ROTARY CLUB OF RAJAPALAYAM , District 3212 , Entrepreneurial Workshop "FOCUS GIVES SUCCESS"Keynote Speaker Dr. A. Velumani , Creator, ThyrocareGuest of HonorsRtn. IPDG. IDHAYAM V.R. MUTHURTN. A2B K.T. SRINIVASA RAJARTN. A2B K.S. ANANTHIDate: 01.02.2024 Time: 06.30 Pm, PRR ROTARY HALL, COTTON MARKET , RAJAPALAYAM , Rtn M.Parthasarathi President , Rtn K.R.Anandhi Secreatary Contact:Rtn. Lakshmi Narayanan - 98421 80181Rtn. Dr. N.Karthikeyan - 91590 64761Registration Fee: Rs. 299/- G Pay No: 91590 64761
LIONS L INTERNATIONAL SRG/V 197/2023(திருமதி P.B.ராஜேஸ்வரி அம்மாள் நினைவாக லயன்ஸ் கிளப் ஆப் இராஜபாளையம்,சக்கராஜாகோட்டை ராஜூக்கள் சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை,விருதுநகர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் நிதியுதவியுடன்மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்நாள்:28.01.2024 ஞாயிற்றுக்கிழமை காலை :9.00 முதல் மதியம் 1.00 மணி வரைஇடம்:லயன்ஸ் கிளப் ஆப் இராஜபாளையம்ஹால்,சங்கரன் கோவில் ரோடு, INTUC. நகர் அருகில், இராஜபாளையம்.அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்படுவர்கள் உடனடியாக அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் படுவார்கள், அறுவை சிகிச்சைசெய்து கொள்பவர்களுக்கு விழிலென்ஸ் (IOL) பொருத்துதல், உணவு, தங்குமிடம்,மருந்துகள் மற்றும் போக்குவரத்து செலவு அனைத்தும் இலவசம். அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நாளில் மறு கண் பரிசோதனை செய்யப்படும்.இம்முகாமிற்கு வரும் போது ஆதார் அடையாள அட்டை அல்லது ரேசன் கார்டு நகல் ) அவசியம் கொண்டு வந்து கொடுக்கவும்.சக்கராஜாகோட்டை ராஜுக்கள் சங்கம்சக்கராஜகோட்டை, இராஜபாளையம்.
ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்த்ர ப்ரதிஷ்டா டிரஸ்ட் இராஜபாளையம்.ஸ்ரீ சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதிஜகத்குரு ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள், ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ ஸ்வாமிகள்ஆகியோர்களின் பரமானுக்ரஹத்துடன் அயோத்தியில் ஸ்ரீ ராம ஜன்ம பூமியில் ஸ்ரீ ராம விக்ரஹ பிரதிஷ்டை செய்யும் நன்னாளான 22.01.2024 MONDAY 10.30 A.M TO 12.30 P.M''ஸ்ரீ ராம தாரக நாம ஜபம்"நடைபெற உள்ளது. ஆஸ்திக மஹா ஜனங்கள் அனைவரும் இணைந்து ஜபித்து ஸ்ரீ ராமபிரான் அருள் பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கிறோம்.இடம்: ஸ்ரீமதி P.S.K.ருக்மணியம்மாள் அரங்கத்தில் (காந்தி கலைமன்றம் வளாகம் ) இப்படிக்குபி.ஆர்.வெங்கட்ராம ராஜாகுறிப்பு: அயோத்தியில் நடைபெறும் ஸ்ரீ ராம விக்ரஹ பிரதிஷ்டை பூஜையானது நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
இராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் கண்மாய்கள், நீரோடைகள், ஆறுகளில் நீர்வரத்து அதிகம் காணப்படுகிறது. பொங்கலை ஒட்டி பள்ளி தொடர் விடுமுறையால் மாணவர்கள் சிறுவர்கள்ஆர்வம் மிகுதியால் உரிய பாதுகாப்பும், கண்காணிப்பும் இன்றி நீச்சல் உள்ளிட்ட சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பெரியவர்கள் கண்காணிப்பின்றி சிறுவர்கள் இத்தகைய விளையாட்டில் ஈடுபட்டு நீர் நிலைகளில் சிக்கி உயிரிழக்கும் செய்திகள் வருகின்றது
