25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


முக்கிய அறிவிப்பு

Apr 10, 2024

ஏப்ரல் 1 முதல் ஜிமெயில் சேவையில் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன

ஜிமெயில் சேவையை நம்பித்தான் உங்களுடைய ஒவ்வொரு நாளும் ஓடுகிறதென்றால்.. கூகுளின் இந்த இமெயில் சேவை இல்லமால் உங்களால் முழுதாக ஒரு நாளைக்கூட கடக்க முடியாதென்றால்.. ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய ஜிமெயில் விதிகளை பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.2024 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், புதிய அங்கீகாரத் தேவைகளை பூர்த்தி செய்யாதை பல்க் செண்டர்களால் அனுப்பப்படும் இமெயில்கள் ஆனது கூகுள் நிறுவனத்தால் நிராகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.ஜிமெயில் பயனர்களின் இன்பாக்ஸிற்கு வரும் ஸ்பேம் இமெயில்களின் அளவை குறைப்பதோடு சேர்த்து, ஜிமெயில் பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டே கூகுள் நிறுவனம் இந்த கடுமையான விதியை நடைமுறைப் படுத்தி உள்ளது.அடுத்ததாக.. 24 மணி நேரத்திற்குள் தனிப்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட்களுக்கு 5,000 அல்லது அதற்கு மேற்பட்ட மெசேஜ்களை அனுப்பும் எவருமே.. பல்க் செண்டர்கள் தான் என்று கூகுள் நிறுவனம் வரையறை செய்கிறது. எத்தனை துணை டொமைன்கள் பயன்படுத்தப்பட்டாலும், ஒரே முதன்மை டொமைனில் இருந்து அனுப்பப்படும் அனைத்து இமெயில்ககளும் இதில் அடங்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.இப்படியாக ஒருமுறை பல்க் செண்டர் என்கிற ஸ்டேட்டஸை பெற்றுவிட்டால், அதற்கு எந்த விதமான காலாவதி தேதியும் இல்லாததால், அது நிரந்தரமாகி விடும். அதாவது ஒருவர் ஒருமுறை பல்க் செண்டர் என்ற முத்திரை குத்தப்பட்டுவிட்டால் அவர் எப்போதுமே ஒரு பல்க் செண்டர் என்று தான் அடையாளம் காணப்படுவார், பல்க் செண்டர் வழிகாட்டுதல்கள் ஆனது தனிப்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட்களுக்கு அனுப்பப்படும் இமெயில்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றாலும் கூட, அனைத்து அனுப்புநர்களும் கூகுளின் புதிய விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும். இதில் கூகுள் வொர்க்பிளேஸ் அக்கவுண்ட்களை பயன்படுத்துபவர்களும் அடங்குவர்!கடைசியாக.. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கடுமையான டொமைன் அங்கீகார விதிகளும் (Strict Domain Authentication Rules) அமலுக்கு வரும். ஜிமெயிலின் க்ரூப் ப்ராடெக்ட் மேனேஜர் ஆன நீல் குமரன் பல பல்க் செண்டர்கள் தங்களின் சிஸ்டம்களை சரியான முறையில் செக்யூர் மற்றும் கான்ஃபிகரேஷன் செய்யவில்லை. இதனால் அட்டக்கர்களால் எளிதாக தங்களை மறைந்து கொள்ள முடிகிறது என்கிறார். இதனால்தான், ஏப்ரல் 1 முதல், பல்க் செண்டர்கள் அனைவரும் தங்கள் இமெயிலை "சிறந்த நடைமுறைகளைப்" பயன்படுத்தி அங்கீகரிக்க வேண்டும். அதாவது டொமைன் அடிப்படையிலான மெசேஜ் அங்கீகாரம் (Domain-based Message Authentication), ரிப்போர்டிங் மற்றும் கன்ஃபார்ம்மென்ஸ் (Reporting & Conformance), டொமைன்கீஸால் அடையாளம் காணப்பட்ட மெயில் (DomainKeys Identified Mail) மற்றும் செண்டர் பாலிசி ஃப்ரேம்வொர்க் (Sender Policy Framework) போன்ற சிறந்த நடைமுறைகளை பயன்படுத்த வேண்டும்ஜூன் 1 முதல் இன்னொரு புதிய ஜிமெயில் விதியும் நடைமுறைக்கு வரும்! மேற்கண்ட புதிய ஜிமெயில் விதிகளை தவிர்த்து 2024 1 ஜூன் ஆம் தேதி முதல் பல்க் செண்டர்கள் அனைவரும் ஒரே கிளிக்கில் அன்சப்ஸ்க்ரைப் செய்யும் விருப்பத்தை (One-click unsubscribe option) சேர்க்க வேண்டும். மெயிலிங் லிஸ்ட்டில் (Mailing List) இருந்து அன்சப்ஸ்க்ரைப் முயற்சிக்கும் எவருக்குமே, அது மிகவும் சுலபமான செயல்முறையாக இருக்க வேண்டும் என்பதே கூகுள் நிறுவனத்தின் நோக்கமாகும். மேலும் ஜூன் 1 முதல் பல்க் செண்டர்கள் தங்களுக்கு வரும் அன்சப்ஸ்க்ரைப் கோரிக்கைகளை (Unsubscribe requests) 48 மணி நேரத்திற்குள் செயல்படுத்த வேண்டும்

