டேபிள் டென்னிஸ் இந்தியா சாதனை
டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடர்பிரேசிலில் ஆண்கள் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் 'நம்பர்-1' மனுஷ் ஷா, மானவ் தக்கார் ஜோடி, 3-2 என்ற செட்கணக்கில் (5-11, 11-9, 11-6, 8-11, 11-5) தென் கொரியாவின் ஹுவான் செங், குவான் ஹாங்ஜோடியை வென்று, பைனலுக்கு முன்னேறியது.
இந்தியாவின் தியா, மனுஷ் ஜோடி, கலப்பு இரட்டையர் அரையிறுதியில், 3-0 என (11-7, 11–2, 11–7) சிலியின் நிகோலஸ், பவுலினா ஜோடியை வென்று பைனலுக்குள் நுழைந்தது.
இந்தியா முதன் முறையாக உலக டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடரில் பைனலுக்கு முன்னேறியது
இந்தியா முதன் முறையாக உலக டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடரில் ஆண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் பைனலுக்கு முன்னேறியது.
பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா, சக வீராங்கனை தியாவை 3-1 என (11-9, 9-11, 11-9, 15-13) என வென்றார்.
ஸ்டார் கன்டென்டர்' டேபிள் டென்னிசில் ,மானவ்-மனுஷ் 2வது இடம்,
ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் மானவ் தக்கார், மனுஷ் ஷா ஜோடி, ஜெர்மனியின் பெனடிக்ட் டுடா,டாங் கியு ஜோடியை சந்தித்தது. இதில் மானவ், மனுஷ் ஜோடி 2-3 (3-11, 11-7, 7-11, 15-13, 5-11) என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்து 2வது இடத்தை கைப்பற்றியது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மணிகா பத்ரா, ஜப்பானின் ஹோனோகா ஹஷிமோட்டோ மோதினர். இதில் ஏமாற்றிய மணிகா 0-3 (7-11, 6-11, 7-11) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
0
Leave a Reply