25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமையல் குறிப்பு

Jan 30, 2024

பட்டாணி சூப் கெட்டியாக வர

கடுகை வாங்கியதும் லேசாக வறுத்து ஆறியவுடன் டப்பாவில் போட்டுவிட்டு, பிறகு தாளித்தால் கடுகு வெடித்துச் சிதறாது.கருவேப்பிலை நீண்ட நாள் வாடாமலும், நிறம் மாறாமலும் இருக்க, கருவேப்பிலையை தண்ணீரில் அலசி உலர வைத்து, பின்னர் காற்று புகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் 1மாதம் வரை கெட்டு போகாது.சாதம் வெள்ளையாகவும், உதிரியாகவும்  வர, அரிசி ஊற வைக்கும் போது சில ஐஸ்கட்டிகள் சேர்த்து ஊறவைத்தால் சாதம் உதிரியாக வரும்.'தேங்காய் எடுக்க சிரமமாக இருந்தால், தேங்காய் தொட்டியை அடுப்பில் வைத்துலேசாக வாட்டி எடுத்தால் தேங்காய் எளிதாக எடுக்க வரும்.பட்டாணி சூப் செய்யும்போது, ஒரு தேக்கரண்டி அவலை வறுத்து பொடி செய்து, அதில் சேர்த்து கொதிக்க வைத்தால் கெட்டியான சூப் தயார். 

Jan 29, 2024

பூரி நீண்ட நேரம்  உப்பலாக இருக்க.....

பூரி செய்வதற்கு மாவு பிசையும் போது அதனுடன் சிறிதளவு sugar சேர்த்து பிசைந்தால், பூரி நீண்ட நேரம் அப்படியே உப்பலாக இருக்கும்..கீரை கடையல் செய்யும் போது கீரையின் கலர் மாறாமல் இருக்க சிறிதளவு எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் கீரையின் நிறம் மாறாது.பருப்பு வேக வைக்கும் போது பருப்புடன் சிறிதளவு நெய் சேர்த்து வேக வைத்தால் சாம்பார் மிகவும் ருசியாக இருக்கும்..பாகற்காயை நறுக்கி, உப்பு, தயிர் சேர்த்து நீரில் சிறிது நேரம் ஊற வைத்து நன்றாக பிழிய வேண்டும். அதன்பிறகு பொரியல் செய்தால் பாகற்காயின் கசப்பே தெரியாது.மிகுந்துவிட்ட தேங்காய் சட்னியை ரவா தோசை மாவில் கலந்து தோசை வார்த்தால் தோசை மிகவும் ருசியாக இருக்கும்.

Jan 26, 2024

குருமாவுக்கு அரைக்கும் பொது மற்ற மசாலா பொருட்களுடன் தக்காளியையும் சேர்த்து அரைத்தால் குருமா கெட்டியான பதத்தில் வரும்.

சாம்பார் நல்ல கலரா வர ,நல்ல பழுத்த தக்காளி பழம்2எடுத்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். பின்பு சாம்பார் தாளிக்கும் போது தக்காளி விழுதையும் சேர்த்து தாளித்து, சாம்பார் வைத்து பாருங்கள் சுவையும்,கலரும் அருமையாக இருக்கும்.குக்கரில் பருப்பு வேக வைக்கும் போது சிறிதளவு விளக்கெண்ணெய் சேர்த்து வேக வைத்தால்  பஞ்சு போல பருப்பு வெந்து வரும்.குருமாவுக்கு அரைக்கும் பொது மற்ற மசாலா பொருட்களுடன் தக்காளியையும் சேர்த்து அரைத்தால் குருமா கெட்டியான பதத்தில் வரும்.பப்பாளி காய் துண்டுகளை சர்க்கரை பாகில் நாள் கணக்கில் வைத்துவிட்டு, பிறகு அதை கேக், பன் போன்றவைகளில் சேர்த்து டூட்டி புருட்டி தயாரிக்கலாம்.சேனை கிழங்கை வேக வைக்கும் முன், வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து,சிறிது உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுக்கவும். பிறகு நீர் ஊற்றி கொதி வந்ததும், கிழங்கை போடவும். விரைவில் பதமாக வெந்து பக்குவமாகவும், சுவையாகவும் இருக்கும்.அடைக்கு அரைக்கும்போது மரவள்ளிக்கிழங்கை உரித்து சில துண்டுகள் சேர்த்து அரைக்கலாம். உருளைக்கிழங்கையும் துண்டுகளாக்கி போட்டு அரைக்கலாம். இவ்வாறு செய்தால் அடை மொறுமொறுவென்று இருக்கும்.

Jan 25, 2024

சப்பாத்தி மாவு பிசையும்போது....

