25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


ஒலிம்பிக் சாம்பியன் ஆக்சல்சென் ஓய்வு பெறுவதாக  அறிவித்துள்ளார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஒலிம்பிக் சாம்பியன் ஆக்சல்சென் ஓய்வு பெறுவதாக  அறிவித்துள்ளார்.

விக்டர் ஆக்சல்சென்டென்மார்க்கை சேர்ந்த பிரபல பேட்மிண்டன் வீரர். நம்பர் ஒன் வீரரான ஆக்சல்சென் 2020 மற்றும் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் அடுத்தடுத்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

2017 மற்றும் 2022-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பிலும், 2020, 2022-ம் ஆண்டு ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனிலும், ஐரோப்பிய சாம்பி யன்ஷிப்பில் ஒற்றையரில் 3 முறையும், அணிகள் சாம்பியன்ஷிப்பில் 6 முறையும் மகுடம் சூடியுள்ளார். தரவரிசையில் 183 வாரங்கள் 'நம்பர் ஒன்இடத்தில் இருந்தார் . சீனாவின் லின்டானுக்கு பிறகு ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக இருமுறை மகுடம் சூடிய வீரர் இவர்தான்.

விக்டர் ஆக்சல்சென் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு முதுகுவலி பிரச்சினையால்   எந்த போட்டியிலும் .விளையாடாமல் ஒதுங்கி இருந்தார். தனது 32-வது வயதிலேயே பேட்மிண்டனில் இருந்து ஓய்வு பெறுவதாக   அறிவித்துள்ளார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News