நகரின் திட்டப் பணிகள் மிக மிக சுணக்கத்துடனும், சரியான திட்டமிடலும் இன்றி அனைத்து பகுதிகளும், குண்டும் குழியுமாக உள்ளன. மக்களும், வாகனங்களும் போக்குவரத்திற்கு அன்றாடம் பரிதவித்து விபத்துகளைச் சந்தித்து வருகின்றனர். இதை பல தடவை நேரிலும், தபால் மூலமும், தகுந்த அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டி கோரிக்கை வைத்தும், எந்த முன்னேற்றமும் இல்லை. ஆகவே, 10.09.2022ல் நடைபெற்ற இணைச்சங்கங்களின் ஆலோசனைக் கூட்ட முடிவின்படிஅரசின் கவனம் ஈர்க்கும் வண்ணம் ,17.09.2022 சனிக்கிழமை காலை 6.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை ஒருநாள் முழுகடை அடைப்பு நடைபெறும்.அனைத்து வணிகர்களும், பொதுமக்களும் ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இந்திய குடிமகன்களாகிய ஒவ்வொருவருக்கும்வாக்காளர் அட்டை எப்படி முக்கியமாக இருந்ததோ அதுபோன்று தற்போது ஒவ்வொருவருக்கும் ஆதார் அட்டை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை கூட18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் தான் உள்ளது, ஆனால் ஆதார் அட்டை18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கும் கொடுக்கப்படுகிறது. ஆதார் அட்டையில் ஏதேனும் சிறு தவறு நேர்ந்தால் கூட அது பாதகமாகிவிடும், அதேசமயம் ஆதார் அட்டையில் ஏதேனும் பிழை இருப்பின்,அதனை திருத்தம் செய்வது குறித்து அச்சப்படவேண்டிய தேவையில்லை. ஆதார் அட்டையில் திருத்தத்தங்களை மேற்கொள்ள அரசு பல்வேறு வழிவகைகளை செய்திருக்கிறது. இதுவரை நாம் ஆதார் அட்டைகளில் பெயர், பிறந்த தேதி, முகவரி, போன்ற எதையாவது திருத்தம் செய்ய வேண்டுமானால் வங்கிகளுக்கோ அல்லது தலைமை தபால் நிலையங்களுக்கோ தான் செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது நீங்கள் அப்படி வெளியில் அலைய வேண்டிய தேவையில்லை, ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்ள, உங்கள் ஊரிலேயே இருக்கும் தபால் நிலையத்தின் கிளைகளுக்கு சென்றே மாற்றி கொள்ளமுடியும். தற்போது தபால் துறை கிராமின் தாக் சேவாக்களிடம் டிரான்ஸாக்ஷன் செய்வது, உள்ளிட்ட பல சேவைகளுக்கான அணுகலை வழங்கியுள்ளது, டெபாசிட் போன்ற பல சேமிப்பு திட்டங்களில் பணத்தை டெபாசிட் செய்துகொள்ளவும், ஜிடிஎஸ் மூலம் ஆதார் அட்டையை பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இங்குள்ள வங்கிகளில் ஆதார் அட்டையில் எத்தகைய திருத்தம் செய்யவேண்டுமோ அதனை செய்துகொள்ளலாம் வேண்டுமென்றால் இங்கு புதிய ஆதார் கார்டையும் பெற்றுக்கொள்ள முடியும்.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும்,மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும் மேற்கண்ட இன மக்களில் 10 நபர்களைக் கொண்ட குழுவாக அமைத்து நவீன சலவையகங்கள் அமைக்க தலா ரூ.3.00 இலட்சம் நிதி அளிக்கப்படுகிறது.பயனாளிகளுக்கான தகுதிகள்மற்றும் நிபந்தனைகள்:1. குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும்2. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (Ministry of Micro, Small and Medium Enterprises) துறையின் மூலம் பயிற்சிபெற்ற நபர்களைக் கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும்.3. 10 நபர்களைக் கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும்.4. குழு உறுப்பினர்கள் பி.வ., மி.பி.வ., (ம) சீ.ம.இனத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.5. குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.இத்திட்டத்தில் பங்குகொள்ள ஆர்வமாக உள்ள சலவைத்தொழிலில் முன் அனுபவமுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மக்கள் குழுவாகக் கொண்டு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.பதிவு பெற்ற குழுக்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்நல அலுவலகத்தில் 20.09.2022-க்குள் அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில், தொழிற்பழகுநர் பயிற்சியாளர்கள் சேர்க்கை முகாம் 2022 வருகின்ற 12.09.2022 அன்று அரசினர் தொழிற்பயிற்சிநிலையம், சூலக்கரை,விருதுநகரில் காலை 9.30 மணிமுதல் மாலை 5.00 மணி வரை நடைபெற இருக்கின்றது. இதில், பிரபல முன்னனி நிறுவனங்கள் மற்றும் MSME யில் பதிவுபெற்ற விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொழிற்நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஐடிஐ பயின்று தேர்ச்சி பெற்று, இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி பெறதாவர்கள் இத்தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் சேர்ந்து பயன்பெறலாம். மேலும் தொழிற்பழகுநர் பயிற்சி காலத்தில் உதவித்தொகையாக ரூ.7000 முதல் ரூ.10,000 வரை வழங்கப்படும். எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி, I A S. அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பாக குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் ஆகியோருக்கு, குடற்புழு நீக்கும் திட்டத்தின் கீழ் “தேசிய குடற்புழு நீக்க நாள்“ முகாம் நமது விருதுநகர் மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முறையாக 09.09.2022 வெள்ளிக்கிழமை அன்றும் மற்றும் விடுபட்டவர்களுக்கு 16.09.2022 வெள்ளிக்கிழமை அன்றும் நடைபெற உள்ளது.