மீதமான பூரி அல்லது சப்பாத்தி மாவை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது மாவின் மேல் எண்ணெய் தடவி, காற்று புகாமல் மூடி வைத்தால் மாவு கலர் மாறாமல் அப்படியே இருக்கும்.சப்பாத்தி சாஃப்ட் ஆகா வருவதற்கு மாவு பிசையும் போது சிறிது பால் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக வரும்.சப்பாத்தி மாவுடன் சிறிதளவு சமையல் சோடாவை சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.சப்பாத்தியை சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் எப்போதும் சூடாக இருக்கும்.பூரி, சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, வெந்நீர் ஊற்றி ஒரே ஒரு சொட்டு சோடா உப்பை கலந்து பிசைந்தால் பூரி பெரிதாகவும், நன்கு உப்பியும் வரும்.

Jan 24, 2024

சேப்பங்கிழங்கு வறுவல் 

உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு வறுவல் செய்யும்போது மேலாக சிறிது ரொட்டி துாளை தூவினால், கரகரப்பாக, சுவையாக இருக்கும்.எலுமிச்சை சாதம் செய்யும்போது சிறிதளவு இஞ்சியை துருவி, பச்சை மிளகாயுடன் வாணலியில் வதக்கி போட்டால் மணம் சூப்பராக இருக்கும்.உருளைக்கிழங்கு மற்றும் வாழைக்காய் பொடிமாஸ் செய்து இறக்கும்போது கடைசியாக இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்தால் சுவை கூடும்.தேங்காய் சாதம் செய்வதற்கு சற்று முற்றிய தேங்காய் ஏற்றது. எண்ணெய் சிறிதளவு சேர்த்து தேங்காய்த் துருவலை வறுத்தால் போதும்.ரவா தோசை செய்யும்போது அரிசி மாவிற்கு பதில் தேவையான அளவு சாதத்தை மிக்ஸியில் குழைய அடித்து செய்யலாம். ரவா தோசை முறுகலாகவும் இருக்கும். அதன் சுவையும் நன்றாக இருக்கும்.

Jan 23, 2024

வெண்டைக்காய் பொரியல் ருசியாக இருக்க....

வெண்டைக்காய் பொரியல் செய்யும் போது கடைசியாக கடலைமாவு அல்லது வேர்க்கடலை பொடி தூவி அடுப்பை குறைந்த தீயில் வைத்து. கிளறி இறக்கினால்| ருசியாக இருக்கும்.கத்தரிக்காய் போன்ற காய்கறிகள் விரைவில் ஆக்சிஜனேற்றம் அடையக்கூடிய தன்மை உடையது. எனவே கத்தரிக்காயை உப்பு மற்றும் மஞ்சள் தூவி சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து  சேமித்து வைப்பது சிறந்தது.பால் பொங்கி கீழே வடியாமல் இருக்க, பால் காய்ச்சும் பாத்திரத்தின் மேல் ஒரு மரக் கரண்டியை வைத்தால் பால் பொங்கி கீழே வராது.தயிர் புளிக்கின்ற நிலை வரும்போது, அதில் ஒரு துண்டு தேங்காயை போட்டு வைத்தால் தயிர் அதிகமாக புளிக்காது.அரிசியில் பூச்சி வராமல் இருக்க, வர மிளகாய் அல்லது பிரியாணி இலை இதில் ஏதாவது ஒன்றை அரிசியில் போட்டு வைத்தால் பூச்சி வராது.

Jan 19, 2024

ப்ரிட்ஜில் காய்கறி ஸ்டோர் செய்ய...

காலிபிளவர் வெட்டிய பிறகு காற்று புகாத டப்பாவிலும், ப்ரோக்கோலி என்றால் வலை போன்ற பையிலும், முட்டைக் கோசை நறுக்கிய பிறகு நெகிழிப் பையிலும் போட்டு சேமித்துவைப்பது நல்லது. இந்தக்காய்கறிகள் ஈரப்பதத்தை எளிதில் இழக்காது என்றாலும் அதிக உணர்திறன் கொண்டவை .எனவே இதனை இப்படியே வைத்தால் மறுநாள் வரை புதிது போல இருக்கும்.உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட், முள்ளங்கி போன்ற வேர்ப்பகுதியில் விளையக்கூடிய காய்கறிகளை சேமித்து வைக்கும் பொழுது இதனை தண்ணீரில் போட்டு வைப்பது நல்லது. அப்பொழுதுதான் இதன் நிறம் மாறாமல் இருக்கும். நன்கு குளிர்ந்தபுதிய தண்ணீரில் இந்த காய்கறி களை போட்டு இறுக்கமாக மூடாமல் கொஞ்சம் காற்றோட்டமாக உள்ளபடி மூடி வைத்து விடுங்கள். மறுநாள் வரை நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.கொத்தமல்லி, புதினா, கீரை போன்ற இலை வகைகளை குளிர் சாதன பெட்டியில் சேமித்து வைக்கும்பொழுது அதில் உள்ள அழுகிய இலைகள் மற்றும் தண்டுப் பகுதிகளை நீக்கி விட்டு இலைகளை மட்டும் சேமித்து வைக்க வேண்டும்.இதனை காற்று புகாதவாறு சேமித்து வைப்பதை விட ஒரு காகித டிஷ்யூ கொண்டோ அல்லது மெல்லிய காட்டன் துணியை கொண்டு சுற்றி வைப்பது நல்லது. இதனை முடிந்தவரை இரண்டு நாட்களுக்குள் பயன்படுத்தி விடுங்கள்.

