25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமையல் குறிப்பு

Nov 03, 2023

வாழைக்காய் பஜ்ஜி போட...

வாழைக்காய் பஜ்ஜி போட ,வாழைக்காய் சீவும் கத்தியில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளுங்கள், அதுக்கு அப்புறம்வாழைக்காயை சீவுங்க அழகான வடிவமாக வரும் வாழைக்காய்...!குக்கரில் சாதம் வைக்க வேண்டாம், அது உடம்புக்கு நல்லது கிடையாது சர்க்கரை நோய் வருவதற்கு காரணம், வடிச்ச சாதத்தை சாப்பிட வேண்டும். பிரியாணி அந்த மாதிரி மட்டும் குக்கர் யூஸ் பண்ணுங்க.பச்சரிசியில் வெண்பொங்கல் பண்ண வேண்டாம். அப்படி வெண்பொங்கல் செய்தாலும் ஒரு தடவை சாப்பிடுகிற மாதிரி வைத்துக் கொள்ளுங்கள், புழுங்கல் அரிசியில் வெண்பொங்கல் செய்து சாப்பிடTry பண்ணுங்க*பச்சை மிளகாய் அதிகம் இருந்தால் அழுகுவதற்குள் வெந்நீரில் கொதிக்கவைத்து, பின் வெயிலில் உலர்த்தி எடுக்கவும். இதனை மோர்க்குழம்பு. அவியல், சட்னி அரைக்கும்போது உபயோகித்தால் நிறம் மாறாமல் வெண்மையாக இருப்பதுடன் காரமும் குறையாமல் இருக்கும்.பால் பிழிந்தெடுத்ததேங்காய் துருவலை வெளியே கொட்டாமல் அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து வறுத்து உப்பு, புளி, காரம் பூண்டு பற்கள் சேர்த்து சுவையான துவையல் செய்யலாம்.

Nov 02, 2023

பச்சை மிளகாயை புதியதாக வைத்திருக்க .....

நம் உணவுகளுக்கு மசாலாப் படுத்துவது முதல் ஊறுகாய் மற்றும் சட்னி வரை, பச்சை மிளகாய் முக்கிய பொருளாக உள்ளது.  பச்சை மிளகாயை வாங்கும் போது,சுருக்கங்கள் அல்லது புள்ளிகள் உள்ளதை விட புதியதாக இருப்பதை வாங்குங்கள். மேலும், பச்சை மிளகாய் சேமித்து வைக்கும் போது முற்றிலும் உலர்ந்ததாக இருக்க வேண்டும். ஈரமான மிளகாய் நீண்ட காலம் நீடிக்காது.ஒரு பிளாஸ்டிக் பை அல்லது காற்று புகாத டப்பாவை எடுத்து அதில் பச்சை மிளகாயை சேமித்து வைக்கவும். இந்த பையை குளிர்சாதன பெட்டியின் காய்கறி பிரிவில் வைக்கவும். குளிர்ச்சியான வெப்பநிலை, உங்கள் பச்சை மிளகாய் நீண்ட நேரம் புதியதாக இருக்கும். சேமித்து வைக்க காற்று புகாத கொள்கலன்களை எப்போதும் பயன்படுத்தவும், ஏனெனில் அவை ஈரப்பதத்தை எளிதில் பிடிக்கும் பச்சை மிளகாயைகாற்று புகாதபைகள்அல்லது டப்பாக்களை பயன்படுத்துங்கள். தடுக்கப்படாவிட்டால் அழுகும் வாய்ப்பு உள்ளது. பச்சை மிளகாயை சேமித்து வைத்த பிறகு, அடிக்கடி பார்த்து கொள்ளுங்கள்.  மிளகாய் அழுகும் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அப்புறப்படுத்தவும். வெவ்வேறு வகையான பச்சை மிளகாய்களுக்கு, எப்போதும் வெவ்வேறு பைகள் அல்லது டப்பாக்களை பயன்படுத்துங்கள். நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால், மசாலா அல்லது சுவை மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.பச்சை மிளகாயை இயற்கையான சூரிய ஒளியில் உலர்த்தி, காற்று புகாத டப்பாக்களில் சேமித்து, குளிர்ந்த மற்றும் இருண்ட இடத்தில் வைக்கவும். ஒரு ஜாடியில் வினிகரை நிரப்பி அதில் பச்சை மிளகாயை சேர்க்கவும். இவர் மிளகாயை நீண்ட நாட்கள் வைத்திருக்க உதவும். ஜாடியை இறுக்கமாக மூடி, குளிர்சாதன பெட்டியில் சேமிக்கவும். இந்த வழியில், உங்கள் மிளகாயை நீண்ட நேரம் புதியதாக வைத்திருக்க முடியும். சேமிக்க எப்போதும் சுத்தமான பாத்திரத்தை பயன்படுத்தவும். இது மாசுபடுவதைத் தடுக்கும் மற்றும் மிளகாயின் ஆயுளை அதிகரிக்கும். பச்சை மிளகாய் மீதம் இருந்தால் காயவைத்து சுத்தம் செய்யவும். அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு ஒரு காகித துண்டு பயன்படுத்தவும். பச்சை மிளகாயை ஒரு பிளாஸ்டிக் பையில் துளைகளுடன் வைக்கவும், இது காற்றோட்டத்தை அனுமதிக்கும் மற்றும் அழுகுவதைத் தடுக்கும். பச்சை மிளகாயை நறுக்கி, உறைய வைக்கவும், பின்னர் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பான பையில் சேமிக்கவும். .

