உலக நீச்சல் சாம்பியன்ஷிப் .
சிங்கப்பூரில், உலக நீச்சல் சாம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில், பெண்கள் தனிநபர் 400 மீ., 'மெட்லே' பிரிவு பைனலில் இலக்கை 4 நிமிடம், 25.78 வினாடியில் கடந்த, கனடாவின் சம்மர் மெக்கின்டோஷ் தங்கம் வென்றார். இது, இம் முறை இவர் கைப்பற்றிய 4வது தங்கம், 5 வது பதக்கம் ஆனது.
மார்ச்சந்த் 'தங்கம்'
ஆண்கள் தனிநபர் 400மீ., 'மெட்லே' பிரிவு பைனலில், பிரான்சின் லியோன் மார்ச்சந்த் (4 நிமிடம், 04.73 வினாடி) பிடித்து முதலிடம் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
அமெரிக்கா சாதனை
பெண்களுக்கான 4x100 'மெட்லே ரிலே' பைனலில் அசத்திய ரீகன் ஸ்மித், கேட் டக்ளாஸ், கிரெட்சன் வால்ஷ், டோரி ஹஸ்கே அடங்கிய அமெரிக்க அணி, பந்தய துாரத்தை 3 நிமிடம், 49.34 வினாடியில் கடந்து தங்கம் வென்றது.
0
Leave a Reply