விருதுநகர் - சிவகாசி, அழகாபுரி மற்றும் செவல்பட்டி வழியாக மீசலூர் செல்லும் ரெயில்வே இருப்புப்பாதை - விருதுநகர் நெடுஞ்சாலையை இணைக்கும் எல்.சி எண்:410 Rly KM: 544/400-500 என்ற எண்ணுள்ள இரயில்வே இருப்பு பாதையில் உள்ள வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது.12.01.2024 அன்று காலை 08.00 மணி முதல் மாலை 06.00 வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், அந்த ஒரு வழிதடத்தை மட்டும் மூடுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.எனவே, பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட வழியை விடுத்து, மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறு இரயில்வே நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் - சிவகாசி ரெயில்வே இருப்பு பாதையில் (சாத்தூர்-விருதுநகர் சாலை அமைந்துள்ள) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், 11.01.2024 ஒரு நாள் மட்டும் வழித்தடம் மூடப்படுவதாக - இரயில்வே நிர்வாகம் அறிவிப்புவிருதுநகர்- சாத்தூர் விருதுநகர் நெடுஞ்சாலையை இணைக்கும் எல்.சி எண்:407 Rly KM: 541/200-300 (விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள சாத்தூர் லெவல் கிராஸிங் கேட் ) என்ற எண்ணுள்ள இரயில்வே இருப்பு பாதையில் 11.01.2024 அன்று காலை 08.00 மணி முதல் மாலை 06.00 வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், அந்த ஒரு வழிதடத்தை மட்டும் மூடுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.எனவே, பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட வழியை விடுத்து, மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறு இரயில் நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2023-2024-ஆம் ஆண்டிற்கான திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதானது, திருநங்கையர் தினமான ஏப்ரல் 15ம் தேதி தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் கீழ்கண்ட தகுதிகளையுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.விருதின் பெயர்: திருநங்கையருக்கான முன் மாதிரி விருதுதகுதிகள்:1. திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும்.2. குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவி இருக்க வேண்டும்.3. திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.4. இவ்விருதிற்கான விண்ணப்பங்கள் (https://awards.tn.gov.in) இணையதளம் மற்றும் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.விண்ணப்பதாரரின் கையேட்டில் இணைக்கப்பட வேண்டியவை:1. பொருளடக்கம் மற்றும் பக்க எண்.2. உயிர் தரவு (Bio Data) மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ -23. சுயசரிதை4. தனியரை பற்றிய விவரம் (ஒரு பக்க அளவில்).5. தனியர் பெற்ற விருதுகளின் விவரம் (விருது பெற்றிருப்பின் அதன் விவரம்/விருதின் பெயர்/ யாரிடமிருந்து பெற்றது மற்றும் பெற்ற வருடம்).6. சேவை பற்றிய செயல்முறை விளக்கம் (புகைப்படத்துடன்).7. சேவையை பாராட்டி பத்திரிக்கை செய்தி தொகுப்பு.8. சேவை ஆற்றியதற்கான விரிவான அறிக்கை9. சமூக சேவையாளரின்/சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விபரம்.10. சமூக பணியாளர் இருப்பிடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான சான்று.11. கையேடு இரண்டு நகல்கள் தமிழில்.திருநங்கையை அங்கீகரிக்கும் பொருட்டு இவ்விருது வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சமர்ப்பிக்க இறுதி நாள்: 31.01.2024 ஆகும். இறுதி நாளிற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்க ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 31.01.2024-க்குள் கருத்துருக்கள் சமர்ப்பிக்க வேண்டிய முகவரிமாவட்ட சமூகநல அலுவலர்,மாவட்ட சமூகநல அலுவலகம்,மாவட்ட ஆட்சியர் வளாகம்,விருதுநகர் மாவட்டம்.