Apr 05, 2024

COLLEGE DAY CELEBRATION

A.K.D. DHARMA RAJA WOMEN'S COLLEGE & SMT. A.K.D. SAKKANIAMMA COLLEGE OF EDUCATION FOR WOMEN. RAJAPALAIYAM   COLLEGE DAY CELEBRATIONDate: 6 April 2024, SaturdayVenue: College premises ProgrammeTime: 5.30 p.m  ,Date: 06.04.2024Prayer -: College ChoirWelcome Address- Sri. A.K.D.KRISHNAMA RAJU Secretary & CorrespondentAnnual Report-: Dr. S. JAMUNA ,Principal A.K.D. Dharma Raja Women's CollegeDr.V.AHILA RUBY SHANTHAKUMARI ,Principal Smt. A.K.D. Sakkaniamma College of Education for WomenIntroduction of the Chief Guest--, Dr. S. MANJULA DEVIVice-Principal & HOD of BBA A.K.D. Dharma Raja Womens' CollegeChief Guest Address: & Prize distributionDr. CHRISPHIN KARTHICKScientist, Indian Institute of Astrophysics Bangalore.Vote of Thanks : Ms. M. CHITRA, III B.Com., Students ChairmanCultural Programme  

Mar 29, 2024

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள் மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்குச் சாவடி அலுவலரிடம் அளித்து தங்களது வாக்கினை செலுத்திக் கொள்ளலாம்

