25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


சமையல் குறிப்பு

Jan 18, 2024

ப்ரிட்ஜில் காய்கறி ஸ்டோர் செய்ய...

காலிபிளவர் வெட்டிய பிறகு காற்று புகாத டப்பாவிலும், ப்ரோக்கோலி என்றால் வலை போன்ற பையிலும், முட்டைக் கோசை நறுக்கிய பிறகு நெகிழிப் பையிலும் போட்டு சேமித்துவைப்பது நல்லது. இந்தக்காய்கறிகள் ஈரப்பதத்தை எளிதில் இழக்காது என்றாலும் அதிக உணர்திறன் கொண்டவை .எனவே இதனை இப்படியே வைத்தால் மறுநாள் வரை புதிது போல இருக்கும்.உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட், முள்ளங்கி போன்ற வேர்ப்பகுதியில் விளையக்கூடிய காய்கறிகளை சேமித்து வைக்கும் பொழுது இதனை தண்ணீரில் போட்டு வைப்பது நல்லது. அப்பொழுதுதான் இதன் நிறம் மாறாமல் இருக்கும். நன்கு குளிர்ந்தபுதிய தண்ணீரில் இந்த காய்கறி களை போட்டு இறுக்கமாக மூடாமல் கொஞ்சம் காற்றோட்டமாக உள்ளபடி மூடி வைத்து விடுங்கள். மறுநாள் வரை நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.கொத்தமல்லி, புதினா, கீரை போன்ற இலை வகைகளை குளிர் சாதன பெட்டியில் சேமித்து வைக்கும்பொழுது அதில் உள்ள அழுகிய இலைகள் மற்றும் தண்டுப் பகுதிகளை நீக்கி விட்டு இலைகளை மட்டும் சேமித்து வைக்க வேண்டும்.இதனை காற்று புகாதவாறு சேமித்து வைப்பதை விட ஒரு காகித டிஷ்யூ கொண்டோ அல்லது மெல்லிய காட்டன் துணியை கொண்டு சுற்றி வைப்பது நல்லது. இதனை முடிந்தவரை இரண்டு நாட்களுக்குள் பயன்படுத்தி விடுங்கள்.

Jan 02, 2024

பால் பாயசம் செய்யும்போது பாதம் பருப்பை அரைத்து அதில் சேர்த்தால் பாயசம் சுவையாக இருக்கும்.

.பால் பாயசம் செய்யும்போது பாதம் பருப்பை அரைத்து அதில் சேர்த்தால் பாயசம் சுவையாக இருக்கும்.வெண்டைக்காயை எண்ணெய்யில் வதக்க வேண்டும். அப்படி செய்தால் அதில் இருக்கும் பிசுபிசுப்பு தன்மை நீங்கி விடும். அதன் பின்பு குழம்பில் சேர்த்தால் வழுவழுப்பு இருக்காது. குழம்பும் ருசியாக இருக்கும். சப்பாத்தி மாவு மீது எண்ணெய் தடவி பிரிட்ஜில் வைத்தால் மாவு நிறம் கெடாமல் இருக்கும்.பருப்புப் பொடி செய்யும் போது துவரம் பருப்புடன் கொஞ்சம் கொள்ளுப் பயறையும் சேர்த்து கொண்டால், பொடி மிகவும் சுவையாக இருக்கும். வாய்வு பிரச்னைக்கு நல்ல மருந்தாக இருப்பதுடன் கொழுப்பையும் குறைக்கும்.சவ்சவ் ,பூசணி, கோஸ் போன்ற பொரித்த கூட்டு செய்யும் போது தண்ணீர் அதிகமாக இருந்தால், வறுத்து அரைத்த உளுந்து பொடி சேர்த்தாக் கெட்டிபடும் சுவையாகவும்இருக்கும்.

Jan 01, 2024

பச்சை பட்டாணியை வேகவைக்கும்போது,பட்டாணி பச்சை நிறமாகவே இருக்க…

.பச்சை பட்டாணியை வேகவைக்கும்போது அதில்5 சொட்டு வினிகர் விட்டால், வெந்த பின்பும்பட்டாணி பச்சை நிறமாகவே இருக்கும். காய்ந்த மிளகாயை வறுக்கும் போது நெடி வரும் அவை வராமல் இருக்க. சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது. *தேங்காயை உடைத்தவுடன் கழுவி பின் பிரிட்ஜில் வைக்கவும். அப்படி செய்தால் தேங்காயில்ஏற்படும் பிசுபிசுப்பு இருக்காது. *ஒரு |கொத்து கறிவேப்பிலையைஉருவிவெதுவெதுப்பானநீரில்போட்டுவைத்து,பின்அத்தண்ணீரால் வீட்டை துடைத்தால் ஈஎறும்பு அண்டாது.எந்த இரு இனிப்பு வகையை செய்ய விரும்பினாலும் சர்க்கரையின் அளவை குறைத்துக்கொண்டு கற்கண்டைபொடியாக்கி போட்டால்அதன் சுவை கூடும்.

Dec 31, 2023

 தயிர் கெட்டியாக உறைய.....

