உடலுக்கு நலம் கிடைக்கக் கூடிய உணவுகளை உண்ணுங்கள்.உடற்பயிற்சியை தினமும் செய்யுங்கள்.
படிகளில் ஏறி இறங்குவது. அடிக்கடி நடப்பது. கண்களுக்கு பயிற்சி கொடுப்பது, கைகால்களை நீட்டி மடக்குவது, மூச்சுப் பயிற்சி என ஏதோ ஒரு உடற்பயிற்சியை தினமும் செய்யுங்கள்.
தினமும் 5 முறை காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணுங்கள், பெரும்பாலானவை வேக வைக்காத காய்கறிகள், சில காய்கறிகள் பாதி வேக வைத்து உண்ணலாம்.
. டீ அல்லது காபி, புகை பிடித்தல், மது அருந்துதல், எதிர் மறை எண்ணங்கள் போன்றவை வேண்டாம்..
சீஸ், சிப்ஸ், பிரன்ச் பிரைஸ், பீட்சா போன்ற அதிக கொழுப்பு உணவுகளை ஒதுக்கித் தள்ளுங்கள்.
அதிக உப்பு ரொம்ப ரொம்ப தப்பு என மனதுக்குள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
சாப்பிட்ட பிறகு குளிர்ந்த நீரை குடிப்பதை விட சூடான தண்ணீர் குடிப்பது நன்மையை தரும்.
இனிப்பு சுவை உள்ள தீனியை அதிகம் சாப்பிடுவதை குறைத்து கொள்ளுங்கள்.
உடலுக்குக் கால்சியம் கிடைக்கக் கூடிய உணவுகளை உண்ணுங்கள். மேலும் காலை வெயிலிலும் கொஞ்ச நேரம் உலவுங்கள்.
தேவையான அளவு ஓய்வு தூக்கம் அமைதி ஆகியவை மிக மிக தேவை.
0
Leave a Reply