19.04.2024- அன்று நடைபெறவுள்ள மக்களவை பொதுத் தேர்தலில், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும், அவர்கள் வாக்களிப்பதற்கு முன்னர், வாக்குச் சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.இந்நேர்வில், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத அத்தகைய வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்பிப்பதற்காக, பின்வரும் மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில்  ஏதேனும் ஒன்றை வாக்குச் சாவடி அலுவலரிடம் அளித்து தங்களது வாக்கினை செலுத்திக் கொள்ளலாம் என இந்திய  தேர்தல் ஆணையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.1. ஆதார் அட்டை,2. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை,3. புகைப்படத்துடன் கூடிய வங்கிஃஅஞ்சலக கணக்குப் புத்தகங்கள்,4. தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை,5. ஓட்டுநர் உரிமம்,6. வருமான வரி நிரந்தர கணக்கு அட்டை எண்(PAN Card)7. தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை,  8. இந்திய கடவுச்சீட்டு9. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்,10. மத்திய/மாநில அரசுகள்/பொதுத் துறை  பொது நிறுவனங்களின்  தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்,11. பாராளுமன்ற /சட்டமன்ற/சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை,12. இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட         இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை.           மேலும், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையால் வாக்காளரின் அடையாளம் மெய்ப்பிக்கப்படுகின்ற போது, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையிலுள்ள அச்சுப்பிழைகள் எழுத்துப் பிழைகள் முதலியவற்றை பொருட்படுத்த தேவையில்லை. மற்றொரு சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலரால் வழங்கப்பட்டுள்ள வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை, வாக்காளர் ஒருவர் அளிப்பாராயின், அந்த வாக்காளர் வாக்களிப்பதற்காக வந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்காளர் பட்டியலில் அவரின் பெயர் இடம் பெற்றிருக்குமாயின், அத்தகைய வாக்காளர் புகைப்பட அட்டைகளையும் ஏற்றுக் கொள்ளலாம். புகைப்படம் பொருந்தாததால் வாக்காளரின் அடையாளத்தை மெய்ப்பிக்க இயலாத நேர்வில், வாக்காளர் மேலே  குறிப்பிடப்பட்டுள்ள மாற்று புகைப்பட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளிக்க வேண்டும்.வெளிநாடு வாழ் இந்தியர்களைப் பொறுத்தவரை,1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துச் சட்டத்தின் 20A-ஆம் பிரிவின் கீழ் பதிவு பெற்றுள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள், அவர்களின் கடவுச்சீட்டிலுள்ள விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, அவர்களின் அசல் கடவுச்சீட்டின் அடிப்படையில் மட்டுமே (வேறெந்த அடையாள ஆவணமும் அல்லாது) அவர்களின் அடையாளம் வாக்குச்சாவடியில் மெய்ப்பிக்கப்பட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 27, 2024

தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அவர்கள் தகவல்

விருதுநகர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான பணிகளில் பணிபுரிந்து வரும் வெளி மாநில தொழிலாளர்கள் அவரவர் மாநிலங்களில் நடைபெற இருக்கும் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் நாளன்று அவர்களின் சொந்த ஊரில் இருக்க வசதியாக உரிய அறிவுரைகள் வழங்கி நடவடிக்கை எடுக்குமாறும், அவர்கள் தத்தமது வாக்குரிமையை செயல்படுத்துவதை உறுதி செய்யுமாறும் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிர்வாகத்தினர் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.மேலும் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிர்வாகத்தினர் தங்கள் தொழிற்சாலை மற்றும் கட்டுமான பணிகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களையும் அவர்களது ஜனநாயக உரிமையான வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் கூட்டங்கள் நடத்தி அறிவுரைகள் வழங்குவதுடன் பணியிடங்களில் பிரதான இடங்களில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு வாசங்கள் பொருந்திய பதாகைகள் வைக்க வேண்டும் என்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 26, 2024

