மண் வாசனையோடு ஏர் கலப்பைகளை சுமந்து நாம் இன்பமாய் உணவுண்ண விவசாயிக்கு தோள்கொடுக்கும் எருதுகளை போற்றுவோம். ? மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்.
பொங்கல்நாளின் மறுநாள் கொண்டாடப்படும் ஒரு பண்டிகைமாட்டுப் பொங்கல் ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய, உழவர் நண்பர்களாக விளங்கும் மாடு, காளைகளை நன்றி தெரிவிப்பதற்காகவும் . மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். உழவர் நண்பர்களாக விளங்கும் மாடுகளை குளிப்பாட்டிசுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். சந்தனம், குங்குமம் வைத்து, மலர் மாலை அணிவித்து, புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்து, விவசாயிகள் அதனை கடவுளாக வழிபடுவர்உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்துக் கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய்பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள். தமிழர்களால் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும்ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும். இன்றைய தினம் ஜல்லிக்கட்டு, உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன .
பொங்கல் பண்டிகையின் நாயகராக உள்ளது சூரியன்.சூரியன், சந்திரனை கண் கண்ட தெய்வங்களாக பார்த்தனர். சூரியனுக்கு தைப்பொங்கல், சந்திரனுக்கு, சித்ரா பவுர்ணமி என விழாக்களை உருவாக்கினர்.சப்த ரிஷிகளில் ஒருவரான மரீசி முனிவரின் மகன் காஷ்யபர். இவரது மனைவி பெயர் அதிதி. இவர்களின் பிள்ளையே சூரியன். சூரியனுக்கு, சுவர்ச்சலா, சாயாதேவி, சமுங்கை, பிரபை என்ற மனைவியர் உண்டு,தமிழகத்தில் தை முதல் தேதி பொங்கலிட்டு சூரியனுக்கு படைக்கின்றனர். தை மாதத்தில், கரும்பு, மஞ்சள்,கிழங்கு வகைகள் தாராளமாகக் கிடைக்கும். தமிழகத்தில், மூன்று நாட்கள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. தங்கும் பொங்கல் தளராத மனதுடன், கரும்பின் சுவை போல் உங்கள்வாழ்க்கை என்றென்றும், தித்திக்கட்டும்.
1st GRADUATION DAY, TODAY Saturday 13 ^ (th) January 2024 at 10.30 am. in the College Auditorium.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் 12ம் தேதி ரிலீஸாகிறது. முன்னதாக இந்தப் படத்தின் ரிலீஸுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் 5 ஆண்டுகள் இடைவேளைக்குப் பின்னர் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. 2018ல் தொடங்கப்பட்ட அயலான் பல தடைகள் காரணமாக ட்ராப் ஆகும் நிலைக்குச் சென்றது. ஆனாலும் ஒவ்வொரு முறையும் அயலான் படத்தை விட்டுவிடாமல் சிவகார்த்திகேயனும் ரவிக்குமாரும் பார்த்துக்கொண்டனர். அதற்கு பலனாக அயலான் 12ம் தேதி ரிலீஸாகிறது.பொங்கல் ரேஸில் களமிறங்கும் அயலானுக்குப் போட்டியாக தனுஷின் கேப்டன் மில்லர் படமும் ரிலீஸாகிறது. இதனால் தனுஷ் - சிவகார்த்திகேயன் இடையேயான போட்டியாக இது பார்க்கப்படுகிறது. அயலான் ட்ரெய்லரை தொடர்ந்து கேப்டன் மில்லர் ட்ரெய்லரும் மறு நாளே வெளியானது. ஆனால், கேப்டன் மில்லருக்கு சென்சாரில் UA சர்டிபிகேட் கிடைத்துள்ளது. அதேநேரம் அயலான் படத்துக்கு U சான்றிதழ் கிடைத்துள்ளதால் ஃபேமிலி ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனிடையே அயலான் படத்தின் ரிலீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. அயலான் படத்தை தயாரித்த 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் நிறுவனம், டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்திடம் 10 கோடி ரூபாயை கடனாக பெற்றிருந்தது. இந்த தொகையை ஏற்றுக்கொண்ட கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் 3 கோடி ரூபாயை மட்டுமே திருப்பி செலுத்தியது. மீதித் தொகையை திருப்பிக் கொடுக்காததால் அயலான் ரிலீஸுக்கு சென்னை நீதிமன்றம் தடை விதித்திருந்தது.