விருதுநகர் மாவட்டத்தில் ஜனவரி-2024 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 19.01.2024 அன்று காலை 11.00 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.மேற்படி, கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
2023-24 ஆம் ஆண்டுக்கான பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் 09.01.2024 அன்று விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளயிலும், கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் 10.01.2024 அன்று சிவகாசி தி.ஸாண்டர்டு /பயர்ஓர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கலை (ம) அறிவியல் கல்லூரியிலும் நடத்தப்பெற உள்ளன. பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளில் அனைத்து அரசு/ தனியார்/ அரசு உதவி பெறும்/ பதின்ம மேல்நிலைப் பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மட்டும் பங்கேற்கலாம்.கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளில் அனைத்து அரசு/ தனியார் / அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகள் / பொறியியல்/ மருத்துவக் கல்லூரிகள்/ பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம்.ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் ஒரு பள்ளி ,கல்லூரியிலிருந்து மொத்தம் 3 மாணவர்கள் பங்கேற்கலாம். பள்ளி மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களைத் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியர் ஒப்பத்துடனும் , கல்லூரி மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களைத் தாங்கள் பயிலும் கல்லூரியின் முதல்வர் ஒப்பத்துடன் விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரிலோ, அஞ்சல் முலமாகவோ, மின்னஞ்சல் - (tamilvalar.vnr@tn.gov.in) முலமாகவோ 08.01.2024 க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.போட்டிக்கான தலைப்புகள் முன்னதாக அறிவிக்கப்பட மாட்டா. போட்டி தொடங்கப்படும் நேரத்திற்குச் சற்று முன்னர் தான் தலைப்பு தெரிவிக்கப்படும்.போட்டிகளின் முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பரிசுகள் வழங்கவுள்ளார்.பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10000/-, இரண்டாம்பரிசு ரூ.7000/-, மூன்றாம் பரிசு ரூ.5000/- என்ற வீதத்தில் பரிசுத்தொகைகள் வழங்கப்பட உள்ளன. மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளப் பரிந்துரை செய்யப்பெறுவர்.மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு இரண்டாம் வகுப்பு தொடர் வண்டிக் கட்டணம் பயணப்படியாக வழங்கப்பெறும். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.15,000/- இரண்டாம் பரிசாகரூ.12,000/- மூன்றாம் பரிசாகரூ.10,000/- வழங்கப்பெறும்.
முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடர்பாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள், மருத்துவ முகாம்கள், கருத்தரங்கங்கள் ஆகியன மாநிலம் முழுவதும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிகழ்ச்சிகளை நடத்துவதற்கென தமிழ்நாடு முதலமைச்சரால் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்குழுக்களில் ஒன்றான 'சட்டமன்ற நாயகர்-கலைஞர்' என்ற குழு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் திரு.மு.அப்பாவு அவர்கள் தலைமையில் சட்டமன்றப் பேரவை துணைத் தலைவர், அரசு தலைமைக் கொறடா, முன்னாள் சட்டமன்றப் பேரவைத் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்/நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட பள்ளிகள்/கல்லூரிகளில் “நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது” என்ற தலைப்பின்கீழ் கருத்தரங்கினை நடத்துவதென இக்குழு தீர்மானித்துள்ளது.அந்த அடிப்படையில், இதற்கென 4 துணைக் குழுக்களும்பேரவைத் தலைவர் அவர்களால் அமைக்கப்பட்டுள்ளன.சட்டமன்றப் பேரவையின் முன்னாள் தலைவர் திரு.இரா.ஆவுடையப்பன் மற்றும் சட்டமன்றப் பேரவை முன்னாள் செயலாளர் திரு.மா.செல்வராஜ் ஆகியோர் உள்ளடங்கிய துணைக் குழுவானது, சட்டமன்றப் பேரவை உயர் அலுவலர்களுடன், விருதுநகர் மாவட்டத்தில் 2 பள்ளிகள் மற்றும் 1 கல்லூரியில் மேற்குறிப்பிட்ட தலைப்பில் கருத்தரங்கினை வருகிற 10-1-2024 (புதன்கிழமை) அன்று நடத்துவதென முடிவெடுத்துள்ளது.இக்கருத்தரங்கு 10-1-2024 (புதன்கிழமை) அன்று காலை 10-00 மணியளவில் விருதுநகர் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், நண்பகல் 12-00 மணியளவில், விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நாடார் நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் மற்றும் பிற்பகல் 3-00 மணியளவில் விருதுநகர் இந்து நாடார் செந்திகுமார நாடார் கல்லூரியிலும் நடைபெறும்.இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்/நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பள்ளி/கல்லூரி மாணவ, மாணவியர் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.