விருதுநகர் மாவட்டத்தில் ஆகஸ்ட்டில் முதல்வர் கோப்பை போட்டிகள் துவங்க உள்ளதாக கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்தார்.முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் மாவட்ட அளவில் பள்ளி, கல்லுாரி பிரிவுகளில் தடகளம், இறகுபந்து, கூடைபந்து, கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, கபடி, சிலம்பம், நீச்சல், மேஜைப்பந்து, வாலிபால், கைப்பந்து, கேரம்,சது ரங்கம், கோ கோ போட்டிகளும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தடகளம், இறகுபந்து, எறிபந்து, கபடி, பொது பிரிவில் தடகளம், கிரிக்கெட், வாலிபால், கால்பந்து, கேரம், சிலம்பம், அரசு ஊழியர்கள் பிரிவில் தடகளம், சதுரங்கம், கபடி, வாலிபால் போட்டிகளும், மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில் பள்ளி, கல்லுாரி பிரிவுகளில் கடற்கரை வாலிபால், டென்னிஸ், பளுதூக்குதல், வாள் விளையாட்டு, ஜூடோ, குத்துச்சண்டை, சைக்கிளிங் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. ஆக.22 முதல் செப்.12 வரை நடக்கும் இந்தமாவட்ட, மண்டல அளவில் தனி நபர், குழு போட்டிகளுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரம்,2ம் பரிசாக ரூ.2 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.ஆயிரம் வழங்கப்படும்.போட்டிகளில் பங்கேற்கவிரும்பும் மாணவர்கள் https://cmtrophy.sdat.in, மூலம் முன்பதிவு செய்து பங்கேற்கலாம். ஆக.16க்குள் விண்ணப்பிக்க வேண்டும், என்றார்.
விருதுநகர் மாவட்டத்தில், டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (F.L-1), F.L-2 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை 2003ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி சுந்தர மகாலிங்கம் திருக்கோவில், ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, 23.07.2025 மற்றும் 24.07.2025 ஆகிய இரண்டு தினங்களில் வத்திராயிருப்பில் உள்ள மதுபானக் கடை எண் 11872, மகாராஜாபுரம் கடை எண் 12022, இலந்தைகுளம் கடை எண் 12020, வத்திராயிருப்பு ஹர்சினி ரெக்ரேசன் கிளப் மற்றும் ஜெயம் ரெக்ரேசன் கிளப், மகாராஜாபுரம் குயின் ரெக்ரேசன் கிளப் மற்றும் கூமாபட்டியில் உள்ள அயோத்தி ரெக்ரேசன் கிளப் ஆகிய 7 அரசு மதுபான கடைகள் மற்றும் ரெக்ரேசன் கிளப் ஆகிய கடைகளை தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் உத்தவிட்டுள்ளார்.
இராஜபாளையம் மணிமேகலை மன்றம் 68ஆம் ஆண்டு விழா 19-07-2025 சனிக்கிழமை மாலை 5.30 மணிபங்கேற்றுச் சிறப்புச் செய்வோர்தலைமை : திருமிகு பி.ஆர். வெங்கட்ராம ராஜா அவர்கள் (ராம்கோ சேர்மன்)மணிமேகலையில் அறம்வள்ளுவரும், சாத்தனாரும் திருமிகு டாக்டர். டி.எஸ்.சரவணன் M.V.Sc., Ph.D. அவர்கள் முதல்வர், அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி மையம்திருமிகு முனைவர் .வீ.ப.ஜெயசீலன் அவர்கள் சென்னை மாநகர இணை இயக்குநர்இடம் : காந்தி கலைமன்றம் பி.எஸ்.கே. ருக்மணிஅம்மாள் அரங்கம் இராஜபாளையம். வரவேற்பு : கொ.மா.கோ.இளங்கோநன்றி : V.K. பாரதி பீமாஅறிமுகம் : கோ.குறளமுதன்மன்றத்தலைவர் : குறிஞ்சிச் செல்வர் டாக்டர் கொ.மா.கோதண்டம் மணிமேகலை மன்றத்தார், வாழ்த்துரைதிரு கவிஞர் கிருஷ்ணபிரசாத் ,அவர்கள் சென்னைதிரு மருத்துவர் கு. கணேசன் அவர்கள்திரு எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் அவர்கள்திரு மருத்துவர் த.அறம் அவர்கள்திரு M.R.அழகராஜா அவர்கள் ,தென்காசிதிரு வள்ளிநாயகம் அவர்கள் ,கோதை எண்டர்பிரைசஸ் சிறந்த நூல்களுக்குப் பரிசளித்தல்சிறுகதைகள் : "மந்தைப்பிஞ்சை"ஆசிரியர் : கா. சி. தமிழ்க்குமரன் - ராம்கோ பி.ஆர்.