இந்நிலையில், இந்த பிரச்சினைகள் இன்றோடு முடிவுக்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு பணம் செட்டில் செய்யப்படவிருப்பதால் அயலான் ரிலீஸில் பிரச்சினை இல்லை என சொல்லப்படுகிறது. இதனையடுத்து படத்தை ப்ரொமோஷன் செய்வதற்காக ஸ்பெஷல் ஷோ ஒன்றை திரையிட சிவகார்த்திகேயன் முடிவு செய்துள்ளாராம். இதில் உதயநிதியும் கலந்துகொண்டு அயலான் படத்தை பார்க்கவுள்ளாராம்.அவருடன் மேலும் பல சினிமா நட்சத்திரங்கள் அயலான் படத்தை பார்க்கவுள்ளனர். அவர்களது பாசிட்டிவான விமர்சனங்களை அயலான் படத்தின் ப்ரொமோஷனில் பயன்படுத்த படக்குழு முடிவு செய்துள்ளதாம். இதனால் இந்த பொங்கல் ரேஸில் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் இரண்டில் எது வெற்றி பெறும் என்பதே பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
புத்தாண்டு என்பது மகிழ்ச்சியை மட்டுமல்ல நம் கனவுகளை நிறைவேற்றும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
அன்பை மட்டுமே விதைத்து சென்றஇயேசுபிரான் பிறந்த தினம் இன்றுநாமும் அன்பை விதைப்போம் அன்புடன் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
தீபாவளி தங்களின் வாழ்விலும் இல்லத்திலும் வளத்தையும் நலத்தையும் மலரச் செய்யட்டும்.சகலவிதமான சந்தோஷங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் வந்தடைய இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.தீப ஒளியில் இருள் விலகுவது போல உங்கள் வாழ்வில் துன்பம் விலகி இன்பம் நிலைத்து இருக்கட்டும்.கஷ்டங்கள் எல்லாம் கரைந்து போக சந்தோஷங்கள் கூடி வர சொந்தங்கள் நிறைந்திருக்க இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாள் சரஸ்வதி பூஜை. கல்வியும் நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்கள் என்பதை உணர்ந்து அவற்றையும் கடவுளாக கருதி வழிபடுவதே, சரஸ்வதி, ஆயுதபூஜை ‘சரஸ்’ என்றால் ‘பொய்கை’ என்று பொருள். மனமாகிய பொய்கையில் வாழ்பவள் ஆதலால், சரஸ்வதி என்று அழைக்கப் படுகிறாள்.சரஸ்வதியின்வாகனம் அன்னப் பறவை. இது, கல்வியாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் இருக்கவேண்டிய நற்பண்புகளை உணர்த்துகிறது. தண்ணீரை நீக்கி பாலை மட்டும் பிரித்துப் பருகும் அன்னப் பறவை போல், கல்வியாளர்கள் விவேகத்துடன் தீயவற்றை நீக்கி, நல்லவற்றை ஏற்க வேண்டுமாம். பண்டைய காலத்தில் அரசர்களும் புலவர்களும் மொழிவிவாதம் செய்யும்போது, அவர்கள் அமர்ந்திருக்கும் ஆசனத்தில் கொடியும் இணைக்கப்பட்டிருக்குமாம். இதை சாரதா த்வஜம் என்பர். இதில் சரஸ்வதிதேவியின் திருவுருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.கலைவாணியை வாக்தேவியாகவும் போற்றுகின்றன புராணங்கள். வாக்தேவியானவள் மூன்று சந்தியா காலங்களில் காயத்ரி, சாவித்திரி, சரஸ்வதி என மூன்று வடிவங்களில் திகழ்கிறாளாம்..கலைவாணி ஏந்தியிருக்கும் வீணைக்கு கச்சபி என்று பெயர். அதை அருளியது சிவபெருமான் என்பர். தேவியின் கரங்களில் இருக்கும் வீணையும் சுவடியும் கல்வியின் மேன்மையையும் கலைகளில் திறமையையும் அருள்பவள் என்பதை உணர்த்துகின்றன. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக்கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொழ்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதியின் அருள் முழுமையாக கிடைக்கும். அன்றைய தினம் குழந்தைகளின் கை பிடித்து பரப்பி வைத்திருக்கும் நெல்லில் " அ " என்று எழுத கற்றுக்கொடுப்பது " வித்யாரம்பம் எனப்படுகிறது.