Oct 30, 2023

ரவா லட்டு சுவையாக இருக்க

வாழைத்தன்டை வில்லைகளாக நறுக்கி பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து குலுக்கிவைத்தால் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான சத்து நிறைந்த ஊறுகாய் ரெடி.ரவா லட்டு செய்யும்போது சர்க்கரை சுவைக்கு கால் பங்கு பால் பவுடர் சேர்த்தால், லட்டின் சுவை சூப்பராக இருக்கும்.வாழைக்காயின் காம்புப் பகுதியை தண்ணீரில் மூழ்கும்படி வைத்தால், வாழைக்காய் மூன்று நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்.பூண்டு கெட்டுப்போகாமல் இருக்க கொஞ்சம் கேழ்வரகை சேர்த்து வைத்தால் புழுக்காமல் நீண்ட நாட்கள் வரை இருக்கும்.வெங்காயத்தை நறுக்கி அதன் மீது வெண்ணெய் தடவி வைத்தால் வெங்காயம் வாடாமல் இருக்கும்.

Oct 25, 2023

காலிஃபிளவரை சமைக்கும் போது 

வாழை இலையை பின்புறமாகதனலில் காட்டிய பிறகு சாப்பாட்டு பொட்டணம் கட்டினால் இலை எவ்வளவு மடக்கினாலும் கிழியாது.காலிஃபிளவரைசமைக்கும்போது சிறிது பால்சேர்த்தால் வெள்ளை நிறம்மாறாது. பச்சை வாடை தெரியாது.மூலச்சூடு உள்ளவர்கள் தினமும் உணவில் சின்னவெங்காயம்சேர்த்துவருவது நல்லது. வெள்ளை வெங்காயமும் வதக்கி சாப்பிடலாம். கருணைக்கிழங்கு காரல் தன்மை குறைய அத்துடன் எலுமிச்சை அல்லது நாரத்தை இலைகள் நான்கினை சேர்த்து வேகவிடவும்.உளுந்து வடைக்கு ஊற வைக்கும்போது ஒரு கிலோ உளுந்துக்கு100 கிராம் பச்சரிசி என்ற விகிதத்தில் அரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் அதிகமாக எண்ணெய் குடிக்காது.உளுந்து மாவில் வடை செய்யும்போது முட்டைக்கோஸைப் பொடியாக சேர்த்தால் வாசனை, சுவை இரண்டுமே கூடும். 