பாலை லேசாக சூடுபடுத்தி அரை தேக்கரண்டி சர்க்கரையை கரைத்து ஊற்ற. தயிர் கெட்டியாக உறையும் ,புளிக்கவும்  செய்யாது.வாழைக்காய் வாழைப்பூ, வாழைத்தண்டு இவைகளை சமைக்கும்போது இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டுதாளித்தால், மிகுந்த மணத்துடன் இருக்கும் இட்லி கெட்டியாக இருந்தால் நாலுபச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்ஸ்யில் ஒரு நிமிடம் ஓட விட்டு மாவில் கலந்து வார்த்துப்பாருங்கள். இட்லி பூ மாதி இருக்கும்.சில சமயம் இட்லி, உளுந்து விழுது காணாமல் கல் மாதிரி இருக்கும். அப்போது மாவில்2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கலந்து பின் இட்லி வார்த்தால் மெதுவாக சுவையாக இருக்கும்வற்றல் குழம்பு செய்யும்போது1 துண்டு சுக்கு,1 ஸ்பூன் மிளகு, ஒரு கைப்பிடி கருவேப்பிலை, பூண்டு பல் சேர்த்து அரைத்து,கொதிக்க வைத்து இறக்கி வெங்காய வடகத்தை நெய்விட்டு தாளித்து கொட்டினால் வத்தக்குழம்பினால்  வீடே மணக்கும்

Dec 28, 2023

தக்காளியின் தோல் நீக்க..... 

கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.தக்காளியின் தோல் நீக்க தக்காளியின் மேல்பக்கமும் கீழ்ப்பக்கமும் கத்தியால் சிறிது கீறிவிட்டு10 நொடிகள்சுடுநீரில் போட்டு எடுத்தால் தோல் சுலபமாகக் கழன்று விடும்.பஜ்ஜி மாவில் சிறிது வெள்ளை எள், கடுகு, தேங்காய்த்துருவல் மூன்றையும் சேர்த்தால் பஜ்ஜி சுவையாக இருக்கும். *வெங்காய சாம்பார் செய்யும்போது தேங்காயுடன் வெங்காயத்தை வதக்கி அரைத்து குழம்பில் சேர்க்க ருசியும். மணமும் பிரமாதமாக இருக்கும் .உளுந்து அப்பளம் நான்கு எடுத்து அடுப்பில் சுட்டுத் தூளாக்கி, அதில் தயிரை சேர்க்க. திடீர் தயிர் பச்சடி தயார்.

Dec 26, 2023

வாழைப்பழத்தின் காம்பு பகுதி கருக்காமல் இருக்க....

காய்கறி நறுக்குறதிலேயே கஷ்டமான காரியம் கொத்தவரங்கா, பீன்ஸ், வெண்டைக்காய் போன்றவற்றை நறுக்குவது தான். இவைகளை சுலபமாக நறுக்க காயைசுத்தம்செய்தபிறகுமுதலில்காய்களைஒன்றாக சேர்த்து வைத்து ரப்பர் பேண்ட் போட்ட பிறகு நறுக்கி ஒரே நேரத்தில் நிறைய காய்களை சுலபமாக நறுக்கி விடலாம்.இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும், இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும். தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொறு  மொறுப்பாக வரும்.வெந்தயத்தை கறுப்பாக வறுத்து தூள் செய்து காப்பி பொடியில் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை வியாதிஉள்ளவர்களுக்கு நல்லது.சாம்பார் கீரை, புளிப்பு கூட்டு போன்றவற்றை கொதித்து இறக்கும் சமயம் துளி வெந்தய பொடி தூவி இறக்கினால் நல்ல வாசனையாக இருக்கும். உடலுக்கும் ஆரோக்கியம்.வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால் சுற்றிவைத்தால், நான்கு நாட்கள்வரை கருக்காமல் அப்படியே இருக்கும்.

Dec 25, 2023

மீன் குழம்பை பொடி வகைகள் போட்டு செய்வதை விட  அரைத்த மசாலா  போட்டு செய்தால் நன்றாக இருக்கும்.

மீன் குழம்பை பொடி வகைகள் போட்டு செய்வதை விட  அரைத்த மசாலா  போட்டு செய்தால் நன்றாக இருக்கும்.சிக்கன் கிரேவி செய்யும் போது.கிரேவியைஅடுப்பிலிருந்துஎடுப்பதற்கு முன் சிறிது முந்திரியுடன்பால் சேர்த்து அரைத்து கிரேவியில்சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கினால்சிக்கன் கிரேவி ருசியாக இருக்கும்.கறியுடன்உருளைக்கிழங்கைசேர்ந்தால்சுவையாகவும்வாசனையாகவும் இருக்கும்.தந்தூரி சிக்கன் செய்வதற்குசில்லி சிக்கன் பொடி சேர்ப்பதற்குபதிலாகமிளகாய்த்தூள்,மல்லித்தூள்சேர்த்துசெய்தால்தந்தூரிசிக்கன்சுவையாகவும் மிருதுவாகவும் இருக்கும்,வீட்டில் தினமும் வைக்கும் குழம்பு பதார்த்தங்களில் கொஞ்சமா மீந்து விடும். அதை அடுத்த நாள் சூடு செய்வதற்காக தனியாக ஒரு பாத்திரத்தை தேட வேண்டாம். அடுப்பில் தோசை கல் வைத்து சூடானதும் இந்த சிறிய கிண்ணத்தை கல்லின் மீது வைத்து சுற்றிலும் தண்ணீர் ஊற்றி அதன் பிறகு மூடியை வைத்து குழம்பை மூடி விடுங்கள். ஐந்து நிமிடத்தில் குழம்பு நன்றாக சூடாகி விடும். 

1 2 ... 5 6 7 8 9 10 11 12 13 14

AD's



More News