உலக யோகா தினம்
இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தினம் பள்ளி தாளாளர் திருமதி ஆனந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக வாழும் கலை அமைப்பின் சார்பில் திருமதி சுகந்தி, திருமதி.விஜி அவர்கள் கலந்து கொண்டனர். மேலும் எல்.ஐ.சி வெங்கட் நாராயண ராஜா, LIC மேலாளர் மற்றும் துணை மேலாளர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பு செய்தனர்.பள்ளி முதல்வர் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்கள் விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி சிறப்பு செய்தார்.
எல் ஐ சி வெங்கட்நாராயணராஜா தனது உரையில் யோகாவின் தந்தை என அழைக்கப்படுபவர் சிவபெருமான் என்றும், தற்கால யோகாவின் தந்தை பதஞ்சலி முனிவர், மற்றும் திருமலை கிருஷ்ணமாச்சாரியார் என்றும் எடுத்துரைத்தார்
5000 ஆண்டுகள் பழமையான இக்கலையை கற்றுக் கொள்வதோடு தொடர்ந்து பயிற்சியும் செய்ய வேண்டும் என்றார். இந்த ஆண்டின் பொன்மொழியாக 'வசு தேவ குடும்பகம்' .இதன் பொருள் "உலகம் ஒரு குடும்பம் " என்பது தான் என்றும் எடுத்துரைத்தார்.
இன்று உலகம் முழுவதும் 190 நாடுகளில் மக்கள் யோகா தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.
முந்தைய அமெரிக்கா, குளிர்பானங்களின் கூடாரமாக இருந்தது .இன்றைய அமெரிக்கவில் எங்கு பார்த்தாலும் யோகா மையங்களும், தியான மையங்களும் தான் நிறைந்து காணப்படுகின்றன என்றும் கூறினார்.
மேலும் மாணவர்களுக்கு சிறு சேமிப்பை ஊக்குவிக்கும் விதமாக L.I.C. சார்பில் உண்டியல்கள் வழங்கப்பட்டன.
விழாவில் மாணவர்களுக்கு எளிதான யோகா வழிமுறைகளும், பயிற்சிகளும் , வாழும் கலை அமைப்பின் சார்பாக செய்து காண்பிக்கப் பட்டன.
0
Leave a Reply