நாம் எல்லோரும் ஒன்றே, அனைத்தும் இறைசக்தியின் வடிவமே என்று உணர்த்துவதுதான்நவராத்திரி பண்டிகை.. துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று இறைசக்திகளும் ஒன்று சேர்ந்து மகிஷாசுர மர்த்தினியாக அவதாரம் எடுத்து, மகிஷன் எனும் அரக்கனை அழிப்பதையே நவராத்திரி வரலாறு என்கிறார்கள்.துர்க்கையான பார்வதியை முதல்3 நாட்களும், அடுத்து லட்சுமியை3 நாட்களும், இறுதி3 நாட்கள் சரஸ்வதியையும்10வது நாள் விஜய சாமுண்டீஸ்வரியாக வணங்க வேண்டும்.துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து மன உறுதி கிடைக்கும். லட்சுமியை வணங்கினால் பொன், பொருள், நல்ல ஒழுக்கம், உயர்ந்த பண்பாடுகள், கருணை, மனிதநேயம், நல்ல சிந்தனைகள் கிடைக்கும். சரஸ்வதியை வழிபட்டால் ஞானம், உயர்ந்த கல்வி, கலைகளில் தேர்ச்சி கிடைக்கும்..முதல் நாள் :அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும்.பூக்கள் : மல்லிகை, சிவப்புநிற அரளி, வில்வ பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.நைவேத்தியம் : வெண்பொங்கல், சுண்டல், பழம், இரண்டாம் நாள்: : முல்லை, துளசி, மஞ்சள்நிற கொன்றை, சாமந்தி, நீல சம்பங்கி பூக்களால் பூஜிக்க வேண்டும்.புளியோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம்.கோதுமை மாவினால் கோலம் போட வேண்டும். மூன்றாம் நாள்-மலர் கோலம் போட வேண்டும்.செண்பக மொட்டு, குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.கோதுமை சர்க்கரைப் பொங்கல், காராமணி சுண்டல்.நான்காம் நாள்-அட்சதை கொண்டு படிக்கட்டு போல கோலமிட வேண்டும்.செந்தாமரை, ரோஜா மற்றும் ஜாதி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும்.: தயிர் சாதம், அவல் கேசரி, , பட்டாணி சுண்டல்..ஐந்தாம் நாள் -கடலை மாவால் பறவை கோலம் போட வேண்டும். கதம்பம், மனோரஞ்சிதம் பூக்களால் பூஜிக்க வேண்டும்.சர்க்கரை பொங்கல், கடலை பருப்பு வடை, பாயாசம், தயிர் சாதம், பூம்பருப்பு சுண்டல்.ஆறாம் நாள் :-: கடலை மாவினால் தேவி நாமத்தை கோலமிட வேண்டும்.பாரிஜாதம், விபூதிப் பச்சை, செம்பருத்தி, சம்பங்கி, கொங்கம்.தேங்காய் சாதம், தேங்காய் பால்பாயாசம், ஆரஞ்சு பழம், மாதூளை, பச்சைப்பயறு சுண்டல்ஏழாம் நாள் :நறுமண மலர்களால் கோலமிட வேண்டும். பூக்கள் : தாழம்பு, தும்பை, மல்லிகை, முல்லை.எலுமிச்சம் பழசாதம், பழ வகைகள், ,கொண்டக்கடலை சுண்டல் எட்டாவது நாள் :பத்ம கோலம் மருதோன்றி, சம்பங்கி பூக்கள், வெண்தாமரை, குருவாட்சி.: பால்சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல்.ஒன்பதாம் நாள் :வாசனைப் பொடிகளால் ஆயுதம் போன்ற கோலம் போட வேண்டும்.தாமரை, மருக்கொழுந்து, துளசி, வெள்ளை மலர்கள்., உளுந்து வடை, வேர்க்கடலை, சுண்டல், கடலை, எள் பாயாசம், , எள் உருண்டை..பத்தாவது நாள் :பால் பாயாசம், காராமணி சுண்டல், இனிப்பு வகைகள். நறுமண மலர்களால் கோலமிட வேண்டும்.நவராத்திரியில், அம்பாளுக்கு விதவிதமான சுண்டல், பாயாச வகைகள் நிவேதனம் செய்யப்படுகிறது. அறிவியல் ரீதியாகவும் இதற்கு காரணம் உண்டு.. தேவர்களுக்கு சிவன், விஷ்ணு அமிர்தம் தந்து, அவர்களை காத்தது போல, பூமி உயிர்வாழ “மழை என்னும் அமிர்தத்தைத் தருகிறார்கள்.இதனால் பூமி “சக்தி பெறுகிறது. அந்த சக்தி எனும் பெண்ணுக்கு, பூமியில் விளைந்த விதவிதமான தானியங்கள் பக்குவப்படுத்தப்பட்டு நிவேதனம் செய்யப்பட்டது. அதில் சுண்டல் பிரதான இடம் பெற்றது. நவராத்திரி காலமான புரட்டாசி, ஐப்பசியில் அடைமழை ஏற்படும். இதனால் தோல்நோய் போன்றவை அதிகமாகும். இதைப் போக்கும் சக்தி சுண்டலுக்கு உண்டு.