காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன். I A S., அவர்கள் (25.06.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், தோணுகால் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.2.50 இலட்சம் மதிப்பில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருவதையும், தோப்பூர் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், ரூ.10.16 இலட்சம் மதிப்பில் குளங்கள் தூர்வாரப்பட்டு வரும் பணிகளையும் மற்றும் தர்மபுரம் கிராமத்தில், 15-வது மானிய நிதிக்குழு திட்டத்தின் கீழ், ரூ.7.88 இலட்சம் மதிப்பில் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர்மட்ட நீர் தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டு வருவதையும்,
பின்னர், அத்திக்குளம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.9.77 இலட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடை கட்டப்பட்டு வருவதையும், அத்திக்குளம் கிராமத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், ரூ.5.18 இலட்சம் மதிப்பில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதையும்,புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், ரூ.8.00 இலட்சம் மதிப்பில், சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளதையும் மற்றும் புதுப்பட்டி ஊராட்சியில்மகாத்மாகாந்திதேசியஊரகவேலைஉறுதித்திட்டத்தின் கீழ், ரூ.3.65 இலட்சம் மதிப்பில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுத்தினார்.இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
0
Leave a Reply