இத்திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்தில் மொத்தம் 5,95,026 குழந்தைகளுக்கும் மற்றும் 1,33,884 எண்ணிக்கையில் 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்களுக்கும் ஆக மொத்தம் 7,28,910 பயனாளிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.குடற்புழு தொற்றினால் ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு மற்றும் சுகவீனம், படிப்பில் கவனமின்மை, பசியின்மை, இரத்தசோகை ஆகியவை ஏற்படும். எனவே, குடற்புழு தொற்றிலிருந்து விடுபட அல்பெண்டசோல் மாத்திரைகளை உட்கொள்வது மிகவும் அவசியம்.மதிய உணவு சாப்பிட்ட பின் அரை மணி நேரம் கழித்து இம்மாத்திரைகள் Ïடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இதனால் எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படாது. இம்மாத்திரைகள் மாவட்டத்தில் உள்ள 1,743 பள்ளிகளில் ஆசிரியர்கள் மூலமும் மற்றும் 1,504 அங்கன்வாடி மையங்களில் அங்கன்வாடி பணியாளர்கள் மூலமும், 1 வயது முதல் 19 வயது வரையிலான குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்படும். ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திலுள்ள குழந்தைகளுக்கு அக்காப்பகத்திலேயே அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்படும்.1 வயது முதல் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் ½ மாத்திரை அளவு வழங்கப்படும். 2 வயதிற்கு மேற்பட்ட 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் 1 மாத்திரை அளவு வழங்கப்படும். சிறிய குழந்தைகளுக்கு மாத்திரையை நன்றாக பொடி செய்து தண்ணீருடன் கலந்து கொடுக்கப்படும். குழந்தைகள் நோய் வாய்ப்பட்டிருந்தால் மாத்திரை வழங்கப்படாது. எனவே, பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்களது குழந்தைகளை குடற்புழு தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி I A S , அவர்கள் தெரிவித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும் மேற்கண்ட இன மக்களில் 10 நபர்களைக் கொண்ட குழுவாக அமைத்து ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க தலா ரூ.3.00 இலட்சம் நிதி அளிக்கப்படுகிறது.பயனாளிகளுக்கான தகுதிகள்மற்றும் நிபந்தனைகள்:1. குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும்2. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (Ministry of Micro, Small and Medium Enterprises) துறையின் மூலம் பயிற்சிபெற்ற நபர்களைக் கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும்.3. விதவை,கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கு முன்னுரிமை அளித்தல் வேண்டும்.4. 10 நபர்களைக் கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும்.5. 10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருக்க வேண்டும்.6. குழு உறுப்பினர்கள் பி.வ., மி.பி.வ., (ம) சீ.ம.இனத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.7. குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.இத்திட்டத்தில் பங்குகொள்ள ஆர்வமாக உள்ள தையல் தொழிலில் முன் அனுபவமுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மக்கள் குழுவாகக் கொண்டு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.பதிவு பெற்ற குழுக்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்நல அலுவலகத்தில் 20.09.2022-க்குள் அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,I A S அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரிடமிருந்து அவர்களது ஆதார் எண்ணை பெற்று வாக்காளார் விபரங்களுடன் இணைக்கும் பணியானது 01.08.2022 முதல் நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 16,26,710 வாக்காளர்களில் 31.08.2022 வரை 7,00,484 வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணினை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளனர்.வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணினை இணைக்காத பொதுமக்கள் தங்களது ஆதார் எண்ணினை தேசிய வாக்காளர் சேவை இணையதளம் (http://www.nvsp.in), வாக்காளர் உதவி செயலி அல்லது வாக்காளர் இணைய தளம் https://voterportal.eci.gov.in ஆகியவற்றின் மூலம் தாங்களே ஆதார் எண்னை இணைத்துக்கொள்ளலாம் .வாக்காளர்கள் அளிக்கும் ஆதார் எண்ணானது பொது வெளியில் எக்காரணம் கொண்டும் காட்சிப்படுத்தப்படாது. ஆதார் விபரங்கள் ஆதார் ஆணையத்தின் உரிமம் பெற்ற சேமிப்பகத்தில் மட்டுமே சேமிக்கப்படவுள்ளது. இதன் மூலம் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணினை இணைக்காத வாக்காளர்களின் வசதிக்காக 04.09.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் ஆதார் எண்ணினை இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே வாக்காளர்கள் இவ்வாய்ப்பினை தவறாது பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி, I A S , அவர்கள் தெரிவித்துள்ளார்.
