25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமையல் குறிப்பு

Aug 28, 2024

ஊறுகாய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க

ஊறுகாய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க கண்ணாடி  பாட்டிலில் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் கெ டாமல் இருக்கும்ஊறுகாய் பாட்டிலில் போடும் ஸ்பூன் சில்வர் போட்டு வைத்தால் துருபிடிக்கும். இதற்கு மரக்கரண்டி அல்லது பிளாஸ்டிக் போட்டு பயன்படுத்தலாம்.எலுமிச்சம் பழம் நீண்ட நாட்கள் கெடாமல்  இருக்க ஒரு டப்பாவில் போட்டு ப்ரிட்ஜில் வைத்து விட்டு பயன்படுத்தினால் நீண்ட நாட்களுக்கு  வரும்.உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யும் பொழுது சிறிதளவு பயத்தம் பருப்பு மாவு தூவி எண்ணெய்யில் பொரித்தால் சிப்ஸ் மொறுமொறுப்பாக இருக்கும்.இட்லி பொடி அரைக்கும் பொழுது கறிவேப்பிலை சேர்த்து வறுத்து அரைத்தால் பொடி ருசியாக இருக்கும். முடிகொட்டுவது சரியாகும்.

Aug 27, 2024

அடைமாவு ருசியாக அரைக்க.....

ஏலக்காயை பொடிப்பதற்கு முன்பு அடுப்பில் வெறும் வாணலியில் ஏலக்காயை போட்டு வறுத்து எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து பொடித்தால் நன்கு பொடியாகும்.ஏலக்காய் பொடியை சூப், இனிப்பு வகைகள், களி, அரிசி உணவுகள், பூரி போன்றவற்றில் சேர்க்கலாம். நீங்கள் வீட்டில் தயாரிக்கும் அரிசி புட்டு, ஐஸ் கிரீம், பழக்கூழ், பழ சாலட் போன்றவற்றின் மீது தூவலாம்.நூடுல்ஸ் செய்யும்போது தண்ணீர் கொதித்ததும் முதலில் மசாலாவை போட்டு அது நன்றாக கரைந்த பிறகு நூடுல்ஸ்  சேர்த்தால் மசாலா ஒரே சீராக நூடுல்ஸ் முழுவதும் பரவி இருக்கும்.கடலைப் பருப்பு வடை செய்வது போல் காராமணி வடையும் செய்யலாம்.அரைகப் காராமணியை அரைமணி நேரம் ஊறவைத்து அதில் ஒரு வெங்காயம் பொடியாக நறுக்கி சேர்த்து அரை ஸ்பூன் சோம்பு, இரண்டு பச்சை மிளகாய், தேவைக்கேற்ப உப்பு ஆகியவற்றையும் சேர்த்து, அரைத்து வடை சுட்டு, சுடச்சுட சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.அடைமாவு அரைக்கும் போது, அரை கப் சிறு பயறு, கால் கப் வேர்க்கடலை சேர்த்து செய்தால், ருசியாக மட்டுமல்லாமல் சத்தாகவும் இருக்கும்.

Aug 23, 2024

முட்டை வேக வைக்கும் பொழுது அதில் கொஞ்சம் உப்பு சேர்த்து வேக வைத்தால் உரிக்கும் பொழுது ஈசியாக உரிக்கலாம்.

ஊறுகாய் செய்யும் பொழுது எண்ணையை சூடாக்கி ஆறிய பின்பு ஊறுகாயில் ஊற்றினால் ஊறுகாய் நீண்ட நாட்கள் வீணாகாமல் நன்றாக இருக்கும். முட்டை வேக வைக்கும் பொழுது அதில் கொஞ்சம் உப்பு சேர்த்து வேக வைத்தால் உரிக்கும் பொழுது ஈசியாக உரிக்கலாம்.நார்ச்சத்து உள்ள கொத்தவரங்காயை பருப்பு,  வெங்காயம் சேர்த்து பொரியலாக உணவில் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு உதவும்.பொன்னாங்கண்ணி கீரையை நறுக்கி வெங்காயம், தேங்காய், பூண்டு சேர்த்து பொரியலாக உணவில் சேர்த்துக் கொள்வது கண்பார்வை ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவும்.நார்ச்சத்து நிறைந்தது வாழைத்தண்டு. நார் எடுத்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கி நன்றாக கழுவி விட்டு பொரியலாக செய்து உணவில் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது .

Aug 21, 2024

மீன் குழம்பு ருசியாகவும் மணமாகவும் இருக்க….

