இராஜபாளையம் கம்பன் கழக அறக்கட்டளைகம்பன் விழா(44ஆம் ஆண்டு)2024 பிப்ரவரி 25, ஞாயிறு காலை 9.45 மகிக்கு ஆனந்தா கார்டன்ஸ், தென்காசி ரோடு, இராஜபாளையம்.தலைப்பு :கம்பனில் பெரிதும் மிளிர்வது உறவின் அருமையா? நட்பின் பெருமையா?இலக்கிய இன்பம் பருக!!
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் அரசு துறைகளின் மூலம் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்”, திட்டம் முகாமானது 21.02.2024 அன்று காலை 9 மணி முதல் மறுநாள் 22.02.2024 அன்று காலை 9 மணி வரை நடைபெறவுள்ளது. 21.02.2024 அன்று மாலை 04.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை வத்திராயிருப்பு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறும் மக்களைச் சந்திக்கும் கூட்டத்தில் வத்திராயிருப்பு வட்டத்திலுள்ள பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைக்களுக்கான மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக கொடுக்கலாம். இதற்கான நடவடிக்கைகள் தொடர்புடைய துறைகள் மூலம் விரைந்து எடுக்கப்படும். மாலை 6 மணி முதல் முதல்நிலை அலுவலர்களுடன் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து இரவில் தங்கி பணியாற்றவும் உள்ளனர்.இரண்டாம் நாள் (22.2.2024) காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை வத்திராயிருப்பு வட்டத்திலுள்ள உள்ளாட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை தொடர்பான செயல்பாடுகள் மற்றும் குடிநீர் விநியோகம், போக்குவரத்து மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யவுள்ளனர்.எனவே, வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் தெரிவித்து, அரசின் திட்டங்கள் அனைத்தும் தங்கள் பகுதிக்கு முழுமையாக கிடைத்திட இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாடு அரசு, சமச்சீரான அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியினை குறிக்கோளாகக் கொண்டு மக்கள் நலத்திட்டத்திங்களை முனைப்புடன் செயல்படுத்திவருகிறது. அவ்வகையில், சுயவேலைவாய்ப்பினை ஊக்குவிப்பதற்காக அரசின் உத்திரவாதத்துடன் கூடிய மானியக் கடனுதவி திட்டங்களை எளிமைபடுத்தி எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையில் வருகிற 23.02.2024 வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் “மானியத்துடன் கூடிய கடன் வசதி முகாமினை” மாவட்ட தொழில் மையம் மூலமாக சிறப்பாக நடத்த உத்தேசித்துள்ளது.அதன்படி, விருதுநகர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் வருகிற 23.02.2024 அன்று காலை 10.00 மணியளவில் மானியத்துடன் கூடிய கடன் வசதி முகாமானது மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், அனைத்து பொதுத்துறை/தனியார் துறை வங்கிகளின் மண்டல மேலாளர்கள், வங்கி கிளை மேலாளர்கள மற்றும் மானிய கடனுதவி திட்டத்தினை நடைமுறைபடுத்திவரும் மாவட்ட தொழில் மையம் மற்றும் இதர பல்வகை கடன் வழங்கும் நிறுவனங்கள் ஆகிய அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து அனைத்து துறை மானிய கடனுதவி திட்டங்களின் வரையறைகளை எடுத்துரைத்து அன்றைய தினமே கடன் தொகை விடுப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள உள்ளன.புதிதாக கடனுதவி கோரி விண்ணப்பிக்க உள்ளவர்களும், ஏற்கனவே விண்ணப்பித்து கடன் விடுவிப்பு ஆணையினை எதிர்நோக்கியுள்ள நபர்களும் மேற்கண்ட கடன் உதவி இயக்க முகாம் நடைபெறும் நாளான 23.02.2024 அன்றே கடனுதவி பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எனவே குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் சுயதொழில் தொடங்கிட மானியக் கடனுதவி கோரி ஏற்கனவே விண்ணப்பித்த அனைத்து தரப்பினரும் தொழிற் கடன் வேண்டி புதிதாக விண்ணப்பிக்க உள்ள நபர்களும் மேற்படி முகாமில் கலந்து கொண்டு உடனடியாக பயன்பெறலாம்.மேலும், கூடுதல் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில்; மையம், பொது மேலாளர்அவர்களை நேரிலோ அல்லது 9080078933 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ/மாணவியர்கள் பயன்பெறும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம் 15.02.2024 (வியாழக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அனைத்து வட்டாரங்களிலும் நடைபெறவுள்ளது.அதன்படி, வத்திராயிருப்பு வட்டத்தில் கிருஷ்ணன்கோயில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்திலும், விருதுநகர் வட்டத்தில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்திலும், வெம்பக்கோட்டை வட்டத்தில் செவல்பட்டி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியிலும், திருச்சுழி வட்டத்தில் ரெட்டியார்பட்டி வட்டார அலுவலகத்திலும், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் திருவில்லிபுத்தூர் ஸ்ரீ பாலகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், இராஜபாளையம் வட்டத்தில் ராம்கோ பொறியியல் கல்லூரியிலும், சாத்தூர் வட்டத்தில் சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், நரிக்குடி வட்டத்தில் ரெட்டியாபட்டி வட்டார அலுவலகத்திலும், காரியாபட்டி வட்டத்தில் சேது இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியிலும், அருப்புக்கோட்டை வட்டத்தில் ஸ்ரீ சௌடாம்பிகா பொறியியல் கல்லூரியிலும், சிவகாசி வட்டத்தில் எஸ்.எப்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெறவுள்ளது.கல்வி கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்பத்தின் நகல் மற்றும் கல்வி கடன் விண்ணப்ப நகல், மாணவ/மாணவியர் மற்றும் பெற்றோரின் இரண்டு புதிய புகைப்படம், வங்கி புத்தக நகல், இருப்பிட சான்று நகல், வருமான சான்று நகல், ஜாதி சான்று நகல், பான் கார்டு நகல், ஆதார் கார்டு நகல், கல்லூரியிலிருந்து பெறப்பட்ட bonafide சான்றிதழ் மற்றும் கல்விக்கட்டண விவரம், பத்து பனிரெண்டாம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டபடிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல்பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட கல்லூரி சேர்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். முகாமில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து 15 தினங்களுக்குள் தகுதியான அனைவருக்கும் கடன் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.
அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் இராஜபாளையம்.மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம் அழைப்பிதழ் மாசி மாதம் 02ம் தேதி முதல் மாசி மாதம் 12ம் தேதி வரை (14.02.2024 24.02.2024) 14.02.2024 புதன்கிழமை (மாசி மாதம் 02ம் தேதி) காலை 5.30 மணிக்கு ---- மங்களவாத்யம், அனுக்ஞை, ஸங்கல்பம், விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம்.மதியம் 3.15 மணிக்கு---- வாஸ்து சாந்தி, ம்ருத்சங்கிரஹணம். இரவு - 6.15 - 7.45 -ராமமந்திரத்தில் கொடி கண்திறப்பு பூஜை, தொடர்ந்து வீதிவலம் வந்து திருக்கோவிலை அடைய உள்ளது. அங்குரார்ப்பணம், ஆச்சார்ய, ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர், சோமாஸ்கந்தர், பலிபீடம், கொடிமரம், அஸ்த்ர தேவர் ரக்ஷாபந்தனம்.ப்ரம்மோற்சவ காலங்களில் தினசரி காலை 5.00 மணிக்கு திருவனந்தல் காலசாந்தி பூஜையும் காலை 8.00 மணிக்கு திக்பலி, யாகசாலை பூஜை, மூலவர்,உற்சவருக்கு விசேஷ அபிஷேகங்கள் தினசரி பன்னிரு திருமுறை பாராயணம் நடைபெற உள்ளது.நிகழ்த்துபவர் : தேவார இசைமணி சங்கரன்கோவில் திரு. S. சுப்பிரமணியன் ஓதுவார் அவர்கள்.மிருதங்கம் : இலயநாதமணி திரு. K.N. ராதாகிருஷ்ணராஜா, ராஜபாளையம்.மங்கள இசை: ஸ்ரீராம் இசைக்குழு திரு. R.நவநீதகிருஷ்ணன் அவர்கள். இப்படிக்கு பி.ஆர். வெங்கட்ராம ராஜா பரம்பரை அறங்காவலர்.
இராஜபாளையம் தாலுகா மக்களின் மின்சாரம் தொடர்பான நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சனைகள், இதர குறைகளை தீர்க்கும் வகையில், விருதுநகர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் லதா, இராஜபாளையம் பொன்னகரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் பிப்ரவரி 13 காலை 11 மணி முதல் 1 மணி வரை குறைகளை கேட்டறிய உள்ளார் என இராஜபாளையம் மின் கோட்ட செயற்பொறியாளர் முத்துராஜ் செய்தி தெரிவித்துள்ளார்.
GRANDPARENTS DAY CELEBRATION.14 / 02 /2024 AT 10 A.M.YOU ARE CORDIALLY INVITEDCORRESPONDENT R. ANANDHIHEADMISTRESS G. JEYABHAVANI
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை துணைத்தலைவர் டாக்டர் நாச்சியாருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. கண் மருத்துவத்தில் அவரது55ஆண்டுகால சேவையை பாராட்டி மத்திய அரசு இவ்விருதை வழங்கியுள்ளது....அரவிந்த் கண் மருத்துவமனையை நிறுவிய இவரது சகோதரர் டாக்டர் வெங்கடசாமியும்,.இம்மருத்துவமனையின் தற்போதைய கவுரவ தலைவரான இவரது கணவர் டாக்டர் நம்பெருமாள்சாமியும் பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள். அந்த வகையில் அரவிந்த் கண் மருத்துவமனையை சேர்ந்த மூவர் இவ்விருது பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்....
ஸ்ரீ N.R.கிருஷ்ணமராஜா அவர்களின் 108-வது பிறந்த நாள் விழா 02-02-2024 & 03-02-2024 (வெள்ளிக்கிழமை & சனிக்கிழமை )திருமிகு. P.R.வெங்கட்ராம ராஜா அவர்கள் (ராம்கோ குரூப் சேர்மன்) முன்னிலையில்"பிரவசன திலகம்" திருக்குடந்தை டாக்டர் ஸ்ரீ உ.வே . வேங்கடேஷ் அவர்கள் ஆன்மீகச் சொற்பொழிவு 02-02-2024 & 03-02-2024 தினமும் மாலை 6-30 மணிக்கு நடைபெறும்.இடம் :ஸ்ரீ N.R.கிருஷ்ணமராஜா மண்டபம், பழையபாளையம், இராஜபாளையம்.தலைப்பு - ''ருக்மணி கல்யாணம்" (02.02.2024, வெள்ளிக்கிழமை ) ,''ஆண்டாள் கல்யாணம்" (03.02.2024,சனிக்கிழமை )அனைவரும் கலந்துகொண்டு ஆன்மீக சொற்பொழிவை கேட்டு மகிழுமாறு கேட்டுக்கொள்கிறோம்.பிறந்தநாள் விழாக் குழுவினர் இராஜபாளையம்.