குழந்தைகளைபாதிக்கும் பொன்னுக்கு வீங்கி, அம்மைக்கட்டு நோய்

வெயில் காலங்களில் குழந்தைகளுக்கு அம்மை நோய் பாதிப்பு அதிகரிக்கிறது. சமீப காலங்களாக9 மாத குழந்தை முதல்12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் வரை அம்மை நோய் பாதிப்பால் அவதிப்படுகின்றனர்.? பொன்னுக்கு வீங்கி, அம்மைக்கட்டு நோய் போன்ற பல பெயர்களைக் கொண்டுள்ள இந்த பாதிப்பு குழந்தைகளை அதிகம் தாக்கும் நோய்களில் ஒன்றாக உள்ளது. மம்ப்ஸ் வைரசினால் ஏற்படும் இந்த அம்மைக்கட்டு குழந்தைகளுக்கு செவி மடலுக்குக் கீழ், உள் அமைந்துள்ள உமிழ்நீர் சுரப்பி வீக்கம் ஏற்பட்டு, இரு கன்னங்களிலும் வலியுடன் வீக்கம் ஏற்படும். ஆரம்பத்தில் இதைக் கண்டறிய முடியாது. அம்மைக்கட்டு பாதிப்பு ஏற்பட ஒரு வார காலத்திற்கு முன்பு இருந்தே காய்ச்சல், தலைவலி, உடல் பலவீனம், கன்னத்தில் வீக்கத்துடன் வலி போன்றவை அறிகுறிகளின் மூலம் தெரிந்துக் கொள்ள முடியும்.நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளை விரைவாக அம்மைக்கட்டு பாதிப்பு தாக்குகிறது. இதோடு பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து வரக்கூடிய உமிழ்நீர் மற்றும் இருமல், தும்மல் போன்றவற்றின் மூலமும் நோய்க்கிருமிகள் குழந்தைகளுக்கு எளிதில் பரவுகிறது. இதனால் தான் அம்மை நோய் பாதிக்கப்பட்டவுடனே தனிமைப்படுத்துவதோடு, கிருமி நாசினியான வேப்பிலை இலைகளை விரித்து படுக்கச் சொல்கின்றனர். பொதுவாக அம்மைக்கட்டு பாதிப்பு என்பது வெயில் காலத்தில் அதிகளவில் பரவக்கூடும். இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் மதிய வேளைகளில் குழந்தைகளை வெளியில் அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும்.கோடை விடுமுறைக்காலத்தில் உட்புற விளையாட்டுகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். உடலில் நீரேற்றம் குறைந்தாலும் அம்மைப்பாதிப்பு அதிகம் ஏற்படும் என்பதால் தண்ணீர் அதிகளவில் குடிக்க வைக்க வேண்டும்.உடல் சோர்வு ஏற்படாமல் இருக்க இளநீர், நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் போன்றவற்றை கோடைக்காலத்தில் கட்டாயம் உணவு முறையில் சேர்க்க வேண்டும். இதுபோன்ற முறைகளை நீங்கள் பின்பற்றினாலும் அம்மைக்கட்டு பாதிப்பு ஏற்படும் சமயத்தில், குழந்தைகளைத் தனிமைப்படுத்தி வைப்பதோடு, வீங்கிய கன்னங்களில் சில மருத்துகளையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக செந்சந்தணத்துடன் பனங்காயின் சாறு சேர்த்து கலந்துக் கொண்டு கன்னத்தில் பூசவும். இதன் குளிர்ச்சித் தன்மை குழந்தைகளுக்கு எரிச்சலைக் குறைப்பதற்கு உதவியாக இருக்கும். இதோடு வேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்து அம்மைக்கட்டு பாதிப்பால் வீங்கியுள்ள கன்னங்களில் பூச வேண்டும். இதில் உள்ள கிருமிநாசினி பண்புகள் பாதிப்பைக் குறைப்பதோடு வலியையும் குறைப்பதற்கு உதவியாக இருக்கும்.

Mar 25, 2024

கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

பாராளுமன்றத் தேர்தல் 2024 நடைபெறுவதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 31.03.2024 அன்று காலை 07.00 மணியளவில் கல்லூரி மாணவ/மாணவியரைக் கொண்டு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முதல் சூலக்கரை மேடு வரை (ஆண்களுக்கு 10 கி.மீ தூரமும், பெண்களுக்கு 8 கி.மீ தூரமும்) நடைபெற உள்ளது.மேற்படி மாரத்தான் போட்டியில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அரசு/அரசு உதவிபெறும்/தனியார் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள் கலந்து கொள்ளலாம் எனவும், இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவ/மாணவியர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,500 மற்றும் மூன்றாம் பரிசு ரூ.5,000 வழங்கப்படும் எனவும் மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 21, 2024

ஸ்ரீ ராஜகணபதி,ஸ்ரீ ஆதிசங்கரபகவத்பாதாசார்யர், ஸ்ரீசாரதாம்பாளுக்கு ஸம்வத்ஸராபிஷேகம்

