பீட்ரூட் லஸ்ஸி
தேவையானவை : பீட்ரூட் துருவல் - கால் கப், கெட்டித் தயிர் - ஒரு கப், உப்பு - ஒரு சிட்டிகை, சர்க்கரை தேவையான அளவு.
செய்முறை:
பீட்ரூட் துருவலுடன் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து வேகவிடவும். ஆறிய பின் மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் விடாமல் விழுதாக அரைக்கவும். தயிருடன் சர்க்கரை, பீட்ரூட் விழுது சேர்த்துக் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குறிப்பு: கால்சியம் நிறைந்தது; ரத்தச் சோகையை சரிசெய்ய உதவுகிறது.
0
Leave a Reply