ஆர். இலக்கிய விருதுநாவல் : "ஊத்தம்பல்லா"ஆசிரியர் : செஞ்சி தமிழினியன் - நல்லி இலக்கிய விருதுகவிதை : "விரிகதிர் விதைகள்"ஆசிரியர் : கதிர்மதியன் - அடையாறு ஆனந்த பவன் இலக்கிய விருதுகட்டுரை :"மேகங்களின் பாதை"ஆசிரியர் : எழிலரசு - கோவை அம்பையராஜா இலக்கிய விருது சிறுவர் இலக்கியம்''கொடைக்கானல் குல்லா"ஆசிரியர் : ப.சதீஷ்முத்துகோபால் - கவிஞர் கிருஷ்ணபிரசாத் இலக்கிய விருதுஇவர்கள் 5 ஆயிரம் பரிசும்,பாராட்டுச் சான்றும் பெறுபவர்கள். பாராட்டுப் பெறுவோர்: திரு அக்ரி சுப்பிரமணிய ராஜா,திரு செல்வம் ,அருப்புக்கோட்டைதிரு மாரியப்பன், சமூகநல ஆர்வலர்திரு கோதையூர் மணியன் ,தமிழ் இலக்கிய மன்றம் சிறப்புப் பாராட்டுச் சான்றுகள்மணிமேகலை மன்றம் இதுவரை 110 படைப்பாளர்களுக்கும்,35 தமிழ் இலக்கியச் சிற்றிதழ்களுக்கும்.25 பொது நலச் சேவையாளர்களுக்கும் விருதுகள் வழங்கிச் சிறப்பித்துள்ளன.தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்இவ்விரு இலக்கிய அமைப்புகளும் ஆண்டுதோறும் மணிமேகலை மன்றம் பெயரில் படைப்பாளிகளுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கின்றன.இனி ஆண்டுதோறும் இராஜபாளையம் மணிமேகலை மன்றம் சார்பிலும் விருதுகள் வழங்க உள்ளன. இரண்டு அமைப்புகளுக்கும் மன்றம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.மணிமேகலை மன்றத்தைப் பாராட்டி இதுவரை ஆறு இலக்கிய அமைப்புகள் விருதுகள் தந்துள்ளன.2021ஆம் ஆண்டு S.R.M. பல்கலை தமிழ்ப் பேராயம் வழங்கும் தொல்காப்பியர் தமிழ்ச் சங்க விருது ரூ.50,000/-ம் தமிழகத்தில் சிறந்த இலக்கிய மன்றம் என்ற விருது வழங்கிச் சிறப்பித்தது.
முன்னாள் சென்னை மாகாணப் பிரதமரும், ஒரிஸா மாநில ஆளுநரும், காந்தி கலை மன்ற நிறுவனருமான தியாகச் செம்மல்பி.எஸ். குமாரசாமி ராஜா அவர்களின் 127 ஆவது பிறந்தநாள் விழா ஸ்ரீமதி .பி .எஸ்.கே .ருக்மணி அம்மாள் அரங்கத்தில் 8-7-2025 செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற உள்ளது. 8-7-2025 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு அமரர் பி.எஸ். குமாரசாமி ராஜா அவர்கள் நினைவாலயத்தில்ஸ்ரீ பி.ஏ.சி.ராமசாமி ராஜா இசைப்பள்ளி குழுவினரின் கீர்த்தனாஞ்சலியுடன் புஷ்பாஞ்சலி நடைபெற உள்ளது. விழாத்தலைவர் - ராம்கோ குரூப் சேர்மன் திரு. P.R.வெங்கட்ராம ராஜா அவர்கள் (மேனேஜிங் டிரஸ்டி, காந்தி கலை மன்றம்)வரவேற்புரை : திரு. P.J. ராம்குமார் ராஜா அவர்கள் (டிரஸ்டி, காந்தி கலை மன்றம்)"வீடும்- நாடும்" என்ற தலைபில் சொற்பொழிவு நிகழ்த்துபவர்'சொற்கொண்டல்'திரு. சண்முக. ஞானசம்பந்தன் அவர்கள் மதுரை வானொலி (பணி நிறைவு)விருந்தினர்களை கௌரவித்தல்திரு. N.K.ஸ்ரீகண்டன் ராஜா அவர்கள்திரு. P.R.குமாரசாமி ராஜா அவர்கள் (டிரஸ்டிகள், காந்தி கலை மன்றம்)
முன்னாள் மாணவியர் சந்திப்பு:சேர்க்கை:பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நடைபெறவிருக்கும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பசுமை நிறைந்த நினைவுகளிலே மலர்ந்திட, மகிழ்ச்சியிலே திளைத்திட வருமாறு தங்கள் அனைவரையும் உளமார அழைக்கிறோம்.நாள்: 05 ஜூலை 2025, சனிக்கிழமைநேரம்: (4.00 - 8.00)இடம் : ஸ்ரீ ராவ்பகதூர் எ.கா.த.தர்மராஜா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இராஜபாளையம்.1942- 2020 ஆம் ஆண்டில் நம் பள்ளியில் படிப்பை முடித்த முன்னாள் மாணவியர் சந்திப்பிற்கு முன்பதிவு செய்து உங்களது வருகையை உறுதி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.தங்கள் மேலான வருகையை உறுதிசெய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 95975 20845பதிசெய்ய வேண்டிய நேரம்:(கீழ்க்கண்ட நேரத்தில் மட்டும் தொடர்பு கொள்ளவும்)காலை 9.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரை .
