நாள் : 17.03.2024, ஞாயிற்றுக்கிழமை. நேரம் : காலை 10.00 - 12.30 மணிஇடம் : ஆனந்தா கார்டன், தென்காசி ரோடு, இராஜபாளையம்.சிறப்பு விருந்தினர்“நகைச்சுவை நம்பி” முனைவர் சா. நீலகண்டன் M.A, PhD,அவர்கள் தமிழ்ப் பேராசிரியர், தேசியக் கல்லூரி -திருச்சி. திருச்சி நகைச்சுவை மன்றம்சிரிப்புரை தலைப்பு : 'வாழ்வே ஆனந்தம்"அனைவரும் வருக ! வருக !! என அன்புடன் வரவேற்கின்றோம்...இராஜபாளையம் நகைச்சுவை மன்றம்நிகழ்ச்சி அன்பாதரவாளர்:M. MURUGAN, SBI LIFE MD CLUB , MDRT - COT (USA) AWARD TOP 10 IN INDIA . Cell: 91 5000 9000SBI லைப் இன்சூரன்ஸ் ( ஆயுள் பாதுகாப்பு ) உடன் அனைத்து கம்பெனிகளின் வாயிலாக மருத்துவ காப்பீடு மற்றும் வாகன காப்பீடு பாலிசி சேவை செய்து தரப்படும்.
SMT. SAKKANIAMMA DHARMARAJA NURSERY & PRIMARY SCHOOL RAJAPALAIYAM.SPORTS DAY CELEBRATIONOn Saturday, 16 ^ (1h) March 2024 at 4.00 p.mVenue: A.K.D. DHARMARAJA WOMEN'S COLLEGE, Shenbaga Thoopu Road, Rajapalaiyam.
A.K.D. DHARMA RAJA WOMEN'S COLLEGE(Affiliated to Madurai Kamaraj University, Madurai)RAJAPALAIYAM-626117GRADUATION DAY(2019-2022 & 2020-2023)On Saturday 16th March 2024 at 10.30 amVenue: College Premises
A.K.D. DHARMA RAJA WOMEN'S COLLEGE & SMT. A.K.D. SAKKANIAMMA COLLEGE OF EDUCATION FOR WOMEN RAJAPALAIYAM.33rd SPORTS DAY CELEBRATIONON Friday, 15 March 2024, at 8.30 am , Venue: College Premises
வேளாண் இடுபொருள் விற்பனையாளர்களுக்கு வேளாண் விரிவாக்க சேவைக்கான ஓராண்டு பட்டய படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாவட்ட அளவில் இணையதள போர்டல் TNஅக்ரிஸ்நெட் வலைதளத்தில் முகப்பு பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.ஹைதராபாத்தில் உள்ள தேசிய வேளாண் மேலாண்மை விரிவாக்கப் பயிற்சி நிலையம் (MANAGE) உடன் சமிதி பயிற்சி நிலையமும் இணைந்து வேளாண் விரிவாக்க சேவைக்கான ஓராண்டு பட்டயப் படிப்பினை (DAESI) நடத்தி வருகிறது.வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் இடுபொருள் வழங்குவதோடு மட்டுமல்லாது வேளாண் களம் சார்ந்த தகவல்களை விவசாயிகளுக்கு வழங்குவதில் முதன்மையாக விளங்குகின்றனர். பெரும்பாலான வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் வேளாண் சார்ந்த முறையான கல்வியினை பெற்றிருப்பதில்லை.எனவே, வேளாண்மையில் இடுபொருள் விற்பனையாளர்கள் தொழில் நுட்பதிறனை/அறிவினை மேம்படுத்துவதற்கும், வேளாண் இடுபொருள்களை விற்பதற்கும் இப்பட்டையப் படிப்பில் இணைந்து பயன் பெறமுடியும்.இப்படிப்பிற்கு மாவட்ட வாரியாக விண்ணப்பதாரர்கள் மேற்காணும் பட்டய படிப்பிற்கு விண்ணப்பிக்க ஏதுவாக TN அக்ரிஸ்நெட் இணையதளத்தில் தனியொரு பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. https://www.tnagrisnet.tn.gov.in/daesi/இணையதள இணைப்பினை பயன்படுத்தி விபரங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S,அவர்கள்கேட்டுக்கொண்டுள்ளார்.