மீன் குழம்பு, புளிக் குழம்பு, கறி குழம்பு வைக்கும் போது, நல்லெண்ணெய் சேர்த்தால்,  மிகவும் ருசியாகவும் மணமாகவும் இருக்கும்.அப்பளம் வடகம் மீன் சிக்கன் வறுக்கும் போது ரிபைண்ட் ஆயில் ஊற்றிவறுத்தால்வாசனையில்லாமல் இருக்கும். ரவாதோசை கோதுமை தோசை உடனடியாக செய்ய மாவுடன் கொஞ்சம் மோர் கலந்து தோசை சுட்டால் தோசை நல்ல மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.முள்ளங்கி, கேரட், வெங்காயம், பீட்ரூட், போன்ற காய்கள் வாங்கி வந்தவுடன் அதன் தலைப்பகுதியை வெட்டி விட்டு வைத்தால் நீண்ட நாட்கள் அழுகாமல் இருக்கும்.மாவு புளித்து போய்விட்டால் அதில் கொஞ்சம் பால் ஊற்றி கலந்து தோசை சுட்டால் புளிக்காது.

Aug 19, 2024

அறையில் கொசு வராமல் இருக்க….

மாமர பூக்களை உலர்த்தி பொடி செய்து படுக்கும் முன் அறையில் பரவலாக தூவி விட்டால் அறையில் கொசு வராது.பால்கோவா செய்யும்போது கடாயில் இருந்து இறக்கிய பிறகு அதில் நெய், பொடி செய்த ஏலக்காய் மற்றும் பச்சைக் கற்பூரம் இவை அனைத்தையும் நன்றாக கலக்கி சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்ய முடியாத அளவுக்கு காய்கறிகள் நிறைய இருந்தால், அதன் மீது ஈரத் துணியை போட்டு மூடி வையுங்கள் வாடாமல் இருக்கும் பிரெட் ஸ்லைஸ்களில் சால்ட் பட்டர் அல்லது நெய் தடவி அதன்மேல் இட்லிப் பொடி தூவி, துண்டுகளை எண்ணெயில் பொரித்து எடுத்தால் மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.சாம்பார் தாளிக்கும் போது கொஞ்சம் நெய்விட்டு  தாளித்தால் நல்ல மணமாக இருக்கும்.

Aug 15, 2024

மிருதுவான இட்லி உப்புமாவிற்கு....

இட்லி உப்புமா செய்ய இட்லிகளை தண்ணீரில் இரண்டு நிமிடம் ஊற வைத்து பின்னர் தண்ணீர் இல்லாமல் உ திர்த்து வைத்து தாளித்து உப்புமா செய்தால் உப்புமா வறண்டு போகாமல் மிருதுவாக இருக்கும்.நார்த்தங்காய் ஊறுகாய் செய்யும் போது சுத்தமாக கழுவி துணியில் துடைத்த பிறகு வட்டமாக நறுக்கி மூன்று தினங்கள் வெயிலில் உலர்த்தி ஊறுகாய் செய்தால் கசப்பு தன்மை வராது, சுவையாகவும் இருக்கும்.மசால் வடை விரைவில் செய்ய கடலைப்பருப்பை அலசிக்  கொதிக்கும் தண்ணீரில் ஊற வைத்தால் முக்கால் மணி நேரத்திலேயே நன்கு ஊறி விடும் அதன் பிறகு வடை  செய்தால் நன்றாக வரும்.முட்டை வேக வைக்கும் பொழுது சிறிது கடலை எண்ணெய், கல் உப்பு போட்டு வைத்தால் போதும் முட்டையை வேக வைத்த பின் பிரிக்கும் பொழுது கொஞ்சம் கூட ஒட்டாமல்  பிரித்து விட முடியும்.பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்..

Aug 12, 2024

தேங்காய் சாதம் செய்யும்போது, அதில் சிறிது வெள்ளை எள்ளை வறுத்து பொடி செய்து ,கலந்தால் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.

பால்திரிந்து போனால் அடுப்பில் தீயை குறைத்து கிண்டி கொண்டே வந்து, தண்ணீர் வற்றியதும், கொஞ்சம் சர்க்கரை ,கொஞ்சம் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கினால் வாசனையான திரட்டு பால் ரெடிகறிவேப்பிலை அதிகமாக இருந்தால் சட்டியில் போட்டு ஈரப்பதம் போக வதக்கி அதில் காய்ந்த மிளகாய் பூண்டையும் வறுத்து நன்கு பொடி பண்ணி வைத்துக் கொண்டு இதை இட்லி தோசைக்கு தொட்டு கொள்ளலாம். சாதத்தில் நெய் விட்டு இந்த பொடியை போட்டு சாப்பிடலாம் இதனால் முடி வளர்ச்சி கண்பார்வை தெளிவாகும்.சமையலில் காரம் கூடிவிட்டால் கொஞ்சம் எலுமிச் சை சாறு பிழிந்து விட்டு காரத்தை குறைக்கலாம்.தேங்காய் சாதம் செய்யும்போது, அதில் சிறிது வெள்ளை எள்ளை வறுத்து பொடி செய்து ,கலந்தால் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.அரிசி மாவினால் தோசை சுடும்போது, அதனுடன் சுமார்  ஒரு கரண்டி அளவிற்கு கோதுமை மாவோ, மைதா மாவோ கலந்து சுட்டால் தோசை மிகவும் மிருதுவாக வரும்.