Oct 24, 2023

மாங்காய் தொக்கு சுவையாக செய்ய...

மாங்காய்  தொக்கு செய்யும்போது நெல்லிக்காய் அளவு வெல்லம் போட்டுக் கிளற, மாங்காய் தொக்கு சுவையாக இருக்கும்.இட்லி மாவு புளித்து விட்டால்2(அ)3 டம்ளர் தண்ணீர் விட்டு சிறிது நேரம் கழித்து பார்த்தால் நீர் மேலே தெளிந்து நிற்கும். அதை வடித்துவிட்டால் புளிப்பு போய்விடும்.அதிக கனமுள்ள கல்லை தோசைக்கும், கன மில்லாத மெலிதான கல்லை சப்பாத்திக்கும் உபயோகிக்க வேண்டும்.சாதம் வடிக்கும்போது சற்று குழைந்துவிட்டால் உடனே சிறிதளவுநல்லெண்ணெய்யைச்சேர்த்தால் மேலும் குழையாமல் இருக்கும்.கேழ்வரகை ஊற வைத்து அரைத்துப்பால் எடுத்து. அல்வாபோன்று செய்யலாம். அதிக ருசியும், ஆரோக்கியமும் இருக்கும்.

Oct 20, 2023

பூரிக்கிழங்கு செய்யும்போது .....

பூரிக்கிழங்கு செய்யும்போது அதில் பொட்டுக்கடலையோடு சோம்பு சேர்த்து அரைத்து கலந்தால் அதன் சுவையே தனிஆவிவரும் வரை சூடாக்கி பின்னர் குளிரவிட்ட எண்ணெய்யில் ஊறுகாய் போட்டால் எளிதில் பூஞ்சணம் பிடிக்காதுவாழைக்காயை ஃபிரிட்ஜில் வைக்கும் போது, அப்படியே வைக்காமல் இரண்டாக நறுக்கி வைத்தால் கறுக்காமல் புதிது போல் இருக்கும்சப்பாத்தியை சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் எப்போதும் சூடாக இருக்கும்.உளுந்து வடை செய்யும்போது சிறிது ஐஸ்கட்டியை சேர்த்து அரைத்து தேங்காய் துருவல் கலந்து வடை செய்தால் வித்தியாசமான சுவையில் இருக்கும்.

Oct 19, 2023

ஊறுகாய் கெட்டுப் போகாமல் இருக்க

கொதிக்கும் தண்ணீரை ஊற்றி பாதாமை ஊற வைத்தால் அதன் தோல் எளிதாக உரிந்து வரும். ஊறுகாயில் சிறிதளவு வினிகர் சேர்த்தால் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்.இட்லி மாவுடன் சிறிதளவு கடலை மாவு சேர்த்து தோசை ஊற்றினால் தோசை மொறுமொறுவென்றும்,பொன்னிறமாகவும் இருக்கும்.பருப்புப் பொடி செய்யும் போது துவரம் பருப்புடன் கொஞ்சம் கொள்ளுப் பயறையும் சேர்த்து கொண்டால், பொடி மிகவும் சுவையாக இருக்கும். வாய்வு பிரச்னைக்கு நல்ல மருந்தாக இருப்பதுடன் கொழுப்பையும் குறைக்கும்.வேர்க்கடலையை வறுத்து தூளாக்கி ஒரு பாட்டிலில் சேர்த்துக்கொள்ளவும். கிரேவி வகைகள், சரியான பதத்தில் இல்லாமல் சிறிது நீர்த்து இருக்கும் போது, இரண்டு டேபிள்ஸ்பூன் வேர்க்கடலை தூளைக் கலந்திட, கெட்டியாகவும் சுவையாகவும் கிரேவி இருக்கும்.

