12 ஜோதிர்லிங்க தலங்களின்தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரே தலம் இது.பதஞ்சலி முனிவர் முக்தி பெற்ற தலமும் இதுவே.இக்கோவிலின் மற்றொரு சிறப்பாக 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள அக்னிதீர்த்தம் மிகவும் விசேஷமானது.சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயம் இந்தியாவின் பன்னிரண்டு ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்றாகும்.ராமேஸ்வரம், தமிழ்நாட்டின் ஒரு சிறிய நகரம், ராமேஸ்வரம் கோவில் உள்ளது. ஒவ்வொரு இந்துவும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று பார்க்க வேண்டிய நான்கு புனிதமான சார் தாம்கள் அல்லது வழிபாட்டுத் தலங்களில் இதுவும் ஒன்று என்பதால் இந்த நகரம் இந்துக்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ராமேஸ்வரம் கோயில் சைவர்கள் மற்றும் வைணவர்கள் மிகவும் பிரபலமான தலமாகும். அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய மூன்று நாயன்மார்களும் இக்கோயிலைக் கௌரவிக்கச் செய்த 227 பாடல் பெற்ற ஸ்தலங்களில் இதுவும் ஒன்றாகும். ராமேஸ்வரம் கோயிலின் முதன்மைக் கடவுள் சிவபெருமான். புராணங்களின்படி, இந்த கோவிலில் சிவபெருமானின் முதன்மைக் கடவுளை ராமர் நிறுவினார். சேதுமாதவர், விசாலாக்ஷி, மகாகணபதி, சந்தானகணபதி, நடராஜர், பர்வதவர்த்தினி, ஆஞ்சநேயர், ராமநாதசுவாமி, சுப்ரமணியர், மஹாலக்ஷ்மி ஆகியோர் கோயிலில் உள்ள மற்ற சன்னதிகளில் உள்ளனர்.இந்த மத நகரம் ராமாயண காவியத்தில் ஒரு பெரிய முக்கியத்துவத்தை கொண்டுள்ளது மற்றும் பல்வேறு இந்து கோவில்கள் மற்றும் மத ஆர்வமுள்ள இடங்களைக் கொண்டுள்ளது. இந்த நகரத்தை பார்வையிட வேண்டிய சில அழகிய கடற்கரைகள் உள்ளன.சிவபெருமானின் தீவிர பக்தனான பிராமணனைக் கொன்றதற்காக மனம் வருந்திய ராமர் இத்தலத்தில் சிவனை வழிபட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தீவில் கோயில்கள் இல்லாததால், கைலாச மலையில் இருந்து சிவலிங்கத்தை விடுவிக்க அனுமனை அனுப்பினார். அனுமன் திரும்பி வருவதில் தாமதம் ஏற்பட்டதால், கடற்கரை மணலில் இருந்து சிவன் சன்னதியைக் கட்டினாள் சீதை. பின்னர், அனுமன் இமயமலையிலிருந்து சிவலிங்கத்துடன் திரும்பியபோது, கோயிலுக்குப் பக்கத்தில் அதுவும் அமைக்கப்பட்டது. இதன் விளைவாக, புனிதப்படுத்தப்பட்ட கோவிலில் இரண்டு லிங்கங்கள் உள்ளன: ஒன்று சீதையால் செய்யப்பட்டது மற்றும் ராமலிங்கம் என்று அழைக்கப்படுகிறது, மற்றொன்று ஹனுமானால் பெரிய கைலாசத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு விஸ்வலிங்கம் என்று அழைக்கப்படுகிறது. 15 ஆம் நூற்றாண்டில், மன்னன் உடையான் சேதுபதி மற்றும் நாகூர் வைஷ்யர்கள் கோயிலைக் கட்டினார்கள். திருமலைய சேதுபதி16 ஆம் நூற்றாண்டில் கோயிலின் தெற்குப் பகுதியின் இரண்டாம் பகுதியைப் பிரித்தார். கோவிலின் நுழைவாயிலில் திருமலை மற்றும் அவரது மகன் சிலைகள் உள்ளன. தற்போதைய ராமேஸ்வரம் கோயில் வடிவமைப்பு17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. அறிஞர்களின் கூற்றுப்படி, கிழவன் சேதுபதி மன்னன் கோயிலைக் கட்டியமைத்தார். சேதுபதி இராச்சியத்தின் யாழ்ப்பாண ராஜாவும் கோயில் கட்டுமானத்திற்கு குறிப்பிடத்தக்க நன்கொடைகளை வழங்கினார்.