Aug 09, 2024

சமைக்கும் போது செய்யக்கூடாதவை

குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது. காய்கறிகளை, நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவுவது கூடாது. ரசம் அதிகமாக கொதிக்ககூடாது. காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது. பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது. கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது. மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது. தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது. சாதம் சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது. காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது. தக்காளியையும் வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

Aug 08, 2024

உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யும் போது மேலாக சிறிது காய்ந்த ரொட்டித் தூளைத்  தூவினால் கரகரப்பாகவும் ருசியாகவும் இருக்கும்.

சப்பாத்தி, பூரி செய்வதற்காக மாவை உருட்டித் தேய்க்கும்போது மைதா மாவுக்குப் பதிலாக சோள மாவைப் (கார்ன் ப்ளோர்) பயன்படுத்தினால், தேய்ப்பதற்குச் சுலபமாக இருக்கும். வெந்தயக்குழம்பு தயார்செய்து இறக்கும் போது ஒரு டீஸ்பூன் எள்ளுப்பொடியைப் போட்டால் வாசனையாக- சுவையாகவும் இருக்கும்.மீந்துபோன வாழை, உருளை சிப்ஸை வீணாக்காமல் மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்து, பொரியலுக்குத் தூவலாம். மாறுபட்ட சுவையும் மணமும் கிடைக்கும்.கோதுமை மாவைச்  சலித்தால் வரும் தவிட்டில் தயிரைக்  கலந்து உடலில் தேய்த்துக் குளித்தால்  வெயிலினால் வரும் எரிச்சல் அரிப்பு ஓடி விடும்.உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யும் போது மேலாக சிறிது காய்ந்த ரொட்டித் தூளைத்  தூவினால் கரகரப்பாகவும் ருசியாகவும் இருக்கும்.பாயசம் நீர்க்க இருந்தால் அதில் வாழைப்பழத்தை பிசைந்து போட்டு கொஞ்சம் தேனும் கலந்தால் போதும். சுவையான கெட்டிப் பாயசம் ரெடி.

Aug 07, 2024

நான்கு, ஐந்து பேரிச்சம் பழங்களை சின்ன சின்ன துண்டுகளாக கிள்ளி, நெய்யில் வதக்கி பாயாசத்தில் சேர்த்தால், பாயாசத்தின் சுவை அமிர்தம் போல இருக்கும்.

நான்கு, ஐந்து பேரிச்சம் பழங்களை சின்ன சின்ன துண்டுகளாக கிள்ளி, நெய்யில் வதக்கி பாயாசத்தில் சேர்த்தால், பாயாசத்தின் சுவை அமிர்தம் போல இருக்கும்.ரவையை நெய்விட்டு சிவக்க வறுத்து, காய்ச்சிய பாலில் ஊறவைத்து, பிறகு சர்க்கரை பாகு செய்து கேசரி கிளறினால் சுவை இரட்டிப்பாகும்.கடலை மாவுக்குப் பதிலாக ஒரு பங்கு பச்சரிசியும் , ஒரு பங்கு பச்சை பருப்பும் கலந்து மிக்ஸியில் சன்னமாக அரைத்து உப்பு காரம் போட்டு பஜ்ஜி செய் யலாம்.ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்திருக்கும் காம்பு கிள்ளிய பச்சை மிளகாயில் கொஞ்சம் மஞ்சள் தூளை தூவி வைத்தால், நீண்ட நாட்களுக்கு பழுத்துபோகாமல் இருக்கும்.வத்தல் குழம்பு செய்யும் போது அவரை, கத்தரிக்காய், கொத்தவரங்காய் வத்தல் ஆகியவற்றை 15 நிமிடம் வெந்நீரில் ஊற வைத்து குழம்பில் சேர்த்தால் சீக்கிரம் வெந்துவிடும் மற்றும் சுவையும் அதிகரிக்கும்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 21 22

AD's



More News