Jan 03, 2024

பால் பாயசம் செய்யும்போது பாதம் பருப்பை அரைத்து அதில் சேர்த்தால் பாயசம் சுவையாக இருக்கும்.

.பால் பாயசம் செய்யும்போது பாதம் பருப்பை அரைத்து அதில் சேர்த்தால் பாயசம் சுவையாக இருக்கும்.வெண்டைக்காயை எண்ணெய்யில் வதக்க வேண்டும். அப்படி செய்தால் அதில் இருக்கும் பிசுபிசுப்பு தன்மை நீங்கி விடும். அதன் பின்பு குழம்பில் சேர்த்தால் வழுவழுப்பு இருக்காது. குழம்பும் ருசியாக இருக்கும். சப்பாத்தி மாவு மீது எண்ணெய் தடவி பிரிட்ஜில் வைத்தால் மாவு நிறம் கெடாமல் இருக்கும்.பருப்புப் பொடி செய்யும் போது துவரம் பருப்புடன் கொஞ்சம் கொள்ளுப் பயறையும் சேர்த்து கொண்டால், பொடி மிகவும் சுவையாக இருக்கும். வாய்வு பிரச்னைக்கு நல்ல மருந்தாக இருப்பதுடன் கொழுப்பையும் குறைக்கும்.சவ்சவ் ,பூசணி, கோஸ் போன்ற பொரித்த கூட்டு செய்யும் போது தண்ணீர் அதிகமாக இருந்தால், வறுத்து அரைத்த உளுந்து பொடி சேர்த்தாக் கெட்டிபடும் சுவையாகவும்இருக்கும்.

Jan 02, 2024

பச்சை பட்டாணியை வேகவைக்கும்போது,பட்டாணி பச்சை நிறமாகவே இருக்க…

.பச்சை பட்டாணியை வேகவைக்கும்போது அதில்5 சொட்டு வினிகர் விட்டால், வெந்த பின்பும்பட்டாணி பச்சை நிறமாகவே இருக்கும். காய்ந்த மிளகாயை வறுக்கும் போது நெடி வரும் அவை வராமல் இருக்க. சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது. *தேங்காயை உடைத்தவுடன் கழுவி பின் பிரிட்ஜில் வைக்கவும். அப்படி செய்தால் தேங்காயில்ஏற்படும் பிசுபிசுப்பு இருக்காது. *ஒரு |கொத்து கறிவேப்பிலையைஉருவிவெதுவெதுப்பானநீரில்போட்டுவைத்து,பின்அத்தண்ணீரால் வீட்டை துடைத்தால் ஈஎறும்பு அண்டாது.எந்த இரு இனிப்பு வகையை செய்ய விரும்பினாலும் சர்க்கரையின் அளவை குறைத்துக்கொண்டு கற்கண்டைபொடியாக்கி போட்டால்அதன் சுவை கூடும்.

Jan 01, 2024

 தயிர் கெட்டியாக உறைய.....

பாலை லேசாக சூடுபடுத்தி அரை தேக்கரண்டி சர்க்கரையை கரைத்து ஊற்ற. தயிர் கெட்டியாக உறையும் ,புளிக்கவும்  செய்யாது.வாழைக்காய் வாழைப்பூ, வாழைத்தண்டு இவைகளை சமைக்கும்போது இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டுதாளித்தால், மிகுந்த மணத்துடன் இருக்கும் இட்லி கெட்டியாக இருந்தால் நாலுபச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்ஸ்யில் ஒரு நிமிடம் ஓட விட்டு மாவில் கலந்து வார்த்துப்பாருங்கள். இட்லி பூ மாதி இருக்கும்.சில சமயம் இட்லி, உளுந்து விழுது காணாமல் கல் மாதிரி இருக்கும். அப்போது மாவில்2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கலந்து பின் இட்லி வார்த்தால் மெதுவாக சுவையாக இருக்கும்வற்றல் குழம்பு செய்யும்போது1 துண்டு சுக்கு,1 ஸ்பூன் மிளகு, ஒரு கைப்பிடி கருவேப்பிலை, பூண்டு பல் சேர்த்து அரைத்து,கொதிக்க வைத்து இறக்கி வெங்காய வடகத்தை நெய்விட்டு தாளித்து கொட்டினால் வத்தக்குழம்பினால்  வீடே மணக்கும்

1 2 ... 5 6 7 8 9 10 11 ... 21 22

AD's



More News