முற்காலத்தில் செண்பக வனமாக இருந்த இந்த தென்காசி பகுதியை பராக்கிரம பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவன் சிவபெருமான் மீது தீவிர பக்தி செலுத்தி வந்தான். ஒருமுறை அவனுக்கு காசி மாநகர் சென்று கங்கையில் நீராடி சிவபெருமானை வழிபட வேண்டும் என்ற எண்ணம் உண்டானது.உடனே மன்னன் தன் குல தெய்வமான முருகப் பெருமானை வேண்டி நிற்க, முருகப் பெருமானோ மன்னனுக்கு சக்தி வாய்ந்த அபூர்வ குளிகை ஒன்றைக் கொடுத்து வான் மார்க்கமாக காசி சென்று வழிபடச் செய்து அருளினார். மன்னனும் அவ்வாறே காசி சென்று விசுவநாதரை தரிசித்து ஊர் திரும்பினான்.பின்னர் பராக்கிரம பாண்டியன் தினமும் காசி சென்று விசுவநாதரை வழிபட இயலாததை எண்ணி, மனம் வருந்தினான். ஒருநாள் மன்னன் கனவில் தோன்றிய ஈசன், மன்னா கவலைப் படாதே.. வடக்கே உள்ள காசிக்கு நீ வருவதற்கு பதிலாக, தட்சிண காசியாகிய இவ் விடத்திலேயே நான் சுயம்புவாக புதையுண்டு இருக்கிறேன் என்றும், இங்கு ஒரு கோவில் அமைத்து என்னை நீ தினமும் வழிபடலாம் என்றும்,நான் இருக்கும் இடத்தை நீ கண்டறிய உனக்கு எறும்புகள் சாரை சாரையாக ஊர்ந்து சென்று வழிகாட்டும் என்று கூறி மறைந்தார்.தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் தென்காசி மாவட்ட தலைநகரான தென்காசியில் அமைந்துள்ள சிவாயலமாகும். இத்தலம் உலகம்மன் கோயில் என்றும் தென்காசி பெரிய கோவில் என்றும் அழைக்கப்பெறுகிறது. இத்தலத்தின் மூலவர் காசிவிசுவநாதர், தாயார் உலகம்மை ஆவர் இத்தலத்தில்மாசி மகம், ஐப்பசி உத்திரம் ஆடி மாதம் ஆடிப்பூரத்தன்று இத்தல அம்மைக்கு வளைகாப்பு வைபவம்.ஆகியவைசிறப்பாக கொண்டாப்படும் விழாக்களாகும் காசிக்கு நிகரான சிறப்பையும். வானளாவிய ராஜ கோபுரத்தையும் பெற்றது தென்காசி காசி விஸ்வநாதர் கோவில். வடக்கே உள்ள காசிக்கு செல்ல முடியாதவர்கள், தெற்கில் உள்ள இந்த காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வந்து அருளைப் பெற வேண்டும் என்பதற்காக கட்டப்பட்டதால் தென்காசி என பெயர் பெற்றது 1445ம் ஆண்டில் பராக்கிரம பாண்டியனால் கட்டுமாண பணிகள் துவங்கப்பட்டு அவரது தம்பி சடைய வர்ம குலசேகர பாண்டியனால் நிறைவடைந்தது.தீர்த்தம் : சகஸ்ரநாம தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், காசிக் கிணறு, வயிரவ தீர்த்தம், ஈசான தீர்த்தம், அன்னபூரணி தீர்த்தம், விசுவ தீர்த்தம். தலவிருட்சம் : செண்பகமரம்.கிழக்கு நோக்கிய தனி சன்னதியில் அகத்தியரால் நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீ சக்கர பீடமே பராசக்தி பீடமாக விளங்கி வருகிறது. இந்த பீடத்திற்கு நேர் எதிரில் லிங்க சொரூபத்தில் சிவனும் எழுந்தருளி உள்ளார்.