04-07-2025 வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு அன்னாரின் நினைவாலயத்தில் ஸ்ரீமான் பி.ஏ.சி. ராமசாமி ராஜா நினைவு இசைப்பள்ளி ஆசிரியர், மாணவ, மாணவியர்களின் கீர்த்தனாஞ்சலியும் தொடர்ந்து புஷ்பாஞ்சலியும் நடைபெற உள்ளது.அன்று காலை 7.35 மணிக்கு ஸ்ரீஸ்ரீ அபிநவவித்யாதீர்த்த பாரதீ வேதபாடசாலையில் ஸ்ரீ பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா அவர்களின் திரு உருவ படத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு ராம்கோ டெக்ஸ்டைல்ஸ் பிரிவின் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் தொடர் ஜோதி ஏந்தி புறப்பட்டு அருள்மிகு ஸ்ரீ சாரதாம்பாள் திருக்கோவிலில் பூஜைகள் செய்யப்பெற்று நகரின் பிரதான வீதிகள் வழியாக வலம் வந்து காலை 11 மணியளவில் ராஜபாளையம் மில்ஸ் வந்தடைய உள்ளது.முன்னதாக காலை 8.30 மணியளவில் ராமமந்திரத்திற்கு ஜோதி வருகின்ற சமயம் அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப் பெற்று அனைவருக்கும் காலை 9 மணியளவில் காந்தி கலைமன்ற வளாகத்தில் பிரசாதம் வழங்கப்பட உள்ளது. 04.07.2025 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்குஇராஜபாளையம், திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்யாண மண்டபம் A/C ஸ்ரீ பி.ஏ.சி.ராமசாமி ராஜா அரங்கத்தில்"கலா ரத்ன", "இசைச் சுடர்"ஸ்ரீமதி கிருதி பட்அவர்களின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.அனைவரும் கேட்டு மகிழ வருக !
விருதுநகர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் சுந்தரராஜபுரம் ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளியில் காலியாகவுள்ள ஒரு வேதியியல் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு மாதம் ரூபாய் 18,000/- என்ற மாத தொகுப்பூதியத்தில் மற்றும் கோட்டையூர் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் காலியாகவுள்ள ஒரு அறிவியல் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு மாதம் ரூபாய் 15,000/- என்ற மாத தொகுப்பூதியத்தில் முற்றிலும் தற்காலிகமாக ஆசிரியரை நியமித்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலிப்பணியிட ஆசிரியர் தேர்வு வாரியம் பதவி உயர்வு மூலம் நிரப்பிடும் வரை அல்லது இக்கல்வியாண்டில் எது முன்னரோ அது வரையில் பணியமர்த்தப்படுவர். பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமனம் செய்யப்படும் வேதியியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு தற்போது நடைமுறையில் உள்ள அரசு விதிமுறைகளில் உள்ளவாறு கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கும் போது வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதியுடன் ஆசிரிய தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவருக்கும் அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் தன்னார்வலருக்கும் பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். இப்பணிகளுக்கான தகுதிவாய்ந்த நபர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி மேலாண்மை குழு மூலம் தேர்வு செய்யப்படுவதுடன் இப்பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானதாகும். தற்காலிக பணிக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 30.06.2025-க்குள் விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் உரிய சான்றுகளுடன் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ, விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