இராஜபாளையம் தாலுகா மக்களின் மின்சாரம் தொடர்பான, நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்சனைகள், இதர குறைகளை தீர்க்கும் வகையில், விருதுநகர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் லதா,தலைமையில் இராஜபாளையம் பொன்னகரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில், மார்ச் 12 காலை 11.00 மணி முதல் 1.00 மணி வரை குறைகளை கேட்டறிய இருப்பதால் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
நம் நகரத்தைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் நலனுக்காக வரும் 13-03-2024 புதன் கிழமை அன்று புதிய சங்கம் தொடங்க ஆலோசனை சிறப்புக்கூட்டம் நடக்கவுள்ளது.அறுபது வயது நிறைவடைந்த ஆண், பெண் இரு பாலரும் சங்கத்தில் இணைந்து கொள்வதற்கான பதிவுகள் ஏற்கப் படும்.கூட்டதேதி 13-03-2024, நேரம் . 5.00 - 7.000.இடம்-ஆனந்தா கார்டன், தென்காசி சாலை, இராஜபாளையம்.தலைமை கேப்டன் சிங்கராஜா அவர்கள்.(முன்னாள் தலைவர் சீனியர் சிட்டிசன்ஸ் பியுரோ, சென்னை)விளக்கவுரை, வாழ்த்துரை, திரு எம்.ஆர். அழகராஜா தலைவர் தென்காசி மூத்தோர் மன்றம். டாக்டர் S. குமரேசன், ஸ்ரீரெங்கா குழந்தைகள் நல மருத்துவ மனை,இராஜபாளையம்.சிறப்புரை திரு R. முத்துக்கிருஷ்ணன், முதுநிலை மேலாளர், ஹெல்ப்பேஜ் இந்தியா, சென்னை.மூத்தோர் நலச்சங்கம், பல முக்கிய நகரங்களில் நிறுவப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது.நாமும் நமது இராஜை நகரில் இச்சங்கத்தினை துவக்கி பல நன்மைகள் பெறலாம்..எனவே, இராஜபாளையம் மூத்தோர் பெருமக்கள், இந்த நல்லநிகழ்ச்சியில் குடும்பத்துடன் அவசியம் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.இப்படிக்கு இராஜபாளையம் மூத்தோர் நல மன்ற அமைப்பு,
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக இந்த மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. அதன்படி படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக 08.03.2024 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 02.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ADYAR ANANDHA BHAVAN, INFONET COMMUNICATION ENTERPRISES, PENTAGON GARMENTS, WILLIAMS WONDERS போன்ற 20க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளார்கள்.இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 08.03.2024 அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டு அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது மேலும் இச்சேவையானது முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும்.இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் .விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும், தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஆதார் கார்டு என்பது இந்தியர்கள் அனைவருக்கும் மிக முக்கியமான ஆவணம் ஆகும். எல்லா வேலைகளுக்கும் ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆதார் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்த நிலையில், ஆதார் கார்டுகளை வழங்கும் அரசு நிறுவனமான இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.ஆதார் கார்டில் உள்ள தனிநபர் விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். அதில் ஏதேனும் திருத்தம் இருந்தாலும் அதை உடனடியாக செய்துவிட வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். சிம் கார்டு வாங்குவது, வங்கிக் கணக்கைத் திறப்பது போன்ற பல்வேறு திட்டங்களின் பலன்களைப் பெறுவதில் நீங்கள் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 10 ஆண்டுகள் பழையான ஆதார் கார்டை உடனடியாக புதுப்பிக்க வேண்டும். இதன்படி, ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் மார்ச் 14ஆம் தேதிக்கு முன் இதைச் செய்யவில்லை என்றால், நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.10 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான இலவச அப்டேட் தேதி மார்ச் 14 அன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதைத் தாண்டி அப்டேட் செய்தால் கட்டணம் செலுத்த வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தில் 03.03.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று, பிறந்ததிலிருந்து 5 வயதிற்குட்பட்ட (0-5 வயது) அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் 1,56,830 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், சாவடிகள், கோயில்கள் ஆகிய இடங்களில் 1137 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம் மையங்களில் காலை 7.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.ஏற்கனவே முறையான தவணைகளில் சொட்டு மருந்து கொடுக்கப்பட்டிருந்தாலும் இம்முகாமிலும் சொட்டு மருந்து தவறாது கொடுக்கப்பட வேண்டும். லேசான காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு இருந்தாலும், போலியோ சொட்டு மருந்து கொடுக்கலாம்.இம்முகாமில் 4548 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். இதில் சுகாதாரப் பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் அடங்குவார்கள். குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை அடையாளம் வைக்கப்படும்.இம்மாவட்டத்தில் 25 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு, இலங்கை அகதிகள் முகாம், நரிக்குறவர்கள் மற்றும் தற்காலிக குடியிருப்புகளில் வசிக்கும் பிறந்ததிலிருந்து 5 வயதிற்குட்பட்ட (0-5 வயது) குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் 40 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு ரயில்வே நிலையம், பேருந்து நிலையங்கள், சோதனைச் சாவடிகள், கோயில் திருவிழாக்கள் மற்றும் திருமண விழாக்களில் உள்ள குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இந்த ஆண்டில் ஒரே தவணையாக 03.03.2024 தேதியன்று போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது. ஆகையால் பொதுமக்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை இந்த போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு அழைத்துச் சென்று குழந்தைகளை போலியோ நோயிலிருந்து பாதுகாத்து போலியோ இல்லாத சமுதாயத்தை அமைக்க ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.