Oct 18, 2023

பொரியல் மீதம் ஆகி விட்டால்

முட்டை தோல் எளிதாக உரிக்க வர முட்டை வேக வைக்கும் போது சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்.பொரியல் அடி பிடிக்கும் போது உடனே கரண்டி வைத்து கிளராமல் உடனே 2ஐஸ் கட்டிகளை சேர்த்து கலந்து கொடுத்தால் அடி பிடித்தது உடனே சரியாகும்.பொரியல் வகைகள் மீதம் ஆகி விட்டால் அதில் ரெண்டு முட்டையை உடைத்து ஊற்றி ஆம்லெட் போட்டு பாருங்கள், ருசி அருமையாக இருக்கும்.காரக்குழம்பு, புளி குழம்பு வகைகள் செய்யும்,போது காரம் கொஞ்சம் அதிகமானால், அதுக்கு வெல்லம் சிறிதளவு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினால் காரம் குறைந்து, ருசியும் கூடும்.பொரித்த அப்பளம் மீதி ஆகி விட்டால் ஒரு டைட்டான டப்பாவில் போட்டு,fridge ல் வைத்து விட்டால் சுவை மாறாமல் அப்படியே இருக்கும்.சாதம் வெள்ளையாகவும், உதிரியாகவும் வர, அரிசி ஊற வைக்கும் போது சில ஐஸ்கட்டிகள் சேர்த்து ஊறவைத்தால் சாதம் உதிரியாக வரும்.

Oct 17, 2023

வாழைக்காய் பொடிமாஸ்

வாழைக்காய் பொடிமாஸ்செய்யும்போது கடைசியாக 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்தால் சுவை கூடும்.வெந்தயக் குழம்பு கொதித்து இறக்கி வைக்கும்போது, ஒரு தேக்கரண்டி எள்ளு பொடியை போட்டால் குழம்பு மிகவும்வாசனையுடன் இருக்கும். அல்லது ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டால் ருசி கூடும்.பால் ,தயிர் ஆடையை தனியேஎடுத்து ஃபிரிட்ஜில் வைத்து சிறிது நேரம் வைத்து கடைந்தால் வெண்ணெய் உருண்டு நன்றாகவரும்.இட்லிக்கு மாவு ஆட்டும்போது ஒருவெண்டைக்காய் சேர்த்து ஆட்டினால் இட்லி பூப்போல இருக்கும்..பாத்ரூமில் ஏதாவது மூலையில் ஒரு துண்டு பச்சைக் கற்பூரம் வைத்தால் பாத்ரும் மணம் வீசும்.முருங்கைக்காய் நீண்ட நாள் வாடாமல் இருக்க, சாம்பாரில் சேர்க்கும் அளவு துண்டுகளாக நறுக்கி காற்று புகாத கவர் அல்லது டப்பாவில் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வாடாமல் அப்படியே இருக்கும்.

Oct 10, 2023

மோர் மிளகாய்

மோர் மிளகாய் தயாரிக்கும்போது அத்துடன் பாகற்காய்களையும் வில்லைகளாக அரிந்து போட்டு வற்றலாக்கலாம். பாகல் வற்றல் காரமுடனும், மிளகாய் சிறு கசப்புடன் சுவை மாறி ருசியாக இருக்கும்.அரிசி குருணையில் உப்புமாசெய்தால், குருணை பாதி வெந்து கொண்டிருக்கும்போது, சம அளவுவறுத்த  சேமியாவைக் கொட்டி வெந்ததும் இறக்கி வைத்து, அரைமூடி எலுமிச்சம்பழம் பிழியவும். இந்த டூ-இன்-ஒன் உப்புமா, புதுமையான சுவையோடுஇருக்கும்.வெந்தயக்கீரை சமைக்கும்போது சிறிது வெல்லம் சேர்த்தால்  அதிலுள்ள கசப்பு சுவை நீங்கி   விடும்.பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கி நெய்யில் பொரித்து போட்டால் சுவை கூடும்.வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்கியபின் அரைத்தால், சட்னி கசக்காமல் ருசிக்கும்.

1 2 ... 8 9 10 11 12 13 14 ... 21 22

AD's



More News