25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


வேளாண் அடுக்குத் திட்டத்தின்கீழ், விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெறுவது அவசியம், மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வேளாண் அடுக்குத் திட்டத்தின்கீழ், விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெறுவது அவசியம், மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல்.

விருதுநகர் மாவட்ட வேளாண் அடுக்குத் திட்டத்தின்கீழ், விவசாயிகள் தங்கள் நில உடமை விவரங்களை வலைதளத்தில் பதிவு செய்வது அவசியம் விவசாயிகள் அரசின் பல்வேறு நலத்திட்ட பலன்களை பெறுவதற்கு ஒவ்வொரு முறையும் தங்களது நில உடமை விபரங்கள், அடங்கல் போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. அதை தவிர்த்திட விவசாயிகள் தங்கள் நில உடமை விபரங்களை ஆதார் எண் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றுடன் இணைப்பதற்கு வேளாண் அடுக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமங்கள் தோறும் வேளாண்மைத்துறை தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மை விற்பனை வணிகத் துறை  சார்ந்த அலுவலர்களால் நில உடமை விபரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.  

மேலும் விவசாயிகள் பொது சேவை மையம் மூலமாகவும் தங்கள் நில உடமை விபரங்களை இணைத்துக் கொள்ளலாம். இவ்வாறு இணைக்கப்பட்ட பின்னர் ஒருங்கிணைக்கப்பட்ட தனித்துவமான தேசிய அளவிலான நில உடமை அடையாள எண் ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படுத்தப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 94,682 விவசாயிகளில் 79,302 விவசாயிகள் மட்டுமே பதிவு செய்துள்ளனர், மீதமுள்ள 15 ஆயிரத்து 450 விவசாயிகள் வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்கள் நடத்தும் முகாம்களில் அல்லது அருகில் உள்ள இ சேவை மையங்களுக்கு நேரடியாக சென்று பதிவு செய்து கொண்டு பயன்பெறலாம்.

வரும் நிதியாண்டு முதல் பிரதம மந்திரி கௌரவ நிதி உதவி தொகை ((PMKISAN) பெறுவதற்கும் மற்றும் அரசின் நலத்திட உதவிகளை பெறுவதற்கு பயிர் காப்பீடு பதிவிற்கும், உரம் வாங்குவதற்கு, வெள்ளம் மற்றும் வறட்சி நிவாரணம் பெறும் சூழ்நிலையில் இந்த எண் மிகவும் அவசியம் என்பதால்  அனைத்து விவசாயிகளும் தங்களது நில உடமை விவரங்களை பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News