CONDUCTED BY,VIRUDHUNAGAR DISTRICT THROWBALL ASSOCIATIONIN ASSOCIATION WITHSRI RAO BAHADUR A. K. D. DHARMA RAJA GIRLS' HIGHER SECONDARY SCHOOLDATE: 27TH - 29TH JUNE 2025VENUE - SRB A.K.D.D. GIRLS' HR. SEC. SCHOOL, Railway Feeder Road, RAJAPALAIYAM. INAUGURATION FUNCTION23rd Junior State Throwball Championship,(Boys & Girls)Presided over byMr. A.K.D. KRISHNAMA RAJU,Managing Trustee, SRB A.K.D. Dharma Raja Education Charity Trust.CHIEF GUEST:Mr. D. KANNAN B.E,Superintendent of Police, Virudhunagar District.SPECIAL GUEST:Mr. K. ASHOKAN M.A, B.Ed.,Additional Superintendent of Police, Virudhunagar District.GUESTS OF HONOURDr. T. BALA VINAYAKAM,Treasurer, Throwball Federation of India & President, Tamilnadu Throwball Association.Mr. M. ALAGESAN, I.R.S,Senior Vice President, Tamilnadu Throwball Association.Mr. S. RAJA,General Secretary, Tamilnadu Throwball Association.Dr. REX ABRAHAM,Treasurer, Tamil Nadu Throwball Association.Mrs. K. SHENBAGAVALLI,Head Mistress, SRB A.K.D.D. G.HSSDate: 27 June 2025, Friday Time : 5.00 PMVenue: SRB A.K.D.D. Girls' Higher Secondary School, Rajapalaiyam. VALEDICTORY FUNCTION23rd Junior State Throwball Championship,(Boys & Girls)Presided over byMr. A.K.D. KRISHNAMA RAJU,Managing Trustee, SRB A.K.D. Dharma Raja Education Charity Trust.CHIEF GUEST:Dr. V.P. JEYASEELAN I.A.S.,District Collector, Virudhunagar.GUESTS OF HONOURDr. T. BALA VINAYAKAM,Treasurer, Throwball Federation of India & President, Tamilnadu Throwball Association.Mr. M. ALAGESAN, I.R.S,Senior Vice President, Tamilnadu Throwball Association.Mr. S. RAJA,General Secretary, Tamilnadu Throwball AssociationDr. REX ABRAHAM,Treasurer, Tamil Nadu Throwball Association.Mrs. K. SHENBAGAVALLI,Head Mistress, SRB A.K.D.D. G.H.S.SDate: 29th June 2025, Sunday,Time: 5.00 PMVenue: SRB A.K.D.D. Girls' Higher Secondary School, Rajapalaiyam. PROGRAMMEINAUGURATION FUNCTION,ASSEMBLY OF PLAYERS,CHIEF GUEST ARRIVALPRAYER SONG,WELCOME ADDRESS,HONORING THE GUESTS,LIGHTING THE DIYA,OATH TAKING,CHIEF GUEST ADDRESS,DECLARING THE CHAMPIONSHIP OPEN,INAUGURAL COMPETITION .VALEDICTORY FUNCTIONCHIEF GUEST ARRIVAL,FINAL COMPETITION,ASSEMBLY OF PLAYERS,WELCOME ADDRESS,HONORING THE GUEST,CHIEF GUEST ADDRESS,PRIZE DISTRIBUTION,VOTE OF THANKS.
ஸ்ரீ பாலாஜி நர்சிங் ஹோம்,ஸ்ரீ பாலாஜி மருத்துவமனை,(டாக்டர் D.ஜெயலட்சுமி மருத்துவமனை) இலவச மருத்துவ முகாம்.22 ஜூன் 2025 - ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பகல் 1 மணி எண்.428, காமராஜர் நகர், பழைய பேருந்து நிலையத்தின் பின்புறம், ராஜபாளையம் - 626117.ஆலோசகர்கள்மகளிர் நோய் மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணர் कंजे. R., M.B.B.S., M.S., (OG), DNB (OG)பொது மற்றும் குடும்ப நல மருத்துவர்டாக்டர்.A.B.ராமபிரசாத், M.B.B.S.பல் மருத்துவர்டாக்டர். D.ராஜமாணிக்கம், MDS.,இலவச பரிசோதனைகள்HB -40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு Blood Pressure, Pulse, Height, WeightCBG -40 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்குவளர் இளம் பெண்கள் ஆலோசனை கருத்தரித்தல் ஆலோசனைகர்ப்பிணி பெண்களுக்கு இலவச ஸ்கேன் பரிசோதனைகர்ப்பபை வாய்ப்புற்றுநோய் மற்றும் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி பற்றிய ஆலோசனை வழங்கப்படும்மாதவிடாய் பிரச்சனைகள்முழு கர்ப்பகால ஆலோசனைபல் சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் ஆலோசனைபதிவுக்காக - 04563 356397ஸ்ரீ பாலாஜி மருத்துவமனை 428. காமராஜ் நகர், பழைய பஸ் நிலையம் பின்புறம் இராஜபாளையம்-62617.
உங்கள் தொலைபேசியை பயன்படுத்தி உங்கள் ஆக்ஸிஜன், சர்க்கரை அல்லது பி பி அளவை சரிபார்க்க கூறும், எந்தவொரு செயலியையும், பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அவர்கள் உங்கள் கட்டைவிரல் அல்லது விரல்களை வைந்து, அதை நகலெடுக்கும்படி கேட்பார்கள்.அவை உங்கள் ஆதார் மற்றும் வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்டுள்ளது எச்சரிக்கையுடன் இருங்கள்.தமிழ்நாடு காவல்துறை