நிகழும் மங்களகரமான விகாரி வருடம் ஆவணி மாதம் 17ம் தேதி (02.09.2022) வெள்ளிக்கிழமை சஷ்டி திதி நன்னாளில் காலை 8.15 மணிக்கு மேல்ஸ்ரீ ரீலஸ்ரீ சாந்தானந்த சுவாமிகளின் 33 வது குருபூஜை விழா இராஜபாளையம் சிரஞ்சீவி மலைச்சாரலில் அமைந்துள்ள அவரது நினைவாலயத்தில் நடைபெற உள்ளது.பேராசிரியர்திரு. சொ. சொ. மீ. சுந்தரம் அவர்கள்மதுரை,கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள்.ஆன்மீக அன்பர்களும் சீடர்களும் கலந்து கொண்டு ஸ்ரீ சுவாமிகளின் குருவருள் பெற்றுய்ய வேண்டுகிறோம்.இப்படிக்குஸ்ரீ P.R. வெங்கட்ராம ராஜாதலைவர், ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள் அறக்கட்டளை, இராஜபாளையம்
தமிழக முதலமைச்சர் அவர்களின் சீரிய நல்லாட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின்படி ,மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி., I A S , அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.1. களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ் , பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.2. சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம். 3. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர் நிலைகள் மாசு படுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள்,பந்தல்கள்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.4. சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயன சாயம்,எண்ணை வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது, மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த , மக்கக் கூடிய , நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.5. சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும்.6. விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.விருதுநகர் மாவட்டத்தில் கீழ்காணும் இடங்கள் விநாயகர் சிலைகளைகரைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.1. விருதுநகரைச் சுற்றியுள்ள இடங்களிலிருந்து வரும் சிலைகள் கல் கிடங்கில்2. ஆவுடையாபுரத்திலிருந்து வரும் சிலைகள் அங்குள்ள உபயோகப்படுத்தாத கிணற்றில்3. சிவகாசி நகர் புறங்களில் இருந்து வரும் சிலைகள் தெய்வானை நகரில் உள்ள உபயோகப்படாத கிணற்றில்4. எம். புதுப்பட்டி, மாரனேரி ஊர்களில் இருந்து வரும் சிலைகள் மடவார் வளாகம் கண்மாயில்5. அருப்புக்கோட்டை நகர் புறத்தில் இருந்து வரும் சிலைகள் பந்தல்குடி ரோட்டிலுள்ள பெரிய கண்மாயில்6. பந்தல்குடியை சுற்றியுள்ள இடங்களில் இருந்து வரும் சிலைகள் பந்தல்குடி பெரிய கண்மாய்7. இராஜபாளையம் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள சிலைகள் ஜெயவிலாஸ் பஸ் கம்பெனிக்கு எதிர்புறம் உள்ள வடுகவூரணியில்8. அம்மாபட்டி, ஏழாயிரம் பண்ணை, ஆலங்குளத்திலிருந்து வரும் சிலைகள் அப்பகுதியிலுள்ள உபயோகப்படுத்தப்படாத கிணறு, தெப்பம் மற்றும் ஆலங்குளம் குவாரி பகுதியில்9. ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலிருந்து வரும் சிலைகள் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகத்தில்10. ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவிலிருந்து வரும் சிலைகள் திருவண்ணாமலை கோனகிரி குளத்தில்11. கிருஷ்ணன் கோவில் சிலைகள் ராமச்சந்திராபுரம் கண்மாயில்12. குன்னூர் சிலைகள் குன்னூர் கண்மாயில்13. வத்திராயிருப்பு மற்றும் கூமாபட்டி சிலைகள் மகாராஜபுரம் மற்றும் கூமாபட்டி பெரியகுளம் கண்மாய்.
விருதுநகர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 2022 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 26.08.2022 அன்று காலை 10.30 மணியளவில்; விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. மேற்படி கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம்.மேலும், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் அலுவலர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முக கவசம் அணிந்தும், கிருமிநாசினி பயன்படுத்துமாறும், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.