நிகழ்ச்சி நிரல்காலை 7.00 மணி-குருவந்தனம், கணபதி பூஜை, அனுக்ஞை புண்யாஹவாசனம், மஹாஸங்கல்பம்காலை 7.15 மணி-ஸ்ரீராஜகணபதிக்கு அதர்வஷீர்ஷ பாராயணத்துடன் அபிஷேகம்காலை 7.45 மணி-ஸ்ரீ ஆதிசங்கரபகவத்பாதாசார்யர்க்கு ஸ்ரீ ருத்ர பாராயண அபிஷேகம்காலை 8.30 மணி-ஸ்ரீ சாரதாம்பாளுக்கு ஸ்ரீதுர்கா, ஸ்ரீ சூக்த பாராயண அபிஷேகம்காலை 9.00 மணி-ஸஹஸ்ரநாம அர்ச்சனைகாலை 10.00 மணி-தீபாராதனை, ப்ரசாதம்மாலை 6.30 மணி-ஸஹஸ்ரநாம, த்ரிஷதீ அர்ச்சனைகள்மாலை 7.15 மணி-ரதோற்சவம்ஸ்ரீ குருப்யோ நம:தக்ஷிணாம்னாய சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதீச்வர அனந்த ஸ்ரீ விபூஷித ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்யஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகள் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள்அவர்களின் பரிபூர்ண ஆசிகளுடன்நிகழும் மங்களகரமான 1198ம் ஆண்டு சோபகிருது வருஷம் பங்குனி 09ம் தேதி (22.03.2024) வெள்ளிக்கிழமையும் திரயோதசி திதியும் மகம் நக்ஷத்திரமும் கூடிய சுபதினத்தில்ஸ்ரீ ராஜகணபதி,ஸ்ரீ ஆதிசங்கரபகவத்பாதாசார்யர், ஸ்ரீசாரதாம்பாளுக்கு ஸம்வத்ஸராபிஷேகம் நிகழ்ச்சி நிரல்படி நடைபெற உள்ளது.ஆஸ்தீக மஹாஜனங்கள் திரளாக கலந்துகொண்டு இறையருளுக்கு பாத்திரர்களாகுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.இப்படிக்குஸ்ரீ பி.ஆர்.வெங்கட்ராம ராஜா தலைவர் -ஸ்ரீ சாரதா சமிதி,இராஜபாளையம் & ஸ்ரீவில்லிபுத்தூர்

Mar 21, 2024

மலையடிப்பட்டி ரயில்வே கேட் நாள் மார்ச் 22-ம் தேதி மூடப்படுகிறது

இராஜபாளையம் சஞ்சீவிமலை இடையே ரயில் பாதையில் மலையடிப்பட்டி ரயில்வே கேட் (எண்.448) செல்கிறது. இந்த கேட் பராமரிப்பு பணிக்காக நாளை மார்ச் 22-ம் தேதி காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மூடப்படும். இதற்கு மாற்றுப்பாதையான ரயில்வே மேம்பால ரோட்டை பயன்படுத்தி கொள்ளலாம். என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Mar 20, 2024

85 வயது பூர்த்தியடைந்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு மூலம் தங்களது வாக்கினை செலுத்திட “படிவம் 12D” -ஐ பூர்த்திசெய்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் 25.03.2024 ற்குள் நேரில்; வழங்கி பயன்பெறலாம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 85 வயது பூர்த்தியடைந்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வாக்குப்பதிவு நாளான 19.04.2024 அன்று தங்களுக்கு உரிய வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு மூலம் தங்களது வாக்கினை செலுத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.இதற்காக தங்கள் பகுதிக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலரால் நேரில் வழங்கப்படும் “படிவம் 12D” -ஐ பூர்த்திசெய்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் 25.03.2024 ற்குள் நேரில்; வழங்கி பயன்பெறலாம் என 34- விருதுநகர் பாராளுமன்ற தொகுதி, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S,  அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 19, 2024

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு, தகுதியான முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

 எதிர்வரும்  19.04.2024 அன்று நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு, விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த திடகாத்திரமுள்ள முன்னாள் படைவீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.இப்பணிக்காக மதிப்பூதியம் மற்றும் தினசரி உணவுப்படி அரசால் நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் வழங்கப்படும். தேர்தல் பணிக்கான உச்சக்கட்ட வயது வரம்பு 65ஆகும்.எனவே விருப்பமுள்ள விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த திடகாத்திரமுள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களது அசல் படைவிலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் திருவில்லிபுத்தூரிலுள்ள விருதுநகர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் உடனடியாக நேரில் வருகை தந்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்

1 2 ... 5 6 7 8 9 10